Tuesday, April 1, 2008

ஸ்தோத்ரமாலா - முதல் வணக்கம்



பல நாட்களாக, மாதங்களாக, வருடங்களாக இருந்து வரும் ஆசை இது. வடமொழிப் பனுவல்களுக்காக ஒரு தனிப்பதிவு தொடங்கி இயன்ற போதெல்லாம் வடமொழிப் பனுவல்களுக்குப் பொருள் சொல்ல வேண்டும் என்று. ஆனைமுகனை வணங்கி இன்று தொடங்கிவிட்டேன். இனி அவன் செயல்.

மூஷிக வாகன மோதக ஹஸ்த
சாமர கர்ண விளம்பித சூத்ர
வாமன ரூப மஹேஸ்வர புத்ர
விக்ன விநாசக பாத நமஸ்தே


muushika vaakana mOthaka hastha
saamara karna vilambitha suuthra
vaamana ruupa mahEsvara puthra
vigna vinaasaka paatha namasthE


மூஷிக வாகன - மூஷிகம் என்றும் மூஞ்சுறு/எலியை ஊர்தியாகக் கொண்டவரும்

மோதக ஹஸ்த - கொழுக்கட்டையை திருக்கைகளில் ஏந்தியவரும்

சாமர கர்ண - விசிறி போன்ற திருக்காதுகளைக் கொண்டவரும்

விளம்பித சூத்ர - கயிற்றினை இடையைச் சுற்றி அணிந்தவரும்

வாமன ரூப - குறுகிய உருவை உடையவரும்

மஹேஸ்வர புத்ர - மஹேஸ்வரனாம் சிவபெருமானின் திருமகனும் ஆன

விக்ன விநாசக - தடைகளை நீக்கும் விநாயகரின்

பாத நமஸ்தே - திருப்பாதங்களை வணங்குகிறேன்.

***

மிக எளிமையான சுலோகம் இது. பலருக்கும் தெரிந்தது. இனிப் பொருளுடன் இந்த சுலோகத்தைச் சொல்லி வணங்கலாம்.

8 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) said...

வாழ்த்துக்கள் குமரன்!

குமரன் (Kumaran) said...

நன்றி இரவிசங்கர்.

வல்லிசிம்ஹன் said...

மிக நல்ல ஆரம்பம் குமரன்.
வாழ்த்துகள்.

குமரன் (Kumaran) said...

நன்றி வல்லியம்மா.

jeevagv said...

நல்லது குமரன், வாழ்த்துக்கள்.
ஆனைமுகன் அருகேயே துணை இருப்பான்.

மெளலி (மதுரையம்பதி) said...

வாழ்த்துக்கள்...

குமரன் (Kumaran) said...

வாழ்த்துகளுக்கு நன்றிகள் ஜீவா.

குமரன் (Kumaran) said...

வாழ்த்துகளுக்கு நன்றிகள் மௌலி.