Friday, June 20, 2008

வாழ்வு முற்றும் கனவு (பஜ கோவிந்தம் 23)


கஸ்த்வம் கோஹம் குத ஆயாத:
கா மே ஜனனி கோ மே தாத:
இதி பரிபாவய சர்வம் அசாரம்
விஷ்வம் த்யத்வா ஸ்வப்ன விசாரம்

கஸ்த்வம் (க த்வம்) - நீ யார்?

கோஹம் (க அஹம்) - நான் யார்?

குத ஆயாத: - எங்கிருந்து வந்தோம்?

கா மே ஜனனி - யார் என் தாய்?

கோ மே தாத: - யார் எனது தந்தை?

இதி பரிபாவய - இந்தக் கேள்விகளைக் கேட்டு விடைகளை அறிய முற்படு

சர்வம் அசாரம் - இங்கு எல்லாமே நிலையற்றது

விஷ்வம் த்யத்வா ஸ்வப்ன விசாரம் - இவையெல்லாம் கனவினைப் போன்றது என்பதனை உணர்ந்து எல்லாவற்றையும் துறந்துவிடு.

கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.

4 comments:

குமரன் (Kumaran) said...

இந்த இடுகை 'பஜ கோவிந்தம்' பதிவில் 7 ஜூலை 2006 அன்று இடப்பட்டது. அப்போது வந்த பின்னூட்டங்கள்:

9 comments:

சிவமுருகன் said...
அண்ணா,

இதனை தான் பலரிடம் கேட்டேன், ஆனால் யாரும் வழிசொல்ல வில்லை, இறுதியில் (சொக்கனிடமும்,கூடலழகரிடமும்)அவர்களிடமே கேட்டேன் போரில் இராவணனுக்கு சொன்ன பதிலை சொன்னார்கள், "இன்று போய் நாளை வா" என்றார்கள், அதன் பிறகு ஒரு மாதகாலம் தினமும், பின் ஒருவருட காலமும் தினமும், சென்று வந்திருப்பேன், ஏதோ தெரிகிறது அனால் புரியவில்லை.

மற்றவர்களிடம் சொல்ல முடியவில்லை.சில காட்சிகளை நான் கண்டதை சொன்னாலும் அவர்களுக்கு புரியவில்லை.

ஒரு வேளை இதன் பதில் அதுதானோ.

ஒரே குழப்பமாக உள்ளது என்கின்றனர் ஆனால் நான் தெளிவாய் உள்ளேன்.

July 07, 2006 7:29 AM
--

தி. ரா. ச.(T.R.C.) said...
குமரன் ஆதி சங்கரர் இந்தப் பாட்டின் மூலம் ஆத்மாவிசாரத்தைப் பற்றி சொல்லுகிறார். மனிதன் எப்பொழுது ஆத்ம விசாரத்தில் ஈடுபட்டு நான் யார் என்ற கேள்விக்கு விடை காண முயற்சிக்கிறானோ அப்பொழுதே அவன் மனித நிலைலிருந்து சற்று உயர் நிலையை அடைகிறான். தி ரா ச

July 08, 2006 12:15 AM
--

Merkondar said...
ம்..... மதுரைகாரவுக பதிவு மதுரைகாவுக பின்னூட்டம் வெகுஜோர்

July 08, 2006 6:37 AM
--

ரங்கா - Ranga said...
குமரன்,

உங்கள் விளக்கத்தின் எளிமை அழகாயிருக்கிறது. //விஷ்வம் த்யத்வா ஸ்வப்ன விசாரம்// இதில் 'பிரபஞ்சமே கனவு போன்ற மாயை தான்' என்ற அர்த்தம் நிச்சயமாகத் தெரிகிறது; துறப்பது பற்றிய கருத்தை விளக்கமாக சொன்னது ஏனோ? கொஞ்சம் தெளிவு படுத்தவும்.

ரங்கா.

July 08, 2006 7:07 AM
--

குமரன் (Kumaran) said...
சிவமுருகன். பூடகமாய் சொல்கிறீர்கள். எனக்குப் புரியவில்லை. :-) அவன் அருளாலே அவன் தாள் வணங்கி நிற்போம்.

July 09, 2006 10:33 PM
--

குமரன் (Kumaran) said...
உண்மை தான் தி.ரா.ச. எப்போது ஆத்ம விசாரம் உண்மையிலேயே தொடங்குகிறதோ அப்போதே அந்த மனிதன் உயர்கிறான். ஆனால் என்னைப் போன்ற உருத்திராட்சப் பூனைகளையும் :-) விசுவாமித்திரரின் போராட்டத்தையும் எப்போதும் நினைவில் வைத்திருக்க வேண்டும். :-)

July 09, 2006 10:34 PM
--

குமரன் (Kumaran) said...
என்னார் ஐயா. பதிவைப் படித்துவிட்டு சிவமுருகனின் பின்னூட்டத்தைப் பாராட்டியதற்கு மிக்க நன்றி. சிவமுருகனின் பின்னூட்டம் ஜோராகத் தான் இருக்கிறது.

July 09, 2006 10:35 PM
--

குமரன் (Kumaran) said...
ரங்கா அண்ணா. விஷ்வம் ஸ்வப்ன விசாரம் என்பதில் பிரபஞ்சமே கனவு போன்றதே என்பது சொல்லப்பட்டிருக்கிறது. த்யத்வா என்பதில் 'அதனால் எல்லாவற்றையும் துறப்பாய்' என்பது சொல்லப்பட்டிருக்கிறது. இரண்டினையும் சேர்த்து 'இவையெல்லாம் கனவினைப் போன்றது என்பதனை உணர்ந்து எல்லாவற்றையும் துறந்துவிடு' என்றெழுதினேன்.

July 09, 2006 10:37 PM
--

ரங்கா - Ranga said...
குமரன்,

உங்கள் விளக்கம் புரிகிறது. 'த்யக்த்வா' என்ற வார்த்தைக்கு 'விட்டு விடு' அல்லது 'துறந்து விடு' என்ற அர்த்தம் உண்டு, அதை நீங்கள் சொன்னது போல விளக்கலாம். நான் இந்த மாதிரி அதற்கு அர்த்தம் கற்பித்துக் கொண்டேன்:
விஸ்வம் - பிரபஞ்சம் (அல்லது விஷ்ணு)
த்யக்த்வா ஸ்வப்ன விசாரம் - கனவு போன்ற மாயையைத் துறந்துவிடு
முதல் வரியில் உள்ள சர்வமசாரம் - சர்வம் அசாரம் - எல்லாம் மாயை.

"விஷ்ணுவைத் தவிர இங்கு எல்லாம் மாயை; கனவு போன்ற இந்த மாயையைத் துறந்து விடு."

இந்த விளக்கம் இதற்கு அடுத்த பாடலோடு (த்வயி மயி) பொருந்தி வருகிறது.

அதனால் தான் தங்களிடம் விளக்கம் கேட்டேன். பிரபஞ்சத்தையே துறந்து விடு என்று சொன்னால், அது விஷ்ணுவையும் துறந்துவிடு என்று சொல்லவது போலத் தோன்றியதால், இந்த மாதிரி விளக்கம் எடுத்துக் கொண்டேன்.

ரங்கா.

July 10, 2006 9:06 PM

குமரன் (Kumaran) said...

ரங்கா அண்ணா. ரொம்ப நல்ல விளக்கம் சொல்லியிருக்கிறீர்கள். மிக்க நன்றி.

Kavinaya said...

மாயைகளைத் துறந்து விட்டு
மாயவனைப் பற்றிக் கொள்வோம்!

நன்றி, குமரா!

குமரன் (Kumaran) said...

திருக்குறளை அழகா சொல்லிட்டீங்க அக்கா.

பற்றுக பற்றற்றான் பற்றை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு