Monday, June 14, 2010
அனுமனை நினைப்பதால் கிடைப்பவை!
புத்திர் பலம் யசோ தைர்யம் நிர்பயத்வம் அரோகதா
அஜாட்யம் வாக்படுத்வம் ச ஹனூமத் ஸ்மரணாத் பவேத்
அனுமனை வணங்குவதால் கிடைக்கும் பயன்களைப் பேசும் இந்த சுலோகம் பிரபலமானது. இந்த சுலோகத்தைப் பொருளுணர்ந்து சொன்னாலே போதும் ஒருவித மனவலிமை பெருகுவதை உணரமுடியும். நல்லவை செய்வதற்கு எவையெல்லாம் தேவையோ அவையெல்லாம் அனுமனை நினைப்பதால் கிடைக்கும் என்று இந்த சுலோகம் கூறுகிறது.
புத்திர் பலம் - அறிவில் வலிமை
யசோ - புகழ்
தைர்யம் - துணிவு
நிர்பயத்வம் - பயமின்மை
அரோகதா - நோயின்மை
அஜாட்யம் - ஊக்கம்
வாக் படுத்வம் - பேச்சு வலிமை
ச - இவையெல்லாம்
ஹனூமத் ஸ்மரணாத் - அனுமனை நினைப்பதால்
பவேத் - பிறக்கின்றன.
அறிவுக்கூர்மை, புகழ், துணிவு, பயமின்மை, நோயின்மை, ஊக்கம், பேச்சுத்திறன் போன்றவை அனுமனை நினைத்தவுடன் கிடைக்கின்றன!
ஜெய் ஹனுமான் ஞான குண சாகர!
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
நான் எப்போதும் சொல்லும் ஸ்லோகம். ஏதோ ஹனுமத் ப்ரீதி ஸ்லோகம் என்று மட்டும்தான் நினைத்திருந்தேன். சின்ன ஸ்லோகத்தில் இத்தனை அர்த்தங்களா!! இனி பொருள் புரிந்த சந்தோஷத்தில் சொல்வேன்.
நன்றி
தகவலுக்கு மிக்க நன்றி!
மிக்க மகிழ்ச்சி புதுகைத் தென்றல் அக்கா. :-)
மகிழ்ச்சி இராஜேஷ்.
அனுமனை கடந்த பத்து வருடமாக நினைத்து வழிபாடு செய்து கோடானு கோடி நன்மைகளைப் பெற்றுல்லேன் அதனால் அனுமன் சாமிகளுக்கு கோடானுகோடி நன்றிகள்
23வருசமா இந்த மந்திரம் தெறியும் ஆனா பொருள் முலுமையா இப்ப தான் தெறிந்தது நன்றி
Post a Comment