Saturday, June 7, 2008

காலம் விளையாடுகிறது வாழ்நாளோ தீர்கிறது (பஜகோவிந்தம் 12)


தின யாமின்யௌ சாயம் ப்ராத:
சிஷிர வஸந்தௌ புனர் ஆயாத:
கால: க்ரீடதி கச்சதி ஆயு:
தத் அபி ந முஞ்சதி ஆசா வாயு:

தின யாமின்யௌ - பகலும் இரவும்

சாயம் ப்ராத: - மாலையும் காலையும்

சிஷிர வஸந்தௌ - வாடையும் கோடையும்

புனர் ஆயாத: - மீண்டும் மீண்டும் வருகின்றன.

கால: க்ரீடதி - காலமோ தன் விளையாட்டினை விளையாடிக் கொண்டிருக்கிறது.

கச்சதி ஆயு: - வாழ்நாளோ போய்க் கொண்டிருக்கிறது.

தத் அபி ந முஞ்சதி ஆசா வாயு: - ஆனாலும் என்ன ஆசையெனும் புயல் மட்டும் நின்றபாடில்லை.

கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.

3 comments:

குமரன் (Kumaran) said...

இந்த இடுகை 'பஜ கோவிந்தம்' பதிவில் 25 ஏப்ரல் 2006 அன்று இடப்பட்டது. அப்போது வந்த பின்னூட்டங்கள்:

26 comments:

ஜயராமன் said...
பஜ கோவிந்தம் என்றும் திகட்டாத தேன்.

எல்லாம் ஆடி ஓய்ந்தபின் தட்டில் மிஞ்சியிருப்பது எண்ணங்கள்தான். அந்நிலையில் தேவை இந்த நினைவுகளே.

அருமையான வடமொழி செய்யுள்கள். கோவிந்தனுக்கு என்றில்லை; எல்லா இறைவனுக்கும் உரித்த துதி.

இதை படித்து என் காலை அலுவல்களை அருமையாக துவக்கினேன்.

நன்றி

April 25, 2006 11:29 PM
--

குமரன் (Kumaran) said...
நல்வரவு திரு. ஜயராமன். தங்களின் வைதிகஸ்ரீ: வலைப்பூவினில் வரும் பல பதிவுகளைப் படித்திருக்கிறேன்.

பல தமிழ் நூல்களைப்போல் பஜ கோவிந்தமும் தெவிட்டாத தேன் தான். ஆதிசங்கரரால் பாடப்பெற்ற இது எப்படி கோவிந்தனுக்கு மட்டும் உரியதாகும்; எல்லா கடவுளருக்கும் உரியதே. அத்வைத தத்துவத்தின் படி பாரமார்த்திக தசையில் நாம ரூபமின்றி நிர்குண நிராகாரியாக இருக்கும் ப்ரம்மம் வியவகாரிக தசையில் சகுண சகாரியாக வரும்போது நாராயண ஸ்வரூபமே பரம் என்பது தானே முடிந்த முடிபு. அதனாலே தானே அத்வைதிகள் 'நாராயண ஸ்மிருதி' என்றும் 'நாராயண நாராயண' என்றும் ஸ்மரித்துக் கொண்டு இருக்கிறார்கள். அந்த வகையில் தான் ஆதி சங்கரரும் பஜ கோவிந்தம் என்று பாடுகிறார். இல்லையா?

தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.

April 26, 2006 8:19 AM
--

வெளிகண்ட நாதர் said...
ஆசை யாரும் விட்டதில்லை, காலம் முடிஞ்சு ஆறடி மண்ணுல போறவரை,
எல்லாம் கோவிந்தன் செயல்!

கோவிந்தா.. கோவிந்தா!

April 26, 2006 11:49 AM
--

கால்கரி சிவா said...
குமரா, ஆஹா.. அருமையான வரிகள்.

திரு ஜேசுதாஸ் தமிழில் பாடிய "பஜ கோவிந்தம் ..பஜ கோவிந்தம்.. கோவிந்தன் பதம் போகும் வழி.."

என்ற பாடலை தேடிக் கொண்டிருக்கிறேன்.

April 26, 2006 12:41 PM
--

குமரன் (Kumaran) said...
படித்துக் கருத்து சொன்னதற்கு நன்றி வெளிகண்ட நாதர் சார் & சிவா அண்ணா.

April 26, 2006 12:56 PM
--

Ram said...
மிக நன்றாக எழுதுகிறீர்கள்.

எனக்கு கீழ்கண்ட பாடல் வலையில் எங்கு கிடைக்கும் என்று கூற இயலுமா ?

"பிரபோ கணபதி பரிபூரண வாழ்வருள்வாயே......

sramprasath@yahoo.com

April 26, 2006 7:54 PM
--

Ram said...
மிக நன்றாக எழுதுகிறீர்கள்.

எனக்கு கீழ்கண்ட பாடல் வலையில் எங்கு கிடைக்கும் என்று கூற இயலுமா ?

"பிரபோ கணபதி பரிபூரண வாழ்வருள்வாயே......

April 26, 2006 7:57 PM
--

செல்வன் said...
அத்வைத தத்துவத்தின் படி பாரமார்த்திக தசையில் நாம ரூபமின்றி நிர்குண நிராகாரியாக இருக்கும் ப்ரம்மம் வியவகாரிக தசையில் சகுண சகாரியாக வரும்போது நாராயண ஸ்வரூபமே பரம் என்பது தானே முடிந்த முடிபு//

ஆசையை விடு என பகவான் சொல்லும்போது அவன் மேல் கொண்ட ஆசையையும்(பக்தி) சேர்த்து விட சொன்னார் என்பது அத்வைதம்.

பகவான் மேல் கொண்ட ஆசையை(பக்தி) மட்டும் விடக்கூடாது.அதை தவிர மற்ற ஆசைகளை துறக்க வேண்டும் என்பது விஷிச்டாத்வைதம்

சுகுணப்பிரம்மத்தின் ஒரு ச்வரூபம் நாராயணம் என்பது அத்வைதம்.சுகுணப்பிரம்மம் என்பது முழுக்க முழுக்க நாராயனமே என்பது த்வைதம்.அத்வைதத்தில் நிர்குணப்பிரம்ம நிலையில் நாமும் சிவமும் ஒன்று.ஆனால் சிவனும் நாமும் ஒன்றல்ல(சிவம் = நிர்குணப்பிரம்மம், சிவன் = சுகுணப்பிரம்மம்)விசிச்டாத்வைதத்தில் என்னிலையிலும் நாமும் பிரம்மமும் ஒன்றல்ல.

பல வேத வசனங்கள் இவ்விரு தத்துவங்களாலும் வேறு மாதிரி விவரிக்கப்படுகின்றன.உதாரணம் புகழ் பெற்ற "தத்வம் இஸி" (நீயாகிய அது) "தத் விஷ்ணோ பரம்" ('விஷ்ணுவின் பரம்' என விசிச்டாத்வைதிகளும் 'விஷ்ணுவாகிய பரம்' என அத்வைதிகளும் சொல்லுவார்கள்)

பகவத்கீதையில் அன்ய தேவதையை (demi gods)பற்றி கண்ணன் சொல்லுவதற்கு அத்வைதிகள் தரும் விளக்கத்தை கேட்டு அசந்து விட்டேன்.இஸ்கானில் விசிச்டாத்வைதி ஒருவரிடம் அதை சொன்னபோது பொங்கி எழுந்து விட்டார்.:-)

அத்வைத விசிஷ்டாத்வைத சித்தாந்தங்களை பற்றி எழுதினால் நாள் போவதே தெரியாது

April 26, 2006 10:03 PM
--

பொன்ஸ்~~Poorna said...
இதெல்லாம் ஏங்க எம்.எஸ் பாடிய பஜகோவிந்தத்துல வர மாட்டேங்குது?

April 26, 2006 10:58 PM
--

Merkondar said...
வட சொல் வல்லவர் தாங்கள் அதை எனக்குப் படிப்பதற்கே முடியவில்லை

April 27, 2006 3:25 AM
--

ம்னு said...
எத்தனை தடவை படித்தாலும் ஸ்மரித்தாலும் வைராக்யம் வருவது எப்பொது என்றுதான் புரியவில்லை.நன்றி குமரன்.

April 28, 2006 9:58 AM
--

rnateshan. said...
thank you kumaran,
little bit busy in factory.omming back soon!!

April 30, 2006 7:05 AM
--

குமரன் (Kumaran) said...
இராம்பிரசாத். பாராட்டிற்கு நன்றி. இந்த வலைப்பூவிற்கு வந்து படித்து உங்கள் கருத்தினைச் சொன்னதற்கு மிக்க நன்றி. நீங்கள் கேட்ட பாடல் வலையில் எங்கே கிடைக்கும் என்று தெரியவில்லை. மன்னிக்கவும்.

April 30, 2006 9:17 AM
--

குமரன் (Kumaran) said...
செல்வன், மீண்டும் உங்களிடம் அத்வைத, விசிஷ்டாத்வைத, த்வைத தத்துவங்களைப் பற்றி விவாதிக்க வேண்டாம் என்று தான் எண்ணுகிறேன். ஆனால் நீங்கள் சொன்ன கருத்துகளில் சில இடங்களில் உடன்பாடு இல்லாதது போல் தோன்றுவதால் இந்தப் பதிலுரை. முடிந்தால் நீங்களோ நானோ இந்தத் தத்துவங்களைப் பற்றியே பதிவுகள் எழுதவேண்டும். அங்கு வேண்டும் வரை நாமும் மற்றவர்களும் விவாதித்துக்கொள்ளலாம்.

April 30, 2006 9:20 AM
--

குமரன் (Kumaran) said...
//ஆசையை விடு என பகவான் சொல்லும்போது அவன் மேல் கொண்ட ஆசையையும்(பக்தி) சேர்த்து விட சொன்னார் என்பது அத்வைதம்.

பகவான் மேல் கொண்ட ஆசையை(பக்தி) மட்டும் விடக்கூடாது.அதை தவிர மற்ற ஆசைகளை துறக்க வேண்டும் என்பது விஷிச்டாத்வைதம்//

பற்றுக பற்றற்றான் பற்றை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு

என்னும் பொய்யாமொழிப்புலவரின் வாக்கினையே அத்வைதம், விசிஷ்டாத்வைதம் என்ற இரண்டு தத்துவங்களும் சொல்லுவதாக அடியேன் எண்ணுகிறேன். அத்வைதம் பக்தியை விடச் சொன்னதாகத் தெரியவில்லை. அத்வைத ஆசாரியரான சங்கரர் தானே இந்த பஜ கோவிந்தத்தைப் பாடியது. பக்தியே முடிவான நிலையா இல்லை பக்தி ஞானநிலையை அடைய ஒரு படியா என்பதில் அத்வைத்திற்கும் விசிஷ்டாத்வைதத்திற்கும் வேறுபாடு உண்டு; ஞானமே முடிவான நிலை என்று அத்வைதிகளும் இல்லை பக்தியே முடிவான நிலை என்று விசிஷ்டாத்வைதிகளும் சொல்லுவர்.

ஆசை அறுமின்; ஆசை அறுமின்;
ஈசனோடாயினும் ஆசை அறுமின்

என்றது திருமூலர் வாக்கு. அது சைவ சிந்தாந்தத்தில் சேரும். சைவ சிந்தாந்தம் ஏறக்குறைய விசிஷ்டாத்வைத தத்துவத்தை சிவபரமாகச் சொல்லுவதாக இருந்தாலும் அதில் ஞானமே உயர்வாகப் பேசப்பட்டுள்ளது.

விசிஷ்டாத்வைதம் இறைவன் மேல் கொண்ட ஆசையை விடக்கூடாது என்று சொல்வது உண்மைதான். ஆனால் அதை தவிர மற்ற ஆசைகளை 'துறக்க வேண்டும்' என்று சொல்வதாய் தோன்றவில்லை.

'மற்றை நம் காமங்கள் மாற்று' என்னும் கோதை நாச்சியாரின் வாக்கு படி அவனே நம் எல்லா ஆசைகளையும் ஒன்று நிறைவேற்றியோ, இல்லை அழித்தோ மாற்றவேன்டும் என்று வேண்டுவதாகத் தான் உள்ளது. விசிஷ்டாத்வைதத் தத்துவப்படி 'அவன் அருளாலே தான் அவன் தாள் வணங்க முடியும்'; அதே போல் அவன் அருளாலே தான் நம் காமங்களும் மாற்ற முடியும். 'என் செயல் ஆவது யாதொன்றும் அறியேன் இனித் தெய்வமே; நின் செயலே என்று அறிந்து கொண்டேன்' என்று பட்டினத்து அடிகள் பாடியதும் இந்த நிலையைக் குறிப்பது தான்.

April 30, 2006 9:30 AM
--

குமரன் (Kumaran) said...
//சுகுணப்பிரம்மத்தின் ஒரு ச்வரூபம் நாராயணம் என்பது அத்வைதம்.சுகுணப்பிரம்மம் என்பது முழுக்க முழுக்க நாராயனமே என்பது த்வைதம்//

சகுணம் (குணங்களுடன் கூடியது), நிர்க்குணம் (குணங்கள் இல்லாதது) என்னும் வேறுபாடுகள் கூறுவது அத்வைதம் மட்டுமே. விசிஷ்டாத்வைதம், த்வைதம் இரண்டுமே இறைவன் குணங்களுடன் கூடியவன் என்று சொல்லுவதால் சகுணம் என்ற சொல்லைப் பயன்படுத்துவதில்லை; அவர்களைப் பொறுத்தவரை நிர்க்குணன் என்றால் எந்த குணங்களும் இல்லாதவன் என்று பொருளில்லை; எந்தவிதமான தீய குணங்களும் இல்லாதவன் என்று பொருள்.

April 30, 2006 9:34 AM
--

குமரன் (Kumaran) said...
//அத்வைதத்தில் நிர்குணப்பிரம்ம நிலையில் நாமும் சிவமும் ஒன்று.ஆனால் சிவனும் நாமும் ஒன்றல்ல(சிவம் = நிர்குணப்பிரம்மம், சிவன் = சுகுணப்பிரம்மம்)விசிச்டாத்வைதத்தில் என்னிலையிலும் நாமும் பிரம்மமும் ஒன்றல்ல.
//

ஏறக்குறைய சரி. ஆனால் இன்னும் விளக்கம் கொடுக்கலாம் போல் தோன்றியது. பரமார்த்திக நிலையிலும் (இறைவன் நிர்க்குணமாய் இருக்கும் நிலை) வியவஹாரிக நிலையிலும் (இறைவன் சகுணமாய் எல்லா தேவதைகளாகவும் தோன்றும் நிலை) இந்த இரண்டு நிலைகளிலும் இறைவனும் ஜீவனும் ஒன்று தான். ஜீவனே சிவன்/சிவம். சிவனே/சிவமே ஜீவனும் உலகமும். ஆனால் ஜீவன் அவித்யையால் (அறியாமையால், மாயையால்) தான் சிவனை விட வேறானவன் என்று எண்ணுகிறான்; அந்த அறியாமை நீங்கிய நிலையே ஜீவன் முக்தி. அறியாமை நீங்க உள்ள வழிகளே கர்ம, பக்தி, ஞான யோகங்கள். ஞானம் அடைந்த பின்னும் (ஜீவன் முக்தி அடைந்த பின்னும்) இறைவனை நிர்க்குணமாகவோ சகுணமாகவோ ஞானி வணங்குவான். ஆனால் அந்த நிலையில் வணங்குவது தன்னைத் தான் என்ற ஞானம் இருக்கும். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். விரிக்க விரிக்க விரியும் கடல். இன்னோரிடத்தில் பேசலாம்.

April 30, 2006 9:40 AM
--

குமரன் (Kumaran) said...
//"தத் விஷ்ணோ பரம்" ('விஷ்ணுவின் பரம்' என விசிச்டாத்வைதிகளும் 'விஷ்ணுவாகிய பரம்' என அத்வைதிகளும் சொல்லுவார்கள்)
//

இது புரியவில்லை. கொஞ்சம் விளக்குங்கள். முடிந்த போது.

//பகவத்கீதையில் அன்ய தேவதையை (demi gods)பற்றி கண்ணன் சொல்லுவதற்கு அத்வைதிகள் தரும் விளக்கத்தை கேட்டு அசந்து விட்டேன்.இஸ்கானில் விசிச்டாத்வைதி ஒருவரிடம் அதை சொன்னபோது பொங்கி எழுந்து விட்டார்//

அத்வைதிகள் என்ன விளக்கம் சொன்னார்கள் என்று சொல்லுங்கள்.

இஸ்கான் மக்கள் விசிஷ்டாத்வைதிகள் அல்லர். அவர்கள் 'அசிந்ய பேதாபேத' தத்துவத்தைச் சேர்ந்தவர்கள். ஏறக்குறைய விசிஷ்டாத்வைதம் தான் என்றாலும் அதிகமாக த்வைத தத்துவத்தில் சேரும் கொள்கைகளை உடையவர்கள். அவர்களின் மூல குருவான கௌராங்கர் (கிருஷ்ண சைதன்யர்) மத்வாச்சாரியரின் த்வைத சம்ப்ரதாய ஆசாரியர் ஒருவரின் சிஷ்யர். ஆனால் அவர் திருவரங்கத்திற்கு வந்து இராமானுஜ சம்ப்ரதாயத்தையும் கற்றவர். கௌட வைணவமாகிய இஸ்கானில் அத்வைதம் தவிர மற்ற இரண்டு தத்துவங்களும் ஆசாரியர்களும் சிறப்பு செய்யப்படும்/படுவர்.

//அத்வைத விசிஷ்டாத்வைத சித்தாந்தங்களை பற்றி எழுதினால் நாள் போவதே தெரியாது
//

அதென்னவோ உண்மை. ஆனால் சில நேரங்களில் அப்படி பொழுது போவதே தெரியாமல் தத்துவங்களைப் பற்றிப் பேசும் போது இராமகிருஷ்ணர் சொன்னது - ஒரு மாமரம் இருக்கும் போது அதில் உள்ள பழத்தைப் பறித்து உண்டு அனுபவிக்காமல், இதில் எத்தனை கிளைகள் இருக்கின்றன, எத்தனை இலைகள் இருக்கின்றன என்று எண்ணிக் கொண்டிருப்பவன் மூடன் - என்பதும், 'தத்துவக் குப்பையை மறந்திடச் செய்திடுவாய்' என்ற ஸ்கந்த குரு கவச அடியும் நினைவிற்கு வருகின்றன. தத்துவ விசாரணையை விட இறைவனின் குணங்களைப் பாடியிருக்கும் பாடல்களைப் பாடி, பொருளுணர்ந்து பாடி, அந்த ஆனந்தத்தில் திளைப்பது எவ்வளவு அருமையாக இருக்கிறது. வறட்டு வேதாந்தம் பேசுவதை விட அது மிகச் சுவையானது. :-)

April 30, 2006 9:50 AM
--

குமரன் (Kumaran) said...
பொன்ஸ், எம்.எஸ். சில தேர்ந்தெடுத்தப் பாடல்கள் மட்டும் தான் பாடியிருக்கிறார். இதில் இருக்கும் 31 பாடல்களும் பாடவில்லை.

April 30, 2006 9:51 AM
--

குமரன் (Kumaran) said...
என்னார் ஐயா, அருந்தமிழ்ச் சொற்களால் ஆன அம்பிகாபதி-அமராவதி நாடகத்தை நீங்கள் படித்து அதனை வலையிலும் ஏற்றுகிறீர்கள். ஆனால் அதில் உள்ள சொற்கள் ஞானவெட்டியான் ஐயாவிற்கே கரடுமுரடாய் இருக்கின்றன. அவற்றை நீங்கள் படித்து அனுபவிக்கவில்லையா? படிக்கப் படிக்கப் புரியும் அல்லவா? பழக்கம் தானே காரணம். மீண்டும் மீண்டும் படிக்க வடசொல்லும் எளிமையாகும்.

April 30, 2006 9:53 AM
---

குமரன் (Kumaran) said...
மனு, வைராக்யம் வர பலப் பிறவிகள் ஆகும் என்று தான் பெரியவர்கள் சொல்கிறார்கள். இந்தப் பாடல்களைப் படித்தும் மீண்டும் மீண்டும் நினைத்தும் (ஸ்மரித்தும்) சொந்த முயற்சியைக் கொண்டு அவனை அடைந்துவிடலாம் என்று முயன்றால் அதற்கு பலப்பலப் பிறவிகள் பிடிக்கும். அதனை விட எளிய வழி அவன் அருளாலே அவன் தாள் வணங்க அவன் அருளை வேண்டுதலே. அவன் அருள் வந்தால் வைராக்யம் தானாய் வரும். அதுவரை அது கடினம் தான்.

April 30, 2006 9:56 AM
--

குமரன் (Kumaran) said...
நடேசன் ஐயா. முடிந்த போது, வேலைப் பளு குறைந்த பின் வந்து படித்துப்பாருங்கள். நன்றி.

April 30, 2006 9:57 AM
--

செல்வன் said...
அன்பு குமரன்

பரிட்சை சமயம் என்பதால் விரிவாக பதிலளிக்க முடியவில்லை.இருப்பினும் அன்ய தேவதைக்கு மட்டும் விளக்கம் தருகிறேன்.

"அன்ய தேவதைகளை சரணடையாதே" என கண்ணன் சொன்னதை இஸ்கான் காரர்கள் "கீழான தெய்வங்களை வணங்காதே"(demigods) என ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பர்.அன்ய தேவதா என்பதற்கு demigod என தவறான மொழி பெயர்ப்பு தருவர்.

அத்வைத குரு ஒருவர் இந்த ஸ்லோகத்துக்கு தந்த விளக்கம்

"தனக்கு அன்னியமாக நினைத்து எந்த தெய்வத்தையும் வணங்காதே.கண்ணனை உனக்கு அன்னியமாக நினைத்தால்(த்வைத நிலை) அவன் கூட அன்னிய தேவதைதான்"

இதை சொல்லப்போய் தான் இஸ்கான்காரருக்கு கோபம் வந்துவிட்டது.கண்னனை வணங்காதே என கண்னனே சொல்வானா என சண்டைக்கு வந்துவிட்டார்.அத்வைதி வேதத்தில் இருந்து அன்யதேவதையைக்கு விளக்கம் தரும் ஸ்லோகங்களையும் சொல்லியிருந்தார்.'தனக்கு அன்னியமாக நினைத்து எந்த தேவதையை வழிபடுபவனும் ஒரு பசுவுக்கு சமமான அப்பாவி" என்ற வேத ஸ்லோகத்தை அந்த அத்வைதி மேற்கோள் காட்டி சொன்னார்.இஸ்கான் காரர் அந்த ச்லோகத்துக்கு அர்த்தம் அன்ய தேவதையை வணங்குபவன் பசுவுக்கு சமமான அப்பாவி என்று சொன்னார்.

அன்ய தேவதையை demigod என மொழிபெயர்த்தது ஏன் என்ற கேள்விக்கு அவரால் பதில் சொல்ல முடியவில்லை.


அந்த ஸ்லோகம் இதோ

Geetha 8.16

யேபி அன்ய தேவதா பக்தா யஜந்தே ஷ்ரத்த்யவிந்தா
தேபி மாமேவ கவுந்தேய யஜந்தி அவித்தி பூர்வகம்

"அன்ய தேவதையை(demigod என இஸ்கான்காரர்கள் மொழி பெயர்ப்பார்கள்) உண்மையில் வணங்குவது என்னைத்தான் ஓ குந்தி மைந்தா.ஆனால் அவர்கள் அறிவின்மையால்(அவித்தி) அப்படி செய்கின்றனர்"

April 30, 2006 8:33 PM
--

குமரன் (Kumaran) said...
//பரிட்சை சமயம் என்பதால் விரிவாக பதிலளிக்க முடியவில்லை//

தேர்வா? எந்த தேர்வுக்கு நீங்க இரவும் பகலும் உழைக்கிறீங்கன்னு தான் இப்ப தெரிஞ்சுப் போச்சே. வாழ்த்துக்கள் செல்வன். :-)

May 02, 2006 1:16 PM
--

குமரன் (Kumaran) said...
//அன்ய தேவதைகளை சரணடையாதே" என கண்ணன் சொன்னதை இஸ்கான் காரர்கள் "கீழான தெய்வங்களை வணங்காதே"(demigods) என ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பர்.அன்ய தேவதா என்பதற்கு demigod என தவறான மொழி பெயர்ப்பு தருவர்.
//

கண்ணன் கீதையில் அன்ய தேவதைகளை வணங்காதே என்றோ சரணடையாதே என்றோ சொன்னதாகத் தெரியவில்லை. என்னையே வணங்கு; சரணடை என்று தான் சொல்லுவார். இரண்டுக்கும் நூலளவு வேறுபாடு இருக்கிறது. :-)

ஆமாம் நீங்கள் சொன்ன படி இஸ்கான் புத்தகங்களில் demigod என்று தான் சொல்லியிருப்பார்கள். அது தவறான பொருள் என்பதில் எனக்கும் உடன்பாடு.

அத்வைதம் சொன்னதாக நீங்கள் சொல்லும் விளக்கம் அத்வைதத் தத்துவத்துடன் பொருந்துகிறது. சிவோஹம், அஹம் ப்ரம்ஹாஸ்மி போன்ற பல மகா வாக்கியங்கள் இருக்கின்றனவே அந்தக் கருத்தை வலியுறுத்த.

May 02, 2006 1:24 PM
---

குமரன் (Kumaran) said...
நீங்கள் தந்திருக்கும் ஸ்லோகத்தில் சிறு எழுத்துப்பிழையும் அதனால் சொன்ன விளக்கத்தில் பிழையும் இருக்கிறது.

யேபி - ய: அபி - எவனொருவன்
அன்ய தேவதா - என்னைத் தவிர்த்து மற்ற தெய்வங்களை
பக்தா யஜந்தே - பக்தியால் வழிபடுகிறார்களோ
ஷ்ரத்தயவிந்தா - சிரத்தையுடன்
தேபி - தே அபி - அவர்களும்
மாமேவ - மாம் ஏவ - என்னையே
யஜந்தி - வழிபடுகிறார்கள்
அவிதி பூர்வகம் - என்னை நானாக வணங்காமல் மற்ற தெய்வங்கள் மூலமாக வணங்குவதால் அது விதிபூர்வமானது அன்று; அது சரியான முறையன்று.
கௌந்தேய - குந்தியின் மைந்தனே.

எவரொருவர் என்னைத் தவிர்த்து மற்ற தெய்வங்களை பக்தியால் சிரத்தையுடன் வழிபடுகிறார்களோ அவர்களும் என்னையே வழிபடுகிறார்கள் குந்தியின் மைந்தனே. அது முறையற்றதாக இருந்தாலும் அங்கும் வழிபடப்படுபவன் நானே.

அது அவிதி பூர்வகம்; அவித்தி பூர்வகம் இல்லை.

May 02, 2006 1:30 PM

கவிநயா said...

இந்த பின்னூட்டங்களை படிச்சுக்கிட்டே வந்த போது எனக்கு ஒண்ணுமே புரியல (what else is new!).. அப்ப ஸ்ரீராமகிருஷ்ணர் சொன்னதுதான் நினைவு வந்தது - மாம்பழம் சாப்பிட வந்தோம், அதை விட்டுட்டு தோட்டத்துல எத்தன மரம் இருக்கு, மரத்துல எத்தன கிளை இருக்கு, எத்தன இலை இருக்கு, எத்தன பழம் இருக்கு, ... இதெல்லாம் எதுக்கு தெரிஞ்சுக்கணும்னு. நினைச்சுக்கிட்டே இருக்கும்போது சரியா நீங்களும் அதையே சொல்லியிருக்கீங்க! :)))

குமரன் (Kumaran) said...

:-)))