Sunday, June 8, 2008
ஸ்ரீ சாரதைக்கு வணக்கம்...
கல்விக்கு அதிபதி என்று சரஸ்வதியை வணங்குவது வழக்கம். சிருங்க-கிரி என்று போற்றப்படும் சிருங்கேரியில் கோலோச்சும் சாரதாம்பாள் சரஸ்வதியே என்பது சங்கரவிஜயம் மூலம் தெரியவருகிறது. அவளை வணங்கிடும் ஒரு சிரு ஸ்லோகம்.
ச்ருங்காத்ரி மத்ய ப்ரவிராஜமாநாம்
பக்தேஷ்ட விஸ்ராணன கல்பவல்லீம்
துங்கா நதீதீர விஹார சக்தாம்
ஸ்ரீ சாரதாம்பாம் சிரஸா நமாமி.
சிருங்ககிரி க்ஷேத்திரத்தின் நடுவில் ப்ரகாசமாக இருந்து கொண்டு கற்பக மரம்/கொடி போல பக்தர்கள் வேண்டுவதையெல்லாம் தரும், தூங்கா நதியருகில் வசிப்பவளுமான ஸ்ரீ சாரதம்பாவுக்கு சிரம் தாழ்த்தி வணங்கிடுகிறேன்.
Labels:
சாரதாம்பாள்...,
சின்ன சின்ன சுலோகங்கள்,
மெளலி
Subscribe to:
Post Comments (Atom)
9 comments:
நன்றி, மௌலி! சரஸ்வதியை, சிருங்கேரி ஸ்ரீசாரதையை, கற்பகத் தருவின் பொற்பதங்களை, நானும் வணங்கிக் கொள்கிறேன்.
சிருங்கேரி நம்ம பேவரைட் இடங்களில் ஒன்று!! :)))
துங்கா நதீ தீர என்று துங்கா நதி மட்டுமே சொல்லப்பட்டிருக்கிறதே மௌலி - துங்கபத்ரா தானே சிருங்கேரியில் ஓடும் நதியின் பெயர்?
வித்யா தாயினியை வாக் விலாஸினியை வேத மாதாவை வணங்கிக் கொள்கிறேன்.
குமரன்,
சிருங்கேரி-ல துங்கா நதி மட்டுந்தான். அந்த நதி சிருங்கேரி தாண்டிய பிறகே அத்துடன் பத்ராவதி இணைகிறது அப்படின்னு நினைக்கிறேன்....
துங்கபத்ரா நதி தீரத்துல ஆந்த்ரால இன்னொரு விசேஷம் இருக்கே..என்ன சொல்லுங்க?
குருராஜர் நிரந்தரமாக வாழும் இடத்தைத் தானே சொல்கிறீர்கள். அங்கே சென்றிருக்கிறேன். சிருங்கேரிக்குத் தான் இன்னும் சென்றதில்லை.
//சிருங்கேரி நம்ம பேவரைட் இடங்களில் ஒன்று!! :)))//
புரியுதுங்க கொத்ஸண்ணா..:))
//குருராஜர் நிரந்தரமாக வாழும் இடத்தைத் தானே சொல்கிறீர்கள். அங்கே சென்றிருக்கிறேன். //
அதே!!!
//சிருங்கேரிக்குத் தான் இன்னும் சென்றதில்லை.//
அடுத்த முறை இந்தியா வரும் சமயம் பெங்களூர் வாங்க குமரன்...நாம் இருவரும் சிருங்கேரி செல்வோம்....குரு தரிசனம், மிக அவசியம்...:))
கொத்ஸ் சொன்னது போல, எனக்கும் சிருங்கேரி எத்தனை முறை சென்றாலும் அலுக்காத ஊர்.
சரி பார்த்துட்டேன், சிருங்கேரில துங்கா மட்டுமே...பத்ராவதி பிறகே இணைகிறது.
கவிநயாக்கா...வருக...:)
குரு தரிசனம் நிறைய தடவை ஆகியிருக்கிறது. மதுரை சௌராஷ்ட்ர கிருஷ்ணன் கோவிலிலும், கோவை சாரதாம்பாள் கோவிலிலும், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலிலும். சிருங்கேரி சாரதாம்பாள் தரிசனம் தான் வேண்டும். ஆசார்யரைத் தரிசித்தால் அன்னையைத் தரிசித்தது போல் தானே என்கிறீர்களா? அது சரி தான். :-)
Post a Comment