Sunday, March 13, 2011

மாம் பாது ஸரஸ்வதி பகவதி!



சரஸ்வதி தேவியின் திருவுருவத்தைத் தியானிக்க ஒரு அருமையான சுலோகம் இது!

யா குந்தேந்து துஷார ஹார தவளா
யா சுப்ர வஸ்த்ராவ்ருதா
யா வீணா வர தண்ட மண்டித கரா
யா ஸ்வேத பத்மாஸனா
யா ப்ரஹ்மாச்யுத சங்கர ப்ரப்ருதிபி:
தேவை: சதா பூஜிதா
சா மாம் பாது ஸரஸ்வதி பகவதி
நிச்சேஷ ஜாட்யாபஹா

யா குந்த இந்து துஷார ஹார தவளா
- யார் சந்திரனைப் போலவும் பனியைப் போலவும் வெண்மையான மல்லிகை மாலையை அணிந்து கொண்டிருக்கிறாளோ


யா சுப்ர வஸ்த்ராவ்ருதா - யார் வெண்மையான ஆடையை அணிந்திருக்கிறாளோ



யா வீணா வர தண்ட மண்டித கரா - யார் வீணையை ஏந்திய வரம் தரும் திருக்கைகளை உடையவளோ



யா ஸ்வேத பத்மாஸனா - யார் வெண்தாமரையில் வீற்றிருப்பவளோ


யா ப்ரஹ்ம அச்யுத சங்கர ப்ரப்ருதிபி: தேவை: சதா பூஜிதா - யார் பிரம்மன் அச்சுதன் சங்கரன் முதலிய தேவர்களால் என்றும் வணங்கப்படுபவளோ



சா மாம் பாது ஸரஸ்வதி பகவதி நிச்சேஷ ஜாட்யாபஹா - செயலின்மையையும் அறிவின்மையையும் அறவே நீக்கும் அந்த ஸரஸ்வதியென்னும் தாய் என்னை என்றும் காக்கட்டும்!


4 comments:

sury siva said...

you may visit at your leisure
and listen to this sloka
sung by me in raag saranga
and again with shades of kanada

http://www.youtube.com/watch?v=XS5Lpa1wM6Q

subbu rathinam

http://vazhvuneri.blogspot.com

குமரன் (Kumaran) said...

Listened to it. Thank you very much Sir.

Kavinaya said...

அழகான ஸ்லோகம். படங்களும் அழகா இருக்கு.

//செயலின்மையையும் அறிவின்மையையும் அறவே நீக்கும் அந்த ஸரஸ்வதியென்னும் தாய் என்னை என்றும் காக்கட்டும்!//

என்னையும் :)

தாத்தா பாடியதையும் கேட்டு மகிழ்ந்தேன். நன்றி தாத்தா!

குமரன் (Kumaran) said...

நன்றி அக்கா.