Wednesday, June 11, 2008

துறவிகளையும் ஆசைகள் விடுவதில்லை (பஜகோவிந்தம் 16)


அக்ரே வஹ்னி: ப்ர்ஸ்தே பானு:
ராத்ரௌ சுபுக சமர்ப்பித ஜானு:
கரதல பிக்ஷ: தருதல வாச:
ததபி ந முஞ்சதி ஆசா பாச:


எல்லாவற்றையும் துறந்த துறவிகள் இந்த மாதிரி வாழ்க்கை வாழ்கிறார்கள்:

அக்ரே வஹ்னி: - முன்னால் குளிருக்கு இதமாக நெருப்பு இருக்கிறது

ப்ர்ஸ்தே பானு: - முதுகுக்குப் பின்னால் மறையும் கதிரவன் இருக்கிறான்

ராத்ரௌ சுபுக சமர்ப்பித ஜானு: - இரவு நேரத்தில் குளிரிலிருந்து தப்பிக்க முழங்கால்களுக்கு நடுவில் தாடையை வைத்திருக்கிறார்

கரதல பிக்ஷ: - சாப்பிடுவதற்கு பிச்சை எடுக்கும் பாத்திரமோ கைகள்

தருதல வாச: - மரத்தடியிலேயே வாழ்க்கை

ததபி ந முஞ்சதி ஆசா பாச: - இந்த நிலையிலும் ஆசாபாசங்கள் ஒருவரை விடுவதில்லை.

கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.

***

இந்தப் பாடலில் போலிச் சாமியார்களைப் பற்றிச் சொல்லவில்லை ஆதிசங்கரர். உண்மையான சந்நியாசிகளின் வாழ்க்கை முறையைக் கூறி அப்படிப்பட்டவர்களையே ஆசாபாசங்கள் விடுவதில்லை என்று சொல்லி பற்றுகளின் பந்தங்களின் வலிமையைச் சொல்கிறார்.

6 comments:

குமரன் (Kumaran) said...

இந்த இடுகை 'பஜ கோவிந்தம்' பதிவில் 13 ஜூன் 2006 அன்று இடப்பட்டது. அப்போது வந்த பின்னூட்டங்கள்:

82 comments:

வெளிகண்ட நாதர் said...
போண்டியாயி ஆண்டியானுலும் ஆசை விடாது!

கோவிந்தா.. கோவிந்தா...
கோவிந்தா.. கோவிந்தா...

June 13, 2006 9:16 PM
---

Muse (# 5279076) said...
There is a parody against paja kovindam known as "Pasi kovindam".

June 13, 2006 11:53 PM
---

குமரன் (Kumaran) said...
ஆமாம் வெளிகண்டநாதர். போண்டியாகி ஆண்டியானாலும் ஆசை விடாது போலும். இங்கே சொல்றது தானே எல்லாவற்றையும் துறந்து போனவரைப் பற்றி. அவர்களையே ஆசை விடாது என்னும் போது தற்செயலாக ஆண்டியானவர்களைப் பற்றி என்ன சொல்ல? அதனால் தான் சிறுவயதிலிருந்தே கோவிந்தனை வணங்குங்கள் என்கிறார்கள் போலும்.

June 14, 2006 6:00 AM
---

குமரன் (Kumaran) said...
Muse, பசி கோவிந்தத்தை எங்கே படிக்கலாம்?

June 14, 2006 6:01 AM
---

johan -paris said...
குமரா!!!!
இப்படி!!! ஆதிசங்கரர் துறவறத்தைப் பற்றிக் கூறியுள்ளார். இன்று எந்தத் துறவி இப்படி ?,,வாழ்கிறார். குட்டி,புட்டி,குளிர்ப் பெட்டி வாழ்க்கையென அனுபவித்து, எம்மை எல்லாம் துறந்து;கோவாணாண்டியாகதானே! சொல்லிறார்கள். எங்களை"ஈசனோடும் ஆசை அறுமின்" என்று விட்டு
அவங்க !!!உயிராசையில "ஏ கே 47" காவல்; நம்மவங்க காசில போட்டுப் பயந்து திரிகிறாங்க!!!!;அவங்க பாதுகாப்புக்குக் காசைக் கொடுத்து விட்டு;அவர் அருள் தன்னைக் காக்குமெனக் "கன்னத்தில்" போடுரான்.
இவர்களை எப்போ!!,,?? துறப்போம்.
யோகன் பாரிஸ்

June 14, 2006 6:34 AM
--

Muse (# 5279076) said...
விந்தன் எழுதியிருக்கிறார் என்பது தெரியும்.

கிடைக்குமிடம் தெரிந்தால் நானும் படிப்பேன். ஓஸியில் கிடைத்தால் இன்னும் பெட்டர். :-)

அதிலிருப்பதாகக் கூறப்படும் ஒரே ஒரு பாடலை படித்திருக்கிறேன். எனக்குத் தோன்றியது இதுதான் - பஜ கோவிந்தம் மலை. மற்றதெல்லாம் மடு.

June 14, 2006 6:35 AM
--

குமரன் (Kumaran) said...
யோகன் ஐயா. நிறைய துறவிகள் இப்படி இருக்கத் தான் செய்கிறார்கள். ஓரிரு மடாதிபதிகளையும் ஆதினங்களையும் பார்த்துவிட்டு நீங்கள் இப்படிக் கேட்கிறீர்கள். மடாதிபதிகளும் ஆதினங்களும் காவி புனைந்திருந்தாலும் அவர்கள் ஒரு நிறுவனத்தின் தலைவர்கள். அதனால் அவர்களை துறவிகள் என்று சொல்வது பொருந்தாது என்று நினைக்கிறேன் (அவர்களே தங்களைச் சந்நியாசிகள் என்று சொல்லிக் கொண்டாலும்). நிறுவனத்தில் அகப்பட்டுக் கொண்டாலே துறவறம் போய்விட்டது என்று தான் பொருள். இதே நேரத்தில் நிறுவனத்தின் தலைவராக இருந்து கொண்டு உண்மையான துறவிகளாக இருக்கும் மடாதிபதிகளும் ஆதினங்களும் எண்ணற்றோர் இருக்கின்றனர்; அவர்களை மெச்ச வேண்டும். அவர்கள் நம் பார்வைக்குப் படுவதில்லை. வெள்ளை வேட்டியில் கருப்புப் புள்ளியே அதிக கவனம் பெறுவது போல் துறவியில்லாத மடாதிபதிகளும், ஆதினங்களுமே நம் கண்களுக்குத் தென்படுகிறார்கள்.

June 14, 2006 6:47 AM
---

குமரன் (Kumaran) said...
Muse,

உண்மை. பஜ கோவிந்தம் ஒரு அருமையான ஆன்மிக நூல் என்பதில் ஐயமே இல்லை.

June 14, 2006 6:48 AM
--

johan -paris said...
ஆம் குமரா!!
வர வரக் கறுப்பு, வேட்டியில் பெரிய இடத்தைப் பிடிப்பதே! கவலை. ஏன்? ,குன்றக்குடி அடிகளாரைப் பற்றி மிக நன்றாகக் கேள்விப்பட்டுள்ளேன்.எனக்கு எந்தத் துறவி,சன்யாசி,சாமி என்பவர்களுடனும்; நேரடித் தொடர்பில்லை."யூனியர் விகடன்" படிப்பேன். இப்போ கூட ;தேர்தலுடன் மதுரை ஆதீனமடித்த அத்தர்ப்பல்டியைப் படிச்சுச் சிரிச்சு; வயிறு புண்ணாச்சு; அது சோறு தான் தின்னுதா??? என்று சந்தேகமே!! வந்துது. சில வருடங்களுக்கு முன்,இது பற்றிக் கசிந்த கதைகளுக்கு,அதே ஒப்புதல் வாக்கு மூலம் கொடுத்தது போல் இருந்தது."அடப் பாவி"- இப்படியும் ஒரு நாக்கா,,,,
ஒரே கவலை எம் மககள்;இன்னும் அரசியலிலும்;ஆத்மீகத்திலும் மாக்களாகவே!!! இருந்தேமாறுவது.
நான் ஆண்டவனை நம்புகிறேன்;என் இளமையிலிருந்து காவிகளை நம்புவதே இல்லை. என் முடிவைச் சரியாக்குவதாகவே!! இருக்கிறது. அவர்கள் நடப்பு!!!!
அடுத்து துறவிகளுக்கும்;சன்யாசிகளுக்கும்,;என்னைப் போன்ற ஏழைகளைப் பிடிக்காது. அவர்கள் நாடுவது பசையும்;படை பலம் மிக்கோரையுமே.!!!
சிவ சிவா!!
யோகன் பாரிஸ்

June 14, 2006 7:47 AM
--

தி. ரா. ச.(T.R.C.) said...
கண்ணுக்கு தெரிந்த சில போலித்துறவிகளை வைத்து நாம் பார்க்காத ஆயிரக்கணகான உண்மைட்துறவிகளை எடை போடக்கூடாது. தி ரா ச

June 14, 2006 7:59 AM
--

செல்வன் said...
யோகன் பாரிஸ் ஐயா,

நல்ல சாமியார்களும் கெட்ட சாமியார்களும் எல்லா காலத்திலும் இருந்திருக்காங்க.முன்காலத்தில் அப்சரஸ்களோட உல்லாசமா இருந்த சாமியார்கள்,ராஜா கிட்ட அவன் பொண்னை தானமா கேட்ட சாமியார்கள் எல்லாரும் இருந்திருக்காங்க.கபட வேடதாரி,ஆசாடபூதின்னு அப்பவே சொல்வடை இருக்கு.

அதே சமயம் நல்ல சாமியார்களும் ஏராளமா இருந்திருக்காங்க.என்ன நமக்கு அவங்களை தெரியாது.நல்ல குரு வேணும்னு தேடி தேடி அலைஞ்சவங்களோட கதை ஏராளம்.

இப்ப நல்ல சாமியார்கள் இருக்காங்களான்னு கேட்டா இருக்காங்கன்னு தான் சொல்லுவேன்.கிருபானந்த வாரியார் முருகனோட அவதாரமாவே வாழ்ந்து மறைந்தார்.யோகி ராம்சுரத்குமார் பத்தி நல்லவிதமா தான் கேள்விப்பட்டிருக்கேன்.ஸ்ரிரங்கம் ஜீயர்,பரமாச்சாரியார்,அண்ணங்கராச்சாரியார்,ன்னு வாழும் தெய்வமாவே நிறைய மகான்கள் தற்காலத்திலும் வாழ்ந்திருக்காங்க.

June 14, 2006 5:53 PM
---

சிவமுருகன் said...
அண்ணா,
சரியா சொன்னீங்க.
ஆசை விடாது தான்.
விட்டுட்டா தொல்லை.... இல்லை.

விடுபட வைப்பதும் அவன் செயல், அதுவும் நம்முடைய முன்செயல்களுக்கேற்ப்ப.

June 14, 2006 11:21 PM
--

காஞ்சி பிலிம்ஸ் said...
"பஜகோவிந்தத்தில் பண்ணிரெண்டு பாட்டுகள் மட்டுமெ ஆதிசங்கரரால் இயற்பட்டது என்பதற்கு முதல் பாட்டே சாட்சி" அப்படின்னு சொல்றாங்களே அதைப்பற்றி உங்களுடைய கருத்து ?

அது சரி இந்த அத்வைத்ததிற்கும் சந்திரமௌளீஸ்வரர் பூஜைக்கும் உள்ள சம்மந்தத்தை சற்று விளக்குங்கள் ஐயா.

அப்படியே நேரம் இருந்தால் இதை கேட்டுப்பாருங்கள்.

June 15, 2006 6:53 AM
---

செல்வன் said...
ஏ மூட மனமே! கோவிந்தனை வணங்குவாய். கோவிந்தனை வணங்குவாய். கோவிந்தனை வணங்குவாய்.நாம் போகும் காலம் வரும் போது நாம் படித்த எந்த கல்வியும் உடன் வராது. வீணாக பொய்க்கல்விகளில் நேரத்தை வீணாக்காதே.

நீ கோவிந்தனை வணங்குவாய். கோவிந்தனை வணங்குவாய். கோவிந்தனை வணங்குவாய்.///

காஞ்சி பில்ம்ஸ்

இதுதான் அந்த முதல் பாட்டு.நீங்கள் சொன்ன் கருத்து இதில் எங்கே வருகிறது என எனக்கு புரியவில்லை.
சந்திர மவுலிஸ்வரர் சாமி.அத்வைதிகள் பக்தர்கள்.அவரை கும்பிடுகிறார்கள்.பக்தர்களுக்கும் கடவுளுக்கும் என்ன தொடர்பு என்று கேட்டால் என்ன பதில் சொல்லுவதென்று புரியலை.

படித்து பார்க்கும்படியான சுட்டியை கொடுங்கள்.வீட்டில் ஸ்ப்ப்பீக்கர் உள்ள கம்ப்யூட்டர் இல்லை.

நன்றி

June 15, 2006 11:07 AM
குமரன் (Kumaran) said...
இல்லைங்க யோகன் ஐயா. கருப்பு இன்னும் வேட்டியில புள்ளியாத் தான் இருக்கு. பெரிய இடத்தைப் பிடிக்கலை. ஆனால் எந்த இடத்து மேல எந்த வித புகாரும் வரக்கூடாதோ அந்த மாதிரி இடங்கள் மேல் எல்லாம் புகார்கள் வர்றதால கருப்புப் புள்ளி பெரிதாகிக்கிட்டே போறதா நமக்குத் தோணுது.

நாம் என்ன பார்க்க விரும்புகிறோமோ அது தான் நம் கண்களுக்குத் தெரியும். அதனை நீங்கள் அனுபவ பூர்வமா பல இடத்துலயும் பார்த்திருக்கலாம். நீங்கள் சொன்ன மாதிரி நீங்கள் இளமையிலிருந்து காவிகளை நம்புவதில்லை; அதனால் நம்பத்தகாத காவிகளே கண்களுக்குப் படுகிறார்களோ என்னவோ. நல்லவர்களும் தீயவர்களும் எல்லா இடத்துலயும் இருக்காங்க. இன்னும் சொல்லப் போனா எல்லாருமே ஒரு நேரத்துல நல்லவனாகவும் இன்னொரு நேரத்துல தீயவனாகவும் இருக்காங்க - நானும் அப்படித்தான். இல்லையா?

துறவிகளுக்கும் சன்யாசிகளுக்கும் ஏழைகளைப் பிடிக்காது; பசையும் படைபலமும் மிக்கோரையே பிடிக்கும் என்று சொல்வதும் அப்படிப் பட்ட முன்முடிவே (நம் தனிப்பட்ட அனுபவத்திலிருந்து வரும் முன்முடிவு). பிடிக்கும் பிடிக்காது என்பதே இருக்கக்கூடாது என்பதே துறவிகளுக்குத் தரும் வரைமுறை. அந்த வரைமுறையில் இருப்பவர்கள் சாதாரண துறவிகளாய் போய் நம் கவனத்தைக் கவர்வதில்லை. யார் பசையையும் படைபலத்தையும் தேடுகிறார்களோ அவர்களின் காவித்துணியே நம் கண்களை உறுத்தி அப்படி ஒரு முன்முடிவை எடுக்கவைக்கிறது.

நீங்கள் சொல்வதை நான் முழுமையாக ஒத்துக்கொள்கிறேன் - ஒரே ஒரு கருத்தில் தவிர. பெரும்பான்மையோர் நீங்கள் சொல்கிற படி இருக்கும் துறவிகள் என்கிறீர்கள். நான் பெரும்பான்மையோர் நீங்கள் சொல்கிற படி இல்லாத துறவிகள்; அவர்கள் நம் கண்களுக்குத் தென்படாமல் இருக்கிறார்கள் என்கிறேன். அவ்வளவே.

June 15, 2006 12:40 PM
குமரன் (Kumaran) said...
நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை தி.ரா.ச.

எத்தனையோ மகான்கள் இந்த ஞானபூமியில்
அத்தனை பேருக்கும் என் வணக்கங்கள்.

June 15, 2006 12:42 PM
குமரன் (Kumaran) said...
செல்வன். எடுத்துக்காட்டுகளுடன் விளக்கியதற்கு மிக்க நன்றி.

அண்ணங்கராச்சாரியரின் உபன்யாசம் கேட்டிருக்கிறீர்களா? அவரின் எழுத்துகளைப் படித்திருக்கிறீர்களா? இப்போது புரிகிறது சரணாகதி பற்றிய இவ்வளவு தெளிவான புரிதல் உங்களுக்கு எங்கிருந்து வந்ததென்று. :-)

June 15, 2006 12:43 PM
குமரன் (Kumaran) said...
//விடுபட வைப்பதும் அவன் செயல், அதுவும் நம்முடைய முன்செயல்களுக்கேற்ப்ப.
//

இங்கு தான் இறைவனின் கருணை நமக்கு உதவி புரியவேண்டும். நம் நல்வினைத் தீவினைக்கேற்பவே அவன் அருளும் செயலும் இருக்கும் என்றால் நமக்கு விடிவுகாலம் இல்லவே இல்லை என்று உறுதியாக எண்ணிக் கொள்ளலாம். நாம் செய்த வினைகளுக்கு அளவு உண்டா? அதனால் அந்த வினைகளுக்கு ஏற்ப அவன் அருள் வராது அந்த வினைகளையும் தாண்டி அவன் கருணையால் அவன் அருள் வந்தால் தான் நமக்கு விடிவுகாலம். அதனால் தான் 'அவன் அருளாலே அவன் தாள் வணங்கி' என்று அருளாளர்கள் சொன்னார்கள்.

June 15, 2006 12:46 PM
குமரன் (Kumaran) said...
காஞ்சி பிலிம்ஸ். நீங்கள் என்ன கேட்கிறீர்கள் என்பது கொஞ்சம் புரிந்தாலும் நீங்கள் இன்னும் தெளிவாகக் கேட்டால் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது.

ஆதிசங்கரர் முதல் பன்னிரண்டு பாடல்கள் மட்டுமே பாடினார் என்றும் அவருடன் அப்போது இருந்த அவர் சீடர்கள் அவர் முன்னிலையிலேயே மற்ற பாடல்களைப் பாடினர் என்றும் ஒரு வரலாறு கேள்விபட்டுள்ளேன். ஆனால் இந்த பஜகோவிந்தம் முழுவதும் (31 பாடல்களும்) ஆதிசங்கரராலும் அவர் முன்னிலையிலுமே பாடப்பட்டதால் இவை அவரின் கருத்துகள் என்று கொள்வதில் எந்தத் தடையும் இல்லை. ஆதிசங்கரும் அவரின் சீடர்களும் சேர்ந்து இயற்றியது என்ற வரலாற்றைச் சொல்பவர்களும் 'ஆதிசங்கர விரசித' - 'ஆதிசங்கரரால் இயற்றப்பட்ட' என்ற அடைமொழியுடனேயே தான் இந்தப் பஜகோவிந்தத்தைப் பற்றிச் சொல்கிறார்கள்.

இந்த சேதிக்கு முதல் பாட்டே சாட்சி என்று சொல்லியிருக்கிறீர்களே; அது எப்படி என்று விளக்குகிறீர்களா? எனக்கு எந்த துப்பும் அந்தப் பாடலில் கிடைக்கவில்லை.

அத்வைதத்திற்கும் சந்த்ரமௌலீஸ்வரர் பூஜைக்கும் உள்ள தொடர்பினைப் பற்றிக் கேட்டிருக்கிறீர்கள். கேள்வி தெளிவாக இல்லை. தெளிவாகக் கேளுங்கள். எனக்குத் தெரிந்தவரை சொல்கிறேன்.

நீங்கள் தந்துள்ள சுட்டியில் இருக்கும் பெரியார் தாசனின் பேச்சை நேரம் கிடைக்கும் போது கேட்கிறேன்.

June 15, 2006 12:53 PM
Muse (# 5279076) said...
யோகன்,

>>>> அடுத்து துறவிகளுக்கும்;சன்யாசிகளுக்கும்,;என்னைப் போன்ற ஏழைகளைப் பிடிக்காது. அவர்கள் நாடுவது பசையும்;படை பலம் மிக்கோரையுமே.!!!<<<<

எனக்குப் பல துறவியரோடு பழக்கமுண்டு. ஏன் என்னுடைய நண்பர்கள் இருவர் துறவேற்றுக்கொண்டவர்கள்தான். எந்த மதத்திலும் நீங்கள் கூறுகிற வகை துறவியர் மிக மிக குறைவு. எனக்கென்னமோ நாம் வாழ்வது போன்ற ஒரு வாழ்க்கை முறையல்லாமல் வித்தியாசமான வாழ்க்கை முறையை அவர்கள் மேற்கொள்ளுவதாலேயே அவர்கள் மீது ஒரு தகுதியற்ற காழ்ப்புணர்வு ஏற்படுகிறது என்று தோன்றுகிறது.

துறவு என்பது ஒரு அழகான விஷயம், ஓவியம் போன்றது. ஓவியக் கலைக்காகவே வழ்ந்த ஓவியர்கள் உண்டு. ஓவியக் கலையின் மூலம் பெரும் பணம் சம்பாதித்தவர்களும் உண்டு. ரசிகர்கள் ஓவியத்தின் அழகை பார்த்து மெய்மறப்பர். அவர்களுக்கு ஓவியர் பணத்திற்காக செய்கிறாரா, இல்லை பட்டினி கிடந்து வாழ்கிறாரா என்பதைவிட ஓவியத்தின் தரமே முக்கியம். ஆனால் ஓவியத்தை வியாபரமாக செய்பவர்களும், கலை ரசனையே அற்றவர்களுக்கும் ஓவியன் பணம் சம்பாதிப்பது மட்டும்தான் தெரியும்.

யோகன், பெயருக்குப் பக்கத்தில் பாரீஸ் என்று போட்டிருக்கிறீர்கள். பாரீஸ் உலகின் மிக அழகிய நகரங்களில் ஒன்று. அங்கே இருக்கும் ஓவியங்களை பார்த்துக் களிக்கும் வாய்ப்பு உங்களுக்கு கிட்டியதுண்டா?

June 16, 2006 12:40 AM
காஞ்சி பிலிம்ஸ் said...
'அத்வைதம்' என்பதே ஆதி சங்கர பகவத் பாதர்கள் நிலைநாட்டிய சித்தாந்தம் என்று எல்லோருக்கும் தெரியும். 'அத்வைதம்' என்றால் என்ன? 'த்வி' என்றால் இரண்டு. tஷ்ஷீ என்பது அதிலிருந்து வந்ததுதான். 'த்வி'யிலுள்ள த் (பீ) என்பதே 'டூ' வில் 'ட்' (t) ஆகிவிட்டது. உச்சரிப்பில் 'டூ' என்று சொன்னாலும், ஸ்பெல்லிங்கில் -க்கு அப்புறம் ஷ் வருகிறது ஷ்- வுக்கு 'வ' சப்தமே உண்டு. 'த்வி'யில் உள்ள 'வ' தான் இங்கே ஷ் - ஆகிவிட்டது. 'த்வி'தான் - இரண்டு. 'த்வைதம்' என்றால் இரண்டு உண்டு என்று நினைப்பது. 'அத்வைதம்' என்றால் 'இரண்டு இல்லை' என்று அர்த்தம்.

எந்த இரண்டு இல்லை? இப்போது ஸ்வாமி என்று ஒருத்தர் இருக்கிறார். அவருக்கு இரண்டாவதாக ஜீவர்கள் என்ற நாம் இருக்கிறோம் என்று நினைக்கிறோம் அல்லவா. இப்படி இரண்டு இல்லவே இல்லை. ஸ்வாமி (பிரம்மம்) என்கிற ஒரே சத்திய வஸ்துக்குப் புறம்பாக எதுவுமே இல்லை. அது தவிர, இரண்டாவது வஸ்து எதுவுமே இல்லை. அந்த ஒன்றேதான் மாயா சக்தியினால் இத்தனை ஜீவர்கள் மாதிரியும் தோன்றுகிறது. இதெல்லாம் வெறும் வேஷம்தான். ஒரு நடிகன் பல வேஷம் போட்டாலும் உள்ளேயிருக்கிற ஆள் ஒருத்தன்தான் என்பதுபோல் இத்தனை ஸ்வாமி ஒருத்தன்தான் என்பதுபோல் இத்தனை ஜீவராசிகள் இருந்தாலும் அவற்றுக்கு உள்ளேயிருக்கிற ஆள் ஸ்வாமி ஒருத்தன்தான். ஜீவாத்மா பரமாத்மா என்று விவகார தசையில் பிரித்துச் சொன்னாலும் வாஸ்தவத்தில் உள்ளது ஒரே ஆத்மாதான். 'நாம் மாயையைத் தாண்டி இந்த ஞானத்தை அநுபவத்தில் அடைந்துவிட்டால், அப்புறம் எத்தனையோ குறைபாடுகள் உள்ள ஜீவர்களாக இருக்கமாட்டோம்: ஒரு குறையுமில்லாத, நிறைந்த நிறைவான சத்தியமாகவே ஆகிவிடுவோம்' என்பதுதான் ஆசாரியாள் உபதேசித்த அத்வைத தத்துவம்.

அகண்டமாக இருப்பவன் ஒருவன்தான் இருப்பு. கண்டமாக இருப்பது வெறும் நினைவுதான். நினைவு, கனவு எல்லாம் சாசுவத உண்மை அல்ல. இதுதான் ஸ்ரீ சங்கர பகவத்பாதாள் உபநிஷத மரத்திலிருந்து நமக்குப் பறித்துக் கொடுத்த பழம்.- தெய்வத்தின் குரல்

இதன் படி ஆதிசங்கரர் சிலைவழிபாட்டிற்கே ஆப்பு வச்சுட்டார். அப்படி இருக்க சந்திரமௌலீஸ்வரர் பூஜை என்பதேல்லாம் இப்ப இருக்கறவா உருவாக்கி ஊர ஏமாத்தறான்னு தானே அர்த்தம்.

ஒரே சர்க்கரையினால் பல பொம்மைகள் செய்திருக்கிறதுபோல் ஒரே பிரம்மம் இத்தனையையும் ஆகியிருக்கிறது. சர்க்கரையினால் பாகற்காய் பொம்மை செய்து வைத்திருந்தால், விஷயம் தெரியாத குழந்தை அது கசக்கும் என்று ஒடிப்போயிருக்கும். கசப்பு வஸ்துவாகத் தோன்றுகின்ற அதுவும் உண்மையில் மதுரமான சர்க்கரைதான். உலகம் எல்லாம் ஆனந்த மயமான பிரம்மம் ஒன்றே என்று ஞானி அறிவான். நமக்குக் கசப்பு அவனுக்கு இனிப்பு நமக்குக் கருப்பு அவனுக்கு வெளுப்பு. நமக்குப் பகல் அவனுக்கு இருட்டு.-தெய்வத்தின் குரல்

ஆனா இப்ப இருக்கிற காஞ்சி மடம் கெட்டியா புடிச்சிக்கிட்டு இருக்கிற ஆகமம் என்ன சொல்லுது ? பல ஆச்சார அனுஸஷ்டானங்களின் அடிப்படையில் பகவானை விக்ரகங்களில் இருத்தி வைத்திருக்கிறோம் . இந்த புனிதமான கோவிலுக்குள் சூத்த்ரனோ, பஞ்சமனோ ஒரு அடி எடுத்து வைத்தாலும் கூட ... அனுஷ்டானங்கள் கறைப்பட்டுவிடும். அதனால் அந்த விக்ரகங்களில் உள்ள பகவான் பட்டென ஓடி போய்விடுவார், அதனால் அவர்களை கோவிலுக்குள் உள்ளே விடாதே என்கிறது .
ஆக இப்ப இருக்கிற காஞ்சி மடம் ஆதிசங்கரருக்கு ஆப்பு வைக்குதா இல்லை அந்த அத்வைத்திற்கே அப்பு வைக்குதா? என்பதுதான் நம்ம கேள்வி.
பஞ்சமனும் பிரம்மம் எனும் சர்க்கரையால் ஆன பாகற்காய்தான் என்பதை மட்டும் விட்டு விட்டு என்ன மடம் நடத்துரானுங்க. அப்புரம் எப்படி அது சங்கரமடம் . அத்வைதம் அத்வைதம் சொல்லிகிட்டு கிடக்கிற உங்களுக்கும் ஆப்புத்தானா? என்பது தான் எமது கேள்வி.
சரியாக சொல்லவேண்டும் என்றால் அத்வைத்தம் பிராம்மன்னியத்திற்கு ஆப்பு வைக்கவந்த விஷ்யம். எப்படி புத்தமத அடிப்படையயை கொண்ட ''பிரசென்ன புத்தராகிய'' ஆதிசங்கரரை இந்த பிரம்மனியம் கொலை செய்ததோ, அதேபோல் அவர் கண்டுபிடித்த அத்வைத்தை கொல்வதற்கு கண்டுபிடிக்கப்பட்டதே இன்றைக்கு உள்ள சங்கரமடங்கள்.

June 16, 2006 2:47 AM
குமரன் (Kumaran) said...
காஞ்சி பிலிம்ஸ்,

அத்வைதத் தத்துவத்தைப் பற்றிய உங்கள் விளக்கம் அருமை. ஒரு வரியில் நீங்கள் கேட்ட கேள்வியில் இவ்வளவு கேள்விகளா? :-) பாருங்கள் விளக்கமாய் சொல்லுங்கள் என்று கேட்ட பிறகு இவ்வளவு எழுத இருக்கிறது. நீங்கள் இதனைத் தான் கேட்கிறீர்கள் என்று எனக்கு உங்கள் ஒரு வரிக் கேள்வியைப் பார்த்த போது தோன்றியது. ஆனால் நானாக இதனைத் தான் கேட்கிறீர்கள் என்று முடிவு செய்து அதற்கு மறுமொழி கூறாமல் நீங்கள் கேட்பது என்ன என்று தெளிவாகத் தெரிந்து கொண்டு பின்னர் பதிலுரைக்கலாம் என்று தோன்றியதால் விளக்கம் கேட்டேன். விளக்கமாய் சொன்னதற்கு நன்றி. இதற்கு நீங்களும் ஏற்றுக் கொள்ளும் படி பதிலுரைக்க முயல்கிறேன். கூடிய விரைவில். (இன்று அல்லது நாளைக்குள்).

June 16, 2006 6:10 AM
காஞ்சி பிலிம்ஸ் said...
//அத்வைதத் தத்துவத்தைப் பற்றிய உங்கள் விளக்கம் அருமை//
மன்னிக்கவேண்டும் அது என்னுடைய விளக்கம் இல்லை. பெரிய சங்கராச்சாரியாரின் "தெய்வத்தின் குரலில்" இருந்து copy and paste செய்யப்பட்டது.

June 16, 2006 6:28 AM
காஞ்சி பிலிம்ஸ் said...
//துறவு என்பது ஒரு அழகான விஷயம், ஓவியம் போன்றது//

துறவு என்பது ஒரு பேடித்தனம். உலகத்தை பார்த்து பயந்த பயலுகள் செய்யும் வேலை துறவு. ஓவியக்கலை மட்டுமல்ல கலைகள் என்பதே ஒரு தவம். சும்மா போட்டு இரெண்டையும் குழப்பாதீங்க மியூஸ்.

June 16, 2006 6:34 AM
குமரன் (Kumaran) said...
மன்னிக்க வேண்டும் காஞ்சி பிலிம்ஸ். ஒரு நிமிடம் நான் அரண்டு தான் போனேன். இவ்வளவு அழகாக அத்வைதத் தத்துவத்தைப் பற்றிச் சொல்பவரால் எப்படி இப்படிப்பட்டக் கருத்துகள் கொண்டிருக்க முடியும் என்று. எது வரை தெய்வத்தின் குரலிலிருந்து எடுக்கப்பட்டது; எங்கிருந்து உங்கள் கருத்துகள் தொடங்குகின்றன என்று கண்டுகொண்டேன். விரைவில் பதில் உரைக்கிறேன்.

துறவு என்பது அழகான நிலையா பேடித்தனமா என்பது அவரவர் கருத்து. துறவு என்பது அழகான விதயம் என்பதிலும் பேடித்தனம் என்பதிலும் எனக்கு ஒப்புதல் உண்டு. ஏனென்றால் இரண்டு வகையான துறவிகளையும் பார்த்திருப்பதால். குடும்ப பாரத்தைத் தாங்க முடியாமல் துறவு மேற்கொண்டால் அது கட்டாயம் பேடித்தனத்தில் தான் சேரும். ஆனால் உண்மை அறிதல் என்ற உந்துதல் ஏற்பட்டு அதனால் மரத்திலிருந்து பழுத்தப் பழம் தானே கீழே விழுவது போல் துறவு நிலை ஏற்பட்டால் அது அழகான நிலையாகும். இரண்டு விதமும் உண்டு. எல்லாத் துறவும் அழகு என்றும் கூறமுடியாது; அதே நேரத்தில் எல்லாத் துறவும் பேடித்தனம் என்றும் கூறமுடியாது. இரண்டும் உண்டு. யார் எந்தப் பக்கத்திலிருந்து பார்க்கிறார்கள் என்பதைப் பொறுத்தது அவர்கள் என்ன காண்கிறார்கள் என்பது.

June 16, 2006 6:44 AM
காஞ்சி பிலிம்ஸ் said...
//உண்மை அறிதல் என்ற உந்துதல் ஏற்பட்டு அதனால் மரத்திலிருந்து பழுத்தப் பழம் தானே கீழே விழுவது போல் துறவு நிலை//
"உண்மையை" மலம் கழித்துக்கொண்டே கூட அறியலாம். அதுக்காக துறவரம் என்பதெல்லாம் சும்மா டுபாகூர் வெலைங்க குமரன்.

இங்கேருந்து அமேரிக்கா போனாரு நம்ம நவீன துறவி. அங்க போயி அங்கிருந்த அமெரிக்கர்களைப் பார்த்து சகோதர சகோதிரிகளேன்னு சொன்னாராம். அப்படியே எல்லாரும் அசந்துட்டாங்களாம். அந்த துறவி எப்பவாவது இந்தியாவில இருக்கிற தலித்துகள் வசிக்கும் சேரிக்குள் போய் அன்பான சகோதர சகோதிரிகளே அப்படின்னு சொன்னதாக கேள்விப்பட்டிங்களா ? இல்லியே.ஏன்னா அவர் பூநூல் துறக்காத துறவி. இவரை விட முற்றும் துறந்த ஒரு அயோக்கியத் துறவிய எங்கியாவது நீங்க பார்த்துண்டா ? எப்ப "உண்மையை" தனக்கு மட்டும் கண்டுபிடிக்க போறானோ அவன் கள்ளத்துறவி ஆகிவிடுகிறான் குமரன்.

சரி அது போகட்டும் குமரன், பஜகோவிந்தம் பற்றி எழுதுகிறீகளே, நீங்கள் சம்ஸ்கிருததில் பாண்டியத்தம் பெற்றவரா? ஆமாம் என்றால் உங்களிடம் பல சந்தேகங்களை கேட்டு தெளிவுபெறலாம், அதற்காகத்தான்.

நன்றி.

June 16, 2006 8:27 AM
குமரன் (Kumaran) said...
ஒரு நிமிடம் உங்கள் கடைசிப் பின்னூட்டத்தை அனுமதிப்பதா வேண்டாமா என்றுத் தயங்கினேன். பேசிக் கொண்டிருக்கும் போதே அநாகரீகமாக வாதம் புரிவது தேவையற்றது. 'மலம் கழித்துக்கொண்டே' என்று சொல்வது இங்கு தேவையில்லாத ஒரு கீழிறங்கள் என்று நினைக்கிறேன். இனி வரும் வாதங்களில் இப்படிப் பட்டத் தாக்குதல் இல்லாமல் உங்கள் கருத்தினை நாகரிகமாக எடுத்துவைப்பீர்கள் என்று நம்புகிறேன்.

காஞ்சி பிலிம்ஸின் இந்த வரிகளைப் படித்து அதற்கு யாரும் எதிர்வினை செய்கிறேன் என்று கீழான சொற்களைப் பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

நவீனத் துறவி என்று பெயர் சொல்லாமல் நீங்கள் சொல்லியிருந்தாலும் யாரைப் பற்றிச் சொல்லியிருக்கிறீர்கள் என்று தெளிவாகத் தெரிகிறது. உங்கள் வாதங்களைப் பார்க்கும் போது உங்களுடன் விவாதிப்பது நேர விரயமோ என்று தோன்றுவது உண்மை. ஏனெனில் என்னுடைய கருத்துகளை நீங்கள் எப்படியும் ஏற்கப் போவதில்லை. உங்களுடைய கருத்துகள் தவறு என்பதில் எனக்கு எந்த மாற்றமும் வரப்போவதில்லை. எத்தனையோ பேர் ஏற்கனவே பேசியவற்றையே நாம் திரும்பவும் பேசி நேரத்தை வீணாக்கவேண்டாம் என்று நினைக்கிறேன்.

எனக்கு வடமொழியில் பாண்டித்யம் உண்டா என்று கேட்டிருக்கிறீர்கள். வடமொழியை நான் முறையாகக் கற்றவனில்லை. கேள்வி ஞானம் தான். அதனைக் கொண்டு தான் இங்கே பஜகோவிந்தத்திற்குப் பொருள் சொல்லிக் கொண்டிருக்கிறேன். 'கேட்டுத் தெளிவு பெறவேண்டும்' என்பது உண்மையானால் கேளுங்கள்; எனக்குத் தெரிந்த வரை சொல்கிறேன். தெரியாவிட்டால் தெரியவில்லை என்று சொல்கிறேன். ஆனால் உங்கள் கேள்விகள் விதண்டாவாதம் செய்வதாகவும் மற்றவர் அரைகுறை ஞானத்தோடு சொன்னதைப் படித்துவிட்டு இங்குள்ளவர்களுக்கு 'தெளிவு ஏற்படுத்தக்' கேட்பவையாகவும் இருந்தால் தயவு செய்து கேட்காதீர்கள். அவை நேர விரையமே.

June 16, 2006 8:39 AM
குமரன் (Kumaran) said...
காஞ்சி பிலிம்ஸின் கேள்விகளுக்கு யாராவது அவர் அளவுக்கு இறங்கி பின்னூட்டம் இட்டால் அந்தப் பின்னூட்டங்கள் (1) அனுமதிக்கப்பட மாட்டாது அல்லது (2) அதில் நல்ல கருத்துகளும் இருந்தால் அனுமதிக்கப் பட முடியாத கருத்துகள் மட்டும் வெட்டப்பட்டு அனுமதிக்கப்படும். வேண்டுமானால் அவருக்கு உங்கள் பதிலை உங்களுடைய வலைப்பூவிலேயே இட்டு சுட்டியை மட்டும் இங்கே தாருங்கள். நேர விரையம் ஆக்கும் விவாதங்களைத் தொடர விரும்பவில்லை.

June 16, 2006 8:41 AM
காஞ்சி பிலிம்ஸ் said...
உணவருந்தவது போல் அன்றாட கடைமைகளில் ஒன்றான மலம் கழித்தலை நீங்கள் எப்படி இழிவான ஒன்று என்று முடிவெடுத்தீர்கள் என்று புரியவில்லை. உங்களுக்குள் எவ்வளவு தூரம் "அத்வைத்தம்" அரும்பியுள்ளது என்பதை அளவிடவே அப்படி ஒரு வார்த்தை பிரயோகம் செய்தேன்.

"ஸ்வாமி (பிரம்மம்) என்கிற ஒரே சத்திய வஸ்துக்குப் புறம்பாக எதுவுமே இல்லை. அது தவிர, இரண்டாவது வஸ்து எதுவுமே இல்லை", ஆமாம் குமரன் நான் ஒரு அத்வைதி என்று சொல்வதற்கும், அந்த அத்வைத்தமாக வாழ்வதற்கும் வித்தியாசம் உண்டு என்பதை இப்போது புரிந்து போயிருக்கும் உங்களுக்கு. ஆதிசங்கரர் அருளிய பஜகோவிந்ததிற்கு மொழிபெயர்ப்பு செய்வதற்கு முன், அந்த ஆதி சங்கரரின் அத்வைத தத்துவத்தை முதலில் உள்வங்கிக் கொள்ளுங்கள்.
***********************************
"துவாதஸ மஞ்சரி" இந்த வார்த்தையை பஜகோவிந்ததில் எங்கையாவது பார்த்த ஞாபகம் உள்ளதா குமரன்?

June 16, 2006 9:15 AM
குமரன் (Kumaran) said...
காஞ்சி பிலிம்ஸ்.

நான் அத்வைதி என்றோ அத்வைதத் தத்துவத்தை நான் உள்வாங்கிக் கொள்ள முயல்கிறேன் என்றோ நான் எங்காவது சொல்லியிருக்கிறேனா? நீங்களே அப்படி எண்ணிக்கொண்டு என்னிடம் அத்வைதம் எவ்வளவு தூரம் அரும்பியுள்ளது என்று அளவிடவே அப்படி சொன்னேன் என்று சொல்வதைப் பார்த்தால் புன்சிரிப்பு தான் வருகிறது. இதனை நேரடியாகக் கேட்டிருந்தால் நானே சொல்லியிருப்பேனே. நான் அத்வைதி இல்லை என்று. :-)

உணவருந்துவது போல் மலம் கழித்தலும் அன்றாடம் நடப்பதாய் இருக்கலாம். ஆனால் உங்கள் பின்னூட்டங்களைப் பார்த்தால் ஒரு அஜென்டாவுடன் பேசுவதாய்த் தான் தோன்றுகிறதே ஒழிய 'உன்னிடமிருந்து நான் கற்றுக் கொள்கிறேன். என்னிடம் இருந்து நீ கற்றுக் கொள்' என்பதான அணுகுமுறையாகத் தெரியவில்லை. ஒருவேளை என் புரிதல் தவறாக இருக்கலாம்.

பூடகமாக 'துவாதஸ மஞ்சரி' என்று மட்டும் சொல்லாமல் என்ன கேட்கிறீர்கள் என்று தெளிவாகச் சொல்லுங்கள். :-)

June 16, 2006 10:48 AM
குமரன் (Kumaran) said...
காஞ்சி பிலிம்ஸ். உங்கள் பின்னூட்டங்களைத் தனிப்பதிவாக இட்டு அங்கு என் பதில்களைச் சொல்லலாம் என்று நினைக்கிறேன். தயை செய்து உங்கள் கருத்துகளை அங்கே வந்து கூறுங்கள். இந்த விவாதம் பஜகோவிந்தத்தின் பின்னூட்டங்களில் இருப்பதில் எனக்கு விருப்பமில்லை. அதனால் தனிப்பதிவு போட்ட பிறகு அவற்றை இங்கிருந்து அகற்றிவிட எண்ணியிருக்கிறேன். ஆனால் அதே நேரத்தில் உங்களிடமிருந்து கற்க வேண்டியவற்றைத் தள்ளிவிட மனமில்லாததால் அவற்றை அழித்துவிட்டு மட்டும் செல்லாமல் தனிப்பதிவாய் கருத்துப் பரிமாற்றத்தைத் தொடரலாம் என்று எண்ணுகிறேன்.

June 16, 2006 10:51 AM
குமரன் (Kumaran) said...
//ராஜா கிட்ட அவன் பொண்னை தானமா கேட்ட சாமியார்கள் //

செல்வன். நீங்க சொல்றது இல்லறத்தில் இருந்த முனிவர்களையா இல்லை சன்யாசிகளையா? முனிவர்கள், ரிஷிகள் என்றால் சன்யாசிகள் என்ற எண்ணம் பரவலாக இருக்கிறது. ஆனால் அவர்கள் இல்லறத்தாராகவும் இருந்திருக்கின்றனர் என்று எல்லோருக்கும் தான் தெரியுமே. இல்லறத்தாரான முனிவர்கள் அரசமகளிரை மணந்தது தவறல்லவே?

June 16, 2006 1:46 PM
காஞ்சி பிலிம்ஸ் said...
//இல்லறத்தாரான முனிவர்கள் அரசமகளிரை மணந்தது தவறல்லவே?//

மீண்டும் குறிக்கிடுவதற்கு மன்னிக்கவும். அரசன் மனைவியை அசுவமேத யாகத்தில் ஈடுபடசெய்து பின்னர் யாகத்தின் முடிவில் அந்த அரசன் மனைவியையே யாசகமாக பெறுவது என்ற வழக்கத்தை தான் தவறு என்று செல்வன் சொல்றாரோ என்னவோ!

அரசன் மனைவியான அரசியை எப்படி அசுவமேத யாகத்தில் பயன்படுத்துவார்கள் என்று நான் இங்கு விவரித்தால் சத்தியமாக நீங்கள் அறம் பாடியே என்னுடைய ஆவியை கருக்கிவிடுவீர்கள்- ஆளை விடுங்கள்.

June 16, 2006 2:34 PM
குமரன் (Kumaran) said...
காஞ்சி பிலிம்ஸ். செல்வன் சொன்னது அரசனின் மகளை. மனைவியை அன்று.

June 16, 2006 2:42 PM
குமரன் (Kumaran) said...
காஞ்சி பிலிம்ஸ். ஆளை விடுங்கள் என்று சொல்கிறீர்கள். உங்கள் கேள்விகளுக்குத் தனிப்பதிவு போடலாம் என்றிருந்தேன். வேண்டாம் என்றால் எனக்கு மிக்க மகிழ்ச்சி. நேரம் வீணாகாது. சொல்லுங்கள். நீங்கள் மௌனமாய் இருந்தால் மௌனம் சம்மதம் என்று எடுத்துக் கொண்டு தனிப்பதிவாய் போடாமல் விடுகிறேன். இரண்டொரு நாட்களில் இங்கிருக்கும் பின்னூட்டங்களையும் எடுத்துவிடுகிறேன். சொல்லுங்கள்.

எனக்கு கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் நீங்கள் முன்முடிவுடன் வந்து பேசிக்கொண்டிருக்கிறீர்களோ என்ற ஐயமும் இருக்கிறது. அதனால் தனிப்பதிவாய் போடுவதும் நேர விரயமாய் போகலாம் என்று எண்ணுகிறேன். அதான் இந்தக் கேள்வி.

அப்புறம் அறம் பாடுதல் எனக்குத் தெரியாத ஒன்று. பயம் வேண்டாம்.

June 16, 2006 2:46 PM
காஞ்சி பிலிம்ஸ் said...
சரி சரி உங்களை வீனாக தொந்தரவு செய்யப்போவதில்லை. பிறகு வேறு எங்காவது சந்திப்போம்.

உங்களுடைய பஜகோவிந்தம் தொடர வாழ்த்துக்கள்.

நன்றி வணக்கம்.

www.kanchifilms.blogspot.com

June 16, 2006 2:59 PM
குமரன் (Kumaran) said...
மிக்க நன்றி காஞ்சி பிலிம்ஸ்.

June 16, 2006 3:01 PM
செல்வன் said...
வந்தேன்.படித்தேன்.ரசித்தேன்.சிரித்தேன்.

ஏனோ என் பதிவின் முகப்பில் இருக்கும் ஒரு சொற்றொடர் ஞாபகத்துக்கு வருது.நீங்களும் அதை உங்க பதிவின் முகப்பில் போட்டுக்கலாம்:-)))

"உன் வழி உனக்கு.என் வழி எனக்கு.சரியான வழி,நேரான வழி,ஒரே வழின்னு எந்த வழியும் கிடையாது."

June 16, 2006 3:53 PM
குமரன் (Kumaran) said...
காஞ்சி பிலிம்ஸ் கேட்ட கேள்விகளுக்கு என் பதில்கள் என்ன என்று அறிய யாராவது விரும்பினால் அவர்களுக்காக இந்த விளக்கங்கள். விவாதத்தை மீண்டும் தொடர இல்லை.

//"பஜகோவிந்தத்தில் பண்ணிரெண்டு பாட்டுகள் மட்டுமெ ஆதிசங்கரரால் இயற்பட்டது என்பதற்கு முதல் பாட்டே சாட்சி" அப்படின்னு சொல்றாங்களே அதைப்பற்றி உங்களுடைய கருத்து ?
//

இதற்கு ஏற்கனவே என் பதிலைச் சொல்லிவிட்டேன். முதல் பாட்டில் எங்கே சாட்சி இருக்கிறது என்று கேட்டேன். அதற்குத் தான் பின்னால் ஒரு பின்னூட்டத்தில் 'துவாதஸ மஞ்சரி' என்பதனைக் குறித்தார் என்று நினைக்கிறேன். துவாதஸ மஞ்சரி என்பதனைக் கேட்டதில்லை; ஆனால் அந்த வார்த்தையின் பொருள் 'பன்னிரண்டு பாடல்களால் ஆன நூல்' என்பது. அது பஜ கோவிந்தத்தைக் குறிபப்து என்று அவர் சொன்னால் அதனை மறுக்க என்னிடம் தேவையான அளவு தகவல்கள் இல்லை.

June 18, 2006 8:07 AM
குமரன் (Kumaran) said...
//இதன் படி ஆதிசங்கரர் சிலைவழிபாட்டிற்கே ஆப்பு வச்சுட்டார். அப்படி இருக்க சந்திரமௌலீஸ்வரர் பூஜை என்பதேல்லாம் இப்ப இருக்கறவா உருவாக்கி ஊர ஏமாத்தறான்னு தானே அர்த்தம்.
//

தெய்வத்தின் குரலில் பரமாச்சாரியார் அத்வைதத் தத்துவத்தைப் பற்றி விளக்கியதை இங்கே எடுத்து எழுதி பின்னர் இப்படி சொல்கிறார் காஞ்சி பிலிம்ஸ். அவர் முழுமையாகத் தெய்வத்தின் குரலையும் படிக்கவில்லை; அத்வைதத்தைப் பற்றியும் படிக்கவில்லை; இல்லை படித்திருந்தும் சில பகுதிகளை வேண்டுமென்றே மறந்துவிட்டார் என்றே தோன்றுகிறது. அத்வைதத்தில் பாரமார்த்திகம் (உயர்ந்த நிலை), வியவஹாரிகம் (செயல்படுத்தப் படும் நிலை) என்று இரண்டு நிலைகளைப் பற்றிப் பேசுவார்கள். பாரமார்த்திகத்தில் பெயர், உருவம், குணங்கள், செயல்கள் எதுவுமற்று இருக்கும் இறைவனே (பரப்ரஹ்மமே) நான் என்று ஒவ்வொருவரும் சொல்லும் ஆத்மா. ஆனால் அந்த இறைவன் வியவஹாரிக நிலையில் எல்லாத் தெய்வங்களாக இருந்து எல்லோரும் ஞான நிலை அடைய அருள் புரிகிறான்.

பெயர் உருவம் குணங்கள் செயல்கள் இல்லாத இறைவனை வணங்குவது மக்களால் முடியாது. அதனால் அந்த இறைவனின் பல விதமான பெயர் உருவம் குணங்கள் செயல்கள் இவற்றைப் போற்றி சிலைவழிபாடு செய்வதே செய்யத் தகுந்தது. அதனாலேயே அப்போதைய இந்து மதத்தில் இருந்த வழிபாட்டு முறைகளைத் தொகுத்து ஆறுமதங்கள் என்பதனை நிலை நாட்டி ஷண்மத ஸ்தாபகர் என்ற பெயரையும் பெற்றார் ஆதிசங்கரர். இந்த பஜ கோவிந்தம் நூலையே சங்கரின் வாழ்நாளின் இறுதிப் பகுதியில் பாடினார் என்று வரலாறு கூறுகிறது.

சிலைவழிபாட்டிற்கு 'ஆப்பு வைத்தவர்' ஏன் ஆறுமதங்களை நிலைநிறுத்தவேண்டும்? ஏன் பஜகோவிந்தம் பாடவேண்டும்? முன்னுக்குப் பின் முரணாக இல்லை? ஆதிசங்கரரின் காலத்திலிருந்தே உருவ வழிபாடு அத்வைத சம்ப்ரதாயத்தில் தொடர்ந்து இருக்கிறது. அதனால் சந்திர மௌலீஸ்வரர் பூஜை என்பதெல்லாம் இப்போது இருப்பவர்கள் உருவாக்கி ஊரை ஏமாற்றுவது என்பதெல்லாம் கற்பனையான வாதம். ஆதாரம் எதுவும் இல்லை.

June 18, 2006 8:21 AM
குமரன் (Kumaran) said...
//ஆனா இப்ப இருக்கிற காஞ்சி மடம் கெட்டியா புடிச்சிக்கிட்டு இருக்கிற ஆகமம் என்ன சொல்லுது ? பல ஆச்சார அனுஸஷ்டானங்களின் அடிப்படையில் பகவானை விக்ரகங்களில் இருத்தி வைத்திருக்கிறோம் . இந்த புனிதமான கோவிலுக்குள் சூத்த்ரனோ, பஞ்சமனோ ஒரு அடி எடுத்து வைத்தாலும் கூட ... அனுஷ்டானங்கள் கறைப்பட்டுவிடும். அதனால் அந்த விக்ரகங்களில் உள்ள பகவான் பட்டென ஓடி போய்விடுவார், அதனால் அவர்களை கோவிலுக்குள் உள்ளே விடாதே என்கிறது .
ஆக இப்ப இருக்கிற காஞ்சி மடம் ஆதிசங்கரருக்கு ஆப்பு வைக்குதா இல்லை அந்த அத்வைத்திற்கே அப்பு வைக்குதா? என்பதுதான் நம்ம கேள்வி.
//

உருவ வழிபாடு, கோயில்கள் என்று வந்த பின் ஆகமம் என்ற ஒன்று வந்துவிடுகிறது. பல ஆசார அனுஷ்டானங்களால் தான் இறைவனின் சாந்நித்யம் விக்ரஹங்களில் இருப்பதாக ஒரு நம்பிக்கை இருக்கிறது. சூத்திரனோ பஞ்சமனோ மட்டும் இல்லை; அர்ச்சகரில்லாத பிராமண க்ஷத்திரிய வைசியர்களும் கருவறைக்குள் நுழையக் கூடாது என்று அந்த சாத்திரங்கள் கூறுகின்றன. அந்த ஆகமத்தை காஞ்சி சங்கர மடம் மட்டும் தான் ஆதரிக்கிறதா? மற்ற ஆதினங்களும் மடங்களும் ஆகமங்களை எதிர்க்கின்றனவா? (நான் இங்கே மற்றவர் நம்பிக்கையைத் தான் சொல்கிறேனே ஒழிய என் நம்பிக்கையை இல்லை. என் நம்பிக்கை இறைவன் யாராய் இருந்தாலும் அன்பும் பக்தியும் கொண்டிருந்தால் அங்கே நிலையாய் நிற்பான் என்பதே. கண்ணப்பரும் இன்னும் எண்ணற்றவர்களும் இதற்கு சாட்சியுண்டு). ஏற்கனவே சிலைவணக்கம் ஆதிசங்கரராலேயே நிலைநிறுத்தப்பட்டது என்று சொல்லியிருக்கிறேன். அதனால் தற்போதைய சங்கர மடம் ஆதிசங்கரருக்கோ அத்வைதத் தத்துவத்திற்கோ ஆப்பு வைப்பதாகத் தோன்றவில்லை. அது உங்கள் மனதில் தோன்றும் கற்பனையே.

June 18, 2006 8:53 AM
குமரன் (Kumaran) said...
//பஞ்சமனும் பிரம்மம் எனும் சர்க்கரையால் ஆன பாகற்காய்தான் என்பதை மட்டும் விட்டு விட்டு என்ன மடம் நடத்துரானுங்க. அப்புரம் எப்படி அது சங்கரமடம் . அத்வைதம் அத்வைதம் சொல்லிகிட்டு கிடக்கிற உங்களுக்கும் ஆப்புத்தானா? என்பது தான் எமது கேள்வி.
//

பஞ்சமனும் பிரம்மம் எனும் சர்க்கரையால் ஆன 'பாகற்காய்' என்று யார் சொன்னது? அது உங்களின் விளக்கமா? பரமாச்சாரியார் உலகத்தில் இருக்கும் துன்பங்கள் பாகற்காய் வடிவில் இருக்கும் சர்க்கரை என்று உருவகப்படுத்தி ஞானிக்கு உலகம் எல்லாமே உண்மையில் இனிப்பான சர்க்கரைதான் என்று கூறியிருக்கிறார் என்று எண்ணுகிறேன். ஆனால் நீங்கள் அதனை பஞ்சமன் என்பவன் பிரம்மம் எனும் சர்க்கரையால் ஆன பாகற்காய் என்கிறீர்கள். அப்படியென்றால் மற்றவர் சர்க்கரையால் ஆன இனிப்புப் பண்டமா? பஞ்சமன் சர்க்கரையால் ஆன பாகற்காய் என்பதால் வெறுக்கத்தக்கவனா என்ற கேள்விகள் எழுந்தாலும் நீங்கள் என்ன சொல்லவருகிறீர்கள் என்பது புரிகிறது; தவறான எடுத்துக் காட்டு கொடுத்துவிட்டீர்கள் என்று எண்ணுகிறேன். உலகில் எல்லாமே பிரம்மம் என்பதால் பஞ்சமனும் பிரம்மம்; அப்படி இருக்க பஞ்சமனுக்கு கருவறையில் நுழைய அனுமதியில்லை என்பது ஏன் என்று கேட்கிறீர்கள். சரி. ஆனால் மேலே சொன்னபடி ஆகமத்தை நம்புபவர்களுக்கு பஞ்சமன் மட்டும் இல்லை; அர்ச்சகரல்லாத வேறு யாரும் அவர்கள் 'மேல்சாதியினராய்' இருந்தாலும் கருவறைக்குள் நுழைய அனுமதியில்லை என்ற நம்பிக்கை உண்டு. அந்த நம்பிக்கை காஞ்சி மடத்திற்கு மட்டும் இல்லை; ஏறக்குறைய எல்லா ஆதினங்களுக்கும் மடங்களுக்கும் உள்ள நம்பிக்கை தான்.

அத்வைதம் அத்வைதம் என்று நான் சொல்லிக் கொண்டிருக்கிறேன் என்று எப்படிச் சொல்கிறீர்கள்? பஜ கோவிந்தத்திற்குப் பொருள் சொல்லுவதால் மட்டுமே நான் அத்வைதி ஆகிவிடுவேனா? இல்லை பஜகோவிந்தத்திற்குப் பொருள் சொல்லும் இந்த வலைப்பூவில் எங்காவது நான் அத்வைதம் பேசியிருக்கிறேனா? பஜகோவிந்தத்திற்கு பொருள் சொல்கிறேன்; அது ஆதிசங்கரரால் இயற்றப்பட்டது; அவர் அத்வைதத் தத்துவத்தை நிலைநாட்டியவர்; அதனால் நானும் அத்வைதம் அத்வைதம் என்று பேசுகிறேன்; என்று நீங்களாகவே முடிவு செய்துவிட்டதாய்த் தோன்றுகிறது.

June 18, 2006 9:06 AM
குமரன் (Kumaran) said...
//அத்வைத்தம் பிராம்மன்னியத்திற்கு ஆப்பு வைக்கவந்த விஷ்யம்.//

இதனைப் பற்றி அடுத்தப் பதிவின் பின்னூட்டத்தில் பேசிவிட்டேன்.

June 18, 2006 9:14 AM
குமரன் (Kumaran) said...
//எப்படி புத்தமத அடிப்படையயை கொண்ட ''பிரசென்ன புத்தராகிய'' ஆதிசங்கரரை இந்த பிரம்மனியம் கொலை செய்ததோ, அதேபோல் அவர் கண்டுபிடித்த அத்வைத்தை கொல்வதற்கு கண்டுபிடிக்கப்பட்டதே இன்றைக்கு உள்ள சங்கரமடங்கள்.
//

அத்வைதம் பௌத்தத்தை அடிப்படையாகக் கொண்டது என்றோ ஆதிசங்கரர் 'ப்ரசன்ன பௌத்தர்' (not prasanna, prachanna meaning disguised) என்றோ எந்த அத்வைதியும் ஒத்துக் கொள்ளப்போவதில்லை. அவை அத்வைதத் தத்துவத்தை ஒத்துக் கொள்ளாத மற்றத் தத்துவக்காரர்கள் கிண்டலாகச் சொன்னது. அத்வைதிகள் அத்வைதம் வேதங்களை அடிப்படையாகக் கொண்டது என்று தான் சொல்லுவார்கள். அத்வைதத் தத்துவத்தை நிலை நாட்ட ஆதிசங்கரர் பௌத்தத்தின் எந்த நூலையும் அடிப்படையாக எடுத்துக் கொள்ளவில்லை; ஆனால் வேதங்களையும் வேதாந்தங்களையும் (உபனிஷத்துகளையும்) பிரம்ம சூத்திரத்தையும், பகவத் கீதையையுமே சான்றாக அடிப்படையாகக் கொன்டு அத்வைதத்தை நிலை நாட்டுகிறார். ஆனால் வேத வாக்கியங்களுக்கு அத்வைதம் தரும் பொருள் சூன்யவாதமாகிய பௌத்தத்திலிருந்து ஒரே ஒரு விதயத்தில் மட்டுமே வேறுபடுகிறது; அது அத்வைதம் பிரம்மம் என்ற இறைவனை ஒத்துக் கொள்கிறது; மற்றபடி அத்வைதத்திற்கும் பௌத்தத்திற்கும் வேறுபாடு இல்லை; ஆதிசங்கரர் 'வேத மதம் என்ற பொய்வேசம் கொண்டிருக்கும் பௌத்தர் - ப்ரசன்ன பௌத்தர்' என்று கூறுவது மற்ற தத்துவக்காரர்கள். அத்வைதிகள் ஒத்துக் கொள்ள மாட்டார்கள் - ஆதிசங்கரர் ப்ரசன்ன பௌத்தர் என்று.

இளைய வயதில் இறந்தவர்களை எல்லாம் பார்ப்பனியமும் பார்ப்பனர்களும் கொலை செய்தது என்று அவதூறு பரப்புவது இப்போது சிலருக்கு வேலையாகப் போய்விட்டது. பௌத்தம் வடநாட்டில் இல்லாமல் செய்து பிராமண மதம் என்று வெளிநாட்டவர்களால் கிண்டலாக அழைக்கப்பட்ட சனாதன தர்மத்தை நிலைநாட்டிய சங்கரரா பிராமனியம் கொலை செய்தது? பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்லவேண்டும்.

June 18, 2006 9:33 AM
குமரன் (Kumaran) said...
//ஏன்னா அவர் பூநூல் துறக்காத துறவி. இவரை விட முற்றும் துறந்த ஒரு அயோக்கியத் துறவிய எங்கியாவது நீங்க பார்த்துண்டா ?//

அத்வைத சம்ப்ரதாயத்தில் மட்டுமே துறவு பூணும் போது பூநூலைக் கழற்றுவார்கள். ஆதிசங்கரர் மட்டும் இல்லை; எல்லா சங்கராச்சாரியார்களும் அப்படித் தான். துறவு பூணும் போது குடுமியை மழித்துவிடுவார்கள்; பூநூலை எடுத்துவிடுவார்கள். ஆனால் மற்ற சம்ப்ரதாயங்களில் துறவு பூணும் போது பூநூல் எடுப்பதில்லை. எல்லாவற்றிலுமே உள்நோக்கம் கற்பிக்க முயலுபவர்கள் எப்போதும் இருப்பார்கள் என்பதற்கு உங்களின் இந்த ஒரு வரியே சாட்சி.

June 18, 2006 9:44 AM
காஞ்சி பிலிம்ஸ் said...
//பஞ்சமனும் பிரம்மம் எனும் சர்க்கரையால் ஆன 'பாகற்காய்' என்று யார் சொன்னது? //
//அது உங்களின் விளக்கமா?//

அப்ப நீங்க தெய்வத்தின் குரல் படிக்கவேயில்லையா ? தெய்வத்தின் குரல்ல இருக்கிற அத்வைத்த தத்துவ பகுதியையாவது கொஞ்சம் புறட்டி பாருங்க.

June 22, 2006 6:58 AM
குமரன் (Kumaran) said...
காஞ்சி பிலிம்ஸ்.

1. நான் தெய்வத்தின் குரல் முழுவதும் படித்ததில்லை. படித்ததிலும் எத்தனை விதயங்கள் நினைவில் இருக்கின்றனவோ தெரியவில்லை.

2. நீங்கள் சொல்லும் தொனியைப் பார்த்தால் என்னவோ தெய்வத்தின் குரலிலேயே இப்படித்தான் சொல்லியிருக்கிறது என்று சொல்வது போல் இருக்கிறதே. நீங்கள் மேலே கொடுத்துள்ள தெய்வத்தின் குரல் பகுதியில் பெரியவர் அப்படி சொல்லவில்லை. வேறு எங்காவது அப்படி சொல்லியிருக்கிறாரா? இல்லை என்றால் அது உங்களின் திரித்தல் தான்.

June 26, 2006 2:40 PM
காஞ்சி பிலிம்ஸ் said...
தெய்வத்தின் குரல் (முதல் பாகம்) /அத்வைதம்/மாயை

...ஞானியே உள்ளது உள்ள படி பார்க்கிறான்.ஒரே சர்க்கரையினால் பல பொம்மைகள் செய்திருக்கிறதுபோல் ஒரே பிரம்மம் இத்தனையையும் ஆகியிருக்கிறது. சர்க்கரையினால் பாகற்காய் பொம்மை செய்து வைத்திருந்தால், விஷயம் தெரியாத குழந்தை அது கசக்கும் என்று ஒடிப்போயிருக்கும். கசப்பு வஸ்துவாகத் தோன்றுகின்ற அதுவும் உண்மையில் மதுரமான சர்க்கரைதான். உலகம் எல்லாம் ஆனந்த மயமான பிரம்மம் ஒன்றே என்று ஞானி அறிவான். நமக்குக் கசப்பு அவனுக்கு இனிப்பு நமக்குக் கருப்பு அவனுக்கு வெளுப்பு. நமக்குப் பகல் அவனுக்கு இருட்டு என்று கிருஷ்ண பகவான் சொல்கிறார். பிரம்மம் என்கிற வெளிச்சமே நமக்கு இருட்டாக இருக்கிறது. இருட்டான மாயைத்தான் நமக்கு வெளிச்சமாக தெரிகிறது. இதெப்படி முடியும் என்று கேட்கலாம். மாயையும் பிரம்மையைச் சார்ந்து அதனிடமிருந்து சிறிது பிரதிபலிப்பான ஒளி பெறுகிறது. இந்தக் குறைந்த ஒளிதான் நம் குறைந்த அறிவுக்கு எட்டுகிறது. சுமாரான வெளிச்சத்தில்தான் புஸ்தகத்தின் கறுப்பு எழுத்துக்கள் தெரியும். ஜொலிக்கிற சூரிய வெளிச்சத்தில் நேரே புஸ்தகத்தைப் பிரித்தால் எழுத்தே தெரியாது. நமக்கு மாயையின் அற்பப் பிரகாசத்தில் உலக காரியங்கள் தெரிகின்றன. ஞானியின் ஆத்ம பிரகாசத்தில் அவை மறைந்து போகின்றன. ஞானியின் பகல் நமக்கு இரவு என்பதன் அர்த்தம் இதுவே.

**********************************

நான் ரொம்ப படித்தவனல்லாம் இல்லை. நான் சொல்லிய தொனி தவறாகயிருந்து உங்களை புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்.

June 26, 2006 3:31 PM
காஞ்சி பிலிம்ஸ் said...
ஆதிசங்கரர்ஒரு நாள் சங்கரர் கங்கையில் நீராடிவிட்டு சீடர் புடைசூழ விசுவநாதர் ஆலயத்திற்குச் சென்று கொண்டிருந்தார்.

அப்போது ஒரு புலையனும் புலைச்சியும் நம்முடைய ஆசாரியர் போகிற வழியில் குறுக்கே வந்து விட்டார்கள். போதாத குறைக்கு கையில் நான்கு நாய்களை வேறு பிடித்திருக்கிறான்!
"போ,போ!விலகிப்போ!எட்டிப்போ"என்று சங்கரரின் சீடர்கள் கூவினர்.
அவன் சிரித்தான்!"அத்வைதம் அத்வைதம் என்று சொல்லிவிட்டு என்னை விலகிப்போகச் சொல்கிறீர்களே, இது பெரிய முரண்பாடு அல்லவா? எல்லாமே ஒரே சத்தியமான கடவுளின் தோற்றம்தான் என்கிறது உங்கள் அத்வைதம். அவ்வாறெனில் உங்களைப் போலவே நாங்களும் அதே சத்தியத்தின் தோற்றம்தான். உடல் நமக்கு வேறு வேறானாலும், உடலுக்குள்ளே இருக்கிற பரமாத்மா ஒன்று தான். இந்த உடம்பைப் பற்றிய எண்ணத்தையே விலக்கி விட்டுப் பரமாத்மாவாக இருக்க வேண்டும் என்று தான் இந்த ஆசிரியர் உபதேசிக்கிறார்.

அப்படியிருக்க, உங்கள் உடம்பின் அருகிலிருந்து எங்கள் உடம்பு விலகிப் போக வேண்டும் என்று சொல்வதில் பொருள் இல்லை. உங்கள் உடம்புக்குள் உள்ள ஞான ஒளியிலிருந்து எங்கள் உடம்பிலுள்ள ஞான ஒளி விலக வேண்டும் என்று நீங்கள் கருதினால் அதுவும் அர்த்த மற்றதாகும். ஏனெனில் இந்த ஞான ஒளிகள் அனைத்தும் ஒன்றேதான். தன்னை விட்டே தான் எப்படி விலக முடியும்?என்று இப்படி ஆணித்தரமாகக் கேட்டு விட்டான் அந்தப் புலையன்.

உடனே சத்தியத்தை தலையால் வணங்கும் ஸ்ரீ சங்கரர் இப்பேர்பட்ட ஞான நிலையை அடைந்து பேசுபவர் புலையனாக இருக்கமுடியாது. காசிவிஸ்வநாதரும் விசாலாட்சியுமே தம்மை சோதிக்க வந்துள்ளனர் என்பதை ஞான திருஷ்டியில் உணர்ந்து 'மனீஷா பஞ்சகம்' என்ற ஐந்து சுலோகங்களைப் பாடினார். உடனே புலையன் நின்ற இடத்தில் விஸ்வநாதப் பெருமானே நின்றார்:புலைச்சி விசாலாட்சியானாள். நான்கு நாய்களும் நால்வேதமாயின.

"என் மறு உருவே ஆன சங்கரா! வாய்பேச்சில் மட்டும் வேதாந்தம் கூறாமல்
வாழ்விலேயே நீ நடத்திக் காட்டுபவன் என்று உலகறியவே இந்த நாடகம் செய்தேன்"என்று கூறி ஆசி வழங்கி மறைந்தார் இறைவன்.
************************************

இதை மட்டும் செலக்டிவ் அம்னீஷியா வந்த மாதிரி எல்லாரும் மறந்துட்டாங்க.

June 26, 2006 4:12 PM
குமரன் (Kumaran) said...
காஞ்சி பிலிம்ஸ். நான் கேட்டது உங்களுக்கு நிஜமாகவே புரியவில்லையா? இல்லை புரியாத மாதிரி நடிக்கிறீர்களா?

பஞ்சமனும் பிரம்மம் எனும் சர்க்கரையால் ஆன 'பாகற்காய்' என்று நீங்கள் சொல்லியிருந்தீர்கள். அப்படி 'பாகற்காய்' என்று ஆசாரியார் சொன்னாரா என்று கேட்டேன். இப்போது மனீஷா பஞ்சகம் தோன்றிய வரலாற்றினை எடுத்துக் கொடுத்திருக்கிறீர்கள். இங்கு எங்கே ஐயா 'பாகற்காய்' என்று சொல்லியிருக்கிறது? என் பின்னூட்டங்களைச் சரியாகப் படித்து விட்டுப் பின்னர் யாருக்கு செலக்டிவ் அம்னீஷியா என்று முடிவு செய்யலாம்.

நான் கேட்டது

//

பஞ்சமனும் பிரம்மம் எனும் சர்க்கரையால் ஆன 'பாகற்காய்' என்று யார் சொன்னது? அது உங்களின் விளக்கமா? பரமாச்சாரியார் உலகத்தில் இருக்கும் துன்பங்கள் பாகற்காய் வடிவில் இருக்கும் சர்க்கரை என்று உருவகப்படுத்தி ஞானிக்கு உலகம் எல்லாமே உண்மையில் இனிப்பான சர்க்கரைதான் என்று கூறியிருக்கிறார் என்று எண்ணுகிறேன். ஆனால் நீங்கள் அதனை பஞ்சமன் என்பவன் பிரம்மம் எனும் சர்க்கரையால் ஆன பாகற்காய் என்கிறீர்கள். அப்படியென்றால் மற்றவர் சர்க்கரையால் ஆன இனிப்புப் பண்டமா? பஞ்சமன் சர்க்கரையால் ஆன பாகற்காய் என்பதால் வெறுக்கத்தக்கவனா என்ற கேள்விகள் எழுந்தாலும் நீங்கள் என்ன சொல்லவருகிறீர்கள் என்பது புரிகிறது; தவறான எடுத்துக் காட்டு கொடுத்துவிட்டீர்கள் என்று எண்ணுகிறேன். உலகில் எல்லாமே பிரம்மம் என்பதால் பஞ்சமனும் பிரம்மம்; //

பஞ்சமனும் பிரம்மம் என்பதில் யாருக்கும் ஐயம் இல்லை. அதனைத் தான் இந்த மனீஷா பஞ்சகமும் உணர்த்துகிறது. ஆனால் பஞ்சமன் 'பாகற்காய்' என்று சொன்னீர்களே. அது நீங்களே சொன்னது - அது தவறான எடுத்துக்காட்டு என்பது என் துணிபு. இல்லை; அந்த உதாரணத்தை ஆசாரியரே சொல்லியிருக்கிறார் என்றால் அதனை எடுத்துக் காட்டுங்கள் என்றேன். தவறான எடுத்துக் காட்டு கொடுத்திருந்தாலும் அதனைச் சரியாகப் புரிந்து கொண்டு ஏற்கனவே பதில் உரைத்துவிட்டேன். ஆனால் நீங்கள் அதனைச் சரியாகப் படிக்காமல் செலக்டிவ் அம்னீஷியா என்கிறீர்கள்.

அது போகட்டும். 'ஆறு' பதிவு போடுவதற்காக உங்களை அழைத்திருந்தேனே. பார்த்தீர்களா? எப்போது 'உங்களுக்குப் பிடித்த ஆறு பதிவு' போடப் போகிறீர்கள்?

June 26, 2006 4:40 PM
குமரன் (Kumaran) said...
BTW மனீஷா பஞ்சகம் வரலாற்றை எடுத்து இங்கே இட்டதற்கு மிக்க நன்றி. மனிதர் யாரும் ஒரு நிகர் சமானம் என்பதை விளக்கும் அருமையான வரலாறு அது. இந்த வரலாறே இந்து மதத்தின் ஆணிவேராக இருக்கவேண்டும். வேறெதும் இருக்கக் கூடாது.

June 26, 2006 4:43 PM
காஞ்சி பிலிம்ஸ் said...
நான் செய்த ஒரு comment missing ஆகிறதே. சரி பரவயில்லை மீண்டும் இடுகிறேன்.

//அது போகட்டும். 'ஆறு' பதிவு போடுவதற்காக உங்களை அழைத்திருந்தேனே. பார்த்தீர்களா? எப்போது 'உங்களுக்குப் பிடித்த ஆறு பதிவு' போடப் போகிறீர்கள்?//

இதை நான் இன்னும் பார்க்கவில்லையே.

June 26, 2006 4:58 PM
காஞ்சி பிலிம்ஸ் said...
தெய்வத்தின் குரல் (முதல் பாகம்)/அத்வைதம்/மாயை

ஒரே சர்க்கரையினால் பல பொம்மைகள் செய்திருக்கிறதுபோல் ஒரே பிரம்மம் இத்தனையையும் ஆகியிருக்கிறது. சர்க்கரையினால் பாகற்காய் பொம்மை செய்து வைத்திருந்தால், விஷயம் தெரியாத குழந்தை அது கசக்கும் என்று ஒடிப்போயிருக்கும். கசப்பு வஸ்துவாகத் தோன்றுகின்ற அதுவும் உண்மையில் மதுரமான சர்க்கரைதான். உலகம் எல்லாம் ஆனந்த மயமான பிரம்மம் ஒன்றே என்று ஞானி அறிவான். நமக்குக் கசப்பு அவனுக்கு இனிப்பு நமக்குக் கருப்பு அவனுக்கு வெளுப்பு. நமக்குப் பகல் அவனுக்கு இருட்டு என்று கிருஷ்ண பகவான் சொல்கிறார். பிரம்மம் என்கிற வெளிச்சமே நமக்கு இருட்டாக இருக்கிறது. இருட்டான மாயைத்தான் நமக்கு வெளிச்சமாக தெரிகிறது. இதெப்படி முடியும் என்று கேட்கலாம். மாயையும் பிரம்மையைச் சார்ந்து அதனிடமிருந்து சிறிது பிரதிபலிப்பான ஒளி பெறுகிறது. இந்தக் குறைந்த ஒளிதான் நம் குறைந்த அறிவுக்கு எட்டுகிறது. சுமாரான வெளிச்சத்தில்தான் புஸ்தகத்தின் கறுப்பு எழுத்துக்கள் தெரியும். ஜொலிக்கிற சூரிய வெளிச்சத்தில் நேரே புஸ்தகத்தைப் பிரித்தால் எழுத்தே தெரியாது. நமக்கு மாயையின் அற்பப் பிரகாசத்தில் உலக காரியங்கள் தெரிகின்றன. ஞானியின் ஆத்ம பிரகாசத்தில் அவை மறைந்து போகின்றன. ஞானியின் பகல் நமக்கு இரவு என்பதன் அர்த்தம் இதுவே.

***********************************

"உலகம் எல்லாம் ஆனந்த மயமான பிரம்மம் ஒன்றே"- இதில் பஞ்சமனும் அடங்குவான் தானே.

அதாவது சக்கரை = பிரம்மம்
பொம்மைகள் = மனிதர்கள்
பாகற்காய் பொம்மை = ?

June 26, 2006 5:12 PM
குமரன் (Kumaran) said...
காஞ்சி பிலிம்ஸ். காணவில்லை என்று சொன்னப் பின்னூட்டம் வந்துவிட்டதா என்று பாருங்கள். நான் அலுவலகத்தில் இருக்கும் போது பின்னூட்ட நண்பனைப் பயன்படுத்துகிறேன்; அலுவலகத்திலிருந்து ஜிமெயிலைப் பார்க்க முடியாது. வீட்டிற்கு வந்த பிறகு ஜிமெயிலைப் பார்த்த போது நீங்கள் காணவில்லை என்று சொன்ன 'மாயை' பின்னூட்டம் இருந்தது.

June 26, 2006 7:11 PM
குமரன் (Kumaran) said...
//"உலகம் எல்லாம் ஆனந்த மயமான பிரம்மம் ஒன்றே"- இதில் பஞ்சமனும் அடங்குவான் தானே.

அதாவது சக்கரை = பிரம்மம்
பொம்மைகள் = மனிதர்கள்
பாகற்காய் பொம்மை = ?

//

காஞ்சி பிலிம்ஸ். நீங்கள் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறீர்கள் என்று ஏற்கனவே இதற்கு விளக்கம் சொல்லிவிட்டேன். மேலே பாருங்கள். மீண்டும் எல்லாவற்றையும் படித்துப் பார்ப்பது நேரம் எடுக்கும் என்பதால் இதோ இங்கே எடுத்துப் போடுகிறேன்.

//பரமாச்சாரியார் உலகத்தில் இருக்கும் துன்பங்கள் பாகற்காய் வடிவில் இருக்கும் சர்க்கரை என்று உருவகப்படுத்தி ஞானிக்கு உலகம் எல்லாமே உண்மையில் இனிப்பான சர்க்கரைதான் என்று கூறியிருக்கிறார் என்று எண்ணுகிறேன்.//

உங்கள் முறையிலேயே விளக்க வேண்டும் என்றால்

சர்க்கரை: பிரம்மம்
பொம்மைகள்: இன்ப துன்பங்கள், ஆசை வெறுப்புகள், குளிர் வெப்பங்கள், இப்படி உள்ள எதிரெதிரான இரட்டைகள்.
பாகற்காய் பொம்மை: துன்பம், வெறுப்பு, வெப்பம் போன்ற கசப்புகள்

இதில் குழந்தை ஞானி அல்லாதவர்கள். என்னைப் போன்றவர்கள். துன்பம், வெறுப்பு, வெப்பம் போன்ற கசப்புகளும் பிரம்மம் என்று அறியாதவர்கள். ஞானிக்கு இன்பமும் துன்பமும், ஆசையும் வெறுப்பும், குளிரும் வெப்பமும் இவை போன்ற இரட்டைகளும் பிரம்மம் என்ற தெளிவு இருக்கும்.

இந்த விளக்கத்திற்குப் பின்னும் பாகற்காய் என்று பஞ்சமனைத் தான் ஆசாரியார் சொல்லியிருக்கிறார் என்று நீங்கள் வாதிட்டால் என்னிடம் விளக்கம் இல்லை. தவறாக விளங்கிக் கொள்வதற்கு உங்களுக்கு உரிமை உண்டு.

June 26, 2006 7:23 PM
காஞ்சி பிலிம்ஸ் said...
உலகம் எல்லாம் ஆனந்த மயமான பிரம்மம் ஒன்றே"- இதில் பஞ்சமனும் அடங்குவான் தானே -

//காஞ்சி பிலிம்ஸ். நீங்கள் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறீர்கள்//

ஆம் நான் தவறாகத்தான் புரிந்து கொண்டுவிட்டேன். அதில் பஞ்சமனை மட்டும் நீக்கி பார்க்கவெண்டும் என்ற பக்குவம் எனக்கு இன்னும் வரவில்லை.

//மனிதர் யாரும் ஒரு நிகர் சமானம் என்பதை விளக்கும் அருமையான வரலாறு அது. இந்த வரலாறே இந்து மதத்தின் ஆணிவேராக இருக்கவேண்டும்//

இதை மட்டும் தான் ஹிந்துமதம் ஒருக்காலும் ஒத்துகொள்ளாது. "ஸதுர் வர்ணம் மாய சிருஷ்ட்ம்" கீதையில் மாயவன் மட்டும் சொல்லிட்டு பொய்விடவில்லை.அதை தொடர்ந்து காந்தியார் துவங்கி பாரதியார் வழியாக இன்றைக்கு உள்ள ஜெயெகாந்தன்,சங்கராச்சாரி வரை கெட்டியா புடுச்சிக்கிட்டு இருக்கறது இந்த நாங்கு வர்ணக் கோட்பாட்டை. இந்துமதத்தின் அடிபடை சாதி பாகுபாட்டின் மூலம்.

எப்போதும் போல் அவற்றையெல்லாம் நீங்கள் ஒத்துக் கொள்ளப் போவதில்லை. நீங்கள் வேரு ஒரு உலகத்தில் வளர்ந்தவர்கள் வாழ்கிறவர்கள்."புதஜனைர்வாதா பரித்யஜ்யதாம்" -விட்டு விடுகிறேன்.சரி அது போகட்டும்.

திருப்பியும் பஜகோவிந்ததுக்கு வருவோம். இந்த பஜகோவிந்தம் துறவி ஸ்ரீஆதிசங்கருக்கே ஒருமுரை உதவியது பற்றி உங்களுக்கு தெரியுமோ?

June 27, 2006 2:18 AM
குமரன் (Kumaran) said...
//ஆம் நான் தவறாகத்தான் புரிந்து கொண்டுவிட்டேன். அதில் பஞ்சமனை மட்டும் நீக்கி பார்க்கவெண்டும் என்ற பக்குவம் எனக்கு இன்னும் வரவில்லை.
//

காஞ்சி பிலிம்ஸ். தவறாகப் புரிந்து கொண்டேன் என்று சொன்ன உங்கள் பெருந்தன்மைக்கு நன்றி. இப்படித் தான் சொல்லலாம்னு வந்தேன். அதுக்குள்ள என்னமோ உள்குத்து, வெளிக்குத்து எல்லாத்தோட எனக்கு புரியாத மாதிரி என்னமோ சொல்லியிருக்கீங்க? என்ன சொல்றீங்க? நான் எப்போது பிரம்மத்திலிருந்து பஞ்சமனை நீக்கிப் பார்க்கவேண்டும்; அது தான் பக்குவம் என்று சொன்னேன்? நீங்கள் வேறு யாரையோ சொல்கிறீர்கள், என்னை இல்லை என்றால் எனக்குக் கவலையில்லை. ஆனால் என்னைப் பொறுத்தவரை என் புரிதல் என்ன என்று மேலே பல பின்னூட்டங்களில் சொல்லிவிட்டேன். இதற்கு மேலும் புரிந்து கொள்ள மாட்டேன் என்று அடம் பிடித்தால் நான் செய்வதற்கு ஒன்றும் இல்லை.

June 27, 2006 11:34 PM
குமரன் (Kumaran) said...
////மனிதர் யாரும் ஒரு நிகர் சமானம் என்பதை விளக்கும் அருமையான வரலாறு அது. இந்த வரலாறே இந்து மதத்தின் ஆணிவேராக இருக்கவேண்டும்//

இதை மட்டும் தான் ஹிந்துமதம் ஒருக்காலும் ஒத்துகொள்ளாது. "ஸதுர் வர்ணம் மாய சிருஷ்ட்ம்" கீதையில் மாயவன் மட்டும் சொல்லிட்டு பொய்விடவில்லை.அதை தொடர்ந்து காந்தியார் துவங்கி பாரதியார் வழியாக இன்றைக்கு உள்ள ஜெயெகாந்தன்,சங்கராச்சாரி வரை கெட்டியா புடுச்சிக்கிட்டு இருக்கறது இந்த நாங்கு வர்ணக் கோட்பாட்டை. இந்துமதத்தின் அடிபடை சாதி பாகுபாட்டின் மூலம்.
//

இதனைப் பலமுறை பல பேர் பல இடங்களில் பேசி விட்டார்கள். அங்கு என் கருத்துகளையும் சொல்லியிருக்கிறேன். அதனால் திரும்பவும் அதனைத் தொட மனமில்லை. சாதி அடிப்படை நடைமுறையில் இருக்கும் ஒரு தீமை. அதுவே இந்து மதத்தின் அடிப்படை என்பது உங்கள் முடிவு. இல்லை என்பது எனது துணிபு.

June 27, 2006 11:36 PM
குமரன் (Kumaran) said...
//எப்போதும் போல் அவற்றையெல்லாம் நீங்கள் ஒத்துக் கொள்ளப் போவதில்லை. நீங்கள் வேரு ஒரு உலகத்தில் வளர்ந்தவர்கள் வாழ்கிறவர்கள்."புதஜனைர்வாதா பரித்யஜ்யதாம்" -விட்டு விடுகிறேன்.சரி அது போகட்டும்.
//

நான் ஒத்துக் கொள்கிற மாதிரி ஒரு நல்ல வாதத்தைத் தான் எடுத்து வையுங்களேன்? வைக்கும் வாதத்திற்கெல்லாம் நான் விளக்கம் சொல்லிவிட்டேன். அதனை நீங்கள் ஏற்கவேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்பதும் தெரியும் என்று சொல்லிவிட்டேன். அது போல நீங்கள் சொன்னவற்றில் ஏற்கத் தகாதது என்று நான் நினைப்பதற்கு காரணம் என்ன என்றும் சொல்லிவிட்டேன். மீண்டும் மீண்டும் அதே பல்லவியைப் பாடினால் என்ன செய்வது?

அது போகட்டும். புதஜனைர்வாதா பரித்யஜ்யதாம் என்று என்னவோ சொல்லியிருக்கிறீர்களே. எனக்கு இருக்கும் வடமொழிக் கேள்வி ஞானத்தால் இதனைப் புரிந்து கொள்ள முடியவில்லை. மனமிருந்தால் என்ன என்று விளக்குங்கள்.

June 27, 2006 11:39 PM
குமரன் (Kumaran) said...
//திருப்பியும் பஜகோவிந்ததுக்கு வருவோம். இந்த பஜகோவிந்தம் துறவி ஸ்ரீஆதிசங்கருக்கே ஒருமுரை உதவியது பற்றி உங்களுக்கு தெரியுமோ?
//

தெரிந்திருக்கலாம். நீங்கள் இதுவரை சொன்னதெல்லாம் ஏற்கனவே எனக்குத் தெரிந்ததே. ஆனால் நீங்கள் தவறான புரிதலுடன் இருக்கிறீர்கள் என்று விளக்கம் சொல்ல வேண்டியிருந்தது. எப்போது இந்த பஜகோவிந்தம் துறவி ஆதிசங்கரருக்கு உதவியது என்று நீங்கள் இப்போது மனதில் எண்ணியிருக்கும் வரலாற்றைப் பற்றிக் கூறுங்கள். அதனைப் பற்றிய உங்கள் புரிதலையும் கூறுங்கள். என் கருத்தினைப் பின்னர் கூறுகிறேன்.

June 27, 2006 11:42 PM
கோவி.கண்ணன் said...
திரு குமரன்.
மேலே உள்ளது நீண்ட விவதம். படிப்பதற்குள் மூச்சு வாங்குகிறது. உங்களையும் காஞ்சி பிலிம்ஸ்சையும் பாராட்டுகிறேன்.

பிரம்மம் பிரம்மம் என்றால் எத்தனை பேருக்கு புரியும் என்பதற்கு சில் உள்குத்துகளை வைத்து பக்தி மார்க்கத்தினருக்காக சில சுலோகங்களை எழுதியுள்ளார் என்பது தெரிகிறது. பிரம்மம் போதித்தவர் பாமரர்களுக்கும் புரியவேண்டும் என்று இரட்டை நிலை எடுத்தது இப்படித்தான் (என் சொந்த கருத்து) மற்றபடி ஆதிசங்கரர் போதனைக்கும் புத்தரின் போதனைக்கும் பெரும் வித்யாசம் இல்லை. புத்தர் பாலி மொழியில் சொன்னதை .. சங்கரர் பிராகிரதத்தில் (சம்ஸ்) சொல்லியிருக்கிறார். அவரின் குலப்பெருமை காரணமாக பஜகோவிந்தம் பஞ்சகச்சம் கட்டிக்கொண்டுள்ளது என்று நினைக்கிறேன்.

மேலும் சிரத்தை அழைத்து விளக்கியதற்கு நன்றி

June 28, 2006 12:30 AM
குமரன் (Kumaran) said...
ஆமாம் கோவி.கண்ணன் ஐயா. இது நீண்ட விவாதம் தான்.

ப்ரம்மம் என்பதனைப் போதித்தவர் பாமரர்களுக்காக உருவ வழிபாட்டினையும் போதித்தார்; அது இரட்டை நிலை என்று சொல்லியிருக்கிறீர்கள். அது உங்கள் சொந்தக் கருத்து என்றும் சொல்லியிருக்கிறீர்கள். ப்ரம்மத்தைப் பற்றிப் பேசுவதும் உருவ வழிபாட்டினைப் பேசுவதும் எதிரெதிர் நிலை என்று நினைத்தால் தான் இந்தக் கருத்தினைக் கொள்ள முடியும். ஆனால் இரண்டுமே ஒன்றோடொன்று இயைந்து போகின்றவை என்று எண்ணினால் அது இரட்டை நிலையாக நினைக்க இயலாது. என்னைக் கேட்டால் பாமரர்கள் தான் உருவ வழிபாட்டினைத் தவறாகப் புரிந்து கொண்டு அது கீழ்நிலை என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள் (அப்படிப் பேசுபவர்கள் பெயர் பெற்ற சமய ஆர்வலர்களும் என்பதனைத் தெரிந்து கொண்டு தான் இதனைக் கூறுகிறேன்.)

ஆதிசங்கரரின் போதனைகளையும் புத்தரின் போதனைகளையும் முழுவதும் படித்தவர்கள் யாருமே இரண்டிற்கும் பெரும் வேறுபாடு இல்லை என்று சொல்ல மாட்டார்கள். மேலோட்டமாகப் பார்க்கும் போது அப்படி வேறுபாடுகள் இல்லாதது போல் தோன்றினாலும் ஆதிசங்கரரின் போதனைகள் வேதங்களையும் வேதாந்தங்களையும் கீதையையும் பிரம்ம சூத்திரங்களையும் அடிப்படையாகக் கொண்டவை; புத்தரின் போதனைகள் அவருடைய தனிப்பட்ட அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டவை - வேதங்களை எதிர்த்தவை. மேலோட்டமாகத் தெரியும் ஒற்றுமைகளை வைத்துக் கொண்டு ஆதிசங்கரரின் போதனைகளை மறுப்பவர்கள் அவரை 'பொய் வேஷத்தில் இருக்கும் பௌத்தர்' என்று சொன்னார்கள். அதனையே திருப்பித் திருப்பிச் சொல்லி இப்போது அது உண்மை என்று பலரும் நம்பும்படியாகி நிற்கிறது. கீதையும் குரானும், கீதையும் பைபிளும் என்று பலர் இரண்டிற்கும் உள்ள ஒற்றுமைகளை எடுத்து எழுதுவார்கள்; அவர்கள் அப்படி எழுதுவதைப் பார்ப்பவர்கள் கீதைக்கும் குரானுக்கும் பைபிளுக்கும் வேறுபாடுகளே இல்லை என்று கூறினால் எப்படி இருக்குமோ அது போல் தான் சங்கரரின் போதனைகளும் புத்தரின் போதனைகளும் ஒன்றே என்று கூறுவது. ஐயம் இன்றி கீதைக்கும் குரானுக்கும் பைபிளுக்கும் ஒற்றுமைகள் இருக்கத் தான் செய்கின்றன. ஆனால் அவை வெவ்வேறு போதனைகள் செய்கின்றன என்பதும் மறுக்க இயலாதது. உலகத்தில் சற்று முயன்றால் நீருக்கும் நெருப்புக்கும் கூட ஒற்றுமை காண முடியும். (அது தானே அத்வைதத் தத்துவமும்). :-)

//புத்தர் பாலி மொழியில் சொன்னதை .. சங்கரர் பிராகிரதத்தில் (சம்ஸ்) சொல்லியிருக்கிறார். அவரின் குலப்பெருமை காரணமாக பஜகோவிந்தம் பஞ்சகச்சம் கட்டிக்கொண்டுள்ளது என்று நினைக்கிறேன்.
//

புத்தர் சொன்னது, சங்கரர் சொன்னது - இவற்றைப் பற்றி மேலே சொல்லிவிட்டேன். புத்தர் சொன்னது தன் சொந்த அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டதாலும் வேதங்களின் ஆதிக்கத்தை எதிர்ப்பதற்காகச் சொன்னதாலும் அவை மக்களின் மொழியாகிய பாலியில் இருந்தன. சங்கரர் சொன்னது வேதங்களை அடிப்படையாகக் கொண்டதாலும் வேதாந்தங்களைப் படித்த மக்களை நோக்கிச் சொன்னதாலும் அவை சமஸ்கிருதத்தில் இருந்தன (பிராகிருதத்தில் இல்லை. பிராகிருதம் வேறு. சமஸ்கிருதம் வேறு. பாலியும் பிராகிருத மொழிகளில் ஒன்று என்று எண்ணுகிறேன். உறுதியாகத் தெரியவில்லை)

உண்மையைச் சொல்ல வேண்டும் என்றா சாக்கியக் குலத்தில் (செல்வாக்கு பெற்ற அரச குலத்தில்)பிறந்ததாலேயே புத்தரின் கருத்துகள் அவ்வளவு செல்வாக்குடன் இருந்தன என்றும் சொல்ல முடியும். சங்கரரைப் பற்றிப் பேசும் போது அவரின் குலம் எப்படி நோக்கப் படுகிறதோ அது போல் புத்தரின் குலத்தையும் நோக்கி அவரைப் பற்றி அப்படிச் சொல்லலாம். இல்லை புத்தரின் கருத்துகளும் சங்கரரின் கருத்துகளும் அவரவர் கருத்துகளின் வலிமையாலேயே புகழ் பெற்றன என்றும் சொல்லலாம். அது அவரவர் பார்வையைப் பொறுத்தது. 'பஜ கோவிந்தம் பஞ்சக் கச்சம் கட்டிக் கொண்டுள்ளது' என்று சொன்னதில் உங்கள் வெறுப்பு வெளியாவதாக உணர்ந்தாலும் 'Benefit of doubt' படி நீங்கள் சொல்ல வந்ததை நறுக் என்று சொல்ல நினைத்து இப்படிச் சொல்லிவிட்டீர்கள் என்று எண்ணிக் கொள்கிறேன். (நான் பஞ்சக்கச்சம் கட்டுபவன் இல்லை என்பது உங்களுக்குத் தெரியும் என்று எண்ணுகிறேன். அதனால் என் குலத்தைச் சொன்னவுடன் சுடுகிறதா என்று யாரும் பாயவேண்டாம்).

விவாதங்களை முழுவதும் படிக்க முடியாவிட்டாலும் அழைத்ததற்காக வந்து முடிந்த வரை படித்துப் பின்னூட்டம் இட்டதற்கு மிக்க நன்றி.

June 28, 2006 7:00 AM
கோவி.கண்ணன் said...
எஸ்கே பதிவிலும் சொல்லிவிட்டேன், இங்கேயும் சொல்லுகிறேன் ...

//நீங்க பகவத்கீதையும் முற்றிலும் நாத்திகம் பேசுதுன்னு சொல்லியிருக்கீங்க. அது எனக்குப் புரியலை. கொஞ்சம் விளக்கமா சொல்றீங்களா?//

அதிகம் வேண்டாம்,
கடமையை செய் பலனை எதிர்பாராதே - கீதை
இதில் எங்காவது கடவுள் வருகிறாரா ?
கடமையை செய் கடவுள் உதவுவார் என்று சொல்லவில்லையே ?
கடமையை செய் பலனை எதிர்பாராதே என்றால் என்ன ? ஒரு காரியத்தை செய்யும் போது 'எதிர்பார்ப்பின்றி' ஈடுபாடுடன் செய்தால் வெற்றியோ தோல்வியோ செய்கிறவனை அது பாதிக்காது. வெற்றிபெற்றால் வெகுமதியாகவும், தோல்வியென்றால் காரியத்தை சரியாகத்தான் செய்தோம் என்ற திருப்தியும் கிடைக்கிறது என்று பொருள்கொள்ளலாம். அப்படியில்லாமல் நீ கோடு போடு நான் ரோடு போடுகிறேன் என்று கீதை சொல்கிறதா ? எதார்த்தம் மட்டும் தானே பேசுகிறது. கீதையில் வர்ணாசிரமம் தவிர எல்லாமும் எதார்த்தமே இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால்
கீதை பேசுவது அத்வைதம். இதைத்தான் இயற்கை என்ற பொருளில் நாத்திகர்கள் என்று சொல்லப்படுப்வர்களும் சொல்லுகிறார்கள்.

போரில் எதிரியை எதிரியாகத் தான் பார்க்கவேண்டும் அங்கே நிற்பது நண்பன், உறவினன் என்றெல்லாம் பார்க்க கூடாது என்கிறது கீதை. இதைவிட்டு யாரிடமும் போர் செய்யாதே அன்பை மட்டுமே போதி என்று இறைத்தத்துவம் பேசுகிறதா ?

அர்சுனன் என்பது ஆத்மா - கிருஷ்ணன் என்பது பரமாத்மா, ஆகவே பரமாத்மாவை அடைய ஆத்மா செய்யவேண்டியது என்ன என்று எவருக்கும் புரியாத உள்அர்த்த விளக்கம் கூறப்படுவதால் கீதை தவறாகவே புரிந்து கொள்ளப்பட்டு பாமரர்களால் தள்ளிவைத்துப் பார்க்கப்படுகிறது.

June 28, 2006 7:01 AM
குமரன் (Kumaran) said...
கோவி. கண்ணன் ஐயா. உங்களின் கீதை பற்றிய கருத்துகளைப் படித்தேன். தற்போது அலுவலகத்திற்குச் செல்கிறேன். முடிந்தால் அலுவலகத்திலோ இல்லை வீட்டிற்கு வந்த பின்போ விளக்கமாகப் பதில் சொல்கிறேன். கேட்டுக் கொண்டதற்காக தங்கள் விளக்கத்தைச் சொன்னதற்கு நன்றி. நீங்கள் சொன்னவற்றை மறுத்துச் சொல்ல கீதையிலிருந்தே எடுத்துக்காட்டுகள் தரலாம் என்று எண்ணுகிறேன். மாலையில் செய்கிறேன்.

June 28, 2006 7:07 AM
கோவி.கண்ணன் said...
//அவரின் குலப்பெருமை காரணமாக பஜகோவிந்தம் பஞ்சகச்சம் கட்டிக்கொண்டுள்ளது என்று நினைக்கிறேன்.//

நான்கு வேதங்கள் போல போற்றி வளர்க்கப்பட்டது என்பதற்காக எதுகை மோனைக்காக பஞ்சகச்சம் சொன்னேன். இதில் யாரையும் இழித்துக் கூறவேண்டும் என்ற உள் அர்த்ததில் சொல்லவில்லை. அப்படி நீங்கள் கருதினால் ஒரு தவறான புரிதலைத் தந்ததற்காக வருந்துகிறேன்.

//நான் பஞ்சக்கச்சம் கட்டுபவன் இல்லை என்பது உங்களுக்குத் தெரியும் என்று எண்ணுகிறேன். அதனால் என் குலத்தைச் சொன்னவுடன் சுடுகிறதா என்று யாரும் பாயவேண்டாம்//

எனக்கு யாருடைய குலம் கோத்தரம் எதுவும் தெரியாது, வலை நன்பர்களின் முகம் பார்காததுபோல், முதுகையும் நான் பார்ப்பதில்லை.

June 28, 2006 7:23 AM
கோவி.கண்ணன் said...
திரு குமரன்,
முடிந்தால் தனிப்பதிவு இடவும்... பின்னூட்டம் மிக நீளமாக இருப்பதால் கம்யூட்டர் திணறுகிறது

June 28, 2006 9:08 AM
காஞ்சி பிலிம்ஸ் said...
//"புதஜனைர்வாதா பரித்யஜ்யதாம்" என்று என்னவோ சொல்லியிருக்கிறீர்களே//

உங்களை போன்று "கற்றுணர்ந்த சான்றோர்களுடன் வாதிடக்கூடாது" என்று நம்ம ஆதிசங்கரர் "சாதனா பஞ்சகத்தில்" சொன்னதுதான் குமரன் அவர்களே.

June 29, 2006 4:15 PM
குமரன் (Kumaran) said...
விளக்கம் சொன்னதற்கு நன்றி காஞ்சி பிலிம்ஸ். நீங்க சொன்ன விளக்கம் நல்லா இருக்கு. நீங்க சொன்ன விளக்கத்தைப் படிச்சப் பிறகு 'புதஜனைர்வாதா பரித்யஜ்யதாம்' என்பதை எப்படிப் பிரிப்பது என்று தெரிகிறது. அப்படிப் பிரித்தால் வேறு பொருள் வருகிறதே?!

புத ஜனைர் வாதா பரித்யஜ்யதாம் - கற்றுணர்ந்த சான்றோர்கள் வாதம் புரிவதைக் கட்டாயாமாகத் தவிர்ப்பார்கள்.

இந்த விளக்கத்தின் படி நானெல்லாம் கற்றுணர்ந்த சான்றோன் இல்லையே :-((((

June 29, 2006 4:37 PM
காஞ்சி பிலிம்ஸ் said...
\\இந்த விளக்கத்தின் படி நானெல்லாம் கற்றுணர்ந்த சான்றோன் இல்லையே\\

சும்மா டுபாகூரு copy & paste பார்ட்டியான நானே தையா தக்கான்னு குதிக்கும்போது தங்களின் அடக்கம் என்னை தலைகுனியவைக்கிறது.

அஹரஹர்கர்வா பரித்யஜ்யதாம் - இது தான் வரவேமாட்டெங்கிறது.

June 29, 2006 4:59 PM
குமரன் (Kumaran) said...
காஞ்சிபிலிம்ஸ். எப்பவுமே ஒரு பிட் தான் போடுவீங்க. இந்த தடவை ரெண்டு பிட்டா? :-)

நீங்க பார்ட்டியா? ரொம்ப நல்லா இருக்கு. எத்தனை நூல்கள் படிச்சிருக்கீங்க. நான் கேள்வியே படாத நூல்களையும் அவற்றிலிருந்து வாக்கியங்களையும் சொல்கிறீர்கள். நீங்கள் தானய்யா மெத்தப் படித்தவர்.

இப்ப 'அஹரஹர்கர்வா பரித்யஜ்யதாம்' என்பதற்குப் பொருள் சொல்லுங்கள். :-)

June 30, 2006 9:13 AM
காஞ்சி பிலிம்ஸ் said...
'அஹரஹர்கர்வா பரித்யஜ்யதாம்'= கர்வத்தை 'அஹ'ங்காரத்தை விட்டொழிக்க வேண்டும்.

நீங்கள் தானய்யா மெத்தப் படித்தவர் = to be frank, I am a school dropout.

June 30, 2006 11:06 AM
குமரன் (Kumaran) said...
காஞ்சி பிலிம்ஸ். என்ன சொல்கிறீர்கள்? பள்ளியில் படிக்காதவர் என்றால் மேதையாக முடியாதா? காமராஜர் படிக்காத மேதை தானே. :-)

June 30, 2006 7:06 PM
காஞ்சி பிலிம்ஸ் said...
ஓகே ஓகே சொந்தக்கதை சோகக்கதையெல்லாம் இப்போது வேண்டாம். மீண்டும் பஜகோவிந்ததிற்குள் வருவோம்.

\\பஜகோவிந்தம் துறவி ஸ்ரீஆதிசங்கருக்கே ஒருமுரை உதவியது பற்றி... \\

காமத்தில் திளைத்திருந்த ஆதிசங்கரரை பற்றி உங்களுக்கு தெறியும் என்று நினைக்கிறேன்- எங்கே எப்போது என்று தெறிந்திருந்தால் பஜகோவிந்தம் அப்போது தான் அவருக்கு உதவியது என்று கண்டுபிடித்துவிடுவீர்கள்- எங்கே சொல்லுங்கள் பார்க்க்லாம்.
...பாபா counting starts..1..2...

July 01, 2006 9:33 AM
செல்வன் said...
//அதிகம் வேண்டாம்,
கடமையை செய் பலனை எதிர்பாராதே - கீதை
இதில் எங்காவது கடவுள் வருகிறாரா ?
கடமையை செய் கடவுள் உதவுவார் என்று சொல்லவில்லையே ?//

கர்மயோகத்தை சரியாக படிக்க வேண்டும்.

"கடமையை செய்.அதற்கான பலன் கண்ணனை சார்ந்தது"

இதுதான் கர்மயோகம்.

இதில் கடவுள் வரவில்லையா?

அத்வைதத்தை நாத்திகத்தோடு சேர்த்து குழப்பிக்கொள்வது எளிது.கடவுள் வழிபாடு வேண்டாம் என்பது தான் அத்வைதம்.கடவுள் இல்லை என்பது நாத்திகம்.

நீ கடவுள் என்பது அத்வைதம்.கடவுள் இல்லை என்பது நாத்திகம்

இரண்டும் ஒன்றல்ல.

July 02, 2006 10:08 PM
செல்வன் said...
//காமத்தில் திளைத்திருந்த ஆதிசங்கரரை பற்றி உங்களுக்கு தெறியும் என்று நினைக்கிறேன்- எங்கே எப்போது என்று தெறிந்திருந்தால் பஜகோவிந்தம் அப்போது தான் அவருக்கு உதவியது என்று கண்டுபிடித்துவிடுவீர்கள்- எங்கே சொல்லுங்கள் பார்க்க்லாம்.//

ஆதிசங்கரர் ஒரு ராஜாவின் உடலில் கூடு விட்டு கூடு பாய்ந்து இல்லறம் என்றால் என்ன என்பதை மனதால் மட்டுமே உணர்ந்ததாக புராணம் இருக்கிறது.ராஜாவின் உடலில் இருந்தபோதும் அவர் பிரம்மச்சாரியாகத்தான் இருந்தார்.

July 02, 2006 10:10 PM
காஞ்சி பிலிம்ஸ் said...
"பரகாய ப்ரவேசம்" - அதாவது கூடுவிட்டு கூடுபாய்தல் முறையில் ஆதிசங்கரர் தன் ஆவியை தன் உடம்பை (கூட்டை)விட்டு வெளியே கொண்டுவந்து சாகும் தருவாயில் இருந்த ஒரு அரசனின் உடலுக்குள் புகுத்தினாராம். பின்னர் அந்த அரசனின் மனைவிமார்களுடன் கலவி புரிந்து, சாம வேதத்திலிருந்து தன் மேல் தொடுக்கப்பட்ட கேள்விகளுக்கு விடைகளை கண்டுபிடித்தாராம். விஸ்வநாதன் மனைவியின் சாம வேத கேள்விகளுக்கு பதில் தெறிந்து கொண்ட பின்னரும் தங்களின் "லோக குரு" தன்னை மறந்து காமத்தில் திளைத்திருப்பதைக் கண்ட அவரது சீடர்கள் ஆதிசங்கரரது ஆவிக்கு பழையதுகளை நினைவிற்கு கொண்டுவருவதற்காக "கோரசாக" பஜகோவிந்தத்தை பாடினார்களாம். அதன் பின்னரே ஆதிசங்கரரின் ஆவி அவர் கூட்டுக்கு திரும்பியதாக அதே புராணம் கூறுகின்றது.

//ராஜாவின் உடலில் இருந்தபோதும் அவர் பிரம்மச்சாரியாகத்தான் இருந்தார்//

இந்த வரிகள் என்ன சோல்ல வருகின்றன. அப்படியானால் ஆணுரை பாவித்து கலவி புரிபவர் எல்லாம் சங்கரருக்கு இணையான பிரம்ச்சாரிகளா ? சிரிப்புத்தான் வருகிறது.

July 03, 2006 4:00 PM
செல்வன் said...
ஆதிசங்கரர் கலவி புரிந்ததாக நான் படிக்கவில்லை காஞ்சி பிலிம்ஸ்.ராஜாவின் உடலில் புகுந்து அவன் மூளையில் இருக்கும் காமம் பற்றிய அனுபவபூர்வமான அறிவை மட்டுமே அறிந்தார் என தான் படித்திருக்கிறேன்.சங்கரர் தன்னை மறந்து ராஜாவாக இருந்து மக்கள் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்க அவர் சிஷ்யர்கள் அவர் பூர்வ வரலாற்றை நினைவுபடுத்தவே தான் அவர் அதன்பின் அரசன் உருவை விடுத்தார் என படித்திருக்கிறேன்.

பாலகுமாரன் கூட இந்த கருத்தை முன்வைத்துத்தான் எழுதியிருக்கிறார்.புத்தகத்தின் பெயர் ஞாபகத்துக்கு வரவில்லை.

July 03, 2006 5:23 PM
காஞ்சி பிலிம்ஸ் said...
//ராஜாவின் உடலில் புகுந்து அவன் மூளையில் இருக்கும் காமம் பற்றிய அனுபவபூர்வமான அறிவை மட்டுமே அறிந்தார்//
அது என்னங்க அது முக்காலத்தையும் ஞானத்தால இந்த ஞானிங்களால அறிய முடியுமாம், ஆனால் காமத்தை மட்டும் அறிந்து கொள்வதற்கு அனுபவம் பெற்ற ராஜமூளை தேவையாம்.
அடுத்தவனுங்க பூர்வஜென்ம (திருவானைக்கா வரலாறு போல)பலன்களையெல்லாம் இந்த ஞானிங்களால சொல்லமுடியும், ஆனால் காமம் சம்மந்தப்பட்ட கேள்விக்கு மட்டும் முடியாதாம்.

பெண்களைப் பற்றி சங்கரர் என்ன சொல்றார் பாருங்க:
தோகை எனும் கார்குழலைப் பாடுகிற நெஞ்சமதில்
துள்ளிவரும் ஆசை கோடி!

துள்ளிவரும் கட்டழகை அள்ளிவிட முந்துகிற
சொல்லழகின் ஓசை கோடி!

தேகமதில் மன்மதனின் பீடமதைக் கண்டு சுவை
தேடுகிற காலை கோடி!

செவ்விளநீர் என்று சிலர் தேன்குடங்கள் என்று சிலர்
செப்புற பாடல் கோடி!

தாகமுள காலமதில் தாவிவரும் ஆசைவெறி
தாகங்காமல் வந்த சேதி!

தாமிவைகள் சிந்தித்தால் வெண்கொழுப்பும்
செங்கறியும் தானென்பதாகும் உணர் நீர் !

நீர் மேல் குமிழி


இள மங்கையின் கனதனங்களையும் அவர்களது
இடையையும் கண்டு பித்தம் கொள்ள வைக்கும்
மோகத்துக்கு இரையாகதே !
மாமிசத்தின் - கொழுப்பின்... ஓர் உருவம் இது.
இவ்வாறு மனத்தினுள் மீண்டும் மீண்டும் நன்கு சிந்தனை செய்.

நல்ல வெளை இந்த பாடலை சங்கரரின் அப்பா படிக்கவில்லை போலும். சொந்த அம்மாவை பற்றியே இப்படியெல்லாம் பாடுவியா ராஸ்கல்ன்னு போட்டு சாத்தியிருப்பார் இல்லிங்களா ?


//பாலகுமாரன் கூட இந்த கருத்தை முன்வைத்துத்தான் எழுதியிருக்கிறார்//

இவர் ஒரு வேளை அறிவை மூடி வைத்துவிட்டு பக்தியுடம் எழுதியிருப்பார் என்று நினைக்கிறேன்.

சரி அது போகட்டும் நம்ம பஜகோவிந்த ஆராச்சியை! தொடருவோம்...

July 04, 2006 2:33 AM
செல்வன் said...
//அது என்னங்க அது முக்காலத்தையும் ஞானத்தால இந்த ஞானிங்களால அறிய முடியுமாம், ஆனால் காமத்தை மட்டும் அறிந்து கொள்வதற்கு அனுபவம் பெற்ற ராஜமூளை தேவையாம்.//

கல்வி கரையில,கற்பதற்கு வயதில.

சங்கரரின் ஞானத்தேடலின் ஒரு பகுதிதான் இந்த அனுபவம்.

//பெண்களைப் பற்றி சங்கரர் என்ன சொல்றார் பாருங்க: //

மிக அருமையான இலக்கிய சுவை நிரம்பிய பாடல்.படித்து மிகுந்த மன மகிழ்ச்சி அடைந்தேன்.சங்கரர் வெறும் ஆன்மிகவாதி என நினைத்திருந்தேன்.காதலை பாடிய அருமையான கவிஞரும் கூட என்பதை இன்றே அறிந்தேன்.உங்களுக்கு மிக்க நன்றி.

//நல்ல வெளை இந்த பாடலை சங்கரரின் அப்பா படிக்கவில்லை போலும். சொந்த அம்மாவை பற்றியே இப்படியெல்லாம் பாடுவியா ராஸ்கல்ன்னு போட்டு சாத்தியிருப்பார் இல்லிங்களா ?//

சங்கரரின் அப்பா இலக்கிய ரசனை இல்லாத ஜென்மம் என்றால் அப்படி செய்திருப்பார்.ஆனால் அவர் அப்படிப்பட்டவராக இருந்திருப்பார் என எனக்கு தோன்றவில்லை.

சங்க இலக்கியங்களில் பெண்களை வர்ணித்து பாடும் பாடல்கள் என்ன அழகாக இருக்கும் தெரியுமா?ஐயனின் இன்பத்துப்பாலையே எடுத்துக்கொள்ளுங்கள்.காதலை,காமத்தை கவிச்சுவை நிரம்ப தர வெகு சிலராலேயே முடியும்.கம்பன்,வள்ளுவன்,சங்கரர்,காளிதாசர்,சங்கத்தமிழ்புலவர்கள் என அப்படிப்பட்ட பலர் நம் நாட்டில் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை அறியும்போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது

July 04, 2006 1:53 PM
செல்வன் said...
This post has been removed by a blog administrator.
July 04, 2006 1:56 PM
வெற்றி said...
குமரன்,
முதல் முறையாக இப்போது தான் உங்களின் பஜ கோவிந்தத் தளத்திற்கு வருகிறேன். ஒரு முறை படித்தேன். இன்னுமொரு முறை படித்துவிட்டு பின்னர் என் கருத்தைச் சொல்கிறேன்.

நன்றி

July 04, 2006 2:28 PM
குமரன் (Kumaran) said...
வருகைக்கு நன்றி வெற்றி. மெதுவாகப் படித்து உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள்.

July 05, 2006 4:32 PM

Kavinaya said...

மறுபடி அழகுக் குட்டிக் கண்ணனா? எத்தனை வச்சிருக்கீங்க, குமரா! 82 பின்னூட்டங்கள்னு பார்த்ததும் (கொஞ்சம் :) மலைப்பாயிடுச்சு. இன்னும் படிக்கல. ஆசைகளைத் துறப்பது அவ்வளவு சுலபமில்லைதான். துறவிகளுக்கே அப்படின்னா நாம எங்க போறது :(

குமரன் (Kumaran) said...

நிறைய படங்கள் இருக்கு கவிநயா அக்கா. ஒவ்வொன்னா வருது.

kankaatchi.blogspot.com said...

எப்பொழுதுமே எதை பற்றி பேசவோ அல்லது எழுதவோ செய்ய வேண்டுமென்றால் அதை பற்றிய முழு அறிவையும், பெற்ற பிறகே அந்த முயற்சியில் இறங்கவேண்டும். இல்லாவிடில் சேற்றில் விழுந்த யானையை போல் மாட்டிக்கொண்டு வெளியேற முடியாமல் போகும் நிலைதான் ஏற்ப்படும்.என்பதை பின்னூட்டங்கள் காட்டுகின்றன
பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து சென்றவர்கள் விட்டு சென்ற நூல்கள்,கொள்கைகள் காலபோக்கில் சில சிதைந்து, சில உருமாறி,விட்டன. அவைகளுக்கெல்லாம் நாம் வரிந்து கட்டிக்கொண்டு விளக்கம் சொல்வதோ அவர்கள் செய்ததை நாம் ஆதரித்து பேசுவதோ அல்லது எழுதுவதோ தேவையற்ற செயல் என்பது என் தனிப்பட்ட கருத்து.
அதை விடுத்து நம்முடைய வாழ்க்கைக்கு அதில் தேவையான சில கருத்துக்கள் இருந்தால் அதை பயன்படுத்தி கொள்வதுதான் சால சிறந்தது என்று நினைக்கிறேன்.
போலிகள் எல்லாவற்றிலும் உண்டு எல்லா காலத்திலும்
அதைப்போல துறவி வேடம்பூண்டு மக்களை ஏமாற்றுபவர்கள் ராமாயண காலத்திலிருந்தே உண்டு.
நாம்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமே தவிர ஏமாற்றுபவர்களை பற்றி குறை கூறி பயன் ஏதும் இல்லை.

Natrajan said...

பெரியோர்கள் மகான்கள் யாவும் நமக்கு கூறியவை நன்மைக்கே. அர்த்தம் புரியாவிடின், வேறு தேடலில் செல்லலாம். நாமாக ஒரு அர்த்தம் கற்பித்து, அதில் குறை கூறுவது தகாது. சில மந்திரங்களுக்கு அர்த்தம் தேவையில்லை. ஓம் என்பது உதாரணத்திற்கு எடுத்தால், அது பரப்ரும்மத்தை குறிப்பது. அனைத்தும் அடங்கிய இறை.. மருத்துவர் சொல்லும் மாத்திரையின், ஆதி அந்தம் தெரிந்தா சாப்பிடுகிறோம்?

Natrajan said...

குமரன் Sir. வாழ்க தங்கள் தொண்டு.