Wednesday, June 25, 2008

சண்டை எதற்கு? பின் சமாதானம் எதற்கு? (பஜ கோவிந்தம் 25)


சத்ரௌ மித்ரே புத்ரே பந்தௌ
மா குரு யத்னம் விக்ரஹசந்தௌ
பவ சமசித்த: சர்வத்ர த்வம்
வாஞ்சஸ்யசிராத் யாதி விஷ்ணுத்வம்

சத்ரௌ - எதிரிகளிடமோ

மித்ரே - நண்பர்களிடமோ

புத்ரே - பிள்ளைகளிடமோ

பந்தௌ - உறவினர்களிடமோ (யாரிடம் ஆனாலும் அவர்களுடன்)

மா குரு யத்னம் விக்ரஹ சந்தௌ - சண்டைக்கோ சமாதானத்திற்கோ முயற்சி செய்யவேண்டாம்

பவ சமசித்த: சர்வத்ர த்வம் - எல்லாரிடமும் எல்லா நேரமும் எங்கும் சமமான மனத்துடன் இரு

வாஞ்சஸ்ய அசிராத் யாதி விஷ்ணுத்வம் - இறைநிலையை விரைவில் அடைந்துவிடுவாய்

கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.

3 comments:

குமரன் (Kumaran) said...

இந்த இடுகை 'பஜ கோவிந்தம்' பதிவில் 13 ஜூலை 2006 அன்று இடப்பட்டது. அப்போது வந்த பின்னூட்டங்கள்:

11 comments:

SK said...
"சொல்லற; சும்மா இரு!" என அன்று அருணகிரியாருக்குச் சொன்னது இதுதானே!

July 13, 2006 11:36 PM
--

வெளிகண்ட நாதர் said...
அனைவரயும் அன்புடன் சமமாய் நோக்குங்கள், கோவிந்தன் கை விட மாட்டான்

கோவிந்தா...கோவிந்தா..
கோவிந்தா... கோவிந்தா..

July 14, 2006 12:07 AM
--

johan -paris said...
குமரா!
ஓடும் செம்பொன்னும் ஒக்க நோக்கும் நிலை!
கோவிந்தனை அருள் வேண்டும்; அவனை நினைக்க வேண்டும்.
யோகன் பாரிஸ்

July 17, 2006 5:29 AM
--

சிவமுருகன் said...
அருமையான விளக்கம். தற்சமயம் தேவையான ஒரு பதிவு, கொஞ்சம் இந்திய அரசின் மேல் கொபம் வந்தது இப்பதிவை கண்டவுடன் சமாதானம் அடைந்துவிட்டேன். தாங்கள் கொடுத்த தொடுப்பு மிகவும் உதவியாய் இருக்கிறது. நன்றி.

July 17, 2006 10:13 PM
--

கோவி.கண்ணன் said...
//கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.//

திரு குமரன், ஸ்லோகத்தில் வராத மேற்கண்ட வரிகளை ஒவ்வொரு ஸ்லோகத்திலும் சேர்த்துக் கொள்ளவேண்டுமா ?... தெரியாமல் கேட்கிறேன் !

July 18, 2006 7:53 AM
--

குமரன் (Kumaran) said...
ஆமாம் எஸ்.கே. இது தான் சும்மா இரு சொல்லற என்ற அம்மாப்பொருள்.

July 18, 2006 11:30 AM
--

குமரன் (Kumaran) said...
கோவிந்தா கோவிந்தா. வழக்கம் போல் வந்து கோவிந்த நாமத்தைச் சொன்னதற்கு நன்றி வெளிகண்ட நாதர்.

July 18, 2006 11:31 AM
--

குமரன் (Kumaran) said...
ஆமாம் யோகன் ஐயா. அவன் அருள் இருந்தால் தான் அந்த நிலை அடைய முடியும்.

July 18, 2006 11:32 AM
--

குமரன் (Kumaran) said...
நன்றி சிவமுருகன்.

July 18, 2006 11:32 AM
--

குமரன் (Kumaran) said...
கோவி.கண்ணன் ஐயா. ஒவ்வொரு சுலோகம் முடிந்த பின்னர் 'பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம் கோவிந்தம் பஜ மூடமதே' என்ற பல்லவியைப் பாடுவது வழக்கம். அதனைத் தான் 'கோவிந்தனை வணங்குங்கள்' என்று மும்முறை சொல்வதாக ஒவ்வொரு பதிவிலும் இடுகிறேன்.

July 18, 2006 11:33 AM

Kavinaya said...

சரி முயற்சி செய்யறேன், ஹரி துணையோடு...

குமரன் (Kumaran) said...

முயன்றான் முன்னிற்பான் முகுந்தன். சரியா அக்கா. :-)