Thursday, June 12, 2008

கங்கையில் குளித்தாலும் பயனில்லை (பஜ கோவிந்தம் 17)


குரு தே கங்கா சாகர கமனம்
வ்ரத பரிபாலனம் அதவா தானம்
ஞான விஹீன: சர்வ மதேன
முக்திம் ந பஜதி ஜன்ம சதேன:

குரு தே கங்கா சாகர கமனம் - கங்கை கடலுடன் கலக்கும் சங்கமத்திற்குச் சென்று ஒருவன் நீராடலாம்

வ்ரத பரிபாலனம் - பலவிதமான விரதங்களை அனுஷ்டிக்கலாம்

அதவா தானம் - அளவில்லாமல் தானங்களையும் செய்யலாம்

ஞான விஹீன: - இறைஞானம் இல்லாதவன்

முக்திம் ந பஜதி ஜன்ம சதேன: - நூறு நூறு பிறவிகள் எடுத்தாலும் பந்தங்களில் இருந்து விடுதலை அடைவதில்லை

சர்வ மதேன - இதுவே எல்லோருடைய கருத்தும் (மதம் என்றால் கருத்து என்று ஒரு பொருள் உண்டு)

கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.

3 comments:

குமரன் (Kumaran) said...

இந்த இடுகை 'பஜ கோவிந்தம்' பதிவில் 17 ஜூன் 2006 அன்று இடப்பட்டது. அப்போது வந்த பின்னூட்டங்கள்:

21 comments: SK said...
நீங்களெல்லாம் நம் பதிவுக்கு வரவே மாட்டீர்களா?

என்ன செய்து என்ன?
கோவிந்தனை வணங்குவோம்!

June 17, 2006 11:15 PM
தி. ரா. ச.(T.R.C.) said...
நல்ல விளக்கம் குமரன்.ஒரு சந்தேகம். ஞான விஹீன: - இறைஞானம் இல்லாதவன்

இதற்க்கு எப்படி இறைஞானம் என்று பொருள் கொண்டீர்கள்.அது யாக்கை நிலையாமை ஞானமாகக்கூட இருக்கலாமே.
சர்வ மதேன ஞான விஹீன என்றுகூட பார்கலாமே எல்லா ஞானங்களையும் குறிக்கும்
அன்பன் தி ரா ச

June 18, 2006 2:16 AM
குமரன் (Kumaran) said...
என்ன எஸ்.கே. இப்படி கேட்டு விட்டீர்கள்? உங்கள் பதிவிற்கு வராமலேயா உங்கள் பதிவுகளில் பின்னூட்டம் இட்டிருக்கிறேன். நண்பர்கள் எல்லோருடைய பதிவுகளையும் தொடர்ந்து படிக்க முடிவதில்லை என்பதென்னவோ உண்மை தான். ஆனால் முடிந்த அளவு எல்லாருடைய பதிவுகளையும் படித்துப் (காலம் தாழ்த்தியாவதுப்) படித்துப் பின்னூட்டம் இட்டுவிடுகிறேன். நீங்கள் தொடர்ந்து என் பதிவுகளைப் படித்துப் பின்னூட்டம் இடுவதற்கு மிக்க நன்றி. நான் உங்கள் பதிவுகளைத் தொடர்ந்து படிப்பதில்லை என்று சினந்து படித்துப் பின்னூட்டம் இடாமல் இருந்துவிடாதீர்கள். :-)

ஞானத்தின் பெருமையைச் சொல்வதற்காக சங்கர பகவத்பாதாள் இப்படிச் சொல்கிறார். ஆனால் அதனால் முதலில் குறிப்பிட்டச் செயல்களைச் செய்யாமல் இருக்கச் சொல்லவில்லை. அவற்றைச் செய்வதால் சித்த சுத்தி ஏற்பட்டு இறைவன் கருணையால் ஞானம் பிறக்கும்; என்ன, அவை இறுமாப்பு தோன்றுவதற்கும் வழி வகுக்கும். அதனால் கவனம் தேவை. இதனை என்னைவிட வேறு யார் அனுபவ பூர்வமாய் சொல்ல முடியும்? இல்லையா? :-)

June 18, 2006 7:15 AM
குமரன் (Kumaran) said...
தி.ரா.ச. இறைஞானத்திற்குள் எல்லாவித ஞானமும் அடங்கிவிடுகிறது என்ற பொருளில் அப்படிச் சொல்லியிருக்கிறேன். அஹம் ப்ரம்ஹாஸ்மி - நானே இறைவன் என்ற தெளிவு நிலை தானே அத்வைதத் தத்துவப்படி ஞானம்; அது இறைவனைப் பற்றிய ஞானம் தானே.

நீங்கள் சொல்லும் முறைப்படி 'சர்வ மதேன' என்பதனை அந்வயப்படுத்திப் பார்க்கலாம் தான். ஆனால் அது 'முக்திம் ந பஜதி ஜன்ம சதேன:' என்பதோடு தான் சேருவதாகத் தோன்றுகிறது. அதனால் அப்படியே பொருள் சொல்லிவிட்டேன்.

June 18, 2006 7:24 AM
manu said...
வணக்கம் குமரன்.
கங்கையைப் பார்க்காதவள் நான்.
பார்த்தாலும்,
அப்போதும் ஞானம் வருமா என்பது சந்தேகமே.தொடர்ந்து உங்கள் எல்லோருடைய பக்கங்களைப் பார்த்து வந்தாலே புத்தி வரும் என்றே நினைக்கிறேன்.
புகழ்ச்சிக்காக சொல்லவில்லை.வேறு வழியில்லை,இதையாவது படிக்கலாமே என்ற வகுப்பைச் சேர்ந்தவள்.நன்றி.

June 18, 2006 7:16 PM
johan -paris said...
அன்புக் குமரா!
கங்கை மூழ்கலையும்; நோன்புகளையும் விடுங்கள்!!;ஆனால் தானம் செய்தால் கூட; இறை ஞானம் இல்லாவிடில் ,பந்தங்களில் இருந்து விடுபட முடியாதா????ஆதனால் இறைஞானத்துக்கு கோவிந்தனை வழிபடும் படிகூருகிறார்.
நன்று!
யோகன் பாரிஸ்

June 19, 2006 4:03 AM
சிவமுருகன் said...
நல்ல பாடலுக்கு உங்கள் விளக்கம் அருமை.
"இறைஞானம் இல்லாதவன் நூறு நூறு பிறவிகள் எடுத்தாலும் பந்தங்களில் இருந்து விடுதலை அடைவதில்லை"

என்ற வரிகள் என்னமோ செய்தது. சீக்கிரமே கங்கையை தரிசிக்க வேண்டும் பரிட்சை முடியட்டும்.

June 19, 2006 6:23 AM
காஞ்சி பிலிம்ஸ் said...
"இறைஞானம் இல்லாதவன் நூறு நூறு பிறவிகள் எடுத்தாலும் பந்தங்களில் இருந்து விடுதலை அடைவதில்லை"
இதை சங்கரரே நிரூபித்துள்ளார் என்பது உங்களுக்கு தெறியுமோ? உங்களுக்கு கன்டிப்பாக தெறியும். மற்றவர்களுக்காக அதை இங்கு சொல்ல விரும்புகிறேன்.நீங்கள் அனுமதித்தால்.

June 19, 2006 8:58 AM
குமரன் (Kumaran) said...
காஞ்சி பிலிம்ஸ். வேண்டாத விவாதத்தைத் தொடங்கும் பின்னூட்டமாக இல்லாதவரை எதுவுமே அனுமதிக்கப்படும்.

June 19, 2006 9:02 AM
காஞ்சி பிலிம்ஸ் said...
"இறைஞானம் இல்லாதவன் நூறு நூறு பிறவிகள் எடுத்தாலும் பந்தங்களில் இருந்து விடுதலை அடைவதில்லை"

அனுமதி தந்தமைக்கு மிக்க நன்றி. துறவரம் பூண்ட நமது சங்கரர் துறவத்திற்குரிய அனைத்து மாற்றங்களையும் செய்து கொண்டார். அதாவது பூநூல் அகற்றி சிகை மழித்து காவி உடுத்தி பரதேசி கோலம் கொண்டு இத்தேசம் எங்கும் பயணித்து பல அறிஞர்களை சொற்போர்களிலும் வென்றார் என்பது வரை எல்லோருக்கும் சாதாரனமாக அறிவார்கள். ஆனால் அவருடைய தாய் ஆரியாம்பாள் திடீரென்று காலமானவுடன், இறைஞானம் கொண்ட சங்கரர் ஓடிவந்து, அது வரை தான் போதித்து வந்த அத்வைத்த தத்துவத்திற்கு புறம்பாக ஈமை காரியங்களை செய்தார் எனற வரலாறு யாருக்கும் தெரியாமலே போய்விட்டது. தன் போதனைகளை அவரே வாழ்ந்து காட்டினார் என்று சொல்ல வந்தேன்.

இதே போல் இன்னொறு உதாரணம் திருஅண்ணாமலையில் வாழ்ந்த முற்றும் துறந்ததாக கருதப்பட்ட குரு ரமண ரிஷி. தன் தாய்க்கு சமாதி அமைத்து, அதனையே தன்னுடைய மடமாக மாற்றி, அங்கேயே தன் சகோதரருடன் வாழ்ந்து மறைந்த பெருமை அவரைச் சேரும்.
ஆக எவ்ளோ பெரிய இறைஞானம் பெற்ற துறவியா ஊர் உலகத்துக்கு இருந்தாலும் பந்தம் பாசம் என்று வரும் போது they show thier true colours.
"இறைஞானம் இல்லாதவன் நூறு நூறு பிறவிகள் எடுத்தாலும் பந்தங்களில் இருந்து விடுதலை அடைவதில்லை"

பந்தபாசம் என்பது மனிதனுக்கு மட்டுமல்லாது எல்லா ஜீவராசிகளுக்கும் உள்ள இயல்பான உணர்ச்சி. அது ஒரு "genetic message". அதை விட்டுபுடுரண்டா சாமின்னா அது முடியாது. Survivalக்கு தேவையான தன்னுயிர்காத்தல், பசி, பாலுணர்ச்சி, பந்தபாசம் இவைகளை மறைக்கலாமே ஒழிய மறக்க முடியாது என்பது என்னுடைய தாழ்மையான கருத்து. The genetically transfered messages cannot be erased, unless and otherwise if we are genetically modified. "முற்றும் துறந்த பந்தபாசம் இல்லாத ஒரு குழந்தை செய்து கொடுப்பா" என்று made to order வேண்டும் என்றால் செய்யலாம்.

"மனிதன் இறைஞானம் அடைவதென்பது ஒரு மாயையே".

தவறுகள் இருப்பின் எப்பொதும் போலவே இடித்துரைக்குமாரு கேட்டுக் கொள்கிறேன்.

மிக்க நன்றி.

June 19, 2006 9:57 AM
ரங்கா - Ranga said...
குமரன்,

வழக்கம் போல் எளிமையான விளக்கம். நன்றி. சிவ வாக்கியரின் 'நட்ட கல்லை' பாடல் நினைவிற்கு வருகிறது. காரியங்களினால் காரணத்தை அறியலாம்; காரணத்தை நினையாமல் காரியத்தை மட்டும் செய்தால் காரணம் கடைசி வரை பிடிபடாமல் போகலாம் என்பதை அழகாக விளக்குகிறது.

ரங்கா.

June 19, 2006 10:02 AM
குமரன் (Kumaran) said...
காஞ்சி பிலிம்ஸ். நாரிஸ்தனபர நாபி தேஸம் என்று தொடங்கும் பாடலுக்குப் பொருளை இன்னும் சொல்லவில்லை. அந்தப் பாடல் வரும் போது விளக்கத்தைச் சொல்கிறேன். அதுவரை உங்களால காத்திருக்க முடியும் என்று நம்புகிறேன். அதனால் அதனைப் பற்றிக் கேட்கும் உங்கள் பின்னூட்டத்தை அனுமதிக்கவில்லை. பொறுமைக்கு நன்றி.

June 19, 2006 10:10 AM
செல்வன் said...
காஞ்சி பிலிம்ஸ்,

சங்கரர் தாய்க்கு இறுதி சடங்கு செய்ய காரணம் அவர் துறவறம் பூணும்போது தாய்க்கு அளித்த வாக்குறுதி.துறவறம் பூணும்போது அவர் தாய் கடசீயாய் தன் மகன் தனக்கு கொள்ளி வைக்க வேண்டும் என கேட்டார்.அப்படியே சங்கரரும் வாக்கு கொடுத்து விட்டார்.செய்து கொடுத்த சத்தியத்தை எப்படி சன்யாசியால் மீறமுடியும்?

ரமணர் பற்றி நான் அறியேன்.நன்றி

June 19, 2006 3:58 PM
காஞ்சி பிலிம்ஸ் said...
//செய்து கொடுத்த சத்தியத்தை எப்படி சன்யாசியால் மீறமுடியும்?//

துறவு என்றால் துறவு அவ்வளவுதான். அதுல அம்மா பாசம்,சத்தியம் என்பதெலாம் சப்பைக்கட்டு. திருமண சடங்கின் போது எவ்வளவு சத்தியங்கள் என்னென்ன தெவதைகளுக்கு மணமேடையில் செய்து கொடுக்கிறான் ஒரு ஆடவன், ஒருக்காலமும் இந்த பெண்ணை கைவிடமாட்டேன் என்று? ஆனால் அவனே துறவரம் பூனும் போது அவ்வளவு சத்தியங்களும் மீரித்தான் போகிறான்.
ஆக சங்கரர் விஷ்யத்தில் வந்தது சத்தியம் இல்லை - பாசமே.

"இறைஞானம் இல்லாதவன் நூறு நூறு பிறவிகள் எடுத்தாலும் பந்தங்களில் இருந்து விடுதலை அடைவதில்லை"

ஆரம்பம் முதல் கடைசிவரை சங்கரரிடத்தில் உள்ள ஒரு தெளிவற்ற தன்மையாலேயே அவர் கண்டுபிடித்த அத்வைத்தமும் தொல்விவுற்றது என்று கூறுபவர்கள் நிறைய...தன் தாய்க்காக துறவரத்தையும் அத்வைத்த தத்துவத்தையும் கேள்விகுறியாக்கிய சங்கரர் மற்ற பெண்களை மட்டும் இப்படி இழிவாக சொல்வானேன்: "நாரீஸ் தனபர நாபீதெசம் த்ரிஷ்டவா மாதா மோஹாவேஸம்".

June 20, 2006 4:01 AM
குமரன் (Kumaran) said...
மனு அம்மா. கங்கையைப் பார்ப்பதாலோ அதில் நீராடுவதாலோ சத்சங்கத்தாலோ ஞானம் வருமா என்று தெரியவில்லை. இறைவன் கருணையினாலேயே ஞானம் கைகூடும் என்று இதுவரை படித்தும் கேட்டும் அறிந்ததிலிருந்து நினைக்கிறேன். கங்கையும் நோன்புகளும் சத்சங்கங்களும் மனத்திற்குச் சுத்தியைத் தந்து இறைவனைச் சரணடைய வழி வகுக்கும். அதனால் ஞானம் உண்டாகலாம்.

தங்களின் அதீதப் புகழ்ச்சிக்கு நன்றி.

June 22, 2006 12:05 PM
குமரன் (Kumaran) said...
யோகன் ஐயா, இறுமாப்பு என்பது எத்தனையோ வழிகளில் நமக்கு வருகிறதே. கங்கையில் நீராடினாலும் சரி; நோன்புகளை நோற்றாலும் சரி; மற்றவருக்குப் பொருளுதவி செய்தாலும் சரி; எந்த நல்ல காரியம் செய்தாலும் உடனே இறுமாப்பு வந்துவிடுகிறதே. அது இருக்கும் வரை ஞானம் எப்படி வரும்? பந்தபாசங்கள் எப்படி நீங்கும்? நீங்கள் சொல்வது சரி. இறைவன் கருணையாலேயே ஞானம் வரவேண்டும். அதற்கு இறைவன் திருநாமங்களைச் சொல்லவேண்டும்.

June 22, 2006 12:08 PM
குமரன் (Kumaran) said...
சிவமுருகன். இந்த வரிகள் என்னமோ செய்தது என்று சொல்லிவிட்டு உடனே கங்கையத் தரிசிக்க வேண்டும் என்கிறீர்களே? புரியவில்லை.

June 22, 2006 3:27 PM
குமரன் (Kumaran) said...
காஞ்சி பிலிம்ஸ். ஆதிசங்கரர் தன் தாயாரின் இறுதிச்சடங்குகள் செய்ததும் ரமண ஆசிரமத்தில் ரமணர் தன் தாயாருக்குச் சமாதி அமைத்ததும் தாய்ப்பாசத்தினாலேயா இல்லை வேறு காரணங்களாலேயே என்று சொல்வது அவ்வளவு எளிதில்லை. எத்தனையோ விதமான மனிதர்கள் இருக்கிறார்கள். ஒவ்வொருவர் செயலும் ஒவ்வொரு விதமாக இருக்கிறது. நம்மோடு கூட வாழ்ந்து நம்மோடு எப்போதும் இருப்பவர்களே எந்தக் காரணத்திற்காக எதனைச் செய்கிறார்கள் என்பது நமக்குத் தெரிவதில்லை. அதனால் ஆதிசங்கரரின் செயலுக்கும் ரமணரின் செயலுக்கும் நம்மால் காரணம் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை. மற்றவர் நிலையில் நம்மை வைத்துப் பார்த்தால் அவர்கள் உணர்வுகளைப் போலேயே நாமும் உணரமுடியுமா? தாயும் பிள்ளையுமானாலும் வாயும் வயிறும் வேறு வேறு தானே. அப்படி இருக்க நம் பார்வையில் வைத்து அவர்களைப் பார்த்து மனிதம் இறைஞானம் அடைவது என்பது ஒரு மாயையே என்றால் ஆதரித்துக் கூறவோ மறுத்துக் கூறவோ என்னிடம் எதுவும் இல்லை. என் பதில் எனக்குத் தெரியாது என்பதாகத் தான் இருக்கும். அப்படிச் சொல்லாமல் அவர்களுக்காகப் பரிந்துப் பேச முயற்சித்தால் அது நேர்மையானதாக இருக்காது. என் நேர்மையான பதில் 'அவர்களுடைய செயல்களுக்கு நம்மால் காரணம் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை. அதனால் எனக்குப் பதில் தெரியாது' என்பது தான்.

ஆதிசங்கரர் தாயின் ஈமச் சடங்குகள் செய்தார் என்பது சரி. ஆனால் அது அத்வைதத் தத்துவத்திற்கு புறம்பாக என்று சொல்லியிருக்கிறீர்களே அது சரியில்லை. சன்யாசி ஈமச் சடங்குகள் செய்யலாகாது என்று தான் உள்ளதே ஒழிய அத்வைதி செய்யக்கூடாது என்பது விதி இல்லை. அத்வைதிகளாக துறவிகள் அல்லாதவர்களும் இருக்கிறார்கள் என்பதை நீங்கள் ஒத்துக் கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்.

ஆதிசங்கரர் செய்தது தன் தாயின் மேல் உள்ள பாசத்தினால் என்கிறீர்கள் நீங்கள். செல்வன் அது அவர் தன் தாயாருக்குக் கொடுத்த வாக்குறுதிக்காக என்கிறார். சங்கரர் தன் தாயாருக்குத் தந்த வாக்குறுதிக்காகவே பந்தபாசம் இல்லாமல் ஈமச்சடங்குகள் செய்திருக்கலாமே. துறவு பெரிதா வாக்குறுதி பெரிதா என்ற கேள்வி வந்தால் அதனைத் தீர்மானம் செய்யும் உரிமையை அவருக்குக் கொடுத்து அவர் வாக்குறுதி தான் பெரிதாக எடுத்துக் கொண்டார் என்றும் சொல்லலாமே?

ரமணர் தன் தாயாரைப் பிரிய முடியாமல் தன்னுடன் அழைத்து வைத்துக் கொண்டாரா இல்லை தாயார் அவரைப் பிரிய முடியாமல் வந்து தங்கிக் கொண்டாரா; அதனை ரமணர் மறுக்காமல் விட்டாரா என்று தெரியவில்லை. தாயாரின் சமாதியின் அருகிலேயே அவர் வளர்த்த மிருகங்களுக்கும் சமாதி இருக்கிறது. அதனைப் பார்த்துவிட்டு நான் ரமணருக்குத் தன் தாயாரும் சமம்; மிருகங்களும் சமம்; எல்லா உயிர்களையும் சமமாகப் பார்த்தார் என்று சொன்னால் நீங்கள் ஒத்துக் கொள்ளப் போகிறீர்களா என்ன? :-) இல்லை அவர் தன் தாயாரிடமும் சரி; மிருகங்களிடமும் சரி; எல்லா உயிர்களிடமும் கொண்டிருந்தது பாசம் இல்லை; அன்பு. அன்பிற்கும் பாசத்திற்கும் வேறுபாடு சொல்லமுடியும் அல்லவா? துறவி பாசம் கொள்ளக்கூடாது என்பது தான் விதி; ஆனால் எல்லா உயிர்களிடமும் அன்பு செலுத்த வேண்டும் என்பதும் விதி தானே.

ரமணர் ஞானம் பெற்றார் சரி. அதனால் அவர் குடும்பத்தில் வேறு யாருக்கும் ஞானம் பெற வேண்டும் என்ற எண்ணம் வரக்கூடாதா? அப்படிப்பட்ட எண்ணம் வந்து சத்சங்கத்திற்காக ரமண ஆசிரமம் வந்து தங்கியிருக்கக் கூடாதா? தாயாரும் உடன்பிறந்தவரும் அவர்கள் வந்து தங்கியிருந்து அதனை ரமணர் மறுக்காததாலேயே அவரின் பாசம் போகவில்லை என்று எப்படிச் சொல்ல முடியும்? அது பாசம் தான் என்று சொல்லவும் முடியாது. அது பாசம் இல்லை என்றும் சொல்லமுடியாது. அது தான் என் நிலை.

//ஆக எவ்ளோ பெரிய இறைஞானம் பெற்ற துறவியா ஊர் உலகத்துக்கு இருந்தாலும் பந்தம் பாசம் என்று வரும் போது they show thier true colours.
//

இதனை நீங்கள் நம்பவிரும்பினால் எந்தத் தடையும் இல்லை. எத்தனையோ பேர் இந்த எண்ணத்திற்குச் சாதகமாகத் தான் நடந்து கொள்கிறார்கள். அதனால் அந்த அனுபவத்தின் பேரில் நீங்கள் இப்படி நன்றாகச் சொல்லலாம்.

//பந்தபாசம் என்பது மனிதனுக்கு மட்டுமல்லாது எல்லா ஜீவராசிகளுக்கும் உள்ள இயல்பான உணர்ச்சி. அது ஒரு "genetic message". அதை விட்டுபுடுரண்டா சாமின்னா அது முடியாது. Survivalக்கு தேவையான தன்னுயிர்காத்தல், பசி, பாலுணர்ச்சி, பந்தபாசம் இவைகளை மறைக்கலாமே ஒழிய மறக்க முடியாது என்பது என்னுடைய தாழ்மையான கருத்து. The genetically transfered messages cannot be erased, unless and otherwise if we are genetically modified. "முற்றும் துறந்த பந்தபாசம் இல்லாத ஒரு குழந்தை செய்து கொடுப்பா" என்று made to order வேண்டும் என்றால் செய்யலாம்.

//

Argument sake logic நன்றாக இருக்கிறது. ஆனால் படிக்கும் போதே முற்றும் துறந்தவர்கள் இருந்ததாக எத்தனையோ வரலாறுகள் சொல்கின்றனவே என்று தோன்றுகிறது. நீங்கள் சொல்லும் லாஜிக் பந்த பாசம் நீங்குவது எத்தனை கடினம் என்பதனைச் சொல்ல வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.

இடித்துரைப்பதா? என்ன காஞ்சி பிலிம்ஸ். யாரையும் தேவையில்லாமல் தாக்காமல் என் கருத்து என்ன என்று கேட்டீர்களானால் என் கருத்தினைச் சொல்கிறேன். நீங்கள் உங்கள் கருத்தினைச் சொல்கிறீர்கள். அவ்வளவு தான். என் கருத்துகளை நீங்களோ மற்றவர்களோ ஏற்றுக் கொள்ளவேண்டும் என்ற கட்டாயமும் இல்லை; நானும் உங்கள் கருத்துகளை ஏற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயமும் இல்லை. சில நேரம் தேவையில்லாமல் விவாதம் நீண்டு கொண்டே போகும் போது 'டைம் அவுட்' சொல்வது போல் சடாரென்று நிறுத்திக் கோள்வதும் உண்டு. அந்த வகையில் சேர்ந்தது தான் சில பின்னூட்டங்களை அனுமதிக்காமல் இருப்பதும். ஆனால் அந்தக் கருத்தை நீங்கள் தனிப்பதிவாகப் போட்டு 'நான் குமரன் பதிவில் பின்னூட்டமாஇப் போட்டேன். அவர் அனுமதிக்கவில்லை' என்று சொன்னால் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. அந்த விவாதத்தை என் பதிவில் வைத்துக் கொள்ளவேண்டாம் என்பது தான் அப்போது என் நிலை.

June 22, 2006 3:53 PM
குமரன் (Kumaran) said...
ஆமாம் ரங்கா அண்ணா. சரியான எடுத்துக்காட்டாய் சொன்னீர்கள். ஆமாம் எந்த காரணத்தால் கங்கையில் குளிப்பதும் நோன்புகளை நோற்பதும் தானங்களைக் கொடுப்பதும் செய்கிறோமோ அந்த 'மனத்தூய்மை பெறுதல்' என்ற காரணத்தை மறந்து விட்டு இந்தச் செயல்களைச் செய்தால் இறுமாப்பு தான் வளரும்.

June 22, 2006 3:55 PM
குமரன் (Kumaran) said...
//துறவு என்றால் துறவு அவ்வளவுதான். அதுல அம்மா பாசம்,சத்தியம் என்பதெலாம் சப்பைக்கட்டு. திருமண சடங்கின் போது எவ்வளவு சத்தியங்கள் என்னென்ன தெவதைகளுக்கு மணமேடையில் செய்து கொடுக்கிறான் ஒரு ஆடவன், ஒருக்காலமும் இந்த பெண்ணை கைவிடமாட்டேன் என்று? ஆனால் அவனே துறவரம் பூனும் போது அவ்வளவு சத்தியங்களும் மீரித்தான் போகிறான்.
ஆக சங்கரர் விஷ்யத்தில் வந்தது சத்தியம் இல்லை - பாசமே.
//

A did this. B did that. So what A did is not this but that. Your Logic is like that.

ஆதி சங்கரர் திருமணம் ஆனவர் இல்லை.

//ஆரம்பம் முதல் கடைசிவரை சங்கரரிடத்தில் உள்ள ஒரு தெளிவற்ற தன்மையாலேயே அவர் கண்டுபிடித்த அத்வைத்தமும் தொல்விவுற்றது என்று கூறுபவர்கள் நிறைய...தன் தாய்க்காக துறவரத்தையும் அத்வைத்த தத்துவத்தையும் கேள்விகுறியாக்கிய சங்கரர் மற்ற பெண்களை மட்டும் இப்படி இழிவாக சொல்வானேன்: "நாரீஸ் தனபர நாபீதெசம் த்ரிஷ்டவா மாதா மோஹாவேஸம்". //

Explained many points on this already. The explanation for 'நாரீஸ் தனபர நாபீதெசம்' will come when that song is discussed.

June 22, 2006 3:58 PM
செல்வன் said...
//துறவு என்றால் துறவு அவ்வளவுதான். அதுல அம்மா பாசம்,சத்தியம் என்பதெலாம் சப்பைக்கட்டு.//

நீங்கள் துறவறம் பூணும்போது அம்மாதிரி விதிகளை வைத்து கொள்ளுங்களேன்?யார் தடுத்தார்கள்?மாத்ருதேவோ பவ என உலகம் முழுக்க பிரச்சாரம் செய்ய வேண்டிய சங்கரர் எம்மாதிரி விதிகளை வைத்துக்கொண்டு துறவறம் பூணுவது என்பதை அவர் முடிவு செய்து கொள்ளட்டும்.

//திருமண சடங்கின் போது எவ்வளவு சத்தியங்கள் என்னென்ன தெவதைகளுக்கு மணமேடையில் செய்து கொடுக்கிறான் ஒரு ஆடவன், ஒருக்காலமும் இந்த பெண்ணை கைவிடமாட்டேன் என்று? ஆனால் அவனே துறவரம் பூனும் போது அவ்வளவு சத்தியங்களும் மீரித்தான் போகிறான்.
ஆக சங்கரர் விஷ்யத்தில் வந்தது சத்தியம் இல்லை - பாசமே.//

மணமேடையில் செய்து தரும் சத்தியமும் பெற்ற கடனும் ஒன்று அல்ல.பெற்ற கடனை எத்தனை ஜென்மம் எடுத்தாலும் திருப்பி தரவே முடியாது.பெற்றவர்கள் கண்ணிர் வடிக்க தவக்கோலம் பூணுபவன் தன் தவத்தால் அடையப்போகும் பலன் எதுவுமில்லை.தாயிற் சிறந்ததொரு கோயிலுமில்லை என்பது ஆன்றோர் வாக்கு.மாத்ருதேவோ பவ எனும் தர்மத்தை எந்த துறவியாலும் மீற முடியாது.

சங்கரர் விஷயத்தில் அவரை முழுக்க முழுக்க துறவி என சொல்ல முடியாது.அவர் ஜெகத்குரு.பூவுலக மக்கள் அனைவருக்கும் தகப்பன் ஸ்தானத்துக்கு போனவர்.அனைத்து பற்றுக்களையும் அறுத்தவராக இருந்திருந்தால் மானிடர்கள் மீதான பற்றையும் அறுத்து,ஜெகத்குரு ஸ்தானத்தையும் துறந்திருக்க வேண்டும்.அவர் அப்படி செய்யவில்லை.ஏன்?மனிதர்கள் உய்வடைய வழி காட்ட வேண்டும் என்ற எண்ணத்தினால் தான்.

துறவறம் பூண்ட பின் தன் தாயும் அவருக்கு ஒரு சீடர் தான்.ஆனால் அவர் தாயால் அவரை தன் மகனாக அன்றி குருவாக நினைக்க முடியவில்லை.கிட்டத்தட்ட தசரதன் நிலை தான் அவர் தாய்க்கும்.தசரதனால் பரம்பொருளை தன் மகனாக மட்டுமே நினைத்து அன்பு செலுத்த முடிந்தது.அந்த அன்பை மறுக்காத பரப்பிரம்மமான ராமனும் தசரதன் மகன் போலவே நடித்து வந்தான்.ஒரு நேர்மையான மகன் எப்படி இருப்பானோ அப்படி இருந்தான்.

சங்கரர் செய்ததும் அதைத்தான்.அதற்கு காரணம் காருண்யம்,கொடுத்த வாக்குறுதி,தன்னை சரணடைந்த ஒரு உயிருக்கு வேண்டியதை அளிக்கும் தர்மம் ஆகியவையே காரணம்.தன் தாய் அன்றி வேறு எந்த தாய் கேட்டிருந்தாலும் சங்கரர் செய்திருக்க போவது அதைதான்.

வரம் கேட்ட பக்தைக்கு இறைவன் அளித்த வரம் அது.கொடுத்த வாக்கை இறைவன் என்னாளும் காப்பான்.

June 22, 2006 4:42 PM

Kavinaya said...

//எந்த நல்ல காரியம் செய்தாலும் உடனே இறுமாப்பு வந்துவிடுகிறதே.//

ரொம்ப உண்மை. மாயை! எதைச் செய்தாலும் போதை! விட்டு விடுதலையாக சாவி அவன் கையில் இருக்கிறது!

குமரன் (Kumaran) said...

உண்மை அக்கா. நன்றி.