Sunday, July 31, 2011

அச்யுதாஷ்டகம் - 5 & 6



அச்யுதாஷ்டகத்தின் ஐந்தாம் சுலோகம் இது.

ராக்ஷஸ க்ஷோபித: ஸீதயா சோபிதோ
தண்டகாரண்ய பூ புண்யதா காரண:
லக்ஷ்மணேனான்விதோ வானரைஸ்ஸேவிதோ
அகஸ்த்ய ஸம்பூஜீதோ ராகவ: பாது மாம்

ராக்ஷஸ க்ஷோபித:
- ராடசதர்களின் புகழை மங்கச் செய்தவன்!

ஸீதயா சோபிதோ - சீதைக்கு அணிகலன் போன்றவன்!

தண்டகாரண்ய பூ புண்யதா காரண: - தண்டகாரண்ய காட்டு நிலத்தைப் புனிதப்படுத்தியவன்!

லக்ஷ்மணேனான்விதோ - இலக்குவனனைப் பிரியாதவன்!

வானரைஸ்ஸேவிதோ - வானரங்களால் பணியப்படுபவன்!

அகஸ்த்ய ஸம்பூஜீதோ - அகத்தியரால் நன்கு பூசிக்கப்பட்டவன்!

ராகவ: - (அப்படிப்பட்ட) இரகு குலத்தில் பிறந்த இராகவன்

பாது மாம் - என்னைக் காக்கட்டும்!

இந்த சுலோகம் இராமனை மட்டுமே பாடுகிறது.

அடுத்த சுலோகம் கிருஷ்ணனை மட்டுமே பாடுகிறது.



தேநுகாரிஷ்டகானிஷ்ட க்ருத்த்வேஷிஹா
கேசிஹா கம்ஸஹ்ருத்வம்சிகாவாதக:
பூதனாகோபக: ஸுரஜாகேலனோ
பாலகோபாலக: பாது மாம் ஸர்வதா

தேநுக அரிஷ்ட கானிஷ்ட க்ருத் த்வேஷி ஹா - துவேஷம் கொண்டு வந்த தேனுகன், அரிஷ்டன் இருவரையும் கொன்றவன்!

கேசிஹா - கேசியைக் கொன்றவன்!

கம்ஸ ஹ்ருத் வம்சிகா வாதக: - கம்சனின் இதயத்திற்கு என்றும் துன்பத்தைக் கொடுத்தவன்!

பூதனாகோபக: - பூதனையைக் கோவித்துக் கொண்டவன்!

ஸுரஜாகேலனோ - குழலில் விளையாடுபவன்!

பாலகோபாலக: - (அப்படிப்பட்ட) பாலகோபாலன்

பாது மாம் ஸர்வதா - என்னை எப்போதும் காக்கட்டும்!

6 comments:

Radha said...

முதல் ஸ்லோகம் முதல் இது வரை படித்தாயிற்று. :-)

குமரன் (Kumaran) said...

நன்றி இராதா.

முதல் இடுகை முதல் இது வரை படிக்க வேண்டியது அடுத்த வீட்டுப்பாடம். :-)

குமரன் (Kumaran) said...

இராதா, இங்கே இருக்கும் பரமபதநாதன் படம் நினைவிருக்கிறதா?

Radha said...

//முதல் இடுகை முதல் இது வரை படிக்க வேண்டியது அடுத்த வீட்டுப்பாடம். :-)
//
:-)))

Radha said...

பரமபத நாதன் படம் அருமையாக உள்ளது. பல இடங்களில் பார்த்துள்ளேன்.
ஆனால் நீங்க என்ன கேட்கிறீர்கள் என்று புரியவில்லை.
இப்போது கைவசம் ஒரு அருமையான ராமர் படம் உள்ளது. :-)
கண்ணன் பாட்டில் இட எண்ணியிருக்கிறேன்.

குமரன் (Kumaran) said...

இந்தப் படத்தை நீங்கள் தான் எனக்கு மின்னஞ்சலில் அனுப்பினீர்கள் என்று நினைக்கிறேன். என் பிறந்தநாளுக்காக என்றும் நினைவு.