Wednesday, June 4, 2008
சத்சங்கத்தால் ஜீவன்முக்தி (பஜகோவிந்தம் 9)
ஸத் ஸங்கத்வே நிஸ்ஸங்கத்வம்
நிஸ்ஸங்கத்வே நிர்மோஹத்வம்
நிர்மோஹத்வே நிஸ்சல தத்வம்
நிஸ்சல தத்வே ஜீவன் முக்தி:
ஸத் ஸங்கத்வே நிஸ்ஸங்கத்வம் - அடியவர், நல்லவர், உண்மைப் பொருளை அறிவதிலும் அடைவதிலும் நாட்டமுடையவர் இவர்களின் கூட்டு, பற்று இல்லாத நிலையை அளிக்கும்.
நிஸ்ஸங்கத்வே நிர்மோஹத்வம் - பற்று இல்லாத நிலையை அடைந்தால் மயக்கங்கள் இல்லாத நிலை கிடைக்கும்.
நிர்மோஹத்வே நிஸ்சல தத்வம் - மயக்கம் இல்லாத நிலையை அடைந்தால் என்றும் நிலையான மறைப் பொருளை அடைய முடியும்.
நிஸ்சல தத்வே ஜீவன் முக்தி: - அப்படி நிலையான மறைப் பொருளை அடைந்தால் இங்கேயே இப்போதே முக்தி நிலையை அடையலாம்.
கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.
Labels:
Bhaja Govindham,
Vishnu,
திருமால்,
பஜகோவிந்தம்
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
இந்த இடுகை 'பஜ கோவிந்தம்' பதிவில் 30 2005 அன்று இடப்பட்டது. அப்போது வந்த பின்னூட்டங்கள்:
தி. ரா. ச.(T.R.C.) said...
ஜீவன் முக்தி அடைவதற்கு நுழைவு சீட்டு நல்லவர்களை சென்று அடைதல் என்று கொள்ளலாமா?
December 31, 2005 8:30 AM
குமரன் (Kumaran) said...
ஆமாம் TRC. முக்தி அடைவதற்கு முதல் படி சத்சங்கம் தான்.
December 31, 2005 12:15 PM
இந்த பாடல் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு; எனக்கே படிக்க வருதே! :) கருத்தும் என் மனதுக்கு நெருக்கமானது. மிக்க நன்றி, குமரா!
படத்தைப் பத்தி சொல்ல விட்டுட்டேனே! அப்படியே சொக்கிப் போய்ட்டேன்! :)
ஆமாம் அக்கா. ரொம்ப எளிமையான இனிமையான பாடல். இதில் வரும் படங்கள் எல்லாம் எப்போதோ ஏதோ ஒரு இணையத்தளத்திலிருந்து எடுத்து வைத்தது. நன்றின்னு சொல்ல இப்ப இணையதள பெயர் மறந்து போச்சு. :-(
Post a Comment