Monday, June 9, 2008
வயிற்றை வளர்க்கவே இத்தனை வேடங்கள் (பஜ கோவிந்தம் 14)
ஜடிலோ முண்டி லுஞ்சித கேச:
காஷாயாம்பர பஹுக்ருத வேஷ:
பஷ்யன்னபி ச ந பஷ்யதி மூடோ
ஹுதர நிமித்தம் பஹுக்ருத வேஷ:
ஜடிலோ முண்டி லுஞ்சித கேச: - தன் தலைமுடியை சடையாக மாற்றி ஒருவர் தலை மேல் கட்டியிருக்கிறார்; இன்னொருவரோ தலைமுடியை மொட்டையடித்துக் கொண்டிருக்கிறார்.
காஷாயாம்பர - இன்னொருவரோ காவியுடையை அணிந்து கொண்டிருக்கிறார்.
பஹுக்ருத வேஷ: - இப்படி பலவித வேடங்கள் அணிந்து கொண்டு எல்லாம் துறந்தவர்கள் போல் காட்டிக் கொண்டு அலைகிறார்கள்.
பஷ்யன்னபி ச ந பஷ்யதி மூடோ - அந்த மூடர்கள் எல்லாம் காணக் கண்ணிருந்தும் (அறிவிருந்தும்) உண்மையைக் காணாதவர்கள்
ஹுதர நிமித்தம் பஹுக்ருத வேஷ: - உறுதியாக இந்த எல்லாவிதமான வேடங்களும் வயிற்றை வளர்ப்பதற்காக மட்டும் தான்.
கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.
***
இந்தப் பாடலில் வெளி வேஷம் மட்டும் போட்டுக் கொண்டிருக்கும் பொய்த் துறவிகளைக் கண்டிக்கிறார் ஆதிசங்கரர்.
மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்த தொழித்து விடின்
என்னும் திருக்கிறளின் சாயல் இந்தப் பாடலில் தெரிகிறது.
Labels:
Bhaja Govindham,
Vishnu,
திருமால்,
பஜகோவிந்தம்
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
இந்த இடுகை 'பஜ கோவிந்தம்' பதிவில் 18 மே 2006 அன்று இடப்பட்டது. அப்போது வந்த பின்னூட்டங்கள்:
செல்வன் said...
இந்தப் பாடலில் வெளி வேஷம் மட்டும் போட்டுக் கொண்டிருக்கும் பொய்த் துறவிகளைக் கண்டிக்கிறார் ஆதிசங்கரர்.///
இப்ப இந்த மாதிரி ஆளுங்க ஜாஸ்தியாயிட்டாங்க குமரன்.பழனில ஜோசியம் பாக்க மட்டும் எத்தனை சாமியார்கள் இருக்காங்க தெரியுமா?பீஸ் எல்லாம் ஆயிரக்கணக்கில தான்.
போலி சாமியாரை நம்பாதீங்க.சாமியை நம்புங்கன்னு படிச்சு படிச்சு சொன்னாலும் ஜனங்க கேக்கமாட்டேங்கறாங்க.
May 18, 2006 1:18 PM
---
சிவமுருகன் said...
மிக அழகான பொருளுடன் பொருத்தமான திருக்குறளையும் கொடுத்த விதம் அருமை.
May 18, 2006 10:48 PM
---
குமரன் (Kumaran) said...
உதவிக்கு யாரும் இல்லாவிட்டால் குப்பை பொறுக்கி வாழ்பவர்களும் இருக்கிறார்கள். இந்தியக்கனவு 2020 வலைப்பூவில் இன்றையப் பதிவைப் பாருங்கள். ஆனால் எளிதான இந்த சாமியார் வேஷம் எல்லோரும் போடுகிறார்கள். பழனியிலே மட்டும் இல்லை செல்வன். திருப்பரங்குன்றத்திலேயும் அப்படித் தான். முருகன் ஆண்டிக் கோலம் போட்டாலும் போட்டார்; இவர்கள் எல்லா முருகன் கோயில் வாசலிலும் கூட்டம் கூட்டமாய் அமர்ந்துவிடுகிறார்கள்.
May 19, 2006 1:23 PM
---
குமரன் (Kumaran) said...
ரொம்ப நன்றி சிவபாலன். பொருள் எழுதிக் கொண்டிருக்கும் போது அந்தக் குறள் நினைவிற்கு வந்தது. அதனால் உடனே எழுதிவிட்டேன்.
May 19, 2006 1:24 PM
அச்சோ! அந்தக் குட்டிக் கண்ணனை அள்ளிக் கட்டிக்கலாம் போல கொள்ளை அழகு! தான் எழுதிய கவிதையை தானே ரசிப்பது போல கிளிகளை பார்த்து ரசிக்கும் சின்னக் கண்ணன்! :)
வெறும் பொருள் மட்டும் இல்லாமல் குறளுடன் சேர்த்து எழுதியிருப்பது அழகுதான் குமரா!
சங்கரர் ஒருவேளை இங்கு பவுத்த, மற்றும் ஜைன முனிவர்களைக் குறிப்பிடுகிறாரோ? ஜைன மதத்தில் தான் சங்கரர் கூறுவது போல் ஒவ்வொரு முடியாக பிடுங்கி மொட்டை அடிக்கும் பழக்கம் இருக்கிறது. ஆயினும் ஜடா முடி வைக்கும் பழக்கம் பவுத்த, ஜைன மதங்களில் இல்லை. பொதுவாக எல்லாரையும் தான் சொல்லியிருப்பார் போலிருக்கிறது.
குட்டிக் கண்ணனை நல்லாத் தான் இரசிச்சுச் சொல்லியிருக்கீங்க அக்கா. :-)
கிரிராஜ். ஒரு திசையில் பயணம் செய்துவிட்டு மீண்டும் நீங்களே திரும்பி வந்துவிட்டீர்கள். :-)
Post a Comment