Tuesday, June 17, 2008

யோகத்திலோ போகத்திலோ கூட்டத்திலோ தனிமையிலோ எங்கே மகிழ்ச்சி? (பஜ கோவிந்தம் 19)


யோக ரதோ வா போக ரதோ வா
சங்க ரதோ வா சங்க விஹீன:
யஸ்ய ப்ரஹ்மணி ரமதே சித்தம்
நந்ததி நந்ததி நந்ததி ஏவ

யோக ரதோ வா போக ரதோ வா - ஒருவர் யோகத்திலோ போகத்திலோ எதில் வேண்டுமானாலும் மனமகிழ்ச்சி அடையலாம்

சங்க ரதோ வா சங்க விஹீன: - தனிமையிலோ கூட்டத்திலோ எங்கு வேண்டுமானாலும் மகிழ்ச்சி அடையலாம்

யஸ்ய ப்ரஹ்மணி ரமதே சித்தம் - ஆனால் யாருடைய மனம் இறைவனின் நினைவில் மூழ்கி மகிழ்ந்து இருக்கிறதோ

நந்ததி நந்ததி நந்ததி ஏவ - அவர் மட்டுமே மகிழ்கிறார்கள்; மகிழ்கிறார்கள்; உண்மையில் மகிழ்கிறார்கள்.

கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.

3 comments:

குமரன் (Kumaran) said...

இந்த இடுகை 'பஜ கோவிந்தம்' பதிவில் 24 ஜூன் 2006 அன்று இடப்பட்டது. அப்போது வந்த பின்னூட்டங்கள்:

10 comments:

தி. ரா. ச.(T.R.C.) said...
நமது பெரியோர்கள் ஒரு வக்கியத்தை மூன்று முறை கூறினால் அது சத்யபிரமாணாவாக்கியம் என்பதாகும். நந்ததியும் அந்தவகையைச்சேர்ந்தது.அதாவது நன்கு கண்டறிந்து கூறுவது. இதே பாணியை சங்கரரும் சுப்ரமணிய புஜங்கத்திலும் முருகனைத்தவிற வேறு தெய்வத்தை நஜானே நஜானே நைவஜானே அறிந்ததில்லை,அறிந்ததில்லை,அறிந்ததேஇல்லை என்கிறார். இப்போது கூட கோர்ட்டில் சாட்சிகளிடத்தில் மூன்று முறை நான் சொலவதெல்லாம் உண்மை, உண்மை உண்மையைத்தவிர வேறு ஒன்றுமில்லை என்று கூறச்சொல்லுகிறர்கள் தி ரா ச

June 25, 2006 1:50 AM
--

manu said...
இந்த வார்த்தைகளைவிட உண்மை வேறு எங்கு பார்க்க முடியும்?ஆத்மா சுகம் அவனிடத்தில் தான் அடங்கும். ஆனால் அடங்க வேண்டிய அந்தப் பயிற்சிதான் இடைவிடாமல் யாகமாக நடத்த வேண்டும்.

June 25, 2006 11:11 PM
---

johan -paris said...
குமரா!
எல்லாவற்றையும்;இன்பம் என்கிறோம்; இறையருளால் கிட்டும் மகிழ்வுமட்டுமே! பேரின்பம் எனும் தகுதி பெறுகிறது. ஆதிசங்கர்; குறிப்பிடுவததே!! தி.ரா.ச ; மூன்று முறை கூறுவதற்கு;அருமையான ;நடைமுறை விளக்கத்தையும்;தந்துள்ளார். பாராட்டுக்கள்;
யோகன் பாரிஸ்

June 26, 2006 4:56 AM
--

குமரன் (Kumaran) said...
நந்ததி என்று மும்முறை சொன்னதற்கு மிக நல்ல விளக்கம் சொல்லியிருக்கிறீர்கள் தி.ரா.ச. மிக்க நன்றி.

June 26, 2006 9:30 AM
--

குமரன் (Kumaran) said...
நன்கு சொன்னீர்கள் மனு அம்மா. மிக்க நன்றி.

June 26, 2006 9:31 AM
---

குமரன் (Kumaran) said...
ஆமாம் யோகன் ஐயா. இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். யோகம் பெரியது; போகம் சிறியது. தனிமை சிறப்பு; கூட்டம் சிறப்பில்லை; (அதற்கு நேரெதிராய்ச் சொல்வதும் உண்டு) என்று சொல்லப்படும் இருவேறு எதிரெதிர் நிலைகளைக் கூறி யார் இறைவனில் ஆழ்ந்து இருக்கிறார்களோ அவர்களே மகிழ்கிறார்கள் என்கிறாரே. போகத்தில் இருப்பவனும் இறைவனில் ஆழ்ந்தால் அவனே சிறந்தவன்; யோகிகளாகவும் துறவிகளாகவும் இருக்கத் தேவையில்லை என்கிறாரோ?

June 26, 2006 9:34 AM
--

தி. ரா. ச.(T.R.C.) said...
அவன் போக நிலை கூட ஒரு யோக நிலையாகிவுடும் ஆயர் பாடி கோகுலத்தில் பாட்டில் கண்ணதாசன் சொன்னது தி ரா ச

June 26, 2006 11:57 AM
--

குமரன் (Kumaran) said...
ஆமாம் தி.ரா.ச. ஒரு நல்ல பாடல் வரி அது.

June 26, 2006 2:28 PM
--

ரங்கா - Ranga said...
குமரன்,

புலவர் திரு கீரனின் அவர்களின் சொற்பொழிவில் 'மெய்யின்பம்' 'பொய்யின்பம்' பற்றி விளக்கக் கேட்டிருக்கிறேன். புலன்களால் அறியப்படும் இன்பங்கள் பொருளை சுவைக்கும் (அல்லது உணரும்) போது மட்டுமே இன்பத்தைக் கொடுப்பதால் அவை 'பொய்யின்பம்' எனவும், இறைவனைப் பற்றிய சிந்தனை (அல்லது இறைவனின் பெருமைகளைப் படிப்பது, கேட்பது) எப்போது நினைத்தாலும் இன்பம் அளிக்க வல்லமை பெற்றிருப்பதால் அவை 'மெய்யின்பம்' எனவும் விளக்கியிருந்தார். மிகவும் பொருத்தமான விளக்கம் என்று நினைக்கிறேன்.

ரங்கா.

June 28, 2006 3:24 PM
--

குமரன் (Kumaran) said...
மிக நல்ல விளக்கம் ரங்கா அண்ணா. பொய்யின்பம் எளிதாக கிடைக்கிறது; மெய்யின்பம் அவ்வளவு எளிதாகக் கிடைப்பதில்லை. அதனால் பொய்யின்பத்தின் பின்னாலேயே மனம் அலைபாய்கிறதே. கீதையின் கண்ணன் சொன்ன மாதிரி தொடக்கத்தில் இன்பமாகவும் பின்னர் துன்பமாகவும் இருக்கிறது; ஆனாலும் மனம் விடுவதில்லை.

June 29, 2006 9:57 PM

Kavinaya said...

//பொய்யின்பத்தின் பின்னாலேயே மனம் அலைபாய்கிறதே. கீதையின் கண்ணன் சொன்ன மாதிரி தொடக்கத்தில் இன்பமாகவும் பின்னர் துன்பமாகவும் இருக்கிறது; ஆனாலும் மனம் விடுவதில்லை.//

ஆமாம், ரொம்ப உண்மை. மனசை நாமதான் இறைவழில பழக்கணும். அதுக்கும் அவன் அருள் வேணும்.

குமரன் (Kumaran) said...

உண்மை அக்கா.