Thursday, June 5, 2008
நீரில்லை என்றால் பறவைகள் இல்லை; பணம் இல்லை என்றால் பரிவாரம் இல்லை (பஜகோவிந்தம் 10)
வயஸி கதே க: காம விகார:
சுஸ்கே நீரே க: காசார:
க்ஷீணே வித்தே க: பரிவார:
ஞாதே தத்வே க: சம்ஸார:
வயஸி கதே க: காம விகார: - இளமை நீங்கி முதுமை வந்துவிட்டால் எங்கே போயின காமக் களியாட்டங்கள்?
சுஸ்கே நீரே க: காசார: - நீர் நிலைகளில் நீர் வற்றிப் போனால் எங்கே போயின நீர் நிலைகளை நம்பி வாழும் பறவைகளும் விலங்குகளும்?
க்ஷீணே வித்தே க: பரிவார: - செல்வம் அழிந்து போனால் எங்கே போனார்கள் நம் நண்பர்களும் உறவினர்களும்?
ஞாதே தத்வே க: சம்ஸார: - உண்மைப் பொருளை அறிந்து கொண்ட பின் எங்கே போனது என்றும் மாறும் நிலையுடைய இந்த சம்ஸாரம்?
கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.
Labels:
Bhaja Govindham,
Vishnu,
திருமால்,
பஜகோவிந்தம்
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
இந்த இடுகை 'பஜ கோவிந்தம்' பதிவில் 30 டிசம்பர் 2005 அன்று இடப்பட்டது. அப்போது வந்த பின்னூட்டங்கள்:
2 comments: இராமநாதன் said...
மிக அழகாக இருக்கிறது பாடல்.
//இளமை நீங்கி முதுமை வந்துவிட்டால் எங்கே போயின காமக் களியாட்டங்கள்?
//
சத்தியமான வார்த்தைகள். புரிந்தாலும் நிற்க முடியவில்லையே.
December 30, 2005 12:39 PM
குமரன் (Kumaran) said...
நிறுத்த வேண்டாம். கொஞ்சம் அடக்கமாய் இருந்தால் போதும். இந்த வயதிற்கு. இல்லையா இராமநாதன்.
December 31, 2005 12:05 AM
எல்லாமே நிலையற்றது என்று அழகாகக் கூறும் பாடல். நன்றி, குமரா!
நன்றி அக்கா.
Post a Comment