
சுகத: க்ரியதே ராமாபோக:
பஸ்சாதந்த சரீரே ரோக:
யத்யபி லோகே மரணம் சரணம்
ததபி ந முஞ்சதி பாபாசரணம்
சுகத: க்ரியதே ராமாபோக: - (ஒருவன்) மிக்க சுகத்துடன் (எந்தக் கவலையும் இன்றி இயன்றவரை) புலனின்பங்களில் ஆழ்ந்து போகிறான்.
பஸ்சாத் அந்த சரீரே ரோக: - பின்னர் இறுதிக் காலத்தில் அதனால் உடலில் நோய்களைப் பெறுகிறான்.
யத்யபி லோகே மரணம் சரணம் - இந்த உலகத்தில் எல்லோருக்கும் மரணம் மட்டுமே ஒரே கதி என்பதை அறிந்திருந்த போதும்
ததபி ந முஞ்சதி பாப ஆசரணம் - பாவ நடத்தையுடன் கூடிய வாழ்க்கையை யாரும் விடுவதில்லை.
கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.
10 comments:
இந்த இடுகை 'பஜகோவிந்தம்' பதிவில் 21 ஜூலை 2006 அன்று இடப்பட்டது. அப்போது வந்த பின்னூட்டங்கள்:
2 comments:
சிவமுருகன் said...
//(எந்தக் கவலையும் இன்றி இயன்றவரை) புலனின்பங்களில் ஆழ்ந்து போகிறான்.//
அதையே ஏற்றுகொள்ளும் மனிதன், இது தான் உலகம் என்ற தத்துவம் வேறு சொல்லிக்கொள்கிறான்.
//இந்த உலகத்தில் எல்லோருக்கும் மரணம் மட்டுமே ஒரே கதி என்பதை அறிந்திருந்த போதும்//
இதை தான் செத்த பிணத்தை பார்த்து சாகத பிணம் அழுகிறது என்று சொனரோ?
கோவிந்தா!
கோவிந்தா!
கோவிந்தா!
July 21, 2006 7:11 AM
--
குமரன் (Kumaran) said...
வந்துப் படித்துக் கோவிந்த நாமத்தைச் சொன்னதற்கு நன்றி சிவமுருகன்.
கோவிந்த நமமூஸ் குள்ளே பொள்ளோ....
கோவிந்த நாமமே இனிப்பானப் பழம்... என்று தான் நம் நாயகி சுவாமிகள் சொல்லியிருக்கிறாரே.
July 23, 2006 1:06 AM
படித்தாலும் அறிந்தாலும் உணர்ந்தாலும் புத்தியில் உறைக்காத பல விஷயங்களில் முதன்மையானது இதுதான். ஹரிதான் அருள வேண்டும். நன்றி குமரா.
அவன் அருளாலே அவன் தாள் வணங்குவோம் அக்கா.
//பாவ நடத்தையுடன் கூடிய வாழ்க்கையை யாரும் விடுவதில்லை.//
உடல் அசதி, மனச்சோர்வில் இருக்கும் போது, அதிலிருந்து விடுபட ஒரு 10 நிமிட தூக்கம் கிடைத்து அதன் மூலம் அமைதி, நிம்மதி கிடைக்குமா என்று மனது அதைத் தேடுகிறது, அதுவே நிறந்தர அமைதி தரும் மரணம் என்றால் ஏன் பலர் நடுங்குகிறார்கள் என்று இன்று கூட நினைத்துப் பார்த்தேன். புதிரான மனித வாழ்கை !
:)
படமும் படம் சொல்லும் பாடமும் நன்று. ஆண்(ஆன்மா) ஆணாக மட்டுமே பிறப்பான் என்பது போல் புரிதலையும் தறுகிறது. அது சரியா ?
10 நிமிட தூக்கத்தின் பின்னர் மீண்டும் எழுந்து நாம் நாமாக வாழலாம் என்ற நம்பிக்கை உறுதியாக இருப்பதாலும் அதனை நம்மால் நேரடியாகக் காண முடிவதாலும் தூக்கம் விரும்பத்தக்கதாக இருக்கிறது கோவி.கண்ணன். அதுவே நிரந்தர உறக்கத்தின் பின்னர் என்ன ஆகும் என்பது உறுதியாகத் தெரியவில்லை; சமய நம்பிக்கைகளும் மரபார்ந்த நம்பிக்கைகளும் மரணத்திற்குப் பின்னர் என்ன என்று சொன்னாலும் அதனை நேரடியாக அனுபவிக்க முடியவில்லை; அதனால் அது நடுங்கத் தக்கதாக இருக்கிறது - என்று எண்ணுகிறேன்.
கோவி.கண்ணன். இந்தப் பாடல் உங்களுக்கு ஆண் ஆணாக மட்டுமே பிறப்பான் என்ற புரிதலைத் தந்திருந்தால் அது என் மொழிபெயர்ப்பின் குறையே. இந்தப் பாடலில் பாலைக் குறிக்கும் சொல் எதுவுமே இல்லை. எப்பாலருக்கும் பொதுவான கருத்தே இருக்கிறது. மொழிபெயர்க்கும் போது பொது வழக்கத்தை ஒட்டி அன் விகுதியுடன் மொழிபெயர்த்துவிட்டேன். மன்னிக்கவும்.
அதே போல் தான் படமும் என்று நினைக்கிறேன். ஆணாகப் பிறந்த ஆன்மா மீண்டும் ஆணாகவே பிறக்கும் என்று இல்லை; செய்த வினைகளுக்கு ஏற்ப ஆண், பெண், உயர்திணை, அஃறிணை என்று எந்த உயிராகவும் பிறக்கலாம் - இதில் ஒவ்வொரு சமயத்திற்கும் ஒரு கருத்து உண்டு. சில சமயங்களில் உயிரில்லாததாகவும் ஒரு ஆன்மா ஆகலாம்; உயிரில்லாதது ஒரு உயிருள்ள பொருளாகவும் ஆகலாம். 'புல்லாகிப் பூண்டாகி' தொடரில் கல்லுக்கு உயிர் வருவது நினைவிருக்கும் என்று நினைக்கிறேன்.
//கோவி.கண்ணன். இந்தப் பாடல் உங்களுக்கு ஆண் ஆணாக மட்டுமே பிறப்பான் என்ற புரிதலைத் தந்திருந்தால் அது என் மொழிபெயர்ப்பின் குறையே.//
குமரன்,
அது உங்கள் விளக்கம் குறித்த புரிதல் அல்ல, படத்தில் ஆன்மா ஆண் உடலில் இருந்து ஆண் உடலுக்குள் போவதாக இருந்தது, அதைத்தான் குறிப்பிட்டேன்.
பின்னூட்டத்தின் முதல் பகுதியை எழுதிய பின்னர் அதனைக் கவனித்தேன் கோவி. கண்ணன். அதனால் தான் அந்தப் பொது புரிதலின் படியே படமும் வரையப்பட்டிருக்கிறது என்று நினைக்கிறேன் என்று சொன்னேன். :-)
Post a Comment