Saturday, April 19, 2008

ராவண தர்ப விநாசன லிங்கம் (லிங்காஷ்டகம் 2)



தேவ ரிஷி ப்ரவரார்சித லிங்கம்
காம தஹன கருணாகர லிங்கம்
ராவண தர்ப வினாஷன லிங்கம்
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்

தேவ ரிஷி ப்ரவரார்சித லிங்கம் - தேவர்களிலும் ரிஷிகளிலும் சிறந்தவர்களாக இருப்பவர்களால் அர்ச்சிக்கப்பட்ட லிங்கம்

காம தஹன கருணாகர லிங்கம் - மறைந்திருந்து மலர்க்கணைகளை விட்ட காமனை எரித்து பின்னர் அவனை மீண்டும் உயிர்ப்பித்த கருணையுடன் கூடிய லிங்கம்

ராவண தர்ப வினாஷன லிங்கம் - இராவணனின் கர்வத்தை கால் கட்டை விரலால் நசுக்கி அழித்த லிங்கம்

தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம் - அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை நான் வணங்குகிறேன்

இந்தப் பகுதி வரை 8 அக்டோபர் 2006 அன்று லிங்காஷ்டகம் பதிவில் இடப்பட்டது. மேல் விளக்கங்களாக கீழே உள்ள பகுதி இன்று எழுதப்பட்டது.

***

ப்ரவர என்றால் மூத்தவர், முதன்மையானவர், தலைவர், சிறந்தவர் என்று ஒருவரைக் குறிக்கும் பல பொருளும் சில இடங்களில் பரம்பரை என்ற பொருளும் இருக்கின்றன. இங்கே இந்த பொருட்களில் (அர்த்தங்களில்) எதனை எடுத்துக் கொண்டாலும் பொருத்தமே. தேவர்களிலும் ரிஷிகளிலும் முதன்மையானவர்கள், மூத்தவர்கள், தலைவர்கள், சிறந்தவர்களால் வணங்கப்படும், தொழப்படும், அருச்சிக்கப்படும் லிங்கம் என்று சொன்னாலும் சரியே. தேவர்கள், ரிஷிகள் பரம்பரையினரால் அருச்சிக்கப்படும் லிங்கம் என்று சொன்னாலும் சரியே.

3 comments:

குமரன் (Kumaran) said...

இந்த இடுகையின் முதல் பகுதி 8 அக்டோபர் 2006 அன்று 'லிங்காஷ்டகம்' பதிவில் இடப்பட்டது. அப்போது வந்த பின்னூட்டங்கள்:

7 comments:

சிவமுருகன் said...
அண்ணா விளக்கம் அருமை,

//காம தஹன கருணாகர லிங்கம்

மறைந்திருந்து மலர்க்கணைகளை விட்ட காமனை எரித்து பின்னர் அவனை மீண்டும் உயிர்ப்பித்த கருணையுடன் கூடிய லிங்கம்//

மறைந்திருந்து மலர்க்கணைகளை விட்ட காமனை எரித்து, காமத்தை வதைத்து உலகை பேரின்பத்தில் விட்ட கருணை வடிவானவனே என்பது போல் தான் உள்ளதே, தவிர அவனை உயிர்ப்பித்தற்க்கு அல்ல. அவனை ப்ரத்யும்னனாக உயிர்பித்தது கண்ணன், முக்கண்ணன் அல்ல.

//ராவண தர்ப வினாஷன லிங்கம் - இராவணனின் கர்வத்தை கால் கட்டை விரலால் நசுக்கி அழித்த லிங்கம்//

இராவணனனின் கர்வத்தை (மமதையை) அழித்து - அருமையான விளக்கம்.

7:38 AM, October 10, 2006
--

சந்தோஷ் aka Santhosh said...
குமரன்,
விளக்கங்கள் சூப்பர். அப்படியே சிவனைப்பற்றிய சின்ன சின்ன தகவல்களை சொன்னால் நன்றாக இருக்கும்.

7:48 AM, October 10, 2006
--

rnateshan. said...
malar silampadi vaazththi vanangkuvoom.
vaazththukkal kumaran.

10:55 AM, October 10, 2006
--

குமரன் (Kumaran) said...
நன்றி சிவமுருகன். மீண்டும் இங்கே இரு வேறு விதயங்களைக் கலந்துவிட்டீர்கள் என்று நினைக்கிறேன்.

குமார சம்பவம், திருவிளையாடல் புராணம், கந்த புராணம் போன்ற நூற்களில் உள்ள படி காம தகனம் நடந்த பின்னர் இரதிதேவியின் வேண்டுகோளுக்கிணங்க சிவபெருமான் மன்மதனை உயிர்ப்பிக்கிறார். ஆனால் ஒரே ஒரு நிபந்தனை. அவன் இனிமேல் இரதி தேவியின் கண்களுக்கு மட்டுமே தென்படுவான். மற்றவர் கண்களுக்குத் தென்பட மாட்டான். அதனால் தான் அவனுக்கு 'அனங்கன் - உருவமில்லாதவன்' என்ற பெயர் வருகிறது.

பெருமாளை காமன் தாதை - காமனின் தந்தை என்று ஆண்டாளும் ஆழ்வார்களும் பாடியிருக்கிறார்கள். அதைக் கொண்டு காமனை விஷ்ணுவின் மகன் என்று சொல்வதுண்டு.

கிருஷ்ணாவதாரத்தில் கண்ணனின் மகன் பெயர் அநிருத்தன். அவன் மகன் பெயர் ப்ரத்யும்னன். வாணாசுரனின் மகள் ப்ரத்யும்னனைக் காதலித்து அவனைக் கடத்திக் கொண்டு போய்விடுகிறாள். வாணாசுரனின் அரண்மனையில் யாருக்கும் தெரியாமல் அவனை மறைத்துவைத்து அவனை மணந்து கொண்டு வாழ்கிறாள். வாணாசுரனுக்குத் தெரிந்த போது ப்ரத்யும்னனைச் சிறை வைத்துவிடுகிறான். அதே நேரத்தில் ப்ரத்யும்னன் வாணாசுரனின் சிறையிலிருக்கிறான் என்ற செய்தி அறிந்து கண்ணன் வந்து வாணாசுரனின் ஆயிரம் கரங்களையும் வெட்டி எறிந்து அவனைக் கொன்று ப்ரத்யும்னனையும் அவன் மனைவி உஷாவையும் மீட்டுக் கொண்டு போகிறான். இது பாகவதத்தில் வரும் கதை. நீங்கள் இந்தக் கதையையும் காமதகனக் கதையையும் சேர்த்துவிட்டீர்கள் என்று எண்ணுகிறேன். நீங்கள் கேள்விபட்டது வேறு என்றால் அதனைச் சொல்லுங்கள்.

6:30 AM, October 14, 2006
--

குமரன் (Kumaran) said...
நன்றி சந்தோஷ். முடிந்த வரை சொல்கிறேன்.

நன்றி நடேசன் ஐயா.

6:31 AM, October 14, 2006
--

G.Ragavan said...
குமரன், இந்தப் பாடலைப் படிக்கையில் காம தஹன கருணாகர லிங்கத்திற்குப் புது விளக்கம் தோன்றியது. லிங்கத்திற்கு நீங்கள் கொடுத்த பொருளைக் கொண்டு.

லிங்கம் என்றால் குறி(யீடு). நான் குறி என்றே கருதுகிறேன். சிவன் முழுமையான ஆண். சக்தி முழுமையான பெண். இவர்கள்தான் உலகத் தோற்றம்.

ஆக லிங்கம் என்ற சொல் குறியைக் குறிக்கிறது என்றே கருத முடிகிறது. ஆண்பெண் குறிகளை அயில்வேல் காக்கவென்று தேவராய சுவாமிகள் எழுதியிருக்கிறாரே.

காமம் தத்திக் கரைபுரண்டு அறிவையும் எத்தித் தள்ளி மூண்டு வருமையில் அதனைத் தணிப்பது குறிகள்தானே. அப்படி கரைபுரண்டு வரும் காமவெள்ளத்தைத் தகித்து கருணை செய்த குறியைப் போற்றுவதாக ஏன் கொள்ளக் கூடாது?

1:05 PM, October 14, 2006
--

குமரன் (Kumaran) said...
லிங்கம் என்றால் குறி என்ற சரியான பொருள் கொண்டு பார்த்தால் நீங்கள் சொன்ன பொருளை நன்றாகக் கொள்ளலாம் இராகவன். காமேஷ்வரன் தானே ஈஸ்வரன்.

11:32 PM, October 15, 2006

கிருத்திகா ஸ்ரீதர் said...

நன்றி குமரன்.. தங்கள் விளக்கங்கள் புது புது கதவுகளை திறந்து விடுகிறது. "காம தகனம்- மன்மத தகனம்" என்பதே ஆன்மத்தேடலில் மட்டுமல்லத இல்லறவாழ்க்கைக்கு கூட வழிகாட்டும் ஒரு மிகப் பெரிய குறியீடு அல்லவா.. யோசிக்க யோசிக்க நீண்ட பாதையில் தான் எத்தனை மைல்கல்...நன்றி மீண்டும்

குமரன் (Kumaran) said...

உண்மை தான் கிருத்திகா. எந்தப் புராணக் கதையிலும் கவிதைகளிலும் பல வித படிமங்கள் இருப்பதாகத் தான் சொல்கிறார்கள். ஒவ்வொன்றாக எடுத்துக் கொண்டு சிந்தித்துக் கொண்டே செல்லலாம். கீதை, திருக்குறள் போன்ற சில நூற்களுக்குத் தான் அப்படிப்பட்ட சிந்தனைகள் வெளியிடப்பட்டிருக்கின்றன - அதனால் தான் இத்தனை விளக்கவுரைகள் அவற்றிற்கு.