Saturday, May 24, 2008

கட்டிக்கொண்டவளும் பயந்து விலகுவாள் (பஜ கோவிந்தம் 6)

யாவத் பவனோ நிவசதி தேஹே
தாவத் ப்ருச்சதி குசலம் கேஹே
கதவதி வாயௌ தேஹாபாயே
பார்யா பிப்யதி தஸ்மின் காயே

யாவத் பவனோ நிவசதி தேஹே - எது வரையில் உடம்பில் மூச்சுக் காற்று இருக்கிறதோ

தாவத் ப்ருச்சதி குசலம் கேஹே - அது வரையில் தான் உன் வீட்டில் இருப்பவர்கள் உன் நலன்களைப் பற்றி விசாரிப்பார்கள்.

கதவதி வாயௌ தேஹாபாயே - உடலை விட்டு அந்த மூச்சுக் காற்று போன பின்னால்

பார்யா பிப்யதி தஸ்மின் காயே - இது நாள் வரை பல முறை அந்த உடலுடன் கூடி வாழ்ந்த மனைவியும் அந்த உயிரற்ற உடலைக் கண்டு பயப்படுவாள்.

கோவிந்தனை வணங்குங்கள்.

கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.

3 comments:

குமரன் (Kumaran) said...

இந்த இடுகை 'பஜ கோவிந்தம்' பதிவில் 12 நவம்பர் 2005 அன்று இடப்பட்டது. அப்போது வந்த பின்னூட்டங்கள்:

8 comments:

Natarajan said...
Unmaiyay AnnaiVarrum Unnarvomaga.

Anbudan,
Nata

November 12, 2005 8:54 AM
--

Vasudevan Letchumanan said...
மனித உடலில் மூச்சுதான் பிரதானம். மூச்சுதான் உயிர் சக்தி; சக்தி போய்விட்டால்.....பிறகு என்ன இருக்கிறது? சக்தி போச்சு.........பின்னால் சத்தி போச்சு......சத்து போச்சு.....செத்து போச்சு ....என்று வார்த்தை மறுவி இருக்குமோ?

வாசுதேவன் இலட்சுமணன்
மலேசியா.

November 12, 2005 9:30 AM
--

வெளிகண்ட நாதர் said...
உயிர் மூச்சு உள்ள வரை எல்லாம் பேச்சு
அது இல்லையெனில் எல்லாம் போச்சு

கோவிந்தா... கோவிந்தா...

November 12, 2005 1:29 PM
--

குமரன் (Kumaran) said...
பின்னூட்டம் இட்டமைக்கு நன்றி நடராஜன்.

November 13, 2005 5:26 AM
--

குமரன் (Kumaran) said...
இருக்கலாம் வாசுதேவன் இலட்சுமணன். மூச்சுச் சக்தி போனால் செத்துத் தானே போகிறோம். பின்னூட்டம் இட்டமைக்கு நன்றி.

November 13, 2005 5:27 AM
--

குமரன் (Kumaran) said...
பின்னூட்டத்திற்கு நன்றி வெளிகண்ட நாதர் (பாபா?). உங்களால் நானும் கோவிந்த நாமத்தைச் சொல்கிறேன். கோவிந்தா கோவிந்தா கோவிந்தா...

November 13, 2005 5:29 AM
--

பொன்ஸ்~~Poorna said...
//பார்யா பிப்யதி தஸ்மின் காயே - இது நாள் வரை பல முறை அந்த உடலுடன் கூடி வாழ்ந்த மனைவியும் அந்த உயிரற்ற உடலைக் கண்டு பயப்படுவாள்.
//

அநியாயத்துக்கு யோசிச்சிருக்காருங்க.. சங்கராச்சாரியார் கல்யாணம் செய்யாமலேயே துறவறம் பூண்டவர், இப்படியெல்லாம் யோசிச்சிருக்கறது ரொம்ப வியப்பா இருக்கு.

April 26, 2006 10:52 PM
--

குமரன் (Kumaran) said...
பொன்ஸ்,

சங்கராச்சாரியார் இப்படியெல்லாம் யோசிச்சாரா இல்லையான்னு தெரியலை. அவர் 'பார்யா - மனைவி' என்று மட்டும் தான் சொல்லியிருக்கிறார். நான் தான் விளக்கம் சொல்லும் போது 'இது நாள் வரை பல முறை அந்த உடலுடன் கூடி வாழ்ந்த மனைவி' என்று சொன்னேன். வெறுமனே 'மனைவி' என்று சொல்லியிருந்தாலும் அவர் சொல்ல வந்த கருத்து இது தான் என்று எண்ணுகிறேன்.

April 30, 2006 10:04 AM

Kavinaya said...

வழக்கம் போல அழகா விளக்கம் சொல்லியிருக்கீங்க, குமரன்.

உண்மையை உணர்வோம்; ஹரி பதம் பணிவோம்!

குமரன் (Kumaran) said...

நன்றி கவிநயா அக்கா.