
அச்யுதாஷ்டகத்தின் மூன்றாம் சுலோகம் இது.
விஷ்ணவே ஜிஷ்ணவே சங்கினே சக்ரிணே
ருக்மிணிராகிணே ஜானகீஜானயே
வல்லவீவல்லபாயார்சிதாயாத்மனே
கம்ஸவித்வம்ஸினே வம்சினே தே நம :
விஷ்ணவே - எங்கும் நிறைந்தவனே!
ஜிஷ்ணவே - அனைத்தையும் அனைவரையும் வென்றவனே!
சங்கினே - சங்கை ஏந்தியவனே!
சக்ரிணே - சக்கரத்தை ஏந்தியவனே!
ருக்மிணி ராகிணே - ருக்மிணி மணாளனே!
ஜானகீ ஜானயே - சீதையின் மணாளனே!
வல்லவீ வல்லபா - கோபியர்களின் காதலனே!
யார்சிதா - அருச்சிக்கப்படுபவனே!
யாத்மனே - உயிர்களுக்கு உயிரானவனே!
கம்ஸ வித்வம்ஸினே - கம்சனை வதைத்தவனே!
வம்சினே - குழல் ஊதுபவனே!
தே - உனக்கு
நம: - என் வணக்கங்கள்!
அடுத்த சுலோகம்
க்ருஷ்ண கோவிந்த ஹே ராம நாராயண
ஸ்ரீபதே வாஸுதேவாஜித ஸ்ரீநிதே
அச்யுதாநந்த ஹே மாதவாதோக்ஷஜ
த்வாரகாநாயக த்ரௌபதீரக்ஷக
க்ருஷ்ண - கருப்பனே!
கோவிந்த - இடையனே! பசுக்களைக் காப்பவனே!
ஹே ராம - ஹே ராமா! கவர்பவனே!
நாராயண - அனைத்திலும் இருப்பவனே! அனைத்திற்கும் இருப்பிடமே!
ஸ்ரீபதே - திருமகள் மணாளனே!
வாஸுதேவ - எல்லோரிலும் வசிப்பவனே! வசுதேவ குமாரனே!
அஜித - வெல்லமுடியாதவனே!
ஸ்ரீநிதே - வைத்த மாநிதியே!
அச்யுத - நழுவாதவனே! நழுவவிடாதவனே!
அநந்த - எல்லையில்லாதவனே!
ஹே மாதவ - ஹே திருமாலே!
அதோக்ஷஜ - மறைப்பொருள் அறிவே!
த்வாரகாநாயக - துவாரகை நாதனே!
த்ரௌபதீரக்ஷக - துரௌபதியைக் காப்பவனே!
அடுத்த இரு சுலோகம் அடுத்த இடுகையில்.
4 comments:
ஆடி அமாவாசை யான இன்று தங்கள் தளத்திற்கு முதல் வருகை. விஷ்ணுவின் ஸ்லோகமும் அதன் அர்த்தங்களும் அருமை. தொடரட்டும் தங்கள் பணி.பத்மாசூரி.
வாங்க அம்மா. தொடர்ந்து படிக்கவும். எனது மற்ற பதிவுகளையும் படித்துப்பாருங்கள். என் ப்ரொபைலில் எனது மற்ற பதிவுகளில் பட்டியல் இருக்கிறது. நன்றி.
க்ருஷ்ண = ஆகர்ஷணம் செய்பவன். அழகு குணாதியங்களால் தன்னிடம் அனைவரையும் இழுத்துக் கொள்பவன் என்றும் கேள்விப்பட்டு இருக்கிறேன்.
க்ருஷ்ண - கருப்பனே
கருப்பு = கரும்பு
கரும்பு போல் இனிப்பவனே ! :-)))
ஆகர்ஷயதி இதி க்ருஷ்ண: என்று ஒரு விளக்கம் சொல்வார்கள். அச்யுதாஷ்டகத்தின் முதல் பாடலுக்குத் தந்த விளக்கத்தில் க்ருஷ்ண என்பதற்கு முதல் விளக்கமாக 'கவர்பவன்' என்று தான் தந்திருக்கிறேன் இராதா. ஆனால் பிடித்த விளக்கம் என்னவோ கருப்பன் என்ற பொருள் தான். :-)
Post a Comment