Wednesday, July 11, 2012

அச்யுதாஷ்டகம் - பலச்ருதி

அச்யுதஸ்யாஷ்டகம் ய: படேத் இஷ்டதம்
ப்ரேமத: ப்ரத்யஹம் பூருஷ: சஸ்ப்ருதம்
வ்ருத்தத: ஸுந்தரம் கர்த்ருவ்விஸ்வம்பரஸ்
தஸ்ய வச்யோ ஹரிர் ஜாயதே ஸத்வரம்

அச்யுதஸ்யாஷ்டகம் - அச்யுதனின் அஷ்டகமான இந்த ஸ்தோத்திரத்தை

ய: - யார்

படேத் - படிக்கிறார்களோ

இஷ்டதம் - தனது இஷ்ட தெய்வத்தின் மேல்

ப்ரேமத: - அன்புடன்

ப்ரத்யஹம் - தினந்தோறும்

பூருஷ: சஸ்ப்ருதம் - பரமனின் மேல் ஆசையுடன்

வ்ருத்தத: ஸுந்தரம் - அழகுடைய இந்த ஸ்தோத்திரம்

கர்த்ருவ்விஸ்வம்பரஸ் - அகில நாயகனுடைய

தஸ்ய - அவர்

வச்யோ ஹரிர் ஜாயதே ஸத்வரம் - விரைவில் ஹரியினுடைய பதத்தை அடைவார்கள்


இது பலச்ருதி சுலோகம். இந்த அச்யுதாஷ்டகம் என்ற எட்டு பாடல்களைப் படிப்பதால் வரும் பயனைக் கூறும் பாடல்.

அச்யுதாஷ்டகமான இந்த அழகிய ஸ்தோத்திரத்தை யார் தனது இஷ்ட தெய்வமான பரமனின் மேல் மிகுந்த ஆசையும் அன்பும் கொண்டு தினந்தோறும் படிக்கிறார்களோ அவர்கள் உலகநாயகனான ஹரியின் பதத்தை விரைவில் அடைவார்கள்.

3 comments:

கோவி.கண்ணன் said...

//ஸ்தோத்திரம்//

பாமாலை

குமரன் (Kumaran) said...

நன்றி கண்ணன் & அட்சயா.

சுலோகம் = பாடல்/பா
ஸ்தோத்ரம் = துதி/துதிப்பாடல்
ஸ்தோத்ரமாலா = துதிமாலை/துதிப்பாமாலை/பாமாலை

Unknown said...

மிகவும் இனிமையான குரலில் ஜேஷுதாஸின் அஷ்டகம்