Friday, April 18, 2008

மரண வாயிலில் இலக்கணம் உதவுமா? (பஜகோவிந்தம் 1)


பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம்
கோவிந்தம் பஜ மூடமதே
ஸம்ப்ராப்தே ஸந்நிஹிதே காலே
நஹி நஹி ரக்ஷதி டுக்ருங்கரணே

பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம் கோவிந்தம் பஜ மூடமதே - ஏ மூட மனமே! கோவிந்தனை வணங்குவாய். கோவிந்தனை வணங்குவாய். கோவிந்தனை வணங்குவாய்.

ஸம்ப்ராப்தே ஸந்நிஹிதே காலே - நாம் போகும் காலம் வரும் போது

நஹி நஹி ரக்ஷதி டுக்ருங்கரணே - நாம் படித்த எந்த கல்வியும் உடன் வராது. வீணாக பொய்க்கல்விகளில் நேரத்தை வீணாக்காதே.

நீ கோவிந்தனை வணங்குவாய். கோவிந்தனை வணங்குவாய். கோவிந்தனை வணங்குவாய்.

***

18 ஏப்ரல் 2008 அன்று சேர்க்கப்பட்டது:

வயதில் மிகவும் மூத்த ஒரு முதியவர் 'டுக்ருங்கரணே' என்ற இலக்கணப்பாடத்தை மனப்பாடம் செய்து கொண்டிருந்ததை ஆதிசங்கரர் கண்டார். அதனைக் கண்ட போது 'மரண வாயிலில் இருக்கும் இவருக்கு இந்த இலக்கணப் பாடமா வந்து உதவப் போகிறது?' என்ற எண்ணம் தோன்றி ஆதிசங்கரர் இந்த 'பஜகோவிந்தம்' பனுவலைப் பாடினார் என்பது வரலாற்றுத் தொன்மம்.

1 comment:

குமரன் (Kumaran) said...

இந்த இடுகை 16 அக்டோபர் 2005 அன்று 'பஜகோவிந்தம்' பதிவில் இடப்பட்டது. அப்போது வந்த பின்னூட்டங்கள்:

Anonymous said...
Adhi Sankara saw an old man repeatedly speaking about Sanskrit grammar.
He sung this song after that trying to impress on him that sanskrit grammar will not give moksha.Only God can give moksham.

October 19, 2005 11:03 AM
--

மதுமிதா said...
குமரன்

'டுக்ருஞ்கரணே'

மனப்பாடம் செய்கிறோம் அல்லவா
வாய்ப்பாட்டை
ஓரஞ்ச அஞ்சு
ஈரஞ்சா பத்து,


தமிழில்
நேர் நேர் தேமா
நிரை நேர் புளிமா
என்று நாம் மனப்பாடம் செய்கிறோம் அல்லவா
அதைப்போல்

சமஸ்கிருதத்தில்
ஒரு இலக்கணம்

டுக்ருஞ்
டுக்ருஞ்,டுக்ருஞ் என்று மனனம் செய்தால்.
(விபக்தி படிக்கையில்
ராம:,ராமௌ,ராமா: என்று மனனம் செய்வோம் அல்லவா)


அந்திமகாலம் நெருங்குகையில்
டுக்ருஞ்காக்காது நம்மை.

கோவிந்தா கோவிந்தா என்று
பஜனை செய்வாய் மூட மனமே!

January 12, 2006 1:44 PM
--

மதுமிதா said...
குமரன்

உங்கள் ஐடி-யை இடுங்கள் என் பதிவில்.நான் மடலிடுகிறேன்

January 12, 2006 1:45 PM