Friday, December 5, 2008

நானே சிவன்! நானே சிவம்! சிவோஹம்! சிவோஹம்!

இது ஆதிசங்கர பகவத்பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் (விடுதலை ஆறு). இந்தப் பாடலின் நடுவிலேயே ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு வருகிறது. அது சுவையான சுகமான மொழிபெயர்ப்பு. இருந்தாலும் சொல்லுக்குச் சொல் விளக்கம் இருந்தால் நல்லது என்று எண்ணி தமிழில் இங்கே மொழிபெயர்த்து இடுகிறேன்.

ஓம் ஓம் ஓம்

சிவோஹம் சிவோஹம் சிவோஹம் சிவோஹம் சிவோஹம் சிவோஹம் .....

மனோ புத்யஹங்கார சித்தா நினாஹம்
ந ச ச்ரோத்ர ஜிஹ்வே ந ச க்ராண நேத்ரே
ந ச வ்யோம பூமிர் ந தேஜோ ந வாயு:
சிதானந்த ரூப: சிவோஹம் சிவோஹம்


மனோ புத்தி அஹங்கார சித்தா நின அஹம் - நான் மனம், புத்தி, அஹங்காரம், சித்தம் எதுவுமில்லை.

ந ச ச்ரோத்ர ஜிஹ்வே - நான் காதுகளும் இல்லை; நாவும் இல்லை

ந ச க்ராண நேர்த்ரே - நான் நாக்கும் இல்லை; கண்களும் இல்லை

ந ச வ்யோம பூமி: - நான் வானமும் இல்லை; பூமியும் இல்லை

ந தேஜோ ந வாயு: - நான் ஒளியும் இல்லை; காற்றும் இல்லை

சித் ஆனந்த ரூப: சிவோஹம் சிவோஹம் - அறிவும் ஆனந்தமும் வடிவாகக் கொண்ட சிவன் நான்; சிவம் நான்.



ந ச ப்ராண சங்க்யோ நவை பஞ்சவாயு:
ந வா சப்த தாதுர் நவா பஞ்சகோச:
ந வா பாணி பாதம் ந சோபஸ்தபாயு:
சிதானந்த ரூப: சிவோஹம் சிவோஹம்


ந ச ப்ராண சங்க்யோ ந வை பஞ்ச வாயு: - நான் மூச்சால் கட்டுப்பட்டவன் இல்லை; நான் ஐந்துவிதமான காற்றுகளும் இல்லை (ப்ராணன் - உள்ளிழுக்கும் மூச்சு; அபானன் - உடல் அழுக்குகளை வெளியேற்றும் காற்று; சமானன் - உண்டதைச் செரிக்கும் காற்று; உதானன் - உறுப்புகளை நடத்தும் காற்று; வ்யானன் - உடல் செய்கைகளை நடத்தும் காற்று)

ந வா சப்த தாதுர் ந வா பஞ்ச கோச: - நான் ஏழுவிதமான உடற்பொருட்களும் இல்லை (ரசம், ரத்தம், மாமிசம், கொழுப்பு, எலும்பு, மஜ்ஜை, விந்து/முட்டை); நான் ஐந்துவிதமான போர்வைகளும் இல்லை (அன்னமய கோசம் - உணவால் ஆன போர்வை; ப்ராண மய கோசம் - உயிர்காற்றுகளால் ஆன போர்வை; மனோ மய கோசம் - மனத்தால் ஆன போர்வை; விஞ்ஞான மய கோசம் - அனுபவங்களால் ஆன போர்வை; ஆனந்த மய கோசம் - இன்பத்தால் ஆன போர்வை)

ந வா பாணி பாதம் ந ச உபஸ்த பாயு: - நான் கைகால்களும் இல்லை; நான் மற்ற உறுப்புகளும் இல்லை

சித் ஆனந்த ரூப: சிவோஹம் சிவோஹம் - அறிவும் ஆனந்தமும் வடிவாகக் கொண்ட சிவன் நான்; சிவம் நான்.

ந மே த்வேஷ ராகௌ ந மே லோப மோஹௌ
மதோ நைவ மேநைவ மாத்ஸர்ய பாவ:
ந தர்மோ ந ச அர்த்தோ ந காமோ ந மோக்ஷ:
சிதானந்த ரூப: சிவோஹம் சிவோஹம்


ந மே த்வேஷ ராகௌ - எனக்கு வெறுப்பும் விருப்பும் இல்லை

ந மே லோப மோஹௌ - எனக்கு பற்றுதலும் மயங்குதலும் இல்லை

மதோ ந ஏவ மே ந ஏவ மாத்ஸர்ய பாவ: - எனக்கு கருவமும் இல்லை; பொறாமையும் இல்லை

ந தர்ம: - நான் அறமும் இல்லை

ந ச அர்த்த: - நான் பொருளும் இல்லை

ந காம: - நான் இன்பமும் இல்லை

ந மோக்ஷ: - நான் வீட்டுப்பேறும் இல்லை

சித் ஆனந்த ரூப: சிவோஹம் சிவோஹம் - அறிவும் ஆனந்தமும் வடிவாகக் கொண்ட சிவன் நான்; சிவம் நான்.

ந புண்யம் ந பாபம் ந சௌக்யம் ந துக்கம்
ந மந்த்ரோ ந தீர்த்தம் ந வேதா ந யக்ஞ:
அஹம் போஜனம் நைவ போஜ்யம் ந போக்தா
சிதானந்த ரூப: சிவோஹம் சிவோஹம்


ந புண்யம் ந பாபம் - நான் புண்ணியமும் இல்லை பாவமும் இல்லை

ந சௌக்யம் ந துக்கம் - நான் இன்பமும் இல்லை துன்பமும் இல்லை

ந மந்த்ரோ ந தீர்த்தம் - நான் மந்திரமும் இல்லை புண்ணிய தீர்த்தமும் இல்லை

ந வேதா ந யக்ஞ: - நான் வேதமும் இல்லை யாகங்களும் இல்லை

அஹம் போஜனம் ந ஏவ போஜ்யம் ந போக்தா - நான் உணவும் இல்லை உண்ணும் காரியமும் இல்லை உண்டு அனுபவிப்பவனும் இல்லை (நான் புலனுக்குட்படும் பொருட்களும் இல்லை; புலன்களின் வழி அனுபவிக்கும் செயல்களும் இல்லை; புலன்களின் வழி அனுபவிப்பவனும் இல்லை)

சித் ஆனந்த ரூப: சிவோஹம் சிவோஹம் - அறிவும் ஆனந்தமும் வடிவாகக் கொண்ட சிவன் நான்; சிவம் நான்.

ந ம்ருத்யுர் ந சங்கா ந மே சாதிபேத:
பிதா நைவ மே நைவ மாதா ச ஜன்மா
ந பந்துர் ந மித்ரம் குருர் நைவ சிஷ்யா:
சிதானந்த ரூப: சிவோஹம் சிவோஹம்


ந ம்ருத்யுர் ந சங்கா - எனக்கு மரணம் இல்லை; எனக்கு பற்றுதல் இல்லை

ந மே சாதி பேத: - எனக்கு சாதி பேதங்கள் இல்லை

பிதா ந ஏவ மே ந ஏவ மாதா ச ஜன்மா - எனக்கு தாய் தந்தையர் இல்லை; எனக்கு பிறப்பும் இல்லை

ந பந்துர் ந மித்ரம் - எனக்கு உறவுகள் இல்லை; நட்புகள் இல்லை

குருர் ந ஏவ சிஷ்யா - நான் குருவும் இல்லை சிஷ்யனும் இல்லை

சித் ஆனந்த ரூப: சிவோஹம் சிவோஹம் - அறிவும் ஆனந்தமும் வடிவாகக் கொண்ட சிவன் நான்; சிவம் நான்.

அஹம் நிர்விகல்போ நிராகாரரூபோ
விபுத்வாச்ஸ சர்வத்ர சர்வேந்த்ரியானாம்
ந ச சங்கடம் நைவ முக்திர் ந மே யா
சிதானந்த ரூப: சிவோஹம் சிவோஹம்


அஹம் நிர்விகல்ப - நான் மாற்றம் இல்லாதவன்

நிராகாரரூப: - உருவம் இல்லாதவன்

விபுத்வா ச - எங்கும் நிறைந்தவன்

சர்வத்ர - எல்லாம் ஆனவன்

சர்வேந்த்ரியானாம் - எல்லா உடல்களிலும் வசிப்பவன்

ந ச சங்கடம் - எனக்கு கட்டுப்பாடுகள் இல்லை

ந ஏவ முக்தி: ந மே யா - அதனால் எப்போதும் எனக்கு விடுதலை என்பதும் தேவையில்லை

சித் ஆனந்த ரூப: சிவோஹம் சிவோஹம் - அறிவும் ஆனந்தமும் வடிவாகக் கொண்ட சிவன் நான்; சிவம் நான்.

Tuesday, November 4, 2008

ஆதித்ய ஹ்ருதயம் - 4

ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்திரத்தின் 16 முதல் 20 வரையிலான சுலோகங்கள்.

நம: பூர்வாய கிரயே பஸ்சிமாத்ரயே நம:
ஜ்யோதிர் கணானாம் பதயே தினாதி பதயே நம:

nama: puurvaaya girayE pascimaathrayE nama:
jyOthir ganaanaam pathayE dinaathi pathayE nama:


நம: - வணக்கங்கள்.

பூர்வாய கிரயே - கிழக்கு மலையில் உதிப்பவருக்கு. இந்த ஸ்தோத்ரம் ராம ராவண யுத்தத்திற்கு முன்னர் உபதேசிக்கப்பட்டதால் இலங்கையில் இந்த ஸ்தோத்ரம் தோன்றியதாகக் கூறலாம். தமிழகத்தில் சூரிய உதயம் கடலில் நடக்கும். இலங்கையில் கிழக்கு திசையில் ஏதேனும் மலை இருக்கிறதா; அந்த மலையைத் தான் இங்கே உதயசூரியனின் மலை என்று சொல்லியிருக்கிறார்களா என்று தெரியவில்லை.

பஸ்சிமாத்ரயே - மேற்கு திசையில் மறைபவருக்கு

ஜ்யோதிர் கணானாம் பதயே - ஒளிக்கூட்டங்களின் தலைவருக்கு

தினாதி பதயே - நாளின் தலைவருக்கு

நம: - நமஸ்காரங்கள்

ஜயாய ஜயபத்ராய ஹர்யஸ்வாய நமோ நம:
நமோ நம: சஹஸ்ராம்சோ ஆதித்யாய நமோ நம:

jayaaya jayabhadraaya haryasvaaya namO nama:
namO nama: sahasraamsO aadhityaaya namO nama:

ஜயாய - வெற்றி வடிவானவருக்கு

ஜயபத்ராய - வெற்றியெனும் மங்கலத்தைத் தருபவருக்கு

ஹர்யஸ்வாய - பச்சை நிறக்குதிரையை உடையவருக்கு

நமோ நம: - மீண்டும் மீண்டும் வணக்கங்கள்

சஹஸ்ராம்சோ - ஆயிரக்கணக்கான பகுதிகளை/கதிர்களை உடையவருக்கு

ஆதித்யாய - அதிதியின் மகனுக்கு

நமோ நம: - மீண்டும் மீண்டும் வணக்கங்கள்.

நம உக்ராய வீராய சாரங்காய நமோ நம:
நம: பத்மப்ரபோதாய மார்தாண்டாய நமோ நம:

nama ugraaya viiraaya saarangaaya namO nama:
nama: padmaprabhOthaaya maarthaandaaya namO nama:

நம: - வணக்கங்கள்

உக்ராய - உக்கிரமானவருக்கு

வீராய - வீரம் உடையவருக்கு

சாரங்காய - கதிர்கள் என்னும் அம்புகளை ஏவும் வில்லை உடையவருக்கு

நமோ நம: - மீண்டும் மீண்டும் வணக்கங்கள்

பத்மப்ரபோதாய - தாமரையை மலரச் செய்பவருக்கு; இதயத் தாமரையை மலரச் செய்பவருக்கு; ஞானத்தை வழங்குபவருக்கு

மார்தாண்டாய - மிக்க வலிமை பொருந்தியவருக்கு

நமோ நம: - மீண்டும் மீண்டும் வணக்கங்கள்.

ப்ரஹ்மேசானாச்யுதேசாய சூர்யாய ஆதித்ய வர்சஸே
பாஸ்வதே சர்வ பக்ஷாய ரௌத்ராய வபுஷே நம:

brahmEsaanaacyutEsaaya suuryaaya aaditya varchasE
bhaasvathE sarva bhakshyaaya roudraaya vapusE nama:

ப்ரஹ்ம ஈசான அச்யுத ஈசாய - பிரமன், ஈசானன் என்னும் சிவன், அச்சுதன் என்னும் விஷ்ணு என்னும் மூவருக்கும் தலைவராக இருப்பவருக்கு

சூர்யாய - சூரியனுக்கு

ஆதித்ய வர்சஸே - ஆதித்யன் என்ற பெயர் உடைய ஒளிர்பவருக்கு

பாஸ்வதே - மிகுந்த ஒளியை வீசுபவருக்கு

சர்வ பக்ஷாய - அனைத்தையும் உண்பவருக்கு; கால உருவானவருக்கு

ரௌத்ராய - பயத்தை உண்டாக்குபவருக்கு

வபுஷே - ஒளிரும் திருமேனியை உடையவருக்கு; உலகங்களையும் உயிர்களையும் உடலாக உடையவருக்கு

நம: - வணக்கங்கள்.

தமோக்னாய ஹிமக்னாய சத்ருக்னாய அமிதாத்மனே
க்ருதக்னக்னாய தேவாய ஜ்யோதிசாம் பதயே நம:

tamOgnaaya himagnaaya satrugnaayamithaathmanE
krutagnagnaaya dEvaaya jyOthisaam pathayE nama:

தமோக்னாய - இருளை அழிப்பவருக்கு

ஹிமக்னாய - குளிரை அழிப்பவருக்கு

சத்ருக்னாய - எதிரிகளை அழிப்பவருக்கு

அமிதாத்மனே - எங்கும் நீக்கமற நிறைந்திருப்பவருக்கு; எல்லா உலகங்களுக்கு உயிர்களுக்கும் ஆத்மாவாய் இருப்பவருக்கு

க்ருதக்னக்னாய - செய்நன்றி மறந்தவர்களை அழிப்பவருக்கு

தேவாய - ஒளி வீசுபவருக்கு

ஜ்யோதிசாம் பதயே - ஒளிகளுக்கெல்லாம் தலைவருக்கு

நம: - வணக்கங்கள்.

Saturday, October 4, 2008

க்ருஷ்ணாவின் கூக்குரல் கேட்டதா?


கொடியவர்கள் நிறைந்த இடத்தில் சில நல்லவர்களும் இருக்கிறார்கள். அது தான் உலக இயற்கை போலும். ஆனால் அந்த நல்லவர்கள் கொடியவர்களுக்கிடையே வாய் மூடி மௌனமாக இருக்கும் போது அவதிப்படுபவர்களுக்கு யார் தான் கதி? திக்கற்றவர்களுக்குத் தெய்வமே துணை.

அக்ரே குரூனாம் அத பாண்டவானாம்
துச்சாசனேஹ்வாத வஸ்த்ர கேச
க்ருஷ்ணா தத் அக்ரோசத் அனன்ய நாத
கோவிந்த தாமோதர மாதவேதி


கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் முன்னிலையில் துச்சாதனன் தன் உடையையும் தலை முடியையும் இழுத்து அவமானப்படுத்தும் போது மிக்க சினம் கொண்ட க்ருஷ்ணையான திரௌபதி வேறு கதி ஒன்றும் இன்றி கூவி அழைத்தாள் 'கோவிந்தா தாமோதரா மாதவா' என்று.

Monday, September 22, 2008

ஆதித்ய ஹ்ருதயம் - 3

ஆதித்ய ஹ்ருதயத்தின் முதல் பத்து சுலோகங்களை சென்ற இடுகைகளில் பார்த்தோம். இந்த இடுகையில் அடுத்த ஐந்து சுலோகங்களைப் பார்க்கலாம்.

ஹரித் அஸ்வ: சஹஸ்ரார்ச்சி: சப்த சப்திர் மரீசிமான்
திமிரோன்மதன: சம்பு: த்வஸ்டா மார்தாண்ட அம்சுமான்

harisdasva: sahasraarchi: sapta saptir mariichimaan
timironmadhana: sambu: tvaStaa maarthaanda amsumaan

ஹரித் அஸ்வ: - பச்சைக்குதிரையை உடையவன். உலகெங்கும் பசுமை நிறம் செழிக்க சூரியனின் கதிர்கள் தேவை. அந்த பச்சைப்பயிர்களை வளர்ப்பவன் ஆதலால் அவன் பச்சைக்குதிரையை உடையவன் ஆகிறான்.

சஹஸ்ரார்ச்சி: - ஆயிரக்கணக்கான கதிர்களை உடையவன். தன்னுடைய ஆயிரக்கணக்கான கதிர்களால் இந்த உலகத்தின் அனைத்துச் செயல்களையும் நடத்துகிறான்.

சப்த சப்தி: - ஏழு குதிரைகள் பூட்டிய தேரை உடையவன். இவனின் கதிர்கள் எல்லா வகையான நிறங்களும் உடையவை. அனைத்து நிறங்களும் சேர்ந்த இவன் கதிரே இவன் தேர். ஆனாலும் அந்த எல்லா நிறங்களிலும் ஏழு நிறங்கள் மட்டுமே வெளிப்பட்டு நிற்கின்றன. அந்த நிறங்களை வானவில்லில் காணலாம். அந்த ஏழு நிறங்களும் இங்கே ஏழு குதிரைகளாகச் சொல்லப்படுகின்றன.

ஒரு வாரம் என்பதை ஒரு தேர் என்று கொண்டால் அந்த வாரத்தின் நாட்களைக் குதிரைகளாகக் கொள்ளலாம். அப்படி ஏழு நாட்கள் கொண்ட ஒரு வாரத்தை ஏழு குதிரைகள் பூட்டிய ஒரு தேராக உடையவன் கதிரவன்.

மரீசிமான் - தன்னுடைய கதிர்களால் உலகனைத்தையும் நடத்துபவன். உலக இயக்கங்களுக்கெல்லாம் மூலகாரணம் இவனது கதிர்கள் தானே.

திமிரோன் மதன: - இருட்டையும் அறியாமையையும் அழிப்பவன். இவனது கதிர்கள் இருக்கும் இடத்தில் இருட்டு இருப்பதில்லை. இருட்டில் இருக்கும் வரை தன்னுடைய உடலே தெரியாமல் இருக்கின்றது; இவனது கதிர்கள் வந்தவுடன் அனைத்து இயக்கங்களும் நடைபெற்று உலக அறிவு, ஆன்மிக அறிவு என்ற எல்லா அறிவும் கிட்டும் வாய்ப்பு ஏற்படுகின்றது. அதனால் இவன் அறியாமை இருளையும் நீக்குபவன் ஆகிறான்.

சம்பு: - மகிழ்ச்சியைத் தருபவன். அறியாமை என்னும் இருளை நீக்குவதால் உயிர்கள் அறிவு பெறுகின்றன. அந்த அறிவால் நன்மையும் மகிழ்ச்சியும் அடைகின்றன.

த்வஸ்டா - அனைத்தையும் குறைப்பவன். எந்தப் பொருளும் இவனது கதிர்களில் நீண்ட நாட்கள் இருந்தால் தன்னுடைய உருவத்திலிருந்து சுருக்கமடைகின்றது. குறிப்பாக நீர். அனைத்தையும் குறைப்பதால் உலக சுழற்சிக்கு வழி வகுக்கிறார் சூரியன். நீரைக் குறைப்பதால் மேகங்களை உருவாக்குகிறான்; மழையாகப் பொழிய வைக்கிறான். அதே போல் இறந்த உடல்களையும் தாவரங்களையும் மங்கச் செய்வதன் மூலம் அடுத்த சுழற்சிக்கு வழி வகுக்கிறான்.

மார்தாண்ட - மிகுந்த வலிமை உடையவன். இவனிடமிருந்தே உலகத்தில் எல்லா பொருட்களும் உயிர்களும் வலிமையைப் பெறுகின்றன. அனைத்துப் பொருட்களுக்கும் வலிமையைத் தரும் இவன் எல்லாவற்றையும் விட வலிமை மிகுந்தவன்.

அம்சுமான் - எங்கும் பரவும் கதிர்களை உடையவன். மேகம் மறைத்து நிற்கும் போதும் தன் உருவத்தை உயிர்கள் பார்க்க இயலாத போதும் தன் கதிர்களால் எங்கும் பரவி உலக இயக்கத்தை நடத்துபவன்.

ஹிரண்யகர்ப்ப: சிசிர: தபனோ பாஸ்கரோ ரவி:
அக்னிகர்ப்போ அதிதேர்புத்ர: சங்க: சிசிரநாசன:

hiranyakarba: sisira: tapanO bhaaskarO ravi:
agnikarbO athithEr putra: sankha: sisira naasana:


ஹிரண்யகர்ப்ப: - பொன்மயமான கருப்பையை உடையவன். உலகங்களின் தோற்றத்திற்குக் காரணமானவன் என்பதால் இவன் பொன்மயமான கருப்பையை உடையவன் எனப்படுகிறான். உலகத் தோற்றம் ஹிரண்யகர்ப்பம் என்ற பொன்முட்டையிலிருந்து நிகழ்ந்ததாக சொல்வது மரபு.

சிசிர: - குளிரைத் தருபவன். இவனுடைய கதிர்கள் குறைவாக இருக்கும் நிலையே குளிர் நிலை. அதனால் இவனே குளிரைத் தருபவனாகவும் இருக்கிறான்.

தபனோ - நடுக்கத்தைத் தருபவன். இவன் தரும் குளிரால் உடல் நடுக்கம் தருபவன். இவனுடைய பெருமையைக் கண்டு உடலும் மனமும் நடுங்கச் செய்பவன்.

பாஸ்கர: - எல்லாவற்றையும் ஒளிவீசச் செய்பவன். இவனுடைய ஒளி பெற்று எல்லா உலகங்களும் அவற்றில் இருக்கும் பொருட்களும் ஒளி வீசுகின்றன. சந்திரனும் இவனுடைய ஒளியால் தான் ஒளிர்கிறான். உலகத்தில் இருக்கும் எல்லா பொருட்களும் ஒளிர்வது இவனது கதிர்களால் தான்.

ரவி: - எல்லாவற்றையும் உருவாக்குபவன். உலகத்தில் எந்தப் பொருள் உருவாக வேண்டுமென்றாலும் இவனது கதிர்களும் அதிலிருந்து கிடைத்த சக்தியும் தேவை.

அக்னிகர்ப்ப: - தீயை தன்னுடலாகக் கொண்டவன். அத்தீயிலிருந்தே உயிர்களைப் படைக்கவும் காக்கவும் அழிக்கவும் செய்யும் கதிர்களை உண்டாக்கி எல்லாத் திசைகளிலும் வீசுபவன்.

அதிதேர் புத்ர: - அதிதியின் மகன். தேவமாதாவான அதிதியின் முதன்மையான மக்களில் ஒருவன்.

சங்க: - ஆனந்தமயமானவன். இவனது கதிர்களால் உலகங்களுக்கெல்லாம் ஆனந்தத்தைத் தருபவன்.

சிசிரநாசன - குளிரை அழிப்பவன். இவனது கதிர்களின் குறைவினால் ஏற்பட்டக் குளிரை இவனது கதிர்களில் பெருக்கத்தால் நீக்குபவன்.

வ்யோமநாத: தமோபேதி ருக் யஜுஸ் சாம பாரக:
கன வ்ருஷ்டி: அபாம் மித்ரோ விந்த்யவீதி ப்லவங்கம:

vyOmanaatha: thamObhEdi rug yajuS saama paaraga:
ghanavrushti: apaam mithrO vindhyaviithi plavangama:

வ்யோமநாத: - வானத்தின் தலைவன். வானவீதியில் சூரிய குடும்பத்தின் தலைவன் இவனே. வானத்தில் கண்களுக்கு நேரடியாகத் தெரியும் பொருட்களில் மிகப்பெரியவன் இவனே.

தமோ பேதி - இருளை உடைப்பவன். சூரியனின் கதிர்கள் தோன்றும் வரை இருள் கனத்த இரும்புத் திரையைப் போல் சூழ்ந்திருக்கிறது. இவனது கதிர்கள் வந்தவுடனேயே பெரிய சம்மட்டியால் உடைக்கப்பட்டு சுக்கு நூறாகச் சிதறியதைப் போல் இருள் காணாமல் போகின்றது.

ருக் யஜுஸ் சாம பாரக: - ருக், யஜுர், சாமம் எனப்படும் மூன்று வேதங்களையும் கண்டு உலகிற்குச் சொன்னவன். வேதங்கள் யாராலும் உருவாக்கப்படவில்லை; அதனால் அதனை அபௌருஷேயம் என்று சொல்வார்கள். அவை என்றும் இருப்பவை. ரிஷிகள் அவற்றைக் கண்டு சொன்னார்கள். அதனால் அவர்களுக்கு மந்த்ர த்ரஷ்டா (மந்திரத்தைக் கண்டவர்கள்) என்று பெயர். இங்கே சூரியன் மூவேதங்களையும் கண்டு வெளிப்படுத்தியவனாகச் சொல்லப்படுகிறான்.

கன விருஷ்டி: - கடும் மழையைப் பெய்விப்பவன். இவனது கதிர்கள் ஏற்படுத்தும் வெப்ப நிலை மாற்றங்களாலேயே உலகில் மழை பொழிகின்றது. அதனால் இவனே மழையைப் பொழிவிப்பவன் ஆகின்றான்.

அபாம் மித்ர: - நீருக்குத் தோழன். சூரியனும் நீரும் தோழர்கள் என்பதாலேயே இவனது கதிர்கள் பட்டவுடன் நீர் தன் உரு மாறி இவனுடன் கலந்து கொள்ளச் செல்கிறது போலும்.

விந்த்ய வீதி ப்லவங்கம: - விந்திய மலையை ஒட்டிய வீதியில் விரைவாகச் செல்பவன். சூரியனை பூமி சுற்றும் போது பூமியிலிருந்து பார்ப்பவர்களுக்கு வானத்தில் அவன் வருடத்தில் ஆறு மாதம் வட பக்கத்திலும் ஆறு மாதம் தென் பக்கத்திலும் செல்வதாகத் தோன்றும். அதனையே உத்தராயணம் என்றும் தட்சினாயணம் என்றும் கூறுவார்கள். அந்த வடக்கு வீதியும் தெற்கு வீதியும் விந்திய மலைத்தொடரை ஒட்டி இருப்பதாகக் கூறுவதும் மரபு. அந்த வகையில் சூரியன் விந்திய மலை வீதியில் விரைவாகச் செல்பவனாகச் சொல்லப்படுகிறான்.

ஆதபி மண்டலி ம்ருத்யு: பிங்கல சர்வதாபன:
கவிர் விஷ்வோ மஹா தேஜ ரக்த சர்வ பவோத்பவ:

Athapi mandali mruthyu: pingala sarvathaapana:
kavir vishvO mahaathEja raktha sarva bhavOthbhava:

ஆதபி: - கொளுத்துபவன். இதற்கு விளக்கம் தேவையில்லை. எல்லோரும் அனுபவித்திருப்போம்.

மண்டலி - வட்டவடிவமானவன்.

ம்ருத்யு: - மரணவடிவானவன். உலகத்தில் எல்லாவற்றையும் படைத்தும், காத்தும், அழித்தும் அனைத்து செயல்களையும் நடத்துவிப்பவன் என்பதால் அவன் மரண வடிவாகவும் இருக்கிறான்.

பிங்கல: - மஞ்சள் வண்ணம் கொண்டவன். சூரியனை மரணம் என்று சொன்னவுடன் அவன் மறையும் போது தோன்றும் பொன்வண்ணம் நினைவிற்கு வருகின்றது போலும்.

சர்வ தாபன: - அனைத்தையும் தகிப்பவன்.

கவி: - அனைத்தையும் அறிந்தவன்.

விஷ்வோ - அண்ட வடிவானவன்.

மஹாதேஜ: - மிகப்பெரும் ஒளிவடிவானவன்.

ரக்த: - சிவந்த வண்ணம் கொண்டவன். பெரும் ஒளிவடிவானவன் என்றவுடன் காலையில் சூரியன் தோன்றும் போது தோன்றும் செவ்வண்ணம் நினைவிற்கு வருகிறது போலும்.

சர்வ பவோத்பவ: - எல்லா உயிர்களும் பொருட்களும் தோன்றுமிடமானவன்.

நக்ஷத்ர க்ரஹ தாரானாம் அதிபோ விஷ்வ பாவன:
தேஜசாம் அபி தேஜஸ்வி த்வாதசாத்மன் நமோஸ்துதே

nakshatra graha thaaraanaam adhibO vishva bhaavana:
tEjasaam api tEjasvi dvaadasaathman namOSthutE

நக்ஷத்ர க்ரஹ தாராணாம் அதிப: - விண்மீன்கள், கிரகங்கள் போன்ற வானில் ஒளிவீசும் பொருட்களுக்கெல்லாம் தலைவன்.

விஷ்வ பாவன: - அண்டத்தின் பிறப்பிடம்

தேஜசாம் அபி தேஜஸ்வி - ஒளிவீசுபவர்களுக்கெல்லாம் ஒளியானவன்

த்வாதசாத்மன் - பன்னிரு வடிவங்கள் கொண்டவன். வருடத்தின் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு வடிவம் கதிரவனுக்கு இருப்பதாகக் கூறுவது மரபு. பன்னிரு ஆதித்யர்கள் என்று அவர்களைச் சொல்வார்கள். அவர்கள் இந்திரன், தாதா, பர்ஜன்யன், த்வஸ்டா, பூஷா, அர்யமா, பகன், விவஸ்வந்தன், விஷ்ணு, அம்சுமான், வருணன், மித்ரன்.

நமோஸ்துதே - உனக்கு எங்களின் வணக்கங்கள்.

Friday, September 12, 2008

கோவிந்தா தாமோதரா மாதவா! கரையேற்றுவாய் எங்களை!


ஆகா. அழகான பாடல் கேட்கிறதே அங்கே. யார் பாடுவது?

ஓ. கடைத்தெருவில் இந்த இடைச்சிறுவர்கள் பாடிக் கொண்டு செல்கிறார்கள். என்ன விந்தை? பால், தயிர், வெண்ணெய் என்று கூவி விற்காமல் இந்தச் சிறுவர்கள் வேறு ஏதோ பாடிக் கொண்டு செல்கிறார்களே. நாமும் கூர்ந்து கேட்போம்.

ச்ரி க்ருஷ்ண விஷ்ணோ மது கைடபாரே
பக்தானுகம்பின் பகவன் முராரே
த்ரயஸ்வ மாம் கேஸவ லோகநாத
கோவிந்த தாமோதர மாதவேதி


அருமை அருமை. என்ன ஒரு சந்தம். இவர்கள் ஆடிக் கொண்டும் பாடிக் கொண்டும் வரும் போது இந்த அழகான பொருள் நிறைந்த பாடலைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம் போலிருக்கிறதே. இந்த இனிய பாடலைக் கேட்பதற்காகவே கடைத்தெருவிற்கு அடிக்கடி வர வேண்டும்.

இந்த நான்கு வரிகளில் எத்தனை எத்தனை கதைகள் சொல்லிவிட்டார்கள். க்ருஹ்ணோதி இதி க்ருஷ்ண என்பார்கள் பெரியவர்கள். கவருபவன் எவனோ அவனே கிருஷ்ணன். க்ருஷியதி இதி க்ருஷ்ண என்றும் சொல்வார்கள். பண்படுத்துபவன் என்பதால் இவன் கிருஷ்ணன். அவன் எங்கும் நிறைந்தவன். விஷ்ணு. மது கைடபர்கள் என்னும் அசுரர்களின் எதிரி. பக்தர்களுக்கு அருளுபவன். வலிமை, புகழ், செல்வம், அறிவு, அழகு, பற்றின்மை என்ற ஆறு குணங்கள் கொண்டவனே ஆதி பகவன். முரன் என்னும் அசுரனின் எதிரி. அழகான சுருண்ட முடியைக் கொண்டவன் கேசவன். உலகங்களுக்கெல்லாம் தலைவன் லோகநாதன். அவனை இந்தச் சிறுவர்கள் கடைத்தேற்ற அழைக்கிறார்கள். த்ரயஸ்ய மாம் என்று நாம் ஒவ்வொருவரும் பாட வேண்டுமே. பாடுவோமே. கண்ணா கோவிந்தா தாமோதரா மாதவா எம்மைக் கரையேற்று. எம்மைக் கரையேற்று.

Thursday, July 24, 2008

ஊமை பேசுவதும் முடவர் மலையைக் கடப்பதும்...


எவ்வளவு தான் தன்னம்பிக்கை இருந்தாலும் சில நேரங்களில் சில செயல்களைச் செய்ய முனையும் போது ஒரு மெல்லிய நடுக்கம் ஏற்படுவது இயல்பாக இருக்கிறது. மற்றவர்களுக்கு எப்படியோ தெரியாது; அடியேனுக்கு அந்த நிலை பலமுறை ஏற்பட்டுள்ளது. இறை நம்பிக்கையே தன்னம்பிக்கை என்ற கருத்தில் உறுதியாக இருக்க எனக்கு சில துதிப்பாடல்கள் துணையாக அமைகின்றது. அப்படி மெல்லிய நடுக்கம் ஏற்படும் போதெல்லாம் உதவும் துதிகளில் ஒன்று இந்த சுலோகம்.

ஊமையைப் பேச வைத்து பெரும்கவியாக்கிய கதைகளைப் படித்திருக்கிறோம். குள்ள முனிவன் அடக்க இயலாத விந்திய மலையைக் கடந்ததைப் பற்றி படித்திருக்கிறோம். அப்படி செயற்கரிய செயல்களை எல்லாம் அவர்கள் யாருடைய கருணையால் செய்தார்களோ அந்த இறைசக்தியே எனக்கும் துணை புரிகிறது; கருணை புரிகிறது என்ற எண்ணம் அளவில்லாத தன்னம்பிக்கையைத் தருகிறது.

மூகம் கரோதி வாசாலம் பங்கும் லங்கயதே கிரிம்
யத் க்ருபா தம் அஹம் வந்தே பரமானந்த மாதவம்


மூகம் கரோதி வாசாலம் - ஊமை பெரும் பேச்சாற்றல் மிக்கவர் ஆவதும்

பங்கும் லங்கயதே கிரிம் - முடவர் பெரும் மலையை கடப்பதும்

யத் க்ருபா தம் அஹம் வந்தே - யார் கருணையால் நடக்கிறதோ அவரை நான் வணங்குகிறேன்


பரமானந்த மாதவம் - அவர் பரமானந்தரும் மாதவரும் ஆனவர்

பேசமுடியாதவர் யார் கருணையால் பெரும் பேச்சாற்றல் மிக்கவர் ஆகிறாரோ முடவர் யார் கருணையால் பெரும் மலையைக் கடக்கிறாரோ அந்த பரமானந்த மாதவனை அடியேனும் வணங்குகிறேன்.

Monday, July 21, 2008

குருவின் திருப்பாதக் கமலங்களில்...


குரு சரணாம்புஜ நிர்பர பக்த:
சம்சாராத் அசிராத் பவ முக்த:
சேந்த்ரிய மானச நியமாத் ஏவம்
த்ரக்ஸ்யசி நிஜஹ்ருதயஸ்தம் தேவம்

குரு சரண அம்புஜ நிர்பர பக்த: - குருவின் திருப்பாதக் கமலங்களில் உன் பாரங்களையெல்லாம் முழுவதுமாக இட்டு பக்தியுடன் இருந்தால்

சம்சாராத் அசிராத் பவ முக்த: - பிறப்பு இறப்பு என்ற சம்சார சுழலிலிருந்து விரைவிலேயே விடுதலை பெறுவாய்.

ச இந்த்ரிய மானச நியமாத் ஏவம் - புலனகள், மனது இவற்றை தகுந்த வழியில் செலுத்துவதன் மூலம்

த்ரக்ஸ்யசி நிஜஹ்ருதயஸ்தம் தேவம் - இருதயத்தில் நிலைத்து நிற்கும் இறைவனை நேரடியாக தரிசிக்கலாம்.

கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.

Saturday, July 19, 2008

மிக்கக் கவனத்துடன் செய்ய வேண்டிய செயல்கள்


ப்ராணாயாமம் ப்ரத்யாஹாரம்
நித்யாநித்ய விவேக விசாரம்
ஜாப்யாசமேத சமாதி விதானம்
குர்வவதானம் மஹதவதானம்

ப்ராணாயாமம் ப்ரத்யாஹாரம் - மூச்சின் இயக்கத்தைக் கட்டுப்படுத்துவது; புலன்களை அதன் வழியிலேயே செல்லாமல் தடுப்பது

நித்ய அநித்ய விவேக விசாரம் - நிலையானது எது, நிலையற்றது எது என்ற பகுத்தறிவினைப் பெறத் தனக்குள் தானே கேள்விகள் கேட்டுக் கொள்வது

ஜாப்யாசமேத சமாதி விதானம் - இறைவனின் திருநாமங்களின் ஜபத்துடன் கூடிய மனசமநிலையை (சமாதியை) அடைவது.

குரு அவதானம் மஹத் அவதானம் - மிக்கக் கவனத்துடன் செய்ய வேண்டிய செயல்கள் இவை.

கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.

Wednesday, July 16, 2008

பெற்ற பிள்ளையிடம் கூட பணம் படைத்தவனுக்கு பயம்


அர்த்தம் அனர்த்தம் பாவய நித்யம்
நாஸ்தி தத் சுக லேச: சத்யம்
புத்ராதபி தன பாஜாம் பீதி:
சர்வத்ரைசா விஹிதா ரீதி:


அர்த்தம் அனர்த்தம் பாவய நித்யம் - பொருள் பொருளற்றதாய் எப்போதும் சிந்தனை செய்வீர்கள்.

நாஸ்தி தத் சுக லேச: சத்யம் - உண்மையைச் சொன்னால் அதில் சிறிதளவும் சுகம் இல்லை.

புத்ராதபி தன பாஜாம் பீதி: - பெற்ற பிள்ளையிடம் கூட பணம் படைத்தவனுக்கு பயம் உண்டு.

சர்வத்ரைசா விஹிதா ரீதி: - எங்கும் இதே நியதியாக இருக்கிறது.

கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.

Sunday, July 13, 2008

பாவ நடத்தையுடன் கூடிய வாழ்க்கையை யாரும் விடுவதில்லை


சுகத: க்ரியதே ராமாபோக:
பஸ்சாதந்த சரீரே ரோக:
யத்யபி லோகே மரணம் சரணம்
ததபி ந முஞ்சதி பாபாசரணம்

சுகத: க்ரியதே ராமாபோக: - (ஒருவன்) மிக்க சுகத்துடன் (எந்தக் கவலையும் இன்றி இயன்றவரை) புலனின்பங்களில் ஆழ்ந்து போகிறான்.

பஸ்சாத் அந்த சரீரே ரோக: - பின்னர் இறுதிக் காலத்தில் அதனால் உடலில் நோய்களைப் பெறுகிறான்.

யத்யபி லோகே மரணம் சரணம் - இந்த உலகத்தில் எல்லோருக்கும் மரணம் மட்டுமே ஒரே கதி என்பதை அறிந்திருந்த போதும்

ததபி ந முஞ்சதி பாப ஆசரணம் - பாவ நடத்தையுடன் கூடிய வாழ்க்கையை யாரும் விடுவதில்லை.

கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.

Wednesday, July 9, 2008

பாடப்பட வேண்டியவை கீதையும் இறைவனின் ஆயிரம் நாமங்களும்


கேயம் கீதா நாம சஹஸ்ரம்
த்யேயம் ஸ்ரீபதி ரூபமஜஸ்ரம்
நேயம் ஸஜ்ஜன சங்கே சித்தம்
தேயம் தீன ஜனாய ச வித்தம்

கேயம் கீதா நாம சஹஸ்ரம் - பாடப்பட வேண்டியவை கீதையும் இறைவனின் ஆயிரம் நாமங்களும்

த்யேயம் ஸ்ரீபதி ரூபம் அஜஸ்ரம் - இடைவீடின்றி த்யானிக்கப்பட வேண்டியது திருமகள் மணாளனின் திருவுருவம்

நேயம் ஸஜ்ஜன சங்கே சித்தம் - மனத்தை அன்புடன் நிலைநிறுத்த வேண்டியது நன்மக்களின் கூட்டுறவில்

தேயம் தீன ஜனாய ச வித்தம் - செல்வம் வழங்கப்பட வேண்டியது ஏழ்மையில் இருப்பவர்களுக்கு

கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.

Thursday, July 3, 2008

ஸ்ரீ சுப்ரமண்ய ஷடக்ஷரி மஹா-மந்த்ர ஸ்தோத்ரம்....


முருகனருள் வலைப்பூ 100ஆம் பதிவினை நோக்கிச் செல்லும் விட்ஜெடைப் பார்த்த போது, இதை எழுதத் தோன்றியது. இந்தப் பதிவினை இரண்டு நாட்கள் முன்பே போட்டிருக்க வேண்டும். எழுத நேரம் கிடைக்கவில்லை. முருகனருள் வலைப்பூவில் பதிவிடும் நண்பர்கள் எல்லோருக்கும் முருகனருள் கிடைக்க வாழ்த்துக்கள்.

ஒவ்வொரு தெய்வத்திற்கும் மஹா மந்திரம் என்று ஒன்று இருக்கும். அதில் முருகனுக்கானது ஷட்-அக்ஷரங்களால் ஆன 'சரவணபவ'. ஆறுமுகனது அருளை அள்ளித்தந்திடும் இந்த ஸ்தோத்ரம் குமார தந்திரம் என்னும் மந்திர சாஸ்திர நூலில் இருக்கிறது. நமக்கு மொழிப் பேதமிருந்தாலும் நம் கந்தனுக்கு எல்லா மொழியும் தம்மொழிதானே!!!


அதாத: ஸ்ம்ப்ரவக்ஷ்யாமி மூலமந்த்ர ஸ்தவம் சிவம்
ஜபதாம் ச்ருண்வதாம் ந்ரூணாம் புக்திமுக்தி ப்ரதாயகம்
ஸர்வசத்ரு க்ஷயகரம் ஸ்ர்வரோக நிவாரணம்
அஷ்டைச்வர்ய ப்ரதம் நித்யம் ஸர்வலோகைக பாவனம்.

இந்த ஸ்தோத்ரம் படிப்பவர்களுக்கும், கேட்பவர்களுக்கும், இன்பத்தையும் மோக்ஷத்தையும் அருளக்கூடியது. விரோதிகளை வெற்றி கொள்ளவும், நோய் நொடிகள் அண்டாமல் அஷ்டலெக்ஷிமியின் அருளைப் பெறவும், உலகிலுள்ளோர் அனைவரையும் தூய்மைப்படுத்தும் ஸ்ரீமுருகனின் மங்களமான மூலமந்திரத்தால் ஆனது இந்த ஸ்தோத்ரம்.

சராண்யோத்பவம் ஸ்கந்தம் சரணாகத பாலகம்
ரண்யம் த்வாம் ப்ரபன்னஸ்ய தேஹி மே விபுலாம் ஸ்ரீயம்.

சரவணப் பொய்கையில் பிறந்தவரும், ஸ்கந்தனும், தன்னை சரணமடைந்தவர்களை காப்பவருமான, தாங்களை சரணடையூம் எனக்கு சகல செல்வங்களையும் அருள வேண்டும்.

ராஜராஜ ஸ்கோத்பூதம் ராஜீவாயத லோசனம்
தீச கோடி ஸெளந்தர்யம் தேஹி மே விபுலாம் ச்ரியம்

குபேரனைத் தோழமை கொண்ட சிவனிடத்திலிருந்து வந்தவரும், தாமரை இதழ் போன்ற நீண்ட கண்களையுடையவரும், கோடி மன்மதனுக்கு நிகரான அழகும் கொண்ட நீங்கள் எனக்கு சகல செல்வங்களையும் அருள வேண்டும்.

பலாரி ப்ரமுகைர் வந்த்ய: வல்லீந்த்ராணி ஸுதாபதே!
ரதாச்ரித லோகானாம் தேஹி மே விபுலாம் ச்ரியம்

இந்திரனுள்ளிட்ட தேவர்களால் வணங்கப்படுபவரும், வள்ளி-தேவசேனா ஆகியோரின் மணவாளனும், தன்னை அண்டியவர்களின் விருப்பத்தை நிறைவேற்றுபவனே!, எனக்கு சகல செல்வங்களையும் அருள வேண்டும்.

நாரதாதி மஹாயோகி ஸித்தகந்தர்வ ஸேவிதம்
வவீரை: பூஜிதாங்க்ரிம் தேஹிமே விபுலாம் ச்ரியம்


நாரதர் முதலிய சிறந்த துறவிகளாலும், சித்தர்கள்-கந்தர்வர்களாலும் வணங்கப்பட்டவரும், வீரபாஹு முதலிய ஒன்பது வீரர்களால் பூஜிக்கப்பட்ட பாதத்தை உடையவருமான உம்மைச் சரணடைகிறேன். எனக்கு சகல செல்வங்களையும் அருள்வீராக.

பகவன் பார்வதீஸுநோ! ஸ்வாமின் பக்தார்திபஞ்சன!
வத் பாதாப்ஜயோர் பக்திம் தேஹி மே விபுலாம் ச்ரியம்

பகவானே!, பார்வதி குமாரா!, தலைவனே! பக்தர்களின் கவலைகளைப் போக்குகின்றவனே! தங்களுடைய பாத கமலங்களில் குறைவற்ற பக்தியையும், அளவற்ற செல்வத்தையும் எனக்கு அளித்துக் காக்க வேண்டும்.

ஸுதான்யம் யச: கீர்திம் அவிச்சேதம் ச ஸ்ந்ததே:
சத்ரு நாசன மத்யாசு தேஹி மே விபுலாம் ச்ரியம்

தங்கம், தான்யம், அளவற்ற புகழ், மகன்-பேரன் என்று வம்ச விருத்தி, விரோதமற்ற சுற்றம் ஆகியவற்றை இப்போழுதே எனக்கு அளித்து, செல்வத்தையும் அருள் புரிவீர்களாக!

இதம் ஷடக்ஷரம் ஸ்தோத்ரம் ஸுப்ரம்மண்யஸ்ய ஸந்ததம்
ய: படேத் தஸ்ய ஸித்யந்தி ஸ்ம்பத: சிந்திதாதிகா:

ஸ்ரீ சுப்ரமண்யருடைய இந்த மூல மந்திர ஷடக்ஷ்ர ஸ்தோதிரத்தை எப்போது யார் படிக்கின்றாரோ அவருக்கு விரும்பிய அளவுக்கும் மேலாக செல்வங்கள் கிடைக்கும்.

காமம், சினம், பேராசை, மயக்கம் (பஜ கோவிந்தம் - 26 )


காமம் க்ரோதம் லோபம் மோஹம்
த்யக்த்வாத்மானம் பாவய கோஹம்
ஆத்மஞான விஹினா மூடா
தே பச்யந்தே நரக நிகூடா:

காமம் க்ரோதம் லோபம் மோஹம் த்யக்த்வா - காமம், சினம், பேராசை, மயக்கம் இவற்றைத் துறந்துவிட்டு

ஆத்மானம் பாவய கோ அஹம் - மனத்தில் 'நான் யார்?' என்ற சிந்தனையை எப்போதும் கொள்.

ஆத்மஞான விஹினா மூடா - தன்னைப் பற்றிய அறிவு இல்லாதவர்கள் மூடர்கள்

தே பச்யந்தே நரக நிகூடா: - அவர்கள் எப்போதும் நரக வேதனையில் கட்டுப்பட்டவர்களாக (அறிவாளிகளால்) பார்க்கப் படுகிறார்கள்.

கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.

Wednesday, June 25, 2008

சண்டை எதற்கு? பின் சமாதானம் எதற்கு? (பஜ கோவிந்தம் 25)


சத்ரௌ மித்ரே புத்ரே பந்தௌ
மா குரு யத்னம் விக்ரஹசந்தௌ
பவ சமசித்த: சர்வத்ர த்வம்
வாஞ்சஸ்யசிராத் யாதி விஷ்ணுத்வம்

சத்ரௌ - எதிரிகளிடமோ

மித்ரே - நண்பர்களிடமோ

புத்ரே - பிள்ளைகளிடமோ

பந்தௌ - உறவினர்களிடமோ (யாரிடம் ஆனாலும் அவர்களுடன்)

மா குரு யத்னம் விக்ரஹ சந்தௌ - சண்டைக்கோ சமாதானத்திற்கோ முயற்சி செய்யவேண்டாம்

பவ சமசித்த: சர்வத்ர த்வம் - எல்லாரிடமும் எல்லா நேரமும் எங்கும் சமமான மனத்துடன் இரு

வாஞ்சஸ்ய அசிராத் யாதி விஷ்ணுத்வம் - இறைநிலையை விரைவில் அடைந்துவிடுவாய்

கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.

Saturday, June 21, 2008

உன்னிலும் என்னிலும் எல்லோரிடத்தும் ஒரே இறைவன் (பஜ கோவிந்தம் 24)


த்வயி மயி சான்யத்ரய்கோ விஷ்ணு:
வ்யர்த்தம் குப்யஸி மா ஸஹிஷ்ணு:
சர்வஸ்மிந் அபி பஸ்யாத்மானம்
சர்வத்ரோ ஸ்த்ருஜ பேதஜ்ஞானம்


த்வயி - உன்னிலும்

மயி - என்னிலும்

ச அன்யத்ர - மற்றுமுள்ள எல்லாரிடத்திலும், எல்லாப் பொருளிலும்

ஏகோ விஷ்ணு: - ஒரே இறைவன் விஷ்ணு தான் இருக்கிறார்.

பேத அஞ்ஞானம் - வேறுபாடுகள் தோன்றுவது அறியாமையால்

வ்யர்த்தம் - அது வீண்

குப்யஸி மா - என் மேல் வீணாகக் கோபம் கொள்ளாதே

ஸஹிஷ்ணு: - பொறுமையாக இரு

சர்வஸ்மிந் அபி - எங்கும் எப்பொருளிலும் எவ்வுயிரிலும்

பஸ்யதி ஆத்மானம் - ஆத்மனைப் பார்

சர்வத்ரோ ஸ்த்ருஜ - எல்லா இடங்களிலும் வேறுபாடுகளைக் காண்பதை விட்டுவிடு.

கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.

Friday, June 20, 2008

வாழ்வு முற்றும் கனவு (பஜ கோவிந்தம் 23)


கஸ்த்வம் கோஹம் குத ஆயாத:
கா மே ஜனனி கோ மே தாத:
இதி பரிபாவய சர்வம் அசாரம்
விஷ்வம் த்யத்வா ஸ்வப்ன விசாரம்

கஸ்த்வம் (க த்வம்) - நீ யார்?

கோஹம் (க அஹம்) - நான் யார்?

குத ஆயாத: - எங்கிருந்து வந்தோம்?

கா மே ஜனனி - யார் என் தாய்?

கோ மே தாத: - யார் எனது தந்தை?

இதி பரிபாவய - இந்தக் கேள்விகளைக் கேட்டு விடைகளை அறிய முற்படு

சர்வம் அசாரம் - இங்கு எல்லாமே நிலையற்றது

விஷ்வம் த்யத்வா ஸ்வப்ன விசாரம் - இவையெல்லாம் கனவினைப் போன்றது என்பதனை உணர்ந்து எல்லாவற்றையும் துறந்துவிடு.

கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.

Thursday, June 19, 2008

பித்தனும் குழந்தையும் சித்தனும் (பஜ கோவிந்தம் 22)


ரத்யாகர்பட விரசித கந்தா:
புண்யாபுண்ய விவர்ஜித பந்தா:
யோகி யோக நியோஜித சித்தா:
ரமதே பாலோன்மத்தவத் ஏவ

ரத்யா கர்பட விரசித கந்தா: - கந்தல் துணிகளால் ஆன உடைகளை அணிந்திருப்பான்

புண்ய அபுண்ய விவர்ஜித பந்தா: - புண்ய பாவங்களைத் தாண்டிய நடத்தையை (பாதையை) உடையவனாய் இருப்பான்

யோகி யோக நியோஜித சித்தா: - யோகியாகவும் இறைவனிடம் இணைந்த சித்தத்தைக் கொண்டவனாகவும் இருப்பான்

ரமதே பால உன்மத்தவத் ஏவ - அப்படிப்பட்டவனே மகிழ்கிறான்; பார்வைக்குக் குழந்தையைப் போலும் பித்தனைப் போலும் இருப்பான்.

கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.

***

யோகம் என்ற சொல்லுக்கு ஐக்கியம் என்ற பொருளும் இருக்கிறது. பிரிந்திருந்த இரு பொருட்கள் ஒன்றாகச் சேர்வது யோகம்.

Wednesday, June 18, 2008

மீண்டும் பிறப்பு மீண்டும் இறப்பு மீண்டும் கருவறைத் தங்கல் (பஜ கோவிந்தம் 21)


புனரபி ஜனனம் புனரபி மரணம்
புனரபி ஜனனி ஜடரே சயனம்
இஹ சம்சாரே பஹு துஸ்தாரே
க்ருபயா பாரே பாஹி முராரே


புனரபி ஜனனம் - மீண்டும் ஒரு முறை பிறப்பு

புனரபி மரணம் - மீண்டும் ஒரு முறை இறப்பு

புனரபி ஜனனி ஜடரே சயனம் - மீண்டும் ஒரு முறை தாயின் கருப்பையில் தூக்கம்

இஹ சம்சாரே பஹு துஸ்தாரே - இந்த பிறப்பு-இறப்பு என்னும் சுழல் கடப்பதற்கு மிகக் கடினமானதொன்றாக இருக்கிறது

க்ருபயா பாரே பாஹி முராரே - அருள் கூர்ந்து என்னைக் காப்பாய் பெருமாளே.

கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.

***

முராரி - முரனைக் கொன்றவன்.

ஸ்ரீ சாஸ்தா பஞ்சரத்னம்....



சபரிமலை செல்லும் அன்பர்கள் பலருக்கும் பாடமான ஸ்லோகம் தான் இது. யார் எழுதியது என்று தெரியவில்லை. பலருக்கும் இஷ்ட தெய்வமான ஸ்ரீ தர்ம சாஸ்தாவின் திருவடி பணிந்து இங்கு இதனை இடுகிறேன்.


லோக வீரம் மஹாபூஜ்யம் ஸர்வ ரக்ஷாகரம் விபும்
பார்வதீ ஹ்ருதயாநந்தம் சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்

உலகம் போற்றும் மாவீரரும், மஹா பூஜை செய்யத்தக்கவரும், எங்கும் எப்போதும், யாரையும் அனைத்து இன்னல்களிலிருந்தும் காப்பவரும் அன்னை பார்வதி தேவிக்கு மிகுந்த சந்தோஷத்தை தருபவருமான ஸ்ரீ சாஸ்தாவை நமஸ்கரிக்கிறேன்.


விப்ர பூஜ்யம் விஸ்வ வந்த்யம் விஷ்ணு சம்போ: ப்ரியம் ஸுதம்
க்ஷிப்ர ப்ரஸாத நிரதம் சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்


வேதமறிந்தவர்களால் பூஜிக்கப்படுபவரும், உலகனைத்தாலும் வணங்கத்தக்கவரும், விஷ்ணு, சிவன் போன்றோருக்கு ப்ரியமானவரும், பக்தர்களுக்கு உடனுக்குடன் அருளத் தயாராக இருக்கும் ஸ்ரீ சாஸ்தாவை நமஸ்கரிக்கிறேன்.


மத்த மாதங்க கமநம் காருண்யாம்ருத பூரிதம்
ஸர்வ விக்ன ஹரம் தேவம் சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்

மதம் பிடித்த யானையின் மேல் கம்பீரமாக அமர்ந்து உலா வருபவரும், கருணையாகிய அம்ருதம் நிரம்பியவரும், அனைத்து இன்னல்களையும் களைபவரும், தேவாதிதேவருமான ஸ்ரீ சாஸ்தாவை நமஸ்கரிக்கிறேன்.


அஸ்மத்குலேஸ்வரம் தேவம் அஸ்மத் சத்ரு விநாசனம்
அஸ்மதிஷ்ட ப்ராதாராம் சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்

எங்கள் குல முதல்வரும், தேவரும், எங்கள் எதிரிகளை விரட்டியடித்து துவம்ஸம் செய்பவரும், எங்கள் கோரிக்கையை ஏற்று எங்கள் விருப்பத்தை உடனே நிறைவேற்றுபவருமான ஸ்ரீ சாஸ்தாவை நமஸ்கரிக்கிறேன்.

பாண்டேய வம்ச திலகம் கேரளை கேளிவிக்ரஹம்
ஆர்த த்ராண பரம் தேவம் சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்

பாண்டிய குல திலகமும், கேரள தேசத்தில் விக்ரஹமாக அமர்ந்திருப்பவரும், பக்தர்களை காப்பாறுவதில் முதன்மையானவரும், தேவாதி-தேவருமான ஸ்ரீ சாஸ்தாவை நமஸ்கரிக்கிறேன்.

பஞ்ச ரத்நாக்ய மேதத் யோ நித்யம் ஸுத்தம் படேந்நர:
தஸ்ய ப்ரஸந்நோ பகவான் சாஸ்தா வஸதி மாநஸே

ஸ்ரீ சாஸ்தா பஞ்சரத்னம் என்னும் இந்த ஸ்லோகத்தை மனத்தூய்மையுடன் படிப்பவர்களது மனதில் சாஸ்தா வாசம் செய்கிறார்.

Tuesday, June 17, 2008

கீதை கொஞ்சம் கங்கை கொஞ்சம் கண்ணன் கொஞ்சம் (பஜ கோவிந்தம் 20)


பகவத் கீதா கிஞ்சித் அதீதா
கங்கா ஜல லவ கணிகா பீதா
சக்ருதபி யேன முராரி சமர்ச்சா
க்ரியதே தஸ்ய யமேன ந சர்ச்சா

பகவத் கீதா கிஞ்சித் அதீதா - பகவத் கீதையை கொஞ்சமாவது படித்து அதன் படி நடந்திருந்தாலோ

கங்கா ஜல லவ கணிகா பீதா - கங்கை ஜலத்தை ஒரு துளியாவது பக்தியுடன் பருகியிருந்தாலோ

சக்ருதபி யேன முராரி சமர்ச்சா - முன்னர் எப்போதோ செய்த புண்ணிய வசத்தால் தற்செயலாக ஒருவன் நாராயணனை அர்ச்சித்திருந்தாலோ

க்ரியதே தஸ்ய யமேன ந சர்ச்சா - அப்படிப்பட்டவன் யமனுடன் வாதிக்க வேண்டிய தேவையின்றி முக்தியை அடைவான்.

கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.

***

முன்னர் ஒரு பாட்டில் கங்கையில் நீராடினாலும், நோன்புகள் நோற்றாலும், தான தருமங்கள் செய்தாலும் ஞானமில்லாதவன் நூறு நூறு பிறவிகள் எடுத்தாலும் முக்தியடைய மாட்டான் என்று சொன்னவர் இங்கு அதற்கு நேர் எதிராகச் சொல்கிறாரே என்று எண்ணலாம். கொஞ்சம் சிந்தித்தால் என்ன சொல்கிறார் என்பது விளங்கும்.

கங்கையில் நீராடிவிட்டு, நோன்புகள் நோற்றுவிட்டு, தான தருமங்கள் செய்துவிட்டு ஆனால் ஆத்ம ஞானத்தை அடையாமல் இறுமாப்பினை அடைந்தவன் முக்தி அடையமாட்டான்; அங்கே சொல்வது ஞானத்தின் முக்கியத்துவத்தை.

ஆனால் அதே நேரத்தில் கங்கையில் நீராடுவதும் (கங்கை நீரை ஒரு துளி அருந்துவதும்), நோன்புகள் நோற்பதும் (முராரியை வணங்குவதும்), தான தருமங்கள் செய்வதும் (கீதையைப் படித்து அதன் படி நடத்தலும்) முக்திக்கு முதல் படியான ஹ்ருதய சுத்தத்தைக் கொடுக்கும். அந்த இதயத் தூய்மையை அடைந்த பின்னரே ஞானம் தோன்றும். பின்னர் முக்தி கிடைக்கும். அதனால் முதல் படியான இதயத் தூய்மையை அடையும் வழிகளை இங்கே கூறுகிறார். இங்கே சொல்வது இதயத் தூய்மை அடைவதின் முக்கியத்துவத்தை.

யோகத்திலோ போகத்திலோ கூட்டத்திலோ தனிமையிலோ எங்கே மகிழ்ச்சி? (பஜ கோவிந்தம் 19)


யோக ரதோ வா போக ரதோ வா
சங்க ரதோ வா சங்க விஹீன:
யஸ்ய ப்ரஹ்மணி ரமதே சித்தம்
நந்ததி நந்ததி நந்ததி ஏவ

யோக ரதோ வா போக ரதோ வா - ஒருவர் யோகத்திலோ போகத்திலோ எதில் வேண்டுமானாலும் மனமகிழ்ச்சி அடையலாம்

சங்க ரதோ வா சங்க விஹீன: - தனிமையிலோ கூட்டத்திலோ எங்கு வேண்டுமானாலும் மகிழ்ச்சி அடையலாம்

யஸ்ய ப்ரஹ்மணி ரமதே சித்தம் - ஆனால் யாருடைய மனம் இறைவனின் நினைவில் மூழ்கி மகிழ்ந்து இருக்கிறதோ

நந்ததி நந்ததி நந்ததி ஏவ - அவர் மட்டுமே மகிழ்கிறார்கள்; மகிழ்கிறார்கள்; உண்மையில் மகிழ்கிறார்கள்.

கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.

Friday, June 13, 2008

வீடு மரத்தடி படுக்கை கட்டாந்தரை (பஜ கோவிந்தம் 18)


சுர மந்திர தரு மூல நிவாஸ:
சய்யா பூதலம் அஜினம் வாச:
சர்வ பரிக்ரஹ போக த்யாக:
கஸ்ய சுகம் ந கரோதி விராக:

ஒரு உண்மை சன்யாசி எப்படி இருப்பான் என்று இந்தப் பாடலில் சொல்கிறார்.

சுர மந்திர தரு மூல நிவாஸ: - வசிப்பதோ தேவாலயங்களில் உள்ள மரங்களில் அடியில்

சய்யா பூதலம் - படுக்கையோ கட்டாந்தரை

அஜினம் வாச: - உடுப்பதோ தோலாடை

சர்வ பரிக்ரஹ போக த்யாக: - எல்லாவிதமான சுகத்தையும் அடையவேண்டும் என்ற ஆசையையும் அனுபவத்தையும் துறந்துவிட்டவர்

கஸ்ய சுகம் ந கரோதி விராக: - அப்படிப்பட்ட ஆசையற்றவனுக்கு சுகம் ஏற்படாமல் எப்படி போகும்? அப்படிப்பட்டவரே மிக உயர்ந்த சுகத்தை அடைவார்.

கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.

Thursday, June 12, 2008

கங்கையில் குளித்தாலும் பயனில்லை (பஜ கோவிந்தம் 17)


குரு தே கங்கா சாகர கமனம்
வ்ரத பரிபாலனம் அதவா தானம்
ஞான விஹீன: சர்வ மதேன
முக்திம் ந பஜதி ஜன்ம சதேன:

குரு தே கங்கா சாகர கமனம் - கங்கை கடலுடன் கலக்கும் சங்கமத்திற்குச் சென்று ஒருவன் நீராடலாம்

வ்ரத பரிபாலனம் - பலவிதமான விரதங்களை அனுஷ்டிக்கலாம்

அதவா தானம் - அளவில்லாமல் தானங்களையும் செய்யலாம்

ஞான விஹீன: - இறைஞானம் இல்லாதவன்

முக்திம் ந பஜதி ஜன்ம சதேன: - நூறு நூறு பிறவிகள் எடுத்தாலும் பந்தங்களில் இருந்து விடுதலை அடைவதில்லை

சர்வ மதேன - இதுவே எல்லோருடைய கருத்தும் (மதம் என்றால் கருத்து என்று ஒரு பொருள் உண்டு)

கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.

Wednesday, June 11, 2008

துறவிகளையும் ஆசைகள் விடுவதில்லை (பஜகோவிந்தம் 16)


அக்ரே வஹ்னி: ப்ர்ஸ்தே பானு:
ராத்ரௌ சுபுக சமர்ப்பித ஜானு:
கரதல பிக்ஷ: தருதல வாச:
ததபி ந முஞ்சதி ஆசா பாச:


எல்லாவற்றையும் துறந்த துறவிகள் இந்த மாதிரி வாழ்க்கை வாழ்கிறார்கள்:

அக்ரே வஹ்னி: - முன்னால் குளிருக்கு இதமாக நெருப்பு இருக்கிறது

ப்ர்ஸ்தே பானு: - முதுகுக்குப் பின்னால் மறையும் கதிரவன் இருக்கிறான்

ராத்ரௌ சுபுக சமர்ப்பித ஜானு: - இரவு நேரத்தில் குளிரிலிருந்து தப்பிக்க முழங்கால்களுக்கு நடுவில் தாடையை வைத்திருக்கிறார்

கரதல பிக்ஷ: - சாப்பிடுவதற்கு பிச்சை எடுக்கும் பாத்திரமோ கைகள்

தருதல வாச: - மரத்தடியிலேயே வாழ்க்கை

ததபி ந முஞ்சதி ஆசா பாச: - இந்த நிலையிலும் ஆசாபாசங்கள் ஒருவரை விடுவதில்லை.

கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.

***

இந்தப் பாடலில் போலிச் சாமியார்களைப் பற்றிச் சொல்லவில்லை ஆதிசங்கரர். உண்மையான சந்நியாசிகளின் வாழ்க்கை முறையைக் கூறி அப்படிப்பட்டவர்களையே ஆசாபாசங்கள் விடுவதில்லை என்று சொல்லி பற்றுகளின் பந்தங்களின் வலிமையைச் சொல்கிறார்.

Monday, June 9, 2008

வயதானாலும் ஆசை விடுகிறதா என்ன? (பஜகோவிந்தம் 15)


அங்கம் கலிதம் பலிதம் முண்டம்
தஸன விஹீனம் ஜாதம் துண்டம்
வ்ருத்தோ யாதி க்ருஹீத்வா தண்டம்
ததபி ந முஞ்சதி ஆசாபிண்டம்

அங்கம் கலிதம்
- உடல் நடுக்கமடைந்து விட்டது

பலிதம் முண்டம் - தலை நரைத்துவிட்டது

தஸன விஹீனம் ஜாதம் துண்டம் - வாயில் உள்ள பற்களோ விழுந்துவிட்டன

வ்ருத்தோ யாதி க்ருஹீத்வா தண்டம் - வயதான காலத்தில் ஒரு கோலின் உதவியால் ஒரு இடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு செல்கிறார்

ததபி ந முஞ்சதி ஆசாபிண்டம் - ஆனாலும் ஆசையின் கூட்டம் மட்டும் விடவில்லை.

கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.

***

பலர் என்னிடம் வயசான காலத்துல சாமி, கோவில் என்று போகலாம். சின்ன வயதில் அனுபவிக்க வேண்டியதை அனுபவித்துவிட வேண்டும் என்று சொல்லுவார்கள். அவர்களுக்கு எல்லாம் இதனைத் தான் நான் சொல்வது - சின்ன வயதில் அனுபவிக்க வேண்டியதெல்லாம் அனுபவிக்கவேண்டியது தான்; ஆனால் சாமி, கோவில் என்று சின்ன வயதிலேயே போகவில்லை என்றால் வயதான காலத்திலும் அது வராது; இன்னும் கொஞ்சம் வயதாகட்டும்; இன்னும் கொஞ்சம் வயதாகட்டும் என்று தான் தோன்றும்; ஏனெனில் ஆசைகளின் கூட்டங்கள் அத்தகையவை; அவற்றின் வேகமும் அத்தகையவை. சிறு வயதிலேயே ஆன்மிகத்தில் சிறிது பயிற்சி இருந்தால் சரியான நேரத்தில் ஆசைகள் கழிந்து ஆன்மிகம் மிகும்.

வயிற்றை வளர்க்கவே இத்தனை வேடங்கள் (பஜ கோவிந்தம் 14)


ஜடிலோ முண்டி லுஞ்சித கேச:
காஷாயாம்பர பஹுக்ருத வேஷ:
பஷ்யன்னபி ச ந பஷ்யதி மூடோ
ஹுதர நிமித்தம் பஹுக்ருத வேஷ:

ஜடிலோ முண்டி லுஞ்சித கேச: - தன் தலைமுடியை சடையாக மாற்றி ஒருவர் தலை மேல் கட்டியிருக்கிறார்; இன்னொருவரோ தலைமுடியை மொட்டையடித்துக் கொண்டிருக்கிறார்.

காஷாயாம்பர - இன்னொருவரோ காவியுடையை அணிந்து கொண்டிருக்கிறார்.

பஹுக்ருத வேஷ: - இப்படி பலவித வேடங்கள் அணிந்து கொண்டு எல்லாம் துறந்தவர்கள் போல் காட்டிக் கொண்டு அலைகிறார்கள்.

பஷ்யன்னபி ச ந பஷ்யதி மூடோ - அந்த மூடர்கள் எல்லாம் காணக் கண்ணிருந்தும் (அறிவிருந்தும்) உண்மையைக் காணாதவர்கள்

ஹுதர நிமித்தம் பஹுக்ருத வேஷ: - உறுதியாக இந்த எல்லாவிதமான வேடங்களும் வயிற்றை வளர்ப்பதற்காக மட்டும் தான்.

கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.

***

இந்தப் பாடலில் வெளி வேஷம் மட்டும் போட்டுக் கொண்டிருக்கும் பொய்த் துறவிகளைக் கண்டிக்கிறார் ஆதிசங்கரர்.

மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்த தொழித்து விடின்

என்னும் திருக்கிறளின் சாயல் இந்தப் பாடலில் தெரிகிறது.

Sunday, June 8, 2008

ஸ்ரீ சாரதைக்கு வணக்கம்...




கல்விக்கு அதிபதி என்று சரஸ்வதியை வணங்குவது வழக்கம். சிருங்க-கிரி என்று போற்றப்படும் சிருங்கேரியில் கோலோச்சும் சாரதாம்பாள் சரஸ்வதியே என்பது சங்கரவிஜயம் மூலம் தெரியவருகிறது. அவளை வணங்கிடும் ஒரு சிரு ஸ்லோகம்.

ச்ருங்காத்ரி மத்ய ப்ரவிராஜமாநாம்
பக்தேஷ்ட விஸ்ராணன கல்பவல்லீம்
துங்கா நதீதீர விஹார சக்தாம்
ஸ்ரீ சாரதாம்பாம் சிரஸா நமாமி.

சிருங்ககிரி க்ஷேத்திரத்தின் நடுவில் ப்ரகாசமாக இருந்து கொண்டு கற்பக மரம்/கொடி போல பக்தர்கள் வேண்டுவதையெல்லாம் தரும், தூங்கா நதியருகில் வசிப்பவளுமான ஸ்ரீ சாரதம்பாவுக்கு சிரம் தாழ்த்தி வணங்கிடுகிறேன்.

Saturday, June 7, 2008

பவக்கடலுக்குப் படகு (பஜ கோவிந்தம் 13)


கா தே காந்தா தன கத சிந்தா
வாதுல கிம் தவ நாஸ்தி நிவந்தா
த்ரிஜகதி சஜ்ஜன சங்கதிர் ஏகா
பவதி பவார்னவ தரனே நௌகா

கா தே காந்தா தன கத சிந்தா - மனைவி மக்கள், வீடு வாசல், சொத்து சுகம் போன்றவற்றில் இருந்து எழும் கவலைகள் உனக்கு ஏன்?

வாதுல கிம் - மூடனே ஏன் இந்த நிலை உனக்கு?

தவ நாஸ்தி நிவந்தா - உனக்கு இவை நல்ல கதி இல்லை.

த்ரிஜகதி சஜ்ஜன சங்கதிர் ஏகா - மூன்று உலகங்களிலும், உண்மையை விரும்பும் நல்லவர்களின் உண்மையான நட்பு மட்டுமே

பவ ஆர்னவ தரனே நௌகா பவதி - பிறப்பு இறப்பு என்னும் மாபெரும் கடலைக் கடக்க உதவும் படகு போன்றது.

கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.

காலம் விளையாடுகிறது வாழ்நாளோ தீர்கிறது (பஜகோவிந்தம் 12)


தின யாமின்யௌ சாயம் ப்ராத:
சிஷிர வஸந்தௌ புனர் ஆயாத:
கால: க்ரீடதி கச்சதி ஆயு:
தத் அபி ந முஞ்சதி ஆசா வாயு:

தின யாமின்யௌ - பகலும் இரவும்

சாயம் ப்ராத: - மாலையும் காலையும்

சிஷிர வஸந்தௌ - வாடையும் கோடையும்

புனர் ஆயாத: - மீண்டும் மீண்டும் வருகின்றன.

கால: க்ரீடதி - காலமோ தன் விளையாட்டினை விளையாடிக் கொண்டிருக்கிறது.

கச்சதி ஆயு: - வாழ்நாளோ போய்க் கொண்டிருக்கிறது.

தத் அபி ந முஞ்சதி ஆசா வாயு: - ஆனாலும் என்ன ஆசையெனும் புயல் மட்டும் நின்றபாடில்லை.

கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.

Friday, June 6, 2008

செல்வம், செல்வாக்கு, இளமை - காலத்தின் முன் இவை என்ன ஆகும்? (பஜகோவிந்தம் 11)


மா குரு தன ஜன யௌவன கர்வம்
ஹரதி நிமேஷாத் கால: ஸர்வம்
மாயா மயம் இதம் அகிலம் ஹித்வா
ப்ரம்ஹபதம் த்வம் ப்ரவிச விதித்வா

மா குரு தன ஜன யௌவன கர்வம் - செல்வம் எப்போதும் நிலைக்காதது. அது செல்வோம் செல்வோம் என்று சொல்வதால் தான் செல்வம் என்றே பெயர். சுற்றம், நண்பர்கள் இப்போது இருப்பார்கள்; நாளை இருக்க மாட்டார்கள்; செல்வம் இருக்கும் வரை தான் எல்லாமும். இளமையோ நாளுக்கு நாள் நம்மை விட்டுத் தூரே செல்கிறது. அதனால் செல்வம், சுற்றம்/நண்பர்கள் குழாம், இளமை இவற்றைப் பெற்றோம் என்ற கர்வம் கொள்ள வேண்டாம். பேரும் புகழும் இன்று வரும்; நாளை போகும்.

ஹரதி நிமேஷாத் கால: ஸர்வம் - காலம் இந்த எல்லாவற்றையும் ஒரு நிமிடத்தில் அழித்து ஒழித்து விடும். தப்பித் தவறி தவறாக ஒரு வார்த்தை வந்தால் போதும். சேர்த்து வைத்த பெயரும் புகழும் காணாமல் போய்விடும். தப்பித் தவறி ஒரு சுடு சொல் சொன்னால் போதும். சுற்றமும் நட்பும் காணாமல் போய்விடும். தப்பித் தவறி ஒரு தவறான அடி எடுத்துவைத்தால் போதும். சேர்த்து வைத்தச் செல்வம் எல்லாம் காணாமல் போய்விடும். கால தேவன் (மரணம்) வந்துவிட்டாலோ எல்லாமே ஒரே நொடியில் காணாமல் போய்விடும்.

மாயா மயம் இதம் அகிலம் ஹித்வா - இங்கு எதுவுமே நிலையில்லாதது. தோற்ற மயக்கம். அழியக் கூடியது. அதனால் அவைகளில் உள்ளப் பற்றினைத் துறந்துவிட்டு

ப்ரம்ஹபதம் த்வம் ப்ரவிச விதித்வா - இறைவனை அறியும் வழிகளில் நீ நுழைவாய்.

கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.

Thursday, June 5, 2008

நீரில்லை என்றால் பறவைகள் இல்லை; பணம் இல்லை என்றால் பரிவாரம் இல்லை (பஜகோவிந்தம் 10)


வயஸி கதே க: காம விகார:
சுஸ்கே நீரே க: காசார:
க்ஷீணே வித்தே க: பரிவார:
ஞாதே தத்வே க: சம்ஸார:

வயஸி கதே க: காம விகார: - இளமை நீங்கி முதுமை வந்துவிட்டால் எங்கே போயின காமக் களியாட்டங்கள்?

சுஸ்கே நீரே க: காசார: - நீர் நிலைகளில் நீர் வற்றிப் போனால் எங்கே போயின நீர் நிலைகளை நம்பி வாழும் பறவைகளும் விலங்குகளும்?

க்ஷீணே வித்தே க: பரிவார: - செல்வம் அழிந்து போனால் எங்கே போனார்கள் நம் நண்பர்களும் உறவினர்களும்?

ஞாதே தத்வே க: சம்ஸார: - உண்மைப் பொருளை அறிந்து கொண்ட பின் எங்கே போனது என்றும் மாறும் நிலையுடைய இந்த சம்ஸாரம்?

கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.

Wednesday, June 4, 2008

சத்சங்கத்தால் ஜீவன்முக்தி (பஜகோவிந்தம் 9)


ஸத் ஸங்கத்வே நிஸ்ஸங்கத்வம்
நிஸ்ஸங்கத்வே நிர்மோஹத்வம்
நிர்மோஹத்வே நிஸ்சல தத்வம்
நிஸ்சல தத்வே ஜீவன் முக்தி:

ஸத் ஸங்கத்வே நிஸ்ஸங்கத்வம் - அடியவர், நல்லவர், உண்மைப் பொருளை அறிவதிலும் அடைவதிலும் நாட்டமுடையவர் இவர்களின் கூட்டு, பற்று இல்லாத நிலையை அளிக்கும்.

நிஸ்ஸங்கத்வே நிர்மோஹத்வம் - பற்று இல்லாத நிலையை அடைந்தால் மயக்கங்கள் இல்லாத நிலை கிடைக்கும்.

நிர்மோஹத்வே நிஸ்சல தத்வம் - மயக்கம் இல்லாத நிலையை அடைந்தால் என்றும் நிலையான மறைப் பொருளை அடைய முடியும்.

நிஸ்சல தத்வே ஜீவன் முக்தி: - அப்படி நிலையான மறைப் பொருளை அடைந்தால் இங்கேயே இப்போதே முக்தி நிலையை அடையலாம்.

கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.

மனைவியும் மக்களும் யாவர்? (பஜகோவிந்தம் 8)


கா தே காந்தா கஸ்தே புத்ர:
சம்சாரோயம் அதீவா விசித்ர:
கஸ்ய த்வம் க: குத ஆயாத:
தத்வம் சிந்தய ததிஹ ப்ராத:

கா தே காந்தா - யார் உனது துணைவி?

கஸ்தே புத்ர: - யார் உனது புதல்வன்?

சம்சார இயம் அதீவா விசித்ர: - இந்த உலகவாழ்க்கை மிகவும் விசித்ரமானது; பெரிய பெரிய அறிவாளிகளையும் மயக்கக்கூடியது

கஸ்ய த்வம் - நீ யாருக்கு உரியவன்?

க: - நீ யார்?

குத ஆயாத: - எங்கிருந்து வந்தாய்?

தத்வம் சிந்தய தத் இஹ ப்ராத: - அந்த உண்மையை இப்போது எண்ணிப்பார் சகோதரனே.

கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.

Monday, June 2, 2008

கணேச ருணஹர ஸ்தோத்ரம்



குமரன் இந்த வலைப்பூவில் எழுத அழைத்த போது ஏதோ ஒரு உத்வேகத்தில் மாதம் இரண்டு இடுகைகள் இடுவதாக சொல்லிவிட்டேன். சாட் முடிந்த பிறகுதான் உணர்ந்தேன் அது எவ்வளவு கடினமென்று. ஆனாலும் முயற்சிப்பதில் தவறில்லை என்று தோன்றுகிறது. குருவருளையும், பராசக்தியையும் துணை கொண்டு இந்த முதல் இடுகையினை இடுகிறேன். கணேச ருணஹர ஸ்தோத்ரம். இதனை முன்பே என் மதுரையம்பதி பதிவில் இட்டிருக்கிறேன்.

ஸிந்தூர வர்ணம் த்விபுஜம் கணேசம் லம்போதரம் பத்மதளே நிவிஷ்டம் ப்ரஹ்மாதிதேவை: பரிஸேவ்யமானம் ஸித்தைர்யுதம் தம் ப்ரணமாமி தேவம்.

ஸிந்தூர நிறத்தில் இரண்டு கைகளுடனும், சரிந்த வயிற்றுடனும், ப்ரம்மா, முதலிய தேவர்களாலும் ஸித்தர்களாலும் சூழப்பட்டு தாமரை இதழ்களில் அமர்ந்துள்ள கணேச தேவரை நமஸ்கரிக்கின்றேன்.

ஸ்ருஷ்ட்யாதெள ப்ரஹ்மணா ஸம்யக் பூஜித: பல ஸித்தயே
ஸதைவ பார்வதீ புத்ர: ருணநாசம் கரோது மே (1)

பிரும்மாவால் உலக ஸ்ருஷ்டிக்கு முன்னால் கார்யசித்திக்காக நன்கு பூஜிக்கப்பட்டபார்வதீ குமாரன் கணேசன் எப்பொழுதும் எனது அனைத்துக் கடன்களையும் போக்கஅனுக்ரஹிக்கட்டும்.

த்ரிபுரஸ்ய வதாத் பூர்வம் சம்புனா ஸம்யகர்சித:
ஸதைவ பார்வதீ புத்ர: ருணநாசம் கரோது மே (2)

திரிபுர சம்ஹாரத்திற்குப் போகும் முன்பு பரமேஸ்வரனால் நன்கு பூஜிக்கப்பட்ட பார்வதீகுமாரன் கணேசன் எப்பொழுதும் எனது அனைத்துவித கடன்களையும் போக்க அனுக்ரஹிக்கட்டும்.

ஹிரண்ய கசிப்வாதீநாம் வதார்த்தே விஷ்ணுநா அர்ச்சித:
ஸதைவ பார்வதீ புத்ர: ருணநாசம் கரோது மே (3)

ஹிரண்யகசிபு போன்ற அரக்கர்களை வதிக்கும் முன்பு மஹாவிஷ்ணுவால் பூஜிக்கப்பட்ட பார்வதீகுமாரன் கணேசன் எப்பொழுதும் எனது அனைத்துவித கடன்களையும் போக்க அனுக்ரஹிக்கட்டும்.

மஹிஷஸ்ய வதே தேவ்யா கணநாத: ப்ரபூஜித:
ஸதைவ பார்வதீ புத்ர: ருணநாசம் கரோது மே (4)

மகிஷாசுரனை ஸம்ஹரிக்கும் முன் பார்வதீ தேவியால் நன்கு பூஜிக்கப்பட்ட பார்வதிகுமரன் கணேசன்எப்பொழுதும் எனது அனைத்துவித கடன்களையும் போக்க அனுக்ரஹிக்கட்டும்.

தாரகஸ்ய வதாத் பூர்வம் குமாரேண ப்ரபூஜித:
ஸதைவ பார்வதீ புத்ர: ருணநாசம் கரோது மே (5)

தாரகாஸீரனை வதைக்கும் முன், ஸ்ரீ சுப்ரமண்யரால் நன்கு பூஜிக்கப்பட்ட பார்வதிகுமரன் கணேசன்எப்பொழுதும் எனது அனைத்துவித கடன்களையும் போக்க அனுக்ரஹிக்கட்டும்.

பாஸ்கரேண கணேசோ ஹி பூஜிதஸ்ய ஸ்வஸித்தயே
ஸதைவ பார்வதீ புத்ர: ருணநாசம் கரோது மே (6)

சூரிய தேவனால் தனது கார்ய ஸித்திகாக நன்கு பூஜிக்கப்பட்ட பார்வதிகுமரன் கணேசன்எப்பொழுதும் எனது அனைத்துவித கடன்களையும் போக்க அனுக்ரஹிக்கட்டும்.

சசிநா காந்தி விருத்யர்த்தம் பூஜிதோ கணநாயக:
ஸதைவ பார்வதீ புத்ர: ருணநாசம் கரோது மே (7)

தனது அழகு நன்கு வளர்வதற்காக சந்திரனால் நன்கு பூஜிக்கப்பட்ட பார்வதிகுமரன் கணேசன்எப்பொழுதும் எனது அனைத்துவித கடன்களையும் போக்க அனுக்ரஹிக்கட்டும்.

பாலநாய ச தபஸாம் விஸ்வாமித்ரேண பூஜித:
ஸதைவ பார்வதீ புத்ர: ருணநாசம் கரோது மே (8)

தனது தபஸ்ஸைக் காப்பாற்றிக்கொள்ள விஸ்வாமித்த்ர மஹர்ஷியால் நன்கு பூஜிக்கப்பட்ட பார்வதிகுமரன்கணேசன் எப்பொழுதும் எனது அனைத்துவித கடன்களையும் போக்க அனுக்ரஹிக்கட்டும்.

Friday, May 30, 2008

பாலனாய் விளையாட்டு; இளமையில் காதல்; முதுமையில் கவலை; என்ன தான் செய்வது? (பஜ கோவிந்தம் 7)


பாலஸ்தாவத் க்ரீடா சக்த:
தருணஸ்தாவத் தருணீ சக்த:
வ்ருத்தஸ்தாவத் சிந்தா சக்த:
பரே ப்ரஹ்மணி கோபி ந சக்த:

பாலஸ்தாவத் க்ரீடா சக்த: - சிறு வயதிலோ விளையாட்டுச் செயல்களிலேயே ஒவ்வொருவரும் மூழ்கிப் போகின்றனர்.

தருணஸ்தாவத் தருணீ சக்த: - பருவ வயதிலோ இனக்கவர்ச்சியிலேயே மனமெல்லாம் இருக்கிறது.

வ்ருத்தஸ்தாவத் சிந்தா சக்த: - முதுமைக்காலத்திலோ எத்தனையோ கவலைகள்.

பரே ப்ரஹ்மணி கோபி ந சக்த: - ஐயோ! பரம்பொருளைப் பற்றி எண்ண ஒருவருக்கும் தமது வாழ்க்கையில் நேரமே இல்லையே?

கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.

Saturday, May 24, 2008

கட்டிக்கொண்டவளும் பயந்து விலகுவாள் (பஜ கோவிந்தம் 6)

யாவத் பவனோ நிவசதி தேஹே
தாவத் ப்ருச்சதி குசலம் கேஹே
கதவதி வாயௌ தேஹாபாயே
பார்யா பிப்யதி தஸ்மின் காயே

யாவத் பவனோ நிவசதி தேஹே - எது வரையில் உடம்பில் மூச்சுக் காற்று இருக்கிறதோ

தாவத் ப்ருச்சதி குசலம் கேஹே - அது வரையில் தான் உன் வீட்டில் இருப்பவர்கள் உன் நலன்களைப் பற்றி விசாரிப்பார்கள்.

கதவதி வாயௌ தேஹாபாயே - உடலை விட்டு அந்த மூச்சுக் காற்று போன பின்னால்

பார்யா பிப்யதி தஸ்மின் காயே - இது நாள் வரை பல முறை அந்த உடலுடன் கூடி வாழ்ந்த மனைவியும் அந்த உயிரற்ற உடலைக் கண்டு பயப்படுவாள்.

கோவிந்தனை வணங்குங்கள்.

கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.

Saturday, May 17, 2008

லிங்காஷ்டகம் முழுதும்


ப்ரஹ்ம முராரி ஸுரார்சித லிங்கம்
நிர்மல பாஸித ஸோபித லிங்கம்
ஜன்மஜ துக்க வினாசக லிங்கம்
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்

ப்ரஹ்ம முராரி ஸுரார்சித லிங்கம் - நான்முகப் பிரம்மனாலும் முரனை அழித்த முராரியாம் விஷ்ணுவாலும் எல்லாத் தேவர்களாலும் அர்ச்சிக்கப் பட்ட லிங்கம்

நிர்மல பாஸித ஸோபித லிங்கம் - குற்றமற்ற மிகுந்த ஒளியுடன் ஜொலிக்கும் லிங்கம்

ஜன்மஜ துக்க வினாசக லிங்கம் - பிறப்பு இறப்பினால் ஏற்படும் துன்பங்களை நீக்கும் லிங்கம்

தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம் - அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை அடியேன் வணங்குகிறேன்.

***

தேவ ரிஷி ப்ரவரார்சித லிங்கம்
காம தஹன கருணாகர லிங்கம்
ராவண தர்ப வினாஷன லிங்கம்
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்

தேவ ரிஷி ப்ரவரார்சித லிங்கம் - தேவர்களிலும் ரிஷிகளிலும் சிறந்தவர்களாக இருப்பவர்களால் அர்ச்சிக்கப்பட்ட லிங்கம்

காம தஹன கருணாகர லிங்கம் - மறைந்திருந்து மலர்க்கணைகளை விட்ட காமனை எரித்து பின்னர் அவனை மீண்டும் உயிர்ப்பித்த கருணையுடன் கூடிய லிங்கம்

ராவண தர்ப வினாஷன லிங்கம் - இராவணனின் கர்வத்தை கால் கட்டை விரலால் நசுக்கி அழித்த லிங்கம்

தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம் - அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை நான் வணங்குகிறேன்.

***

ஸர்வ ஸுகந்த ஸுலேபித லிங்கம்
புத்தி விவர்த்தன காரண லிங்கம்
சித்த சுராசுர வந்தித லிங்கம்
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்

ஸர்வ ஸுகந்த ஸுலேபித லிங்கம் - எல்லாவிதமான நறுமணப் பொருட்களாலும் அலங்கரிக்கப்பட்ட லிங்கம்

புத்தி விவர்த்தன காரண லிங்கம் - உண்மையறிவு அடையக் காரணமாக இருக்கும் லிங்கம்

சித்த சுராசுர வந்தித லிங்கம் - சித்தர்களாலும் தேவர்களாலும் அசுரர்களாலும் வணங்கப்படும் லிங்கம்

தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம் - அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை நான் வணங்குகிறேன்.

***

கனக மஹாமணி பூஷித லிங்கம்
பணிபதி வேஷ்டித ஸோபித லிங்கம்
தக்ஷ ஸுயக்ஞ விநாசன லிங்கம்
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்

கனக மஹாமணி பூஷித லிங்கம் - பொன்னாலும் மிகச்சிறந்த மாணிக்கங்களாலும் அழகு செய்யப்பெற்ற லிங்கம்

பணிபதி வேஷ்டித ஸோபித லிங்கம் - நாகங்களின் அரசனை அணிந்து ஒளிவீசும் லிங்கம்

தக்ஷ ஸுயக்ஞ விநாசன லிங்கம் - தனக்குரிய மரியாதையைத் தரத் தவறிய தக்ஷப் பிரஜாபதியின் யாகத்தை அழித்த லிங்கம்

தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம் - அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை நான் வணங்குகிறேன்.

***

குங்கும சந்தன லேபித லிங்கம்
பங்கஜ ஹார ஸுஸோபித லிங்கம்
ஸஞ்சித பாப விநாசன லிங்கம்
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்

குங்கும சந்தன லேபித லிங்கம் - குங்குமத்தாலும் சந்தனத்தாலும் அலங்கரிக்கப் பட்ட லிங்கம்

பங்கஜ ஹார ஸுஸோபித லிங்கம் - தாமரை மலர் மாலை அணிந்து ஒளிவீசும் லிங்கம்

ஸஞ்சித பாப விநாசன லிங்கம் - பற்பல பிறப்புகளில் சேர்த்து வைத்த எல்லா வினைகளின் பயன்களையும் அழிக்கும் லிங்கம்

தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம் - அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை நான் வணங்குகிறேன்

***

தேவ கணார்ச்சித ஸேவித லிங்கம்
பாவைர் பக்தி ப்ரவேசக லிங்கம்
தினகர கோடி ப்ரபாகர லிங்கம்
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்

தேவ கணார்ச்சித ஸேவித லிங்கம் - தேவ கணங்களால் அர்ச்சிக்கப்பட்டும் சேவைகள் செய்யப்பட்டும் விளங்கும் லிங்கம்

பாவைர் பக்தி ப்ரவேசக லிங்கம் - உணர்வுடன் கூடிய பக்தியை தோற்றுவிக்கும் லிங்கம்

தினகர கோடி ப்ரபாகர லிங்கம் - கோடி சூரியன்களின் ஒளியினைத் கொண்டிருக்கும் லிங்கம்

தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம் - அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை நான் வணங்குகிறேன்

***

அஷ்ட தளோபரி வேஷ்டித லிங்கம்
ஸர்வ ஸமுத்பவ காரண லிங்கம்
அஷ்ட தரித்ர விநாசன லிங்கம்
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்

அஷ்ட தளோபரி வேஷ்டித லிங்கம் - எட்டிதழ் தாமரையால் சூழப்பட்ட லிங்கம்

ஸர்வ ஸமுத்பவ காரண லிங்கம் - எல்லாவிதமான செல்வங்களுக்கும் காரணமான லிங்கம்

அஷ்ட தரித்ர விநாசன லிங்கம் - எட்டுவிதமான ஏழ்மையை அழிக்கும் லிங்கம்

தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம் - அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை நான் வணங்குகிறேன்

***

ஸுரகுரு ஸுரவர பூஜித லிங்கம்
ஸுரவன புஷ்ப சதார்சித லிங்கம்
பராத்பரம் பரமாத்மக லிங்கம்
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்

ஸுரகுரு ஸுரவர பூஜித லிங்கம் - தேவ குருவாலும் தேவர்களில் சிறந்தவர்களாலும் பூஜிக்கப்பட்ட லிங்கம்.

ஸுரவன புஷ்ப சதார்சித லிங்கம் - தேவலோக நந்தவன மலர்களால் எப்போதும் அர்ச்சிக்கப்பட்ட லிங்கம்.

பராத்பரம் பரமாத்மக லிங்கம் - பெரியதிலும் பெரியதான, பரமாத்ம உருவான லிங்கம்.

தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம் - அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை நான் வணங்குகிறேன்.

***

லிங்காஷ்டகம் இதம் புண்யம்
யே படேத் சிவ சன்னிதௌ
சிவலோகம் அவாப்நோதி
சிவே ந ஸஹமோததே

லிங்காஷ்டகம் இதம் புண்யம் - இந்த லிங்காஷ்டகம் மிகப் புனிதமானது

யே படேத் சிவ சன்னிதௌ - இதனை சிவ சன்னிதானத்தில் படித்தால்

சிவலோகம் அவாப்நோதி - சிவலோகம் கிடைக்கும்

சிவே ந ஸஹமோததே - சிவனுடன் தோழமை பாராட்டி என்றும் ஆனந்தமாக இருக்கலாம்.

***

நாமக்கல் சிபியின் வேண்டுகோளின் படி லிங்காஷ்டகம் முழுவதும் இந்தப் பதிவில் கொடுத்திருக்கிறேன். இந்தப் பாடலை சூலமங்கலம் சகோதரிகள் பாடியுள்ளதை இங்கே கேட்கலாம். எஸ்.பி.பி பாடியது இங்கே கேட்கலாம்.

Friday, May 16, 2008

சிவனுடன் தோழமை வேண்டுமா? (லிங்காஷ்டகம் 8 & பயன்)


ஸுரகுரு ஸுரவர பூஜித லிங்கம்
ஸுரவன புஷ்ப சதார்சித லிங்கம்
பராத்பரம் பரமாத்மக லிங்கம்
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்

ஸுரகுரு ஸுரவர பூஜித லிங்கம் - தேவ குருவாலும் தேவர்களில் சிறந்தவர்களாலும் பூஜிக்கப்பட்ட லிங்கம். (முப்பத்து முக்கோடி தேவர்கள் என்றாலும் அவர்களில் சிறந்தவர்களாக இந்திரன், வருணன், யமன், அக்னி, வாயு, அஸ்வினி தேவர்கள், சூரியன், சந்திரன் என்று சிலரையே சொல்வார்கள். புராணங்களில் தேவர்களின் பிரதிநிதிகளாக இந்த தேவர்களையே காட்டியிருப்பார்கள். அவர்களாலேயே வணங்கப்பட்ட லிங்கம் எனும்போது எல்லா தேவர்களாலும் வணங்கப்பட்ட லிங்கம் என்று அறியக் கிடைக்கிறது. தேவர்களும் தங்கள் குருவான தேவகுரு பிருகஸ்பதி காட்டிய வழியிலேயே சிவபூஜை செய்கின்றனர். அதனால் சுரகுரு சுரவர என்று தேவகுருவை முதலில் இந்தப் பாடலில் குறித்திருக்கின்றனர். )

ஸுரவன புஷ்ப சதார்சித லிங்கம் - தேவலோக நந்தவன மலர்களால் எப்போதும் அர்ச்சிக்கப்பட்ட லிங்கம். (பூவுலகில் உள்ளவர்கள் எட்டுவிதமான மலர்களாலும் எட்டிதழ் தாமரையாலும் அர்ச்சிக்க தேவலோகத்தவர்கள் தேவலோக மலர்களை இட்டு அர்ச்சிப்பது தானே இயற்கை. அது தான் இங்கே சொல்லப்பட்டிருக்கிறது. தேவலோக மலர்களான பாரிஜாத மலர்கள் கொண்டு எப்போதும் அர்ச்சிக்கப் படும் லிங்கம்)

பராத்பரம் பரமாத்மக லிங்கம் - பெரியதிலும் பெரியதான, பரமாத்ம உருவான லிங்கம். (லிங்க உருவில் இருக்கும் இறைவன் முதலும் முடிவும் இல்லாதவன். லிங்க உருவத்திற்கும் இது முதல்; இது முடிவு என்று எந்தப் பகுதியையும் சுட்டிக் காட்ட முடியாது. அது போல் அணுவிற்கும் அணுவாகவும் அப்பாலுக்கும் அப்பாலாகவும் உள்ளவன் அவன். பெரிதிலும் பெரியன். சிறிதிலும் சிறியன். எல்லாமே அவனுள் அடக்கம். அவன் எல்லாவற்றிலும் அடக்கம். எல்லா உயிர்களும் அவனுள் அடக்கம். அவன் எல்லா உயிர்களிலும் அடக்கம். என்னுள் தன்னையும் தன்னுள் என்னையும் காண்பவன் ஞானி என்றே கீதாசார்யனும் கூறுகிறான். )

தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம் - அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை நான் வணங்குகிறேன்

***

லிங்காஷ்டகம் இதம் புண்யம்
யே படேத் சிவ சன்னிதௌ
சிவலோகம் அவாப்நோதி
சிவே ந ஸஹமோததே

லிங்காஷ்டகம் இதம் புண்யம் - இந்த லிங்காஷ்டகம் மிகப் புனிதமானது

யே படேத் சிவ சன்னிதௌ - இதனை சிவ சன்னிதானத்தில் படித்தால்

சிவலோகம் அவாப்நோதி - சிவலோகம் கிடைக்கும்

சிவே ந ஸஹமோததே - சிவனுடன் தோழமை பாராட்டி என்றும் ஆனந்தமாக இருக்கலாம்.

எங்கும் நிறைந்தவன் அவன். அதனால் எல்லா இடங்களும் சிவ சன்னிதானமே. அதனால் எந்த இடத்தில் இந்த எட்டுப் பாடல்களையும் பாடி மகிழ்ந்து அவனையும் மகிழ்விக்கலாம்.

இத்துடன் லிங்காஷ்டகம் என்னும் எட்டு சுலோகங்கள் கொண்ட இந்த ஸ்தோத்ரம் நிறைவுற்றது.

சிவார்ப்பணம்.

Wednesday, May 7, 2008

நடுக்கம் வந்த பின் நலம் விசாரிக்கவும் நாதி இல்லை (பஜகோவிந்தம் 5)

யாவத் வித்தோ பார்ஜன சக்த:
தாவன் நிஜ பரிவாரோ ரக்த:
பஸ்சாத் ஜீவதி ஜர்ஜர தேஹே
வார்த்தாம் கோபி ந ப்ருச்சதி கேஹே

யாவத் வித்தோ பார்ஜன சக்த: - எது வரை பொருள் சம்பாதிக்கும் வலிமை இருக்கிறதோ

தாவன் நிஜ பரிவாரோ ரக்த: - அது வரை தான் உறவும் நட்பும் நம்மிடம் அன்பும் பற்றும் கொண்டு இருக்கும்

பஸ்சாத் ஜீவதி ஜர்ஜர தேஹே - பின்னர் வலிவிழந்த நடுங்கும் முதிர்ந்த உடலுடன் வாழும் போது

வார்த்தாம் கோபி ந ப்ருச்சதி கேஹே - நம் வீட்டில் நம்மை அண்டி வாழ்ந்தவர் கூட நாம் எப்படி இருக்கிறோம் என்று கவலைப்பட மாட்டார்கள்.

கோவிந்தனை வணங்குங்கள்.

கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.

Tuesday, May 6, 2008

கோடி சூரியன்களைக் கண்டதுண்டா? (லிங்காஷ்டகம் 6 & 7)


தேவ கணார்ச்சித ஸேவித லிங்கம்
பாவைர் பக்தி ப்ரவேசக லிங்கம்
தினகர கோடி ப்ரபாகர லிங்கம்
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்

தேவ கணார்ச்சித ஸேவித லிங்கம் - தேவ கணங்களால் அர்ச்சிக்கப்பட்டும் சேவைகள் செய்யப்பட்டும் விளங்கும் லிங்கம்

பாவைர் பக்தி ப்ரவேசக லிங்கம் - பாவத்துடன் கூடிய பக்தியை தோற்றுவிக்கும் லிங்கம்

தினகர கோடி ப்ரபாகர லிங்கம் - கோடி சூரியன்களின் ஒளியினைத் தோற்றுவிக்கும் லிங்கம்

தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம் - அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை நான் வணங்குகிறேன்

***

அஷ்ட தளோபரி வேஷ்டித லிங்கம்
ஸர்வ ஸமுத்பவ காரண லிங்கம்
அஷ்ட தரித்ர விநாசன லிங்கம்
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்

அஷ்ட தளோபரி வேஷ்டித லிங்கம் - எட்டுவிதமான மலர்களால் சூழப்பட்ட லிங்கம்

ஸர்வ ஸமுத்பவ காரண லிங்கம் - எல்லாவிதமான செல்வங்களுக்கும் காரணமான லிங்கம்

அஷ்ட தரித்ர விநாசன லிங்கம் - எட்டுவிதமான ஏழ்மையை அழிக்கும் லிங்கம்

தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம் - அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை நான் வணங்குகிறேன்

Saturday, May 3, 2008

தாமரை இலை மேல் நீரைப் போல் நிலையற்றது வாழ்க்கை (பஜ கோவிந்தம் 4)


நளிநீ தள கத ஜலம் அதிதரளம்
தத்வத் ஜீவிதம் அதிசய சபலம்
வித்தி வ்யாத்யபிமானக்ரஸ்தம்
லோகம் சோகஹதம் ச சமஸ்தம்

நளிநீ தள கத ஜலம் - தாமரை இலையில் தங்கி இருக்கும் நீரானது

அதிதரளம் - நிலையில்லாதது.

தத்வத் - அது போல

ஜீவிதம் - வாழ்க்கையும்

அதிசய சபலம் - மிகவும் நிலையில்லாதது

லோகம் ஸமஸ்தம் - இந்த உலகில் எல்லாமும் எல்லாரும்

வ்யாதி அபிமான க்ரஸ்தம் - வியாதியாலும் தற்பெருமையாலும் விழுங்கப்பட்டவர்கள்

- மேலும்

சோக ஹதம் - (அந்த வியாதியாலும் தற்பெருமையாலும் ஏற்படும்) சோகத்தால் அழிக்கப்பட்டவர்கள்

வித்தி - இதை நீ அறிவாய்.

கோவிந்தனை வணங்குங்கள். கோவிந்தனை வணங்குங்கள். கோவிந்தனை வணங்குங்கள்.

***

முதல் பகுதி 26 அக்டோபர் 2006 அன்று இடப்பட்டது. இரண்டாம் பகுதி 3 மே 2008 அன்று சேர்க்கப்பட்டது:

தாமரை இலை மேல் தத்தளிக்கும் நீரை இரண்டுவிதமாக உவமித்திருக்கிறார்கள் மூத்தோர். தாமரை இலை மேல் நீர் எப்படி இலையுடன் ஒட்டாமல் இருக்குமோ அது போல் பற்றின்றி இருக்க வேண்டும் என்று சில இடங்களில் சொல்லியிருக்கிறார்கள். அதே உவமையை நிலையில்லாத வாழ்க்கைக்கு உவமையாக ஆதிசங்கரர் இங்கே கூறுகிறார். கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தால் அது எவ்வளவு உண்மை என்பது தெரிகிறது. இறப்பு எந்த வகையில் எப்போது வரும் என்று சொல்ல முடியாதபடி தானே இருக்கிறது. நெருநல் இருந்தார் இன்றில்லை - நேற்று இருந்தவர்கள் இன்று இல்லை என்று வள்ளுவப் பெருந்தகையும் இந்த உலக வாழ்க்கையைப் பற்றி சொல்கிறாரே. அந்த வகையில் பார்த்தால் தாமரை இலையின் மேல் தத்தளிக்கும் நீர்த்துளி வாழ்க்கைக்கு ஒரு சிறந்த உவமை.

இதனைச் சொன்னவர் ஆதிசங்கரர் என்பதால் அவருடைய தத்துவமான அத்வைதமும் இங்கே கொஞ்சம் வருகிறதோ என்று தோன்றுகிறது. தாமரை இலையின் மேல் தத்தளிக்கும் நீர்த்துளி தனி நீராகத் தோன்றினாலும் குளத்தில் இருக்கும் நீரும் அந்த நீர்த்துளியும் ஒன்றே. இலையிலிருந்து விடுதலை பெற்ற பின்னர் அந்த நீர்த்துளி குளத்தில் இருக்கும் நீருடன் கலந்து தனது தனித்தன்மையை இழந்துவிடும். முக்தியெனும் விடுதலையைப் பெறும் சீவனும் அந்த வகையில் பரம் எனும் எங்கும் நிறை இறையுடன் கலந்து தன் தனித்தன்மையை இழக்கும். அல்லிருமை (அத்வைதம்) தத்துவம் சொல்வதை இங்கே குறிப்பாகச் சொல்லுகிறாரோ என்று தோன்றுகிறது.

அடுத்து மிக முக்கியமான இரண்டு குறைகளைச் சொல்கிறார். வியாதி, அபிமானம் - நோயும் தற்பெருமையும் என்று இரண்டையும் அடுத்தடுத்து சொல்வதால் தற்பெருமையும் ஒரு பெரும் நோய். அது வாழ்க்கையை அழித்துவிடும் என்று சொல்லாமல் சொல்கிறார் என்று தோன்றுகிறது.

உலகில் எல்லோரும் 'சோகத்தால் அழிக்கப்பட்டவர்கள்' என்று இறந்த காலத்தில் சொல்வதும் சுவையாக இருக்கிறது. அது முடிந்த முடிபாகவே சொல்கிறார் சங்கரர். சோகத்திலிருந்து தப்பியவர் யாரும் இல்லை என்பதால் அப்படிச் சொன்னாரோ என்று தோன்றுகிறது.

Friday, May 2, 2008

வினைப்பயன்களா? அப்படியென்றால்? வேரறுத்துவிடும் இந்த லிங்கம் (லிங்காஷ்டகம் 4 & 5)


கனக மஹாமணி பூஷித லிங்கம்
பணிபதி வேஷ்டித ஸோபித லிங்கம்
தக்ஷ ஸுயக்ஞ விநாசன லிங்கம்
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்

கனக மஹாமணி பூஷித லிங்கம் - பொன்னாலும் மிகச்சிறந்த மாணிக்கங்களாலும் அழகு செய்யப்பெற்ற லிங்கம்

பணிபதி வேஷ்டித ஸோபித லிங்கம் - நாகங்களின் அரசனை அணிந்து ஒளிவீசும் லிங்கம்

தக்ஷ ஸுயக்ஞ விநாசன லிங்கம் - தனக்குரிய மரியாதையைத் தரத் தவறிய தக்ஷப் பிரஜாபதியின் யாகத்தை அழித்த லிங்கம்

தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம் - அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை நான் வணங்குகிறேன்.

***

குங்கும சந்தன லேபித லிங்கம்
பங்கஜ ஹார ஸுஸோபித லிங்கம்
ஸஞ்சித பாப விநாசன லிங்கம்
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்

குங்கும சந்தன லேபித லிங்கம் - குங்குமத்தாலும் சந்தனத்தாலும் அலங்கரிக்கப் பட்ட லிங்கம்

பங்கஜ ஹார ஸுஸோபித லிங்கம் - தாமரை மலர் மாலை அணிந்து ஒளிவீசும் லிங்கம்

ஸஞ்சித பாப விநாசன லிங்கம் - பற்பல பிறப்புகளில் சேர்த்து வைத்த எல்லா வினைகளின் பயன்களையும் அழிக்கும் லிங்கம்

தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம் - அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை நான் வணங்குகிறேன்

Tuesday, April 29, 2008

பெண்ணின் அங்கங்களைக் கண்டு மயங்காதே (பஜ கோவிந்தம் 3)



நாரி ஸ்தனபர நாபிதேசம்
த்ருஷ்வா மாகா மோஹாவேசம்
ஏதன் மாம்ஸ வஸாதி விகாரம்
மனஸி விசிந்தய வாரம் வாரம்

நாரி - அழகான பெண்களின்

ஸ்தனபர - அழகிய கொங்கைகளையும்

நாபிதேசம் - வயிற்றுப் பிரதேசங்களையும்

த்ருஷ்வா - பார்த்து

மாகா மோஹ ஆவேசம் - மயக்க ஆவேசம் அடையாதீர்கள்.

ஏதன் - இவையெல்லாம்

மாம்ஸ வஸ ஆதி விகாரம் - புலால், கொழுப்பு மற்றும் அது போன்ற பொருட்களின் மாற்று வடிவங்கள்

மனஸி விசிந்தய வாரம் வாரம் - மனதில் இதனை மீண்டும் மீண்டும் நினைத்துக் கொள்ளுங்கள்.

கோவிந்தனை வணங்குங்கள். கோவிந்தனை வணங்குங்கள். கோவிந்தனை வணங்குங்கள்.

***

29 ஏப்ரல் 2008 அன்று சேர்க்கப்பட்டது:

புலனடக்கம் மேற்கொண்டு தன்னை உணர விரும்புபவர்களுக்கு ஏற்ற அறிவுரை இது. இங்கே ஆணை முன்வைத்துப் பெண்ணின் அழகைப் பற்றி சொல்கிறார். ஆணின் திரண்ட தோள்களையும் நிமிர்ந்த நெஞ்சினையும் வீரம், அன்பு தெறிக்கும் முகத்தையும் கண்களையும் காது மடல்களையும் கூரிய மூக்கினையும் சிவந்த வாயிதழ்களையும் அந்த இதழ்களின் மேல் வளர்ந்திருக்கும் முறுக்கு மீசையையும் பற்றி பல இலக்கியங்கள் பேசுகின்றன - அப்படிப் பேசப்படுவதாலும் நடைமுறையில் பார்ப்பதாலும் ஆணின் இந்த அழகுகள் பெண்ணைக் கவர்கின்றன என்று தெரிகிறது. அதனால் இந்தப் பாட்டைப் பெண்ணை முன் வைத்துப் பாடியிருந்தால் ஆணின் அழகைக் கூறி அந்த அழகும் மாம்ஸ வசாதி விகாரம் என்று சொல்லியிருப்பார் என்று தோன்றுகிறது.

அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை எக்காலத்திலும் ஆணை மயக்கும் பெண்ணின் அங்கங்களில் முதன்மையானவற்றை இங்கே சொல்லியிருக்கிறார். சொல்வதற்குப் பெரிய பட்டியல் இருந்தாலும் எடுத்துக்காட்டாக இருப்பதிலேயே அதிகம் கவரும் இரண்டை மட்டும் சொன்னால் போதும் என்று நினைத்தாரோ என்னவோ மார்பகங்களையும் தொப்புளையும் மட்டும் சொல்லி மற்றவற்றை உய்த்துணர விட்டுவிட்டார்.

ஆண் பெண்ணைப் பற்றியும் பெண் ஆணைப் பற்றியும் நினைக்கும் போதெல்லாம் முன் வந்து நிற்பவற்றை 'ஊனும் கொழுப்பும் மாறி நிற்கும் வடிவங்கள்' என்று மீண்டும் மீண்டும் நினைத்தால் தானே புலனடக்கம் வந்துவிடும் என்பது உண்மை தான்.