Thursday, April 17, 2008

லிங்காஷ்டகம் - 1


ப்ரஹ்ம முராரி ஸுரார்சித லிங்கம்
நிர்மல பாஸித ஸோபித லிங்கம்
ஜன்மஜ துக்க வினாசக லிங்கம்
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்

ப்ரஹ்ம முராரி ஸுரார்சித லிங்கம் - நான்முகப் பிரம்மனாலும் முரனை அழித்த முராரியாம் விஷ்ணுவாலும் எல்லாத் தேவர்களாலும் அர்ச்சிக்கப் பட்ட லிங்கம்

நிர்மல பாஸித ஸோபித லிங்கம் - குற்றமற்ற மிகுந்த ஒளியுடன் ஜொலிக்கும் லிங்கம்

ஜன்மஜ துக்க வினாசக லிங்கம் - பிறப்பு இறப்பினால் ஏற்படும் துன்பங்களை நீக்கும் லிங்கம்

தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம் - அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை அடியேன் வணங்குகிறேன்.

***

லிங்கம் என்ற வடமொழிச் சொல்லுக்கு அடையாளம் என்று பொருள். சிவலிங்கம் என்றால் சிவனைக் குறிக்கும் ஒரு அடையாளம் என்று பொருள். ஆனால் பழம் என்றாலே வாழைப்பழம், பூ என்றாலே தாமரைப்பூ, ஸஹஸ்ரநாமம் என்றாலே விஷ்ணு ஸஹஸ்ரநாமம், தமிழ்கடவுள் என்றால் முருகப்பெருமான் என்று ஆனது போல் லிங்கம் என்றாலே அது சிவலிங்கம் என்றே பொருள் என்று ஆகிவிட்டது. அதனால் இந்தப் பாடல் முழுவதும் சிவலிங்கம் என்ற பொருளில் லிங்கம் என்ற சொல்லே பயன்படுத்தப் பட்டுள்ளது.

5 comments:

குமரன் (Kumaran) said...

இந்த இடுகை 'லிங்காஷ்டகம்' பதிவில் 08 அக்டோபர் 2006 அன்று இடப்பட்டது. அப்போது வந்த பின்னூட்டங்கள்:

10 comments:

சிவமுருகன் said...
ஹர ஹர சங்கரா.
ஜெய ஜெய சங்கர.

லிங்கம் என்பது விஞ்ஞான ரீதியாக அணுவின் அடையாளம். அதுவே சாபத்தால் ஈசனின் உருவமாக சின்னமாக ஆனது.

//பூ என்றாலே தாமரைப்பூ//
அட பூ என்றாலே தாமரைப்பூவா எனக்கு தெரியாதே. நமது தேசிய பூ மட்டும் தான் தெரியும்.

அதோட அருவி என்றாலே குற்றாலம் என்றும் சேர்த்துக்கொள்ளுங்கள்.

சிவமுருகன்.

7:12 AM, October 10, 2006
--

G.Ragavan said...
// தமிழ்கடவுள் என்றால் முருகப்பெருமான் என்று ஆனது போல் லிங்கம் என்றாலே அது சிவலிங்கம் என்றே பொருள் என்று ஆகிவிட்டது. //

:-) தமிழ்க் கடவுள் என்றால் முருகந்தான். ஆகவில்லை. லிங்கம் என்றாலும் சிவலிங்கம்தான். ஏனென்றால் சிவனுக்கு மட்டுந்தான் இந்த அடையாளம் உண்டு. அதனால்தான் தமிழில் ஆவுடையார் என்கிறார்கள். லிங்கம் என்பது பிற்பாடு வழக்கில் வந்தது என்று நினைக்கிறேன். குறிப்பாக சைவ மறுமலர்ச்சி காலத்தில். தொடரட்டும் இந்தப் பணி.

11:14 AM, October 10, 2006
--

enRenRum-anbudan.BALA said...
இப்பாடலை SPB குரலில் கேட்டுக் கொண்டே இருக்கலாம், குமரன் !!!

1:07 PM, October 11, 2006
--

குமரன் (Kumaran) said...
//லிங்கம் என்பது விஞ்ஞான ரீதியாக அணுவின் அடையாளம். அதுவே சாபத்தால் ஈசனின் உருவமாக சின்னமாக ஆனது.//

புதுமையான விளக்கம் சிவமுருகன். இன்னும் விளக்கமாகச் சொல்லுங்கள்.

அணுவின் அடையாளம் என்பதைக் கொஞ்சம் புரிந்து கொள்ள முடிகிறது. சாபத்தால் ஈசன் உருவமானது என்பது திருமலைத்தலபுராணத்தில் வருமே அதனைச் சொல்கிறீர்களா?

அருவி என்றால் குற்றாலம் என்பதனைக் கட்டாயம் சேர்த்துக் கொள்ளலாம். :-)

6:12 AM, October 14, 2006
--

குமரன் (Kumaran) said...
இராகவன். சரியா வந்து மாட்டுறீங்க. :-)

முதலில் இந்தப் பதிவை எழுதிப் பதித்த போது 'தமிழ்க்கடவுள் என்றால் முருகப்பெருமான்' என்ற சொற்றொடர் எழுதவில்லை. பின்னர் படித்த போது உங்கள் நினைவு வந்தது. உங்களை வம்புக்கிழுக்க அதனைச் சேர்த்துக் கொண்டேன். நீங்களும் அதனைப் பிடித்துக் கொண்டீர்கள். :-)

ஏற்கனவே நாம் இந்த தலைப்பில் பேசியிருக்கிறோம். அப்போது தமிழ்க்கடவுள் என்று மாயவனையும் சொல்லலாம் என்பதற்கு நிறைய ஆதாரங்கள் நான் கொடுத்தேன். ஆனால் வழக்கில் தமிழ்க்கடவுள் என்றால் முருகப்பெருமானையே குறிப்பிடுவதால் நான் சொன்னது சரி தான். தமிழ்க்கடவுள் என்றால் முருகனையும் குறிக்கலாம்; மற்றவரையும் குறிக்கலாம். ஆனால் முருகப்பெருமான் மட்டுமே என்று இப்போது 'ஆகிவிட்டது'. மீண்டும் இந்த விவாதத்தை நாம் செய்யலாம் என்று நீங்கள் விரும்பினால் நான் செய்ய ஆயத்தமாக இருக்கிறேன். :-)

லிங்கம் என்பது வடமொழிச் சொல். வடமொழியில் அதற்கு அடையாளம் என்று தான் பொருள். ஆண் பாலைக் குறிக்க பும்ஸ லிங்கம் என்றும், பெண் பாலைக் குறிக்க ஸ்தீரி லிங்கம் என்றும் இரண்டுமில்லாததைக் குறிக்க நபும்ஸ லிங்கம் என்றும் வேதங்களிலிருந்து பல வடமொழி நூற்களில் பயின்று வருகிறது. ஆனால் சிவனின் அடையாளமான சிவலிங்கம் வழிபடப்படுவதால் லிங்கம் என்பது குறி என்ற பரவிய பொருளிலிருந்து விலகி சிவலிங்கத்தைக் குறிக்கும் சொல் ஆகியது என்பதைத் தான் சொன்னேன். மேலும் எடுத்துக்காட்டுகள் வேண்டுமென்றால் எடுத்துத் தருகிறேன்.

தமிழில் ஆவுடையார் என்றே குறிக்கப்பட்டு பிற்காலத்தில் லிங்கம் எனக் குறிக்கப் பட்டிருக்கலாம். ஆனால் அந்த ஒரு காரணம் பற்றியே லிங்கம் என்பது சிவலிங்கம் மட்டுமே என்பது பொருந்தாது. வடமொழி அறியாததால் வந்த முடிவு இது.

6:21 AM, October 14, 2006
--

குமரன் (Kumaran) said...
உண்மை தான் பாலா சீனியர். எஸ்.பி.பி. பாடி பல முறை இந்தப் பாடலைக் கேட்டிருக்கிறேன். கடைசிப் பதிவில் அந்தப் பாடலில் சுட்டியைத் தருவதாக எண்ணம்.

6:22 AM, October 14, 2006
--

G.Ragavan said...
// குமரன் (Kumaran) said...
இராகவன். சரியா வந்து மாட்டுறீங்க. :-)

முதலில் இந்தப் பதிவை எழுதிப் பதித்த போது 'தமிழ்க்கடவுள் என்றால் முருகப்பெருமான்' என்ற சொற்றொடர் எழுதவில்லை. பின்னர் படித்த போது உங்கள் நினைவு வந்தது. உங்களை வம்புக்கிழுக்க அதனைச் சேர்த்துக் கொண்டேன். நீங்களும் அதனைப் பிடித்துக் கொண்டீர்கள். :-)

ஏற்கனவே நாம் இந்த தலைப்பில் பேசியிருக்கிறோம். அப்போது தமிழ்க்கடவுள் என்று மாயவனையும் சொல்லலாம் என்பதற்கு நிறைய ஆதாரங்கள் நான் கொடுத்தேன். ஆனால் வழக்கில் தமிழ்க்கடவுள் என்றால் முருகப்பெருமானையே குறிப்பிடுவதால் நான் சொன்னது சரி தான். தமிழ்க்கடவுள் என்றால் முருகனையும் குறிக்கலாம்; மற்றவரையும் குறிக்கலாம். ஆனால் முருகப்பெருமான் மட்டுமே என்று இப்போது 'ஆகிவிட்டது'. மீண்டும் இந்த விவாதத்தை நாம் செய்யலாம் என்று நீங்கள் விரும்பினால் நான் செய்ய ஆயத்தமாக இருக்கிறேன். :-) //

ஹா ஹா ஹா குமரன்...நீங்கள் என்னை நினைத்திருப்பீர்கள் என்று நினைத்தேன். அது அப்படியே போலும்.

வாதம் செய்யப் போயும் போயும் என்னையா அழைக்கிறீர்கள். நல்ல ஆளைப் பிடித்தீர்கள். எதிராளியின் சொல்லை வைத்தே சொன்னவரின் பல்லை உடைப்பதற்குப் பலர் இருக்கிறார்கள். அவர்களிடம் போனால் உங்கள் சொல்லும் பல்லும் எவ்வளவு கொள்ளும் என்று தெரிந்திடும். :-) என்னை விடுங்கள். நானுண்டு. என்னப்பன் கந்தப்பன் உண்டு.

12:58 PM, October 14, 2006
--

குமரன் (Kumaran) said...
சொல்லின் செல்வரே. சொல்லும் பல்லும் எவ்வளவு கொள்ளும் என்பது ஏற்கனவே தெரிந்து தானே உங்களை இழுக்கிறேன் வம்புக்கு. சொல்லை வைத்தே பல்லை உடைப்பவர்களிடம் துஷ்டரைக் கண்டால் தூர விலகு என்று ஓடி வந்துவிடுகிறேனே. :-)

11:31 PM, October 15, 2006
--

சந்தோஷ் aka Santhosh said...
குமரன்,
//கடைசிப் பதிவில் அந்தப் பாடலில் சுட்டியைத் தருவதாக எண்ணம்//

சுட்டியை இப்பொழுதே குடுத்தால் நன்றாக இருக்கும் :))..அந்த சுட்டி ஒலிவிடிவில் இருக்கிறதா?

4:08 PM, October 29, 2006
--

குமரன் (Kumaran) said...
சந்தோஷ். கடைசிப் பதிவில் சுட்டி கொடுத்திருக்கிறேன். அங்கே பாருங்கள்.

2:35 PM, October 30, 2006

கிருத்திகா ஸ்ரீதர் said...

படமும் பதத்திற்கான விளக்கமும் அருமை. ஒரு சிறிய விஷயத்தையும் பகிர்ந்து கொள்ள ஆவல். லிங்கம் என்பது வெறும் அடையாளம் மட்டுமல்ல என்பது என் எண்ணம் மிகக்குறிப்பாக "அடையாளமற்றதை குறிக்கும் அடையாளம்" என்பதே சரியானதாக இருக்கும் என்று தோன்றுகிறது. மேலும் ஆவுடை என்பது உமையோடு கூடிய சிவனார் என்றும் லிங்கம் என்பது பெண்தன்மையற்ற ஆணுரு அதாவது தனித்த சிவனார் வடிவம் என்றும் எங்கள் பக்கத்தில் ஒரு வழக்குண்டு.

குமரன் (Kumaran) said...

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி கிருத்திகா.

வடமொழியில் இந்த 'லிங்கம்' என்ற சொல்லுக்கு என்ன பொருள் என்று பார்த்தால் அது 'அடையாளம்' என்ற பொருளைத் தருகிறது. மற்றபடி சிவலிங்கத்திற்கு நீங்கள் சொல்லும் விளக்கம் பொருந்தும். அடையாளமில்லாததற்கு அடையாளம் என்பதும், உருவும் அருவுமானதொரு அடையாளம் என்பதும், சிவலிங்கத்தின் அடிப்பகுதியான ஆவுடை அம்மையைக் குறிப்பது என்பதும் மேற்பகுதியான லிங்கம் அப்பனைக் குறிப்பது என்பதும் சரியே.

Elakian, Rathangan said...

தம் அன்றாட அவசர வேலக்கிடையே அலைகடல் போல் அலையும் நம் மனது அமைதியடைய, மகிழ்ச்சியுடன் இருக்க தினமும் கேளூங்கள் பாலு அவர்களின் தேனினும் இனிமையான குரலில் லிங்காஷ்டகம்.

ஓம் நமச்சிவாயா

ப்ரம்ம முராரியர் போற்றிடும் லிங்கம்
சிறிதும் கலங்கம் இல்லா சிவ லிங்கம்
பிறவியின் துயரை போக்கிடும் லிங்கம்
நாளும் வணங்கும் சதாசிவ லிங்கம்

தேவரும் முனிவரும் போற்றிடும் லிங்கம்
காமனை எரித்த கருனா லிங்கம்
ராவண உள்ளம் விலங்கிடும் லிங்கம்
நாளும் வணங்கும் சதாசிவ லிங்கம்

வாசம் அனைத்தையும் பூசிய லிங்கம்
வளர் அறிவாகிய காரண லிங்கம்
சித்த சுராசுரர் போற்றிடும் லிங்கம்
நாளும் வணங்கும் சதாசிவ லிங்கம்

பொன்மணி சூடி சுடர்ந்திடும் லிங்கம்
தன்னிலை நாகம் அணிந்திடும் லிங்கம்
தக்ஷனின் யாகம் வீழ்த்திய லிங்கம்
நாளும் வணங்கும் சதாசிவ லிங்கம்

குங்குமம் சந்தனம் பூசிய லிங்கம்
பங்கஜ மாலையை சூடிய லிங்கம்
முந்திய வினைகளை போற்றிடும் லிங்கம்
நாளும் வணங்கும் சதாசிவ லிங்கம்

தேவர் கனங்களின் அர்ச்சன லிங்கம்
தேடிடும் பக்தியின் ஊறிடும் லிங்கம்
சூரியன் கோடி சுடர்ந்விடும் லிங்கம்
நாளும் வணங்கும் சதாசிவ லிங்கம்

எட்டு தளத்தினில் எழுந்திடும் லிங்கம்
எல்லாம் ஆகிய காரண லிங்கம்
எட்டு தரித்திர நீக்கிடும் லிங்கம்
நாளும் வணங்கும் சதாசிவ லிங்கம்

தேவரின் உருவின் பூஜைக்கோர் லிங்கம்
தேவ வணமலரை ஏற்றிடும் லிங்கம்
பரமண அதணாய் பறவிடும் லிங்கம்
நாளும் வணங்கும் சதாசிவ லிங்கம்

லிங்காஷ்டக இதை தினமும்
சிவ சந்நிதியில் சொல்வார்
சிவலோக காட்சியுடன்
சிவன் அருளும் கொள்வார்கள்.

குமரன் (Kumaran) said...

நன்றி இரதாங்கன்.