Saturday, June 21, 2008

உன்னிலும் என்னிலும் எல்லோரிடத்தும் ஒரே இறைவன் (பஜ கோவிந்தம் 24)


த்வயி மயி சான்யத்ரய்கோ விஷ்ணு:
வ்யர்த்தம் குப்யஸி மா ஸஹிஷ்ணு:
சர்வஸ்மிந் அபி பஸ்யாத்மானம்
சர்வத்ரோ ஸ்த்ருஜ பேதஜ்ஞானம்


த்வயி - உன்னிலும்

மயி - என்னிலும்

ச அன்யத்ர - மற்றுமுள்ள எல்லாரிடத்திலும், எல்லாப் பொருளிலும்

ஏகோ விஷ்ணு: - ஒரே இறைவன் விஷ்ணு தான் இருக்கிறார்.

பேத அஞ்ஞானம் - வேறுபாடுகள் தோன்றுவது அறியாமையால்

வ்யர்த்தம் - அது வீண்

குப்யஸி மா - என் மேல் வீணாகக் கோபம் கொள்ளாதே

ஸஹிஷ்ணு: - பொறுமையாக இரு

சர்வஸ்மிந் அபி - எங்கும் எப்பொருளிலும் எவ்வுயிரிலும்

பஸ்யதி ஆத்மானம் - ஆத்மனைப் பார்

சர்வத்ரோ ஸ்த்ருஜ - எல்லா இடங்களிலும் வேறுபாடுகளைக் காண்பதை விட்டுவிடு.

கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.

4 comments:

குமரன் (Kumaran) said...

இந்த இடுகை 'பஜ கோவிந்தம்' பதிவில் 9 ஜூலை 2006 அன்று இடப்பட்டது. அப்போது வந்த பின்னூட்டங்கள்:

10 comments:

manu said...
காலைவணக்கம் குமரன்.நல்ல புத்திமதி.எப்போதும் எவருக்கும் வேண்டியது பொறுமையும் அன்பும்தான்.
அதுவும் எல்லாரிடத்திலும் விஷ்ணுவைக் கண்டுவிட்டால் வேறு ஏதும் வேண்டுமோ/
நன்றி குமரன்.இதமான பதிவு.

July 09, 2006 8:52 AM
--

குமரன் (Kumaran) said...
மிக்க நன்றி மனு அம்மா.

July 09, 2006 10:39 PM
--

johan -paris said...
அன்பு குமரா!
இந்த உன்னத மனநிலை ;இருந்தால் சச்சரவே! இல்லை.இவ்வளவு இலகுவாகச் சொல்லியும் ;நாம் புரியாமல் வாழுகிறோம். சொல் சொல்லாகப் பொருள் கூறுவதைத் தவிர்க்க வேண்டாம்.
யோகன் பாரிஸ்

July 10, 2006 3:29 AM
--

தி. ரா. ச.(T.R.C.) said...
சர்வத்ரோ ஸ்த்ருஜ - எல்லா இடங்களிலும் வேறுபாடுகளைக் காண்பதை விட்டுவிடு

வேறுபாடுகளைக் காண்பதை விட்டு விட்டால் நமக்கு இடர்பாடே வராது.இதே கருத்தில்தான்" ஸ்ர்வம் விஷ்ணுமயம் ஜகது "என்றார்கள் பெரியோர்கள்.உலகத்தில் இறைவனைப் பார்பதைவிட உலகத்தையே இறைனனாகப் பார்ப்பது சிறந்தது,ஆனால் மிகக்கடினம். தி ரா ச

July 10, 2006 3:58 AM
--

Merkondar said...
அரியும் சிவனும் ஒன்று

July 10, 2006 7:50 AM
---

SK said...
"எங்கெங்கு காணினும் சக்தியடா" எனப் பாடினார் பாரதி.

"யாதுமாகி நின்றாய் காளி" எனவும் புகழ்ந்தார்.

"காணும் இடமெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும்" இறையை எப்பெயரில் அழைப்பினும், அனைத்தும் ஒன்றே!

July 10, 2006 8:33 AM
--

குமரன் (Kumaran) said...
உண்மை தான் யோகன் ஐயா. எத்தனை எளிதாகச் சொன்னாலும் புரியாமல் வாழுகிறோம்.

முடிந்த வரை சொல் சொல்லாகவே பொருள் சொல்கிறேன். எங்கேயாவது அப்படிச் செய்யாமல் உங்களுக்கு ஐயம் ஏதும் வந்தால் தயங்காமல் கேளுங்கள். தெரிந்தவரை சொல்கிறேன்.

July 10, 2006 2:45 PM
--

குமரன் (Kumaran) said...
உண்மை தான் தி.ரா.ச. வேறுபாடுகளைக் காண்பது அழிந்தாலே எல்லா இடர்பாடுகளும் அழியும். ஆனால் நீங்கள் சொன்னது போல் அது மிகக்கடினம்.

July 10, 2006 2:47 PM
--

குமரன் (Kumaran) said...
ஆமாம் என்னார் ஐயா. ஹரியும் சிவனும் ஒன்று என்று சொல்வதோடு நிற்காமல் இங்கு எதுவும் எப்பொருளும் ஒன்றே - அது இறைவனே என்று சொல்கிறார் சங்கரர்.

சிவமயமே எங்கும் சிவமயமே என்று பாடலாம் போல் இருக்கிறது

July 10, 2006 2:48 PM
--

குமரன் (Kumaran) said...
நல்ல எடுத்துக்காட்டுகள் காட்டினீர்கள் எஸ்.கே. மிக்க நன்றி.

July 10, 2006 2:49 PM

Kavinaya said...

//உலகத்தில் இறைவனைப் பார்பதைவிட உலகத்தையே இறைனனாகப் பார்ப்பது சிறந்தது,ஆனால் மிகக்கடினம்.//

ஆமாம், குமரா. என்றைக்குத்தான் புத்திக்குப் புரியுமோ? :(

Kavinaya said...

படமும் மிகப் பொருத்தம் + அழகு!

குமரன் (Kumaran) said...

நன்றி கவிநயா அக்கா.