Monday, July 21, 2008

குருவின் திருப்பாதக் கமலங்களில்...


குரு சரணாம்புஜ நிர்பர பக்த:
சம்சாராத் அசிராத் பவ முக்த:
சேந்த்ரிய மானச நியமாத் ஏவம்
த்ரக்ஸ்யசி நிஜஹ்ருதயஸ்தம் தேவம்

குரு சரண அம்புஜ நிர்பர பக்த: - குருவின் திருப்பாதக் கமலங்களில் உன் பாரங்களையெல்லாம் முழுவதுமாக இட்டு பக்தியுடன் இருந்தால்

சம்சாராத் அசிராத் பவ முக்த: - பிறப்பு இறப்பு என்ற சம்சார சுழலிலிருந்து விரைவிலேயே விடுதலை பெறுவாய்.

ச இந்த்ரிய மானச நியமாத் ஏவம் - புலனகள், மனது இவற்றை தகுந்த வழியில் செலுத்துவதன் மூலம்

த்ரக்ஸ்யசி நிஜஹ்ருதயஸ்தம் தேவம் - இருதயத்தில் நிலைத்து நிற்கும் இறைவனை நேரடியாக தரிசிக்கலாம்.

கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.

3 comments:

குமரன் (Kumaran) said...

இதுவே பஜ கோவிந்தத்தின் கடைசி சுலோகம்.

இந்த இடுகை 'பஜ கோவிந்தம்' பதிவில் 23 ஜூலை 2006 அன்று இடப்பட்டது. அப்போது வந்த பின்னூட்டங்கள்:

7 comments:

ரங்கா - Ranga said...
குமரன்.

இந்தப் பாட்டில் குருவின் பெருமையையும், முக்தியையும் இணைத்திருக்கிறதே - ஏன் என்று விளக்க வேண்டும்.

ரங்கா.

August 01, 2006 5:17 PM
--

குமரன் (Kumaran) said...
ரங்கா அண்ணா. உங்களுக்குத் தெரியாததா? குருவின் பெருமையையும் அதற்கும் முக்திக்கும் உள்ள தொடர்பையும் எழுதப் புகுந்தால் மிக விரியுமே. ஆசார்யன் பெருமையை விளக்க முதலியாண்டான், கூரத்தாழ்வார் என்று பல எடுத்துக்காட்டுகள் உண்டே.

August 03, 2006 9:47 PM
--

ரங்கா - Ranga said...
குமரன்,

இங்கு 'குரு' என்று கோவிந்தனையே குறிப்பிடுகிறாரோ என்று தோன்றியதால் தங்களிடம் விளக்கம் பெறலாம் என்று எழுதினேன். :-)

ரங்கா.

August 06, 2006 2:16 PM
--

குமரன் (Kumaran) said...
இறைவனே குருவாக வருகிறார்; குரு இறைவடிவம் என்ற கருத்துகளை மற்ற இடங்களில் சொல்லியிருந்தாலும் இந்தப் பாடலில் குருவின் திருவடிப் பெருமையைத் தான் ஆதிசங்கரர் சொல்லியிருக்கிறார் என்று நினைக்கிறேன் ரங்கா அண்ணா.

August 06, 2006 8:44 PM
--

Kiran said...
I really liked ur post, thanks for sharing. Keep writing. I discovered a good site for bloggers check out this www.blogadda.com, you can submit your blog there, you can get more auidence.

October 27, 2007 7:21 AM
--

குமரன் (Kumaran) said...
நன்றி கிரண்.

October 28, 2007 9:56 AM

Kavinaya said...

குருவே இறையும், இறையே குருவும். நன்றாகச் சொன்னீர்கள், குமரா. நன்றி.

குமரன் (Kumaran) said...

ஆமாம் கவிநயா அக்கா. இந்த இடுகையில் இட்டிருக்கும் படமும் அதையே சொல்கிறது.