
ரத்யாகர்பட விரசித கந்தா:
புண்யாபுண்ய விவர்ஜித பந்தா:
யோகி யோக நியோஜித சித்தா:
ரமதே பாலோன்மத்தவத் ஏவ
ரத்யா கர்பட விரசித கந்தா: - கந்தல் துணிகளால் ஆன உடைகளை அணிந்திருப்பான்
புண்ய அபுண்ய விவர்ஜித பந்தா: - புண்ய பாவங்களைத் தாண்டிய நடத்தையை (பாதையை) உடையவனாய் இருப்பான்
யோகி யோக நியோஜித சித்தா: - யோகியாகவும் இறைவனிடம் இணைந்த சித்தத்தைக் கொண்டவனாகவும் இருப்பான்
ரமதே பால உன்மத்தவத் ஏவ - அப்படிப்பட்டவனே மகிழ்கிறான்; பார்வைக்குக் குழந்தையைப் போலும் பித்தனைப் போலும் இருப்பான்.
கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.
***
யோகம் என்ற சொல்லுக்கு ஐக்கியம் என்ற பொருளும் இருக்கிறது. பிரிந்திருந்த இரு பொருட்கள் ஒன்றாகச் சேர்வது யோகம்.
3 comments:
இந்த இடுகை 'பஜ கோவிந்தம்' பதிவில் 30 ஜூன் 2006 அன்று இடப்பட்டது. அப்போது வந்த பின்னூட்டங்கள்:
4 comments:
Ram.K said...
//யோகம் என்ற சொல்லுக்கு ஐக்கியம் என்ற பொருளும் இருக்கிறது.//
அட இது புதுசான ஒண்ணா இருக்கு !!!
கழுதைப் படம் போட்டு என்னைப்பார் யோகம் வரும் ன்னு சொல்வது அதிர்ஷ்டம் என்ற பொருளில் நினைத்தேன்.
புதிய புரிதலுடன்
பச்சோந்தி
July 01, 2006 1:17 PM
--
rnateshan. said...
அற்புதமான விளக்கம்!யோகம் என்ற சொல்லின் விளக்கம் மிக்க சரி.
நன்றி!!
July 02, 2006 10:59 AM
--
குமரன் (Kumaran) said...
ஆமாம் இராம்பிரசாத் அண்ணா. யோகம் என்பதற்கு அதிருஷ்டம் என்ற பொருளே வழங்கி வருகிறது. ஆனால் யோகம் என்பதற்கு 'கூடல்' என்ற பொருளும் அந்தக் காலத்தில் வழங்கியிருக்கிறது.
ஜீவனும் பரமனும் சேருவது; இயற்கையும் ஆத்மாவும் சேருவது; என்றெல்லாம் பலவிதமான பொருளை யோகம் என்ற சொல்லுக்குக் கொடுத்திருக்கிறார்கள்.
July 03, 2006 11:41 AM
--
குமரன் (Kumaran) said...
நன்றி நடேசன் ஐயா.
July 03, 2006 11:41 AM
//யோகம் என்ற சொல்லுக்கு ஐக்கியம் என்ற பொருளும் இருக்கிறது.//
ஆமா, அதுல இருந்துதானே "யோகா" வந்தது?
//பார்வைக்குக் குழந்தையைப் போலும் பித்தனைப் போலும் இருப்பான்.//
இதைப் படிக்கும்போது ஸ்ரீராமகிருஷ்ணர் பத்திப் படிச்ச நினைவு வந்தது :)
யோகாசனங்கள் ஹடயோகம் என்ற வகையில் வரும் கவிநயா அக்கா. அது தான் இங்கே மேற்கில் 'யோகா' ஆகிவிட்டது.
யோகம் என்பதற்கு வழி என்றும் ஒரு பொருள் இருக்கிறது. கர்மயோகம், ஞானயோகம், த்யானயோகம், பக்தியோகம், ராஜயோகம் என்றெல்லாம் படித்திருப்பீர்களே.
இராமகிருஷ்ணர் பரமஹம்ஸர்களில் நமக்கு நன்கு தெரிந்தவர். அவர் நினைவிற்கு வந்தது சரியே.
Post a Comment