Monday, June 9, 2008

வயதானாலும் ஆசை விடுகிறதா என்ன? (பஜகோவிந்தம் 15)


அங்கம் கலிதம் பலிதம் முண்டம்
தஸன விஹீனம் ஜாதம் துண்டம்
வ்ருத்தோ யாதி க்ருஹீத்வா தண்டம்
ததபி ந முஞ்சதி ஆசாபிண்டம்

அங்கம் கலிதம்
- உடல் நடுக்கமடைந்து விட்டது

பலிதம் முண்டம் - தலை நரைத்துவிட்டது

தஸன விஹீனம் ஜாதம் துண்டம் - வாயில் உள்ள பற்களோ விழுந்துவிட்டன

வ்ருத்தோ யாதி க்ருஹீத்வா தண்டம் - வயதான காலத்தில் ஒரு கோலின் உதவியால் ஒரு இடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு செல்கிறார்

ததபி ந முஞ்சதி ஆசாபிண்டம் - ஆனாலும் ஆசையின் கூட்டம் மட்டும் விடவில்லை.

கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.

***

பலர் என்னிடம் வயசான காலத்துல சாமி, கோவில் என்று போகலாம். சின்ன வயதில் அனுபவிக்க வேண்டியதை அனுபவித்துவிட வேண்டும் என்று சொல்லுவார்கள். அவர்களுக்கு எல்லாம் இதனைத் தான் நான் சொல்வது - சின்ன வயதில் அனுபவிக்க வேண்டியதெல்லாம் அனுபவிக்கவேண்டியது தான்; ஆனால் சாமி, கோவில் என்று சின்ன வயதிலேயே போகவில்லை என்றால் வயதான காலத்திலும் அது வராது; இன்னும் கொஞ்சம் வயதாகட்டும்; இன்னும் கொஞ்சம் வயதாகட்டும் என்று தான் தோன்றும்; ஏனெனில் ஆசைகளின் கூட்டங்கள் அத்தகையவை; அவற்றின் வேகமும் அத்தகையவை. சிறு வயதிலேயே ஆன்மிகத்தில் சிறிது பயிற்சி இருந்தால் சரியான நேரத்தில் ஆசைகள் கழிந்து ஆன்மிகம் மிகும்.

4 comments:

குமரன் (Kumaran) said...

இந்த இடுகை 'பஜ கோவிந்தம்' பதிவில் 26 மே 2006 அன்று இடப்பட்டது. அப்போது வந்த பின்னூட்டங்கள்:

16 comments:

lakshmi said...
aanmeeghatha pathi arumaiya soneengha kumaran!!

May 26, 2006 9:28 AM
--

Merkondar said...
//வயதான காலத்தில் ஒரு கோலின் உதவியால் ஒரு இடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு செல்கிறார்//
உலகத்தையே நெம்புகோலாள் புறட்ட முயலும் வாளிபத்தின் முன் தான் புறண்டு விடாமல் இருக்க தடியூன்றும் முதுமை தலைகுனிகிறது

May 26, 2006 10:05 AM
--

குமரன் (Kumaran) said...
நன்றி லக்ஷ்மி.

May 26, 2006 11:29 AM
--

குமரன் (Kumaran) said...
தடியூன்றுவதால் முதுமை தலைகுனியத் தேவையிருப்பதாகத் தெரியவில்லை என்னார் ஐயா. உலகத்தைப் புரட்டிப் போட முயலும் வாலிபத்திற்குத் தகுந்த வழி காட்டாமல் தானும் ஆசைகளின் கூட்டத்தில் மாட்டிக் கொண்டு பரிதாப நிலையில் இருப்பது தலைகுனிவானதே. நான் விரைவில் வாலிப நிலையிலிருந்து முதுமை நிலைக்குப் போய்க் கொண்டிருக்கிறேன் என்பது நன்றாகப் புரிகிறது இப்போது.

May 26, 2006 11:31 AM
--

தி. ரா. ச.(T.R.C.) said...
பலர் என்னிடம் வயசான காலத்துல சாமி, கோவில் என்று போகலாம். சின்ன வயதில் அனுபவிக்க வேண்டியதை அனுபவித்துவிட வேண்டும் என்று சொல்லுவார்கள
்அது சரி குமரன் வயதானபின் அல்லது அதுவரை நாம் இருப்போம் என்பதற்கு என்ன கியரண்டி.அதனால் தானே பெரியவர்கள் அப்போதைக்கு இப்போதேகூறு என்றார்கள்.பெரிய காற்றுஅடிக்கும் போது பழுத்த மரம் மட்டும் விழுவதில்லை,தளிர்,பூ,பிஞ்சு காய் எல்லாமே விழும். தி ரா ச

May 27, 2006 12:51 AM
--

குமரன் (Kumaran) said...
உண்மை தான் தி.ரா.ச. இராமானுஜரை கூரத்தாழ்வார் கேட்டது நினைவிற்கு வருகிறது. ஒரு முறை ஏதோ ஒரு உபதேசத்தைத் தரும்படி கூரத்தாழ்வார் வேண்டி நிற்க இராமானுஜர் இரண்டு நாட்கள் கழித்துச் சொல்வதாகச் சொன்னாராம். உடனே கூரத்தாழ்வார் 'ஆஹா. என் ஆசாரியர் காலத்தை வென்று விட்டார்; காலத்தை வென்றுவிட்டார்' என்று ஆனந்தக் கூத்தாடினாராம். என்னவென்று இராமானுஜர் விசாரிக்க அப்போது 'சுவாமி. இன்னும் இரு நாட்களுக்கு நாம் இருவரும் கட்டாயம் உயிரோடு இருப்போம் என்று உங்களுக்கு அறுதியாகத் தெரிந்ததால் தானே நீங்கள் இப்படி சொன்னீர்கள். அதனால் யாராலும் வெல்ல முடியாத காலத்தைத் தாங்கள் வென்றுவிட்டீர்கள் என்று அறிந்து மகிழ்ச்சி அடைந்தேன்' என்று சொன்னார் கூரத்தாழ்வார். இராமானுஜரும் அவர் சொன்னதை உணர்ந்து உடனே உபதேசத்தைச் சொன்னார் என்று படித்திருக்கிறேன்.

May 27, 2006 7:51 AM
--

Ragavan said...
இந்தக் கருத்தை எல்லாரும் சொல்லியிருக்கிறார்கள். அருணகிரியும் கூட.

அழித்துப் பிறக்கவொட்டா அயில்வேலன் கவியை அன்பால்
எழுத்துப் பிழையற கறிகிலீர் எரி மூண்டதென
விழித்துப் புகையெழ பொங்கு வெங்கூற்றுவன் விடும் கயிற்றால்
கழுத்தில் சுருக்கிட்டிழுக்குமன்றோ கவி கற்கின்றதே...............

May 29, 2006 3:04 AM
--

குமரன் (Kumaran) said...
இராகவன். எல்லாரும் என்றால் இறையுணர்வாளர்கள் மட்டும் தானே. பொதுவாக மற்ற எல்லோரும் சொல்லுவது 'வயசான காலத்துல சாமி, கோவில் என்று போகலாம்; இப்போது தேவையில்லை' என்பது தானே. பின்னர் 'சாகற நேரத்துல சங்கரா சங்கரா' என்றால்? அது கூட ஏற்கனவே சங்கரா என்று சொல்லிப் பழக்கம் இருந்தால் தான் சாகும் போதாவது வரும். இல்லை மற்ற நினைவுகள் தானே வரும்?

அருமையான அருணகிரிநாதர் பாடலைக் கொடுத்ததற்கு நன்றி. இது தான் 'பஜ கோவிந்தத்தில்' நீங்கள் முதன்முறை இடும் பின்னூட்டமோ? :-)

May 29, 2006 4:26 AM
---

subu's blog said...
வாழ்வே மாயம்னு தெரிஞ்சும் நாமெல்லாம் ஏன் சாதாரண உலக வாழ்க்கை வாழ்ந்துக்கிட்டு, கமெண்டு எழுதிக்கிட்டு இருக்கோம் ??

மலைக்கோ, மரத்தடிக்க்கோ ஏன் போவலை ?

நட்புடன்
சுப்பு

May 31, 2006 8:37 AM
---

subu's blog said...
வாழ்வே மாயம்னு தெரிஞ்சும் நாமெல்லாம் ஏன் சாதாரண உலக வாழ்க்கை வாழ்ந்துக்கிட்டு, கமெண்டு எழுதிக்கிட்டு இருக்கோம் ??

மலைக்கோ, மரத்தடிக்கோ ஏன் போவலை ?

நட்புடன்
சுப்பு

May 31, 2006 8:37 AM
---

subu's blog said...
வாழ்வே மாயம்னு தெரிஞ்சும் நாமெல்லாம் ஏன் சாதாரண உலக வாழ்க்கை வாழ்ந்துக்கிட்டு, கமெண்டு எழுதிக்கிட்டு இருக்கோம் ??

மலைக்கோ, மரத்தடிக்கோ ஏன் போவலை ?

நட்புடன்
சுப்பு

May 31, 2006 8:38 AM
---

குமரன் (Kumaran) said...
முதல் வருகைக்கும் மூன்று பின்னூட்டத்திற்கும் நன்றி சுப்பு. உங்கள் நட்பிற்கும் நன்றி.

நல்ல கேள்வி. ஆனால் விடை தெரியவில்லையே?! :-( வாழ்வே மாயம்ன்னு தெரிஞ்சும்ன்னு சொல்லியிருக்கீங்க. எனக்கு வாழ்வே மாயம்ன்னு தெரிஞ்சிருக்கான்னு தெரியலை. சாதாரண உலகவாழ்க்கை வாழ்ந்துக்கிட்டு இருக்கோம்ன்னு சொல்லியிருக்கீங்க. வாழ்வே மாயம்ன்னு தெரிஞ்சா சாதாரண உலகவாழ்க்கை வாழ மாட்டார்களா? சாதாரண உலக வாழ்க்கைன்னா என்ன? தெரியலையே. மலைக்கோ மரத்தடிக்கோ போவது சாதாரண உலக வாழ்க்கையா இல்லையா? தெரியலையே.

தமிழ்மணத்திற்கும் என் பதிவுகளுக்கும் மீண்டும் நல்வரவு சொல்லிக் கொள்கிறேன் சுப்பு.

May 31, 2006 3:33 PM
---

ThiruMoolan said...
மலைக்குபோவதாலோ மரத்தடிக்கு போவதாலோ ஆன்மீகம் வந்துவிடப்போவதில்லை. ஆன்மீகம் பற்றிய தவறான புரிதல் விலகவில்லை நமைவிட்டு இன்னும்.

வெளிப்புற வாழ்வு பற்றியதல்ல ஆன்மீகம். நீங்கள் மலைச்சாரலில் இருன்தாலும் சரி, மாட மாளிகைகளில் இருந்தாலும் சரி....உங்கள் மன உள் ஓட்டங்கள் மட்டுமெ ஆன்மீக பயணத்தின் பாதையை தீர்மானிக்கின்ற்ன.

July 14, 2006 11:17 AM
--

குமரன் (Kumaran) said...
உண்மை திருமூலன். நீங்கள் இங்கே சொல்லியிருக்கும் கருத்தையே ஆதிசங்கரரும் 'யோக ரதோ வா போக ரதோ வா' என்ற சுலோகத்தில் சொல்லியிருக்கிறார். அதற்கும் விளக்கம் சொல்லியிருக்கிறேன். முடிந்தால் பாருங்கள்.

July 15, 2006 1:26 AM
--

Hariharan # 26491540 said...
குமரன்,

இறைவனை ஒரு "சிதறு தேங்காய்"க்கு ஒப்புக்கொள்ளும் மலிவான கமிஷன் ஏஜெண்ட் மாதிரிதான் ஆன்மீகம் பெரும்பான்மையோருக்குப் படுகிறது.

நம்முள் இருக்கும் இறைவனை உணர முயற்சித்தாலே மனம் தேவையற்ற உணர்வுகளால்( காம, க்ரோத,லோப, மோக) பொங்கி தனிமனிதனுக்குப் பொக்கிஷமான மன அமைதியைத் தரும்.

True Happiness of a person can be measured by the tranquility of the mind. நமது இந்து மத ஆன்மீக மந்திரங்கள், சுலோகங்கள், ஜபத்தில் தொடங்கி தியானப்பயிற்சிகள் தனி மனிதனுக்கு அவனது உடனடித் தேவையான மன அமைதியைத் தருகின்றன.

நல்ல முயற்சி. இன்றைய உலகில் அதிகம் விலைபோகாது என்றாலும் அவசியமானது.

தங்களது பல ஆன்மீக வலைப்பூக்கள்.. மெள்ளப் படிக்கிறேன்.

வாழ்த்துக்கள்.

July 15, 2006 3:15 AM
--

குமரன் (Kumaran) said...
தங்கள் அன்பான சொற்களுக்கு மிக்க நன்றி ஹரிஹரன்.

August 30, 2006 12:49 PM

Kavinaya said...

ஆன்மீகம் குறித்து நீங்கள் சொன்னது உண்மை. சின்ன வயதில் கொஞ்சம் அதிகமாய் இறைவனை நினைக்கும் சிலரை சிலர் கிண்டலடிப்பதையும் பார்த்திருக்கிறேன். அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தலின் அவசியத்தை புரிந்து கொள்ளுதற்கே அவன் அருள் வேண்டுமென்பதை மட்டும் நன்றாக புரிந்து கொண்டேன்.

குமரன் (Kumaran) said...

உண்மை அக்கா. பக்கத்திலேயே இருப்பவருக்கும் இது புரிவதில்லை. மற்றவர் போல் நீயுமிருந்தால் என்ன என்று சில நேரம் நொந்து கொள்ளும் போது ஆதரவாக சில நேரமும் அதிரடியாகச் சில நேரமும் இந்தக் கருத்தை மீண்டும் மீண்டும் சொல்லியிருக்கிறேன்.

kankaatchi.blogspot.com said...

கடவுள் என்ற வஸ்து கடத்திர்க்குள் (உடலிற்குள் ) இருக்கிறது
அதனால்தான் அதை அங்கே தேடவேண்டும் என்று சொன்னார்கள்
ஆனால் நாம் எல்லோரும் அதை கடத்திற்கு வெளியே உருவங்களிலும்
வடிவங்களிலும் தேடி கொண்டிருக்கிறோம்.
தேடிகொண்டிருக்கும்போதே நாம் இருக்கும் வடிவம் அழிந்துபோகிறது
அத்தோடு நாம் எதை எதை எல்லாம் கடவுள் என்று நம்பிநோமோ
அவைகளும் நம் பார்வையிலிருந்து மறைந்து போய் போய்விடுகின்றன.
ஏதோ கோடியில் ஒரு சிலர் அந்த உண்மையை தெரிந்துகொண்டு
மக்களுக்கு அதை மீண்டும் புரிய வைக்க முயற்சி செய்கிறார்கள்.
ஆனால் மனித குலம் அவர் சொல்லும் கருத்தை விட்டுவிட்டு
சொல்பவரையே கடவுளாக்கி அவருக்கு வழிபாடுகள் முதலியன
செய்து பழைய பாதையிலேயே போய்கொண்டிருக்கிறது.