Saturday, June 7, 2008

பவக்கடலுக்குப் படகு (பஜ கோவிந்தம் 13)


கா தே காந்தா தன கத சிந்தா
வாதுல கிம் தவ நாஸ்தி நிவந்தா
த்ரிஜகதி சஜ்ஜன சங்கதிர் ஏகா
பவதி பவார்னவ தரனே நௌகா

கா தே காந்தா தன கத சிந்தா - மனைவி மக்கள், வீடு வாசல், சொத்து சுகம் போன்றவற்றில் இருந்து எழும் கவலைகள் உனக்கு ஏன்?

வாதுல கிம் - மூடனே ஏன் இந்த நிலை உனக்கு?

தவ நாஸ்தி நிவந்தா - உனக்கு இவை நல்ல கதி இல்லை.

த்ரிஜகதி சஜ்ஜன சங்கதிர் ஏகா - மூன்று உலகங்களிலும், உண்மையை விரும்பும் நல்லவர்களின் உண்மையான நட்பு மட்டுமே

பவ ஆர்னவ தரனே நௌகா பவதி - பிறப்பு இறப்பு என்னும் மாபெரும் கடலைக் கடக்க உதவும் படகு போன்றது.

கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.

3 comments:

குமரன் (Kumaran) said...

இந்த இடுகை 'பஜ கோவிந்தம்' பதிவில் 30 ஏப்ரல் 2006 அன்று இடப்பட்டது. அப்போது வந்த பின்னூட்டங்கள்:

6 comments:

Anonymous said...
Dear brother kumaran

I am not belong to your religion
can u give me the exact meaning for the line given below

"மாம் ஹி பார்த்த! வ்யாபாஸ்ரித்ய யே பிஸ்யூ பாபயோயை
ஸ்தரீயோ வைஸ்யஸ்ததாஸீத்ர
ஸ்தேபி யாந்தி பராம்கதி"

and let me know is this line taken frm bagawath geetha

-Jerald (al..s)kanniappan

April 30, 2006 1:09 PM
--

குமரன் (Kumaran) said...
திரு.கன்னியப்பன்,

நீங்கள் கொடுத்துள்ள வரிகள் பகவத் கீதையில் வருபவை தான். அவற்றை நான் படித்துள்ளேன். ஆனால் நீங்கள் தந்துள்ளதில் ஏதோ எழுத்துப்பிழை இருப்பதைப் போல் தோன்றுகிறது. அதனால் எனக்கு அதன் பொருள் உடனே புரியவில்லை. இது எங்கிருந்து நீங்கள் எடுத்து எழுதினீர்களோ, அங்கு இந்த வரிகள் கீதையின் எந்த அத்தியாயத்தில் எத்தனையாவது ஸ்லோகமாக வருகிறது என்று சொல்லியிருந்தால் அதனை இங்கே சொல்லுங்கள். நான் அங்கு பார்த்து, சரியான வரிகளைப் பார்த்துப் பொருள் சொல்கிறேன்.

May 03, 2006 11:49 AM
--

தமிழ் குழந்தை said...
தமிழ் தகவல் தொழில் நுட்பம் வளர்ச்சியடைய பிளாக்கர் மூலமாக பல அரிய கருத்துக்களை தந்து கொண்டிருக்கின்றீர்கள். உங்கள் கருத்துக்கள் தெளிவாகவும் அருமையாகவும் உள்ளது.

May 05, 2006 3:12 AM
--

குமரன் (Kumaran) said...
நன்றி தமிழ்க்குழந்தை

May 06, 2006 4:30 PM
--

வெளிகண்ட நாதர் said...
நல்லவர் நட்பே பெரிது, அதுவே அனைத்தையும் கடக்க உதவும் ஆயுதம்!
கோவிந்தா... கோவிந்தா!
கோவிந்தா... கோவிந்தா!

May 07, 2006 3:55 PM
--

குமரன் (Kumaran) said...
கோவிந்தா... கோவிந்தா!
கோவிந்தா... கோவிந்தா!

ரொம்ப நாளைக்கப்புறம் வந்து கோவிந்த நாமம் சொல்லியிருக்கிறீர்கள். நன்றி வெளிகண்ட நாதர்.

May 08, 2006 9:41 AM

Kavinaya said...

//த்ரிஜகதி சஜ்ஜன சங்கதிர் ஏகா
பவதி பவார்னவ தரனே நௌகா//

உங்களையும், உங்களைப் போன்ற இன்னும் சிலரையும் எனக்குத் தெரிய வைத்த இறைவனுக்கு நன்றி!

குமரன் (Kumaran) said...

இப்படி எல்லாம் எழுத வைக்கும் இறைவனுக்கு நன்றி. :-)