Friday, June 13, 2008

வீடு மரத்தடி படுக்கை கட்டாந்தரை (பஜ கோவிந்தம் 18)


சுர மந்திர தரு மூல நிவாஸ:
சய்யா பூதலம் அஜினம் வாச:
சர்வ பரிக்ரஹ போக த்யாக:
கஸ்ய சுகம் ந கரோதி விராக:

ஒரு உண்மை சன்யாசி எப்படி இருப்பான் என்று இந்தப் பாடலில் சொல்கிறார்.

சுர மந்திர தரு மூல நிவாஸ: - வசிப்பதோ தேவாலயங்களில் உள்ள மரங்களில் அடியில்

சய்யா பூதலம் - படுக்கையோ கட்டாந்தரை

அஜினம் வாச: - உடுப்பதோ தோலாடை

சர்வ பரிக்ரஹ போக த்யாக: - எல்லாவிதமான சுகத்தையும் அடையவேண்டும் என்ற ஆசையையும் அனுபவத்தையும் துறந்துவிட்டவர்

கஸ்ய சுகம் ந கரோதி விராக: - அப்படிப்பட்ட ஆசையற்றவனுக்கு சுகம் ஏற்படாமல் எப்படி போகும்? அப்படிப்பட்டவரே மிக உயர்ந்த சுகத்தை அடைவார்.

கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.

4 comments:

குமரன் (Kumaran) said...

இந்த இடுகை 'பஜ கோவிந்தம்' பதிவில் 22 ஜூன் 2006 அன்று இடப்பட்டது. அப்போது வந்த பின்னூட்டங்கள்:

9 comments:

சிவமுருகன் said...
//வசிப்பதோ தேவாலயங்களில் உள்ள மரங்களில் அடியில்//

தேவாலயமும் அல்ல அதன் மரத்தடியில். ஏனெனில் அதுவும் ஒரு கூறையால் வேய்ந்தது தானே? ஆகவே ஆதிசங்கரர் மரத்தடி என்று குறிப்பிட்டுள்ளார்.

தங்களின் விளக்கம் அருமை

June 22, 2006 11:17 PM
--

குமரன் (Kumaran) said...
நன்றி சிவமுருகன்.

//கூறையால் வேய்ந்தது // சின்ன எழுத்துப்பிழை. கூறையால் வேய்ந்தது இல்லை. கூரையால் வேய்ந்தது.

June 23, 2006 11:13 AM
--

manu said...
எவ்வளவு எளிமையான வாழ்க்கை. இந்தப் பக்குவம் வரவே ரொம்ப புண்ணியம் செய்யணும் அதற்கு இன்னொரு பஜகோவிந்தம் செய்ய வேண்டியதுதான்.

June 24, 2006 1:21 AM
--

குமரன் (Kumaran) said...
இந்த எளிமையான வாழ்க்கை அவ்வளவு விரைவில் கிடைத்துவிடாதே மனு அம்மா. அவன் அருளாலேயே அப்படிப்பட்ட மனநிலை கிடைக்கும். இல்லையா?

June 24, 2006 1:24 AM
--

தி. ரா. ச.(T.R.C.) said...
இப்படிபட்ட துறவி நம்முடன் இருந்து வாழ்ந்து சமீபத்தில் தான் மறைந்தார். யார் தெரியுமா குமரன்? அன்பன் திரா ச

June 24, 2006 12:18 PM
--

SK said...
தி.ரா.ச. அவர்கள் சொன்ன எண்னமே எனக்கும் வந்து ஒரு கணம் கண்மூடி அஞ்சலி செலுத்தினேன்!

உருக வைத்த பதிவு!

ஜய ஜய சங்கர! ஹர ஹர சங்கர!

June 24, 2006 7:32 PM
--

குமரன் (Kumaran) said...
ஆமாம் தி.ரா.ச. & எஸ்.கே. நீங்கள் இருவரும் யாரைச் சொல்கிறீர்கள் என்று எனக்குத் தெரிந்துவிட்டது. நானும் அவரைப் பற்றி எனது 100வது பதிவில் எழுதியிருக்கிறேனே. கூடலில் 'எழுத்தறிவித்தவன் இறைவன்' என்ற தலைப்பில்.

'என்ன புண்ணியம் செய்தேனோ சத்குருநாதா
எத்தனை தவம் செய்தேனோ உன் அருள் பெறவே...'

June 25, 2006 9:38 PM
--

johan -paris said...
அன்புக் குமரனுக்கு!
எமது;பற்றற்ற, ஓடும் செம்பொன்னும், ஒக்க நோக்கும்;மனநிலைக்கு; அவன்,நம்மைப் பற்றவேண்டும். அந்த "சலமிலன்".. நம்மைப் பற்ற அவன்,திருவுளம் வேண்டும்.அதற்கு நாம்; அவன் நாமம் பயிலவேண்டும். எனவே "கோவிந்தனை வணங்குவோம்"; அவனருளால் அவன் தாள் வணங்கி.
உங்கள் விளக்கங்களால் ;பலவடமொழிச் சொல் அறிமுகம் கிட்டியது.நன்றி;நன்று
யோகன் பாரிஸ்

June 26, 2006 4:12 AM
--

குமரன் (Kumaran) said...
தங்கள் பாராட்டிற்கு நன்றி யோகன் ஐயா. தொடர்ந்து எல்லாப் பதிவுகளையும் படித்துக் கருத்து சொல்வதற்கும் மிக்க நன்றி.

June 26, 2006 9:17 AM

Kavinaya said...

பற்றற்ற நிலை அவனே அருளல் வேண்டும்.

//ஆமாம் தி.ரா.ச. & எஸ்.கே. நீங்கள் இருவரும் யாரைச் சொல்கிறீர்கள் என்று எனக்குத் தெரிந்துவிட்டது. //

யாரை சொல்றீங்கன்னு தெரியல.

Kavinaya said...

படம் கொள்ளை அழகு! :)

குமரன் (Kumaran) said...

கூடல்-ல டிசம்பர் 2005 எழுதுன 'எழுத்தறிவித்தவன் இறைவன்'ன்னு ஒரு இடுகை இருக்கும். அதைப் பாருங்க அக்கா. அதுல கடைசியில ஒரு படம் இருக்கும். அந்தப் படத்துல இருக்கிறவரைத் தான் இங்கே திராசவும் எஸ்.கே.யும் சொல்லியிருக்காங்க.