Wednesday, June 4, 2008

மனைவியும் மக்களும் யாவர்? (பஜகோவிந்தம் 8)


கா தே காந்தா கஸ்தே புத்ர:
சம்சாரோயம் அதீவா விசித்ர:
கஸ்ய த்வம் க: குத ஆயாத:
தத்வம் சிந்தய ததிஹ ப்ராத:

கா தே காந்தா - யார் உனது துணைவி?

கஸ்தே புத்ர: - யார் உனது புதல்வன்?

சம்சார இயம் அதீவா விசித்ர: - இந்த உலகவாழ்க்கை மிகவும் விசித்ரமானது; பெரிய பெரிய அறிவாளிகளையும் மயக்கக்கூடியது

கஸ்ய த்வம் - நீ யாருக்கு உரியவன்?

க: - நீ யார்?

குத ஆயாத: - எங்கிருந்து வந்தாய்?

தத்வம் சிந்தய தத் இஹ ப்ராத: - அந்த உண்மையை இப்போது எண்ணிப்பார் சகோதரனே.

கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.

3 comments:

குமரன் (Kumaran) said...

இந்த இடுகை 'பஜ கோவிந்தம்' பதிவில் 09 டிசம்பர் 2005 அன்று இடப்பட்டது. அப்போது வந்த பின்னூட்டங்கள்:

வெளிகண்ட நாதர் said...
ஆதியும் இல்லை, அந்தமும் இல்லை இவ்வுலகில் பூப்போர்க்கு!

கோவிந்தா கோவிந்தா!
கோவிந்தா கோவிந்தா!

December 09, 2005 10:34 AM
குமரன் (Kumaran) said...
தவறாமல் வந்து கோவிந்த நாமம் சொல்லும் வெளிகண்ட நாதர் உதயகுமார் அண்ணாவுக்கு நன்றி.

கோவிந்தா கோவிந்தா!
கோவிந்தா கோவிந்தா!

December 09, 2005 2:37 PM
பொன்ஸ்~~Poorna said...
பகவத் கீதையிலும் இந்த கான்சப்ட் வருமே..

April 26, 2006 10:53 PM
குமரன் (Kumaran) said...
ஆமாம் பொன்ஸ்.

April 30, 2006 10:05 AM

Kavinaya said...

எண்ணிப் பார்த்தாலும் குழப்பமே மிச்சம் :( மாயவனே மாயையையும் நீக்கி அருளல் வேண்டும்.

குமரன் (Kumaran) said...

தொடக்கத்தில் இனித்துப் பின்னர் கசப்பதும் உண்டு; தொடக்கத்தில் கசந்து பின் இனிப்பதும் உண்டு; தொடக்கத்திலும் பின்னரும் கசப்பது உண்டு என்று மூன்று வகையான முயற்சிகளை கண்ணன் கீதையில் சொல்வான். அவற்றில் இந்தப் பாடலில் சொன்னது இரண்டாம் வகை போலும். கேட்கத் தொடங்கும் போது குழப்பமும் மேலும் மேலும் கேட்க இரமணர் சொன்ன நிலைக்கும் கொண்டு போகும் போல. அப்படித் தான் தோன்றுகிறது கவிநயா அக்கா.