Sunday, April 27, 2008

சித்தர்கள், தேவர்கள், அசுரர்கள் வணங்கும் பரம்பொருள் (லிங்காஷ்டகம் 3)


ஸர்வ ஸுகந்த ஸுலேபித லிங்கம்
புத்தி விவர்த்தன காரண லிங்கம்
சித்த சுராசுர வந்தித லிங்கம்
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்


ஸர்வ ஸுகந்த ஸுலேபித லிங்கம் - எல்லாவிதமான நறுமணப் பொருட்களாலும் அலங்கரிக்கப்பட்ட லிங்கம்

புத்தி விவர்த்தன காரண லிங்கம் - உண்மையறிவு அடையக் காரணமாக இருக்கும் லிங்கம்

சித்த சுராசுர வந்தித லிங்கம் - சித்தர்களாலும் தேவர்களாலும் அசுரர்களாலும் வணங்கப்படும் லிங்கம்

தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம் - அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை நான் வணங்குகிறேன்.

3 comments:

குமரன் (Kumaran) said...

இந்த இடுகை 'லிங்காஷ்டகம்' பதிவில் 15 அக்டோபர் 2006 அன்று இடப்பட்டது. அப்போது வந்த பின்னூட்டங்கள்:

6 comments:

ஜயராமன் said...
நன்றாக இருக்கிறது.

வழங்கியதுக்கு நன்றி.

மேலும், விவரித்து எழுதுங்களேன்.

நன்றி

9:26 AM, October 15, 2006
--

குமரன் (Kumaran) said...
நன்றி ஜயராமன். முடிந்த வரை விவரித்து எழுதுகிறேன்.

11:33 PM, October 15, 2006
--

kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//சித்த சுர அசுர வந்தித லிங்கம்//

சித்தர் வணங்கும் லிங்கம் = ஆத்ம லிங்கம்
சுரர்(தேவர்)வணங்கும் லிங்கம் = சிவ லிங்கம்
அசுரர் வணங்கும் லிங்கம் = க்ஷணிக லிங்கம்

என்று சொல்லக் கேள்வி, குமரன்!

இந்தப் பதிவைப் படிக்கும் போது,
"சத்தத்தின் உள்ளே சதாசிவம் வைத்து
சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் வைத்து"
என்று ஒளவையார் (அவ்வையார் என்று இப்போதெல்லாம் எழுதக் கை வருவதில்லை, குமரன் :-)))
விநாயகர் அகவலில் பாடியது தான் நினைவுக்கு வருகிறது!

3:07 PM, October 16, 2006
--

சிவமுருகன் said...
அண்ணா,
//எல்லாவிதமான நறுமணப் பொருட்களாலும் அலங்கரிக்கப்பட்ட லிங்கம்//

எப்படி அபிஷேகம் ஈசனுக்குரியதோ அதே போல், அலங்காரம் என்பது பெருமாளுக்குரியது. ஆனால், இங்கே அலங்கரிக்கப்பட்ட லிங்கம் என்பது கடவுளரின் ஒற்றுமை காட்டப்படுகிறதோ? என்ற கேள்வி எழுகிறது.

9:12 AM, October 17, 2006
--

குமரன் (Kumaran) said...
இரவிசங்கர். நானும் நீங்கள் சொன்ன லிங்கங்களைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறேன். சித்தர்கள் தமக்குள்ளேயே சிவனைக் காண்பதால் அவர்கள் வணங்குவது ஆத்மலிங்கமாகவும் ஆத்மாராமனாகவும் இருக்கிறது. தேவர்கள் வணங்குவது சிவலிங்கம். அசுரர்கள் வந்திப்பது க்ஷணிக லிங்கம் - விநாடி நேரமே அவர்களால் இறைவனை வணங்க முடிகிறது; அந்த வினாடி முடிந்தவுடன் அசுர குணம் மீண்டும் தலைதூக்கிவிடுகிறது. நான் சித்தனும் இல்லை; சுரனும் இல்லை; அப்படியென்றால் அசுரனா?

சத்தத்தின் உள்ளே சதாசிவம் வைத்து
சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் வைத்து
என்பவைக்கு ஞானவெட்டியான் ஐயாவைக் கேட்டால் விளக்கமான விளக்கம் கிடைக்கும் என்றெண்ணுகிறேன்.

11:37 AM, October 20, 2006
--

குமரன் (Kumaran) said...
சிவமுருகன். உண்மையில் இந்த வரியை அப்படியே மொழிபெயர்த்தால் 'எல்லாவித நறுமணங்களால் மணக்கின்ற லிங்கம்' என்றே பொருள் வரும். அது அபிஷேகத்தில் பயன்படுத்திய நறுமண நீரால் வரலாம்; இல்லை அலங்காரத்தால் வரலாம்.

11:39 AM, October 20, 2006

கிருத்திகா ஸ்ரீதர் said...

இறைவன் யாவர்க்கும் பொது என்ற தத்துவத்தை உணர்த்துவது போல் உள்ளது இந்த ஸ்லோகம்... நன்றி...

குமரன் (Kumaran) said...

ஆமாம் கிருத்திகா. நன்றிகள்.