Wednesday, June 18, 2008

மீண்டும் பிறப்பு மீண்டும் இறப்பு மீண்டும் கருவறைத் தங்கல் (பஜ கோவிந்தம் 21)


புனரபி ஜனனம் புனரபி மரணம்
புனரபி ஜனனி ஜடரே சயனம்
இஹ சம்சாரே பஹு துஸ்தாரே
க்ருபயா பாரே பாஹி முராரே


புனரபி ஜனனம் - மீண்டும் ஒரு முறை பிறப்பு

புனரபி மரணம் - மீண்டும் ஒரு முறை இறப்பு

புனரபி ஜனனி ஜடரே சயனம் - மீண்டும் ஒரு முறை தாயின் கருப்பையில் தூக்கம்

இஹ சம்சாரே பஹு துஸ்தாரே - இந்த பிறப்பு-இறப்பு என்னும் சுழல் கடப்பதற்கு மிகக் கடினமானதொன்றாக இருக்கிறது

க்ருபயா பாரே பாஹி முராரே - அருள் கூர்ந்து என்னைக் காப்பாய் பெருமாளே.

கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.

***

முராரி - முரனைக் கொன்றவன்.

3 comments:

குமரன் (Kumaran) said...

இந்த இடுகை 'பஜ கோவிந்தம்' பதிவில் 26 ஜூன் 2006 அன்று இடப்பட்டது. அப்போது வந்த பின்னூட்டங்கள்:

10 comments:

துளசி கோபால் said...
//இஹ சம்சாரே பஹு துஸ்தாரே -//

'இஹ சம்சாரே, பஹூ துக்காரே'ன்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன்.

சம்சார பந்தத்துலே இருந்துக்கிட்டு
நிறைய துக்கம் அனுபவிக்கறவங்களே

இது இல்லையா?

June 26, 2006 11:31 PM
--

Anonymous said...
அத்தகைய வாழ்க்கையை உணராமலிருக்கின்றோம்.

June 27, 2006 1:49 AM
--

ஜயராமன் said...
அற்புதமான ஜீவ வரிகள்.

என்றும் இந்து மத உயரிய கொள்கையின் சிகரமாய் திகழும் வேதாந்த தத்துவத்தின் சாரமான பஜகோவிந்தம். அதில் இந்த செய்யுள் (ஸ்லோகம்) மிகவும் பிரஸித்தி பெற்றது.

இந்த சமுதாய சுழலிலிருந்து விடுபெற கிருஷ்ணனை அருள் செய் என்று கூவுகிறார் சங்கரர்.

அவ்வாறு மனம் உருகி அழைக்கும்போது அவர் கிருஷ்ணனை அழைக்கும் பெயரை பார்த்தீர்களா?

"முராரீ" என்று கூப்பிடுகிறார்.

முரன் என்ற அரக்கனை அழித்தவனை என்னை காப்பாற்று என்று கூப்பிடுவது வினோதம். அழிவை செய்தவனை அந்த பெயரை சொல்லி என் மீது அருள் செய் என்று கூப்பிடுவது வினோதம்.

இதன் தாத்பர்யம் என்ன. முரன் நரகாசுரனால் வேலை ஏவப்பட்டவன். ஐந்து தலை அரக்கன். ப்ராக்ஜ்யோதிஷபுரத்தில் அவன் அரசாட்சி. கிருஷ்ணர் நரகாசுரன் வத்த்திற்கு முன்பு இந்த முரனை அழித்தார்.

சங்கர்ர் சொல்வது இதுதான். என் மனது என்பது நரகாசுரன். அவனால் ஏவப்பட்டு ஐந்து புலன்களால் ஏவப்பட்ட ஐந்து தலை அரக்கன் தான் நான் (என்கிற ஜீவன்). என்னை அழித்து என் மனத்தையும் அழித்து என்னை உன் பூர்ணமான ஆனந்தத்தில் சேர்த்துக்கொள்.

என்னை நீ மறுபடியும் இங்கு வந்து பிறந்து உழலுமாறு செய்யாதே.

என்பதே சங்கரர் 'முராரீ' என்று கூவுவதின் ரகசியம்.

இங்கு வேறு பிறந்து இந்த தமிழ்மணத்தில் பல இழிபிறவிகளிடம் வசை வாங்காமல் என்னை ஆட்கொள் இறைவா! என்று நாம் எல்லோரும் அவசியம் பாடுவோம் :-) அந்த முராரீ கருணை செய்யட்டும்.

நன்றி

June 27, 2006 2:01 AM
--

தி. ரா. ச.(T.R.C.) said...
குமரன் பட்டிணத்து அடிகளும் இதே கருத்தில் கீழ்கண்டவாறு கூறியுள்ளார்
அன்னை எத்தனை எத்தனை அன்னையோ?
அப்பன் எத்தனை எத்தனை அப்பனோ?
பின்னை எத்தனை எத்தனை பெண்டீரோ?
பிள்ளை எத்தனை எத்தனை பிள்ளையோ?
முன்னை எத்தனை எத்தனை சன்மமோ?
மூடனாயடி யேனும றிந்திலேன்,
இன்ன மெத்தனை யெத்தனை சன்மமோ?
என்செய் வேன்? கச்சியேகம்ப நாதனே
அன்பன் தி ரா ச

June 27, 2006 9:48 AM
--

குமரன் (Kumaran) said...
இல்லிங்க துளசி அக்கா. இந்த சம்சார பந்தம் கடத்தற்கரியது அப்படிங்கறது தான் இஹ சம்சாரே பஹு துஸ்தாரேக்கு விளக்கம்.

June 28, 2006 11:50 PM
--

குமரன் (Kumaran) said...
பெயர் சொல்லாமல் பின்னூட்டம் இட்டிருக்கும் அன்பரே. வாழ்க்கை அத்தகையது என்பதை உணர்தல் அவ்வளவு எளிதில்லை. இந்த ஸ்லோகத்தை எத்தனையோ முறை படித்திருப்பேன்; கேட்டிருப்பேன்; பலருக்கும் சொல்லியிருப்பேன். ஆனாலும் நான் உணர்ந்துவிட்டேனா என்றால் இல்லை என்று என் செயல்களைப் பார்த்து எளிதில் சொல்லிவிடலாம். இல்லையா?

June 28, 2006 11:51 PM
--

குமரன் (Kumaran) said...
ஆமாம் ஜயராமன் ஐயா. இந்த ஸ்லோகம் மிகவும் புகழ் பெற்றதே. முராரி என்ற பெயருக்கு நீங்கள் விளக்கம் சொன்னது மிக அருமை. மிக்க நன்றி.

June 28, 2006 11:53 PM
--

குமரன் (Kumaran) said...
தி.ரா.ச. இந்தப் பாடலுக்குப் பொருள் எழுதும் போது நீங்கள் சொல்லியிருக்கும் பட்டினத்தார் பாடலும் என் நினைவிற்கு வந்தது. அண்மையில் பட்டினத்தார் பாடல்களைப் படித்துக் கொண்டிருந்தேன். அவற்றை உடனே வலையில் ஏற்றிவிட வேண்டும் என்று துடிப்பான எண்ணம் வந்தாலும் ஏற்கனவே தொடங்கி தொடராமல் நிறைய இருப்பதால் அந்த ஆவலைத் தற்போதைக்கு நிறுத்தி வைத்திருக்கிறேன்.

June 28, 2006 11:55 PM
--

சிவமுருகன் said...
பலருக்கும் இந்த பாடல் மிகவும் எளிதாக மனப்பாடம் ஆகிவிடும்,

ஆனால் கடைப்பிடிப்பது கடினம்.

June 29, 2006 12:18 AM
--

குமரன் (Kumaran) said...
மிகச் சரியாக சொன்னீர்கள் சிவமுருகன்.

June 29, 2006 1:28 AM

கவிநயா said...

முராரிதான் காக்கணும். ஜயராமன் அவர்கள் சொன்ன விளக்கம் அருமை. படம் ரொம்ப பொருத்தம், குமரா!

குமரன் (Kumaran) said...

நன்றி அக்கா.