Thursday, July 3, 2008

காமம், சினம், பேராசை, மயக்கம் (பஜ கோவிந்தம் - 26 )


காமம் க்ரோதம் லோபம் மோஹம்
த்யக்த்வாத்மானம் பாவய கோஹம்
ஆத்மஞான விஹினா மூடா
தே பச்யந்தே நரக நிகூடா:

காமம் க்ரோதம் லோபம் மோஹம் த்யக்த்வா - காமம், சினம், பேராசை, மயக்கம் இவற்றைத் துறந்துவிட்டு

ஆத்மானம் பாவய கோ அஹம் - மனத்தில் 'நான் யார்?' என்ற சிந்தனையை எப்போதும் கொள்.

ஆத்மஞான விஹினா மூடா - தன்னைப் பற்றிய அறிவு இல்லாதவர்கள் மூடர்கள்

தே பச்யந்தே நரக நிகூடா: - அவர்கள் எப்போதும் நரக வேதனையில் கட்டுப்பட்டவர்களாக (அறிவாளிகளால்) பார்க்கப் படுகிறார்கள்.

கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.

7 comments:

குமரன் (Kumaran) said...

இந்த இடுகை 'பஜ கோவிந்தம்' பதிவில் 15 ஜூலை 2006 அன்று இடப்பட்டது. அப்போது வந்த பின்னூட்டங்கள்:

7 comments:

கோவி.கண்ணன் said...
//ஆத்மானம் பாவய கோ அஹம் - மனத்தில் 'நான் யார்?' என்ற சிந்தனையை எப்போதும் கொள்.//
திரு குமரன்,
நான் இந்த அழியக்கூடிய உடலள்ள, நான் ஒரு ஜீவன் அல்லது ஆத்மா என்ற அனுபவத்தை மனதில் எப்போதும் கொள் என்று விளங்கிக் கொள்ளலாமா ?

July 15, 2006 1:46 AM
--

வடுவூர் குமார் said...
திரு குமரன்,
நல்லா இருக்கு உங்க பதிவு.
நாலு வரியிலேயே கொண்டு போங்க,படிக்க ஏதுவாக இருக்கும்.
நிறைய தடவை பஜகோவிந்தம் கேட்டிருந்தாலும் யாரிடமும் போய் அர்த்தம் கேட்டதில்லை.
வெகு நாட்களாக படித்துக்கொண்டு இருந்தாலும் பின்னுட்டம் எழுதுவதில்லை.மன்னிக்கவும்.
தொடர்க.

July 15, 2006 1:59 AM
--

குமரன் (Kumaran) said...
ஆமாம் கோவி.கண்ணன் ஐயா. பகவான் ரமணரின் 'நான் யார்?' தத்துவத்தைப் படித்திருக்கிறீர்களா? சிவபாலன் ஒரு பதிவில் அதற்கெல்லாம் சுட்டி கொடுத்திருந்தார் என்று நினைக்கிறேன்.

July 15, 2006 2:00 AM
--

கோவி.கண்ணன் said...
//சிவபாலன் ஒரு பதிவில் அதற்கெல்லாம் சுட்டி கொடுத்திருந்தார் என்று நினைக்கிறேன். //
அறிந்தேன் !!!

July 15, 2006 2:08 AM
---

குமரன் (Kumaran) said...
உங்கள் பாராட்டிற்கு நன்றி திரு. வடுவூர் குமார். ஆமாம். நீங்கள் சொல்வது போல் ஒவ்வொரு பதிவிலும் ஒரு சுலோகம் (நான்கு வரிகள்) என்ற முறையிலேயே பதித்துக்கொண்டிருக்கிறேன். படிப்பதற்கும் எளிதாக இருக்கும்.

என் மற்ற வலைப்பூக்களையும் படிக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். எப்போதாவது ஏதாவது கருத்து சொல்ல வேண்டும் என்றால் தயங்காமல் சொல்லுங்கள்.

July 15, 2006 2:25 AM
--

johan -paris said...
"தன்னைப் பற்றிய அறிவு இல்லாதவர்கள் மூடர்கள்"

குமரா!
இதைத்தான் சாக்கிரடீஸ்" உன்னையே நீ அறிவாய்" என்றாரா?எல்லாப் பிரச்சனையும் நம்மை நாம் அறியும் வரையே!
யோகன் பாரிஸ்

July 17, 2006 5:34 AM
--

குமரன் (Kumaran) said...
யோகன் ஐயா. சாக்ரடீஸ் சொன்னதும் சங்கரர் சொன்னதும் ஒரே தத்துவத்தையா என்று தெரியவில்லை. ஆதிசங்கரர் சொல்வது மனம், மொழி, மெய்களுக்கு எட்டாத ஆத்மதத்துவத்தை. சாக்ரடீஸ் சொல்வது சாதாரணமாக 'நான்' என்று எல்லோரும் குறித்துக் கொள்ளும் அறிவு, மனம், உடல் என்னும் கூட்டினை.

July 18, 2006 11:38 AM

Kavinaya said...

இப்பதான் படிச்சேன்; ஒரு பொருளைப் பற்றி அதிகமா நினைக்க நினைக்க அதன் மேல ஆசையும், அதனால் கோபமும், பொறாமையும், இன்ன பிற வேண்டாத உணர்வுகளும் வந்து நல்லவை, தீயவையை இனம்பிரிக்க முடியாத மயக்கத்தைத் தந்து விடுகிறதாம். அதனால ஹரி நாமம் சொல்லி, அப்படிப்பட்ட மாயையை விலக்கி, தெளிவு பெறுவோம்.

குமரன் (Kumaran) said...

நல்ல கருத்து கவிநயா அக்கா. கீதையில் கண்ணன் இந்தத் தொடர் உணர்வுகளைப் பற்றி சொல்வான். ஒரு பொருளை மீண்டும் மீண்டும் நினைக்க அதன் மேல் ஆசையும் (காமமும்), அது கிடைக்காமல் யாராவது தடுத்தால் அவர் மேல் சினமும் (க்ரோதமும்), அது நமக்குக் கிடைத்துவிட்டால் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளா கஞ்சத்தனமும் (லோபமும்), நல்லது கெட்டது தெரியாத மயக்கமும் (மோஹமும்), பெற்றோம் என்ற கருவமும் (மதமும்), நாம் பெறாமல் வேறு யாரேனும் அதனைப் பெற்றால் அவர் மேல் பொறாமையும் (மாத்ஸர்யமும்) ஒவ்வொன்றாகத் தோன்றும் என்று ஒருவருக்கு இருக்கும் ஆறு உட்பகைவர்களைப் பற்றி சொல்லுவான்.

Kavinaya said...

//கீதையில் கண்ணன் இந்தத் தொடர் உணர்வுகளைப் பற்றி சொல்வான்.//

அங்கதான் படிச்சேன் குமரா :) நீங்க சொல்லிடுவீங்கன்னு தெரியும். அதே போல அழகா சுருக்கமா சொல்லீட்டிங்க. உங்ககிட்ட கீதோபதேசம் கேட்டுக்கலாம் போல. கண்ணன் மனம் வச்சா :) கீதை ஸ்லோகங்கள் / விளக்கங்கள் எழுதி இருக்கீங்களா?

குமரன் (Kumaran) said...

:-)

கூடல்ல தேடினா கிடைக்கும். ஒன்னு ரெண்டு சுலோகங்களுக்கு எழுதியிருக்கேன். தொடர்ந்து எழுதுற எண்ணம் இப்போதைக்கு இல்லை. ஏற்கனவே தொடங்குனது எல்லாம் தொடர்ந்து எழுதணும்.

திவாண்ணா said...

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்...
இந்த பதிவுகளை இவ்வளவு நாள் படிக்காம
விட்டுட்டேனே.
:-(
இனியாவது தொடந்து படிக்கணும்.

குமரன் (Kumaran) said...

இனிமே தொடர்ந்து வந்து படிங்க திவா ஐயா.