Saturday, July 19, 2008

மிக்கக் கவனத்துடன் செய்ய வேண்டிய செயல்கள்


ப்ராணாயாமம் ப்ரத்யாஹாரம்
நித்யாநித்ய விவேக விசாரம்
ஜாப்யாசமேத சமாதி விதானம்
குர்வவதானம் மஹதவதானம்

ப்ராணாயாமம் ப்ரத்யாஹாரம் - மூச்சின் இயக்கத்தைக் கட்டுப்படுத்துவது; புலன்களை அதன் வழியிலேயே செல்லாமல் தடுப்பது

நித்ய அநித்ய விவேக விசாரம் - நிலையானது எது, நிலையற்றது எது என்ற பகுத்தறிவினைப் பெறத் தனக்குள் தானே கேள்விகள் கேட்டுக் கொள்வது

ஜாப்யாசமேத சமாதி விதானம் - இறைவனின் திருநாமங்களின் ஜபத்துடன் கூடிய மனசமநிலையை (சமாதியை) அடைவது.

குரு அவதானம் மஹத் அவதானம் - மிக்கக் கவனத்துடன் செய்ய வேண்டிய செயல்கள் இவை.

கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.

5 comments:

குமரன் (Kumaran) said...

இந்த இடுகை 'பஜ கோவிந்தம்' பதிவில் 23 ஜுலை 2006 அன்று இடப்பட்டது. அப்போது வந்த பின்னூட்டங்கள்:

6 comments:

தி. ரா. ச.(T.R.C.) said...
யோகவின் மகிமையைப்பற்றி இதில் ஆதிசங்கரர் குறிப்பிட்டுள்ளார்.பிராணாயாமதித்தின் மகத்துவத்தைப் பற்றி.பகுத்தறிவைப்பற்றியும் பேசப்பட்டுள்ளது.இன்று பகுத்தறிவாளர்களும்,ஆன்மீகவாதிகளும் ஒத்துக்கொள்ளும் ஒரு விஷயம் இந்தப் பிராணாயாமமும் யோகவும்தான்.

July 24, 2006 11:07 PM
--

குமரன் (Kumaran) said...
ஆமாம் தி.ரா.ச. பிராணாயாமத்தையும் யோகாவையும் பகுத்தறிவாளர்களும் ஒத்துக் கொள்வதற்குக் காரணம் அவற்றின் அறிவியல் அடிப்படையை வெளிநாட்டார் ஆராய்ந்து அவற்றைப் பின்பற்றுவதால்.

July 25, 2006 6:32 AM
--

சிவமுருகன் said...
நல்ல கருத்துள்ள ஒரு படைப்பு.

ப்ராணாயமம் என்பது சன்மார்க்த்தில் ஒவ்வொரு மார்கத்திலும் சொல்லப்பட்டவை.

யோகம் மனிதன் கண்டெடுத்த, மனிதனுக்கு கிடைத்த யோகம்.

நல்ல கருத்துள்ள ஒரு படைப்பு. ப்ராணாயமம் என்பது சன்மார்க்த்தில் ஒவ்வொரு மார்கத்திலும் சொல்லப்பட்டவை. யோகம் மனிதன் கண்டெடுத்த, மனிதனுக்கு கிடைத்த யோகம்.

அதுவும் ஒரு நல்ல குருவிடமிருந்து பெற்றுவிட்டால் அதுவே எல்லாம் இன்பமாகும்.

August 03, 2006 10:43 PM
--

குமரன் (Kumaran) said...
உண்மை சிவமுருகன். நன்றி.

August 06, 2006 8:56 PM
--

SK said...
நாளின் முடிவில் அன்று நாம் செய்த அனைத்துச் செயல்களையும் கண்களை மூடிக்கொண்டு சில மணித்துளிகள் நினைத்து, என்னென்ன நல்லது செய்தோம், எத்தனை பேருடன் இதமாகம், கோபமாகப் பேசினோம், என்று சிந்தித்தால், மறுநாள் நன்கு விடியும்!

August 06, 2006 9:41 PM
--

குமரன் (Kumaran) said...
எஸ்.கே. நீங்கள் சொல்லும் முறையைப் பற்றிப் பல இடங்களில் படித்திருந்தாலும் எப்போதாவது ஒரு முறை தான் அதனைச் செய்வதற்கு வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. அந்த நேரங்களில் எல்லாம் இந்த முறையின் பயனை நன்கு உணர்ந்திருக்கிறேன்.

August 08, 2006 6:31 AM

Kavinaya said...

நினைவில் நிறுத்திக் கொண்டு தினமும் கவனத்துடன் செய்ய வேண்டிய செயல்கள். நன்றி குமரா!

தி. ரா. ச.(T.R.C.) said...

ப்ராணாயாமம் ப்ரத்யாஹாரம் - மூச்சின் இயக்கத்தைக் கட்டுப்படுத்துவது; புலன்களை அதன் வழியிலேயே செல்லாமல் தடுப்பது

மஹாபலசாலியான ஹனுமான் கடலைதாண்டுவதற்கு முன்பு வெளிக்காற்றை உள்ளே இழுத்து அடக்கிக்கொண்டு வான வீதியில் பாய்ந்தான் என்கிறார் வால்மீகி பிராணாயமத்தின் ஆற்றலால் ஹனுமான் 100 யோஜனை தூரத்தைத் தாண்டினன் என்பதே இங்கு நமக்கு செய்தி

குமரன் (Kumaran) said...

நன்றி கவிநயா அக்கா.

குமரன் (Kumaran) said...

நல்ல செய்தியைச் சொன்னீர்கள் திராச. நன்றிகள்.