Saturday, May 17, 2008
லிங்காஷ்டகம் முழுதும்
ப்ரஹ்ம முராரி ஸுரார்சித லிங்கம்
நிர்மல பாஸித ஸோபித லிங்கம்
ஜன்மஜ துக்க வினாசக லிங்கம்
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்
ப்ரஹ்ம முராரி ஸுரார்சித லிங்கம் - நான்முகப் பிரம்மனாலும் முரனை அழித்த முராரியாம் விஷ்ணுவாலும் எல்லாத் தேவர்களாலும் அர்ச்சிக்கப் பட்ட லிங்கம்
நிர்மல பாஸித ஸோபித லிங்கம் - குற்றமற்ற மிகுந்த ஒளியுடன் ஜொலிக்கும் லிங்கம்
ஜன்மஜ துக்க வினாசக லிங்கம் - பிறப்பு இறப்பினால் ஏற்படும் துன்பங்களை நீக்கும் லிங்கம்
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம் - அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை அடியேன் வணங்குகிறேன்.
***
தேவ ரிஷி ப்ரவரார்சித லிங்கம்
காம தஹன கருணாகர லிங்கம்
ராவண தர்ப வினாஷன லிங்கம்
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்
தேவ ரிஷி ப்ரவரார்சித லிங்கம் - தேவர்களிலும் ரிஷிகளிலும் சிறந்தவர்களாக இருப்பவர்களால் அர்ச்சிக்கப்பட்ட லிங்கம்
காம தஹன கருணாகர லிங்கம் - மறைந்திருந்து மலர்க்கணைகளை விட்ட காமனை எரித்து பின்னர் அவனை மீண்டும் உயிர்ப்பித்த கருணையுடன் கூடிய லிங்கம்
ராவண தர்ப வினாஷன லிங்கம் - இராவணனின் கர்வத்தை கால் கட்டை விரலால் நசுக்கி அழித்த லிங்கம்
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம் - அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை நான் வணங்குகிறேன்.
***
ஸர்வ ஸுகந்த ஸுலேபித லிங்கம்
புத்தி விவர்த்தன காரண லிங்கம்
சித்த சுராசுர வந்தித லிங்கம்
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்
ஸர்வ ஸுகந்த ஸுலேபித லிங்கம் - எல்லாவிதமான நறுமணப் பொருட்களாலும் அலங்கரிக்கப்பட்ட லிங்கம்
புத்தி விவர்த்தன காரண லிங்கம் - உண்மையறிவு அடையக் காரணமாக இருக்கும் லிங்கம்
சித்த சுராசுர வந்தித லிங்கம் - சித்தர்களாலும் தேவர்களாலும் அசுரர்களாலும் வணங்கப்படும் லிங்கம்
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம் - அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை நான் வணங்குகிறேன்.
***
கனக மஹாமணி பூஷித லிங்கம்
பணிபதி வேஷ்டித ஸோபித லிங்கம்
தக்ஷ ஸுயக்ஞ விநாசன லிங்கம்
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்
கனக மஹாமணி பூஷித லிங்கம் - பொன்னாலும் மிகச்சிறந்த மாணிக்கங்களாலும் அழகு செய்யப்பெற்ற லிங்கம்
பணிபதி வேஷ்டித ஸோபித லிங்கம் - நாகங்களின் அரசனை அணிந்து ஒளிவீசும் லிங்கம்
தக்ஷ ஸுயக்ஞ விநாசன லிங்கம் - தனக்குரிய மரியாதையைத் தரத் தவறிய தக்ஷப் பிரஜாபதியின் யாகத்தை அழித்த லிங்கம்
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம் - அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை நான் வணங்குகிறேன்.
***
குங்கும சந்தன லேபித லிங்கம்
பங்கஜ ஹார ஸுஸோபித லிங்கம்
ஸஞ்சித பாப விநாசன லிங்கம்
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்
குங்கும சந்தன லேபித லிங்கம் - குங்குமத்தாலும் சந்தனத்தாலும் அலங்கரிக்கப் பட்ட லிங்கம்
பங்கஜ ஹார ஸுஸோபித லிங்கம் - தாமரை மலர் மாலை அணிந்து ஒளிவீசும் லிங்கம்
ஸஞ்சித பாப விநாசன லிங்கம் - பற்பல பிறப்புகளில் சேர்த்து வைத்த எல்லா வினைகளின் பயன்களையும் அழிக்கும் லிங்கம்
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம் - அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை நான் வணங்குகிறேன்
***
தேவ கணார்ச்சித ஸேவித லிங்கம்
பாவைர் பக்தி ப்ரவேசக லிங்கம்
தினகர கோடி ப்ரபாகர லிங்கம்
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்
தேவ கணார்ச்சித ஸேவித லிங்கம் - தேவ கணங்களால் அர்ச்சிக்கப்பட்டும் சேவைகள் செய்யப்பட்டும் விளங்கும் லிங்கம்
பாவைர் பக்தி ப்ரவேசக லிங்கம் - உணர்வுடன் கூடிய பக்தியை தோற்றுவிக்கும் லிங்கம்
தினகர கோடி ப்ரபாகர லிங்கம் - கோடி சூரியன்களின் ஒளியினைத் கொண்டிருக்கும் லிங்கம்
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம் - அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை நான் வணங்குகிறேன்
***
அஷ்ட தளோபரி வேஷ்டித லிங்கம்
ஸர்வ ஸமுத்பவ காரண லிங்கம்
அஷ்ட தரித்ர விநாசன லிங்கம்
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்
அஷ்ட தளோபரி வேஷ்டித லிங்கம் - எட்டிதழ் தாமரையால் சூழப்பட்ட லிங்கம்
ஸர்வ ஸமுத்பவ காரண லிங்கம் - எல்லாவிதமான செல்வங்களுக்கும் காரணமான லிங்கம்
அஷ்ட தரித்ர விநாசன லிங்கம் - எட்டுவிதமான ஏழ்மையை அழிக்கும் லிங்கம்
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம் - அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை நான் வணங்குகிறேன்
***
ஸுரகுரு ஸுரவர பூஜித லிங்கம்
ஸுரவன புஷ்ப சதார்சித லிங்கம்
பராத்பரம் பரமாத்மக லிங்கம்
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்
ஸுரகுரு ஸுரவர பூஜித லிங்கம் - தேவ குருவாலும் தேவர்களில் சிறந்தவர்களாலும் பூஜிக்கப்பட்ட லிங்கம்.
ஸுரவன புஷ்ப சதார்சித லிங்கம் - தேவலோக நந்தவன மலர்களால் எப்போதும் அர்ச்சிக்கப்பட்ட லிங்கம்.
பராத்பரம் பரமாத்மக லிங்கம் - பெரியதிலும் பெரியதான, பரமாத்ம உருவான லிங்கம்.
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம் - அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை நான் வணங்குகிறேன்.
***
லிங்காஷ்டகம் இதம் புண்யம்
யே படேத் சிவ சன்னிதௌ
சிவலோகம் அவாப்நோதி
சிவே ந ஸஹமோததே
லிங்காஷ்டகம் இதம் புண்யம் - இந்த லிங்காஷ்டகம் மிகப் புனிதமானது
யே படேத் சிவ சன்னிதௌ - இதனை சிவ சன்னிதானத்தில் படித்தால்
சிவலோகம் அவாப்நோதி - சிவலோகம் கிடைக்கும்
சிவே ந ஸஹமோததே - சிவனுடன் தோழமை பாராட்டி என்றும் ஆனந்தமாக இருக்கலாம்.
***
நாமக்கல் சிபியின் வேண்டுகோளின் படி லிங்காஷ்டகம் முழுவதும் இந்தப் பதிவில் கொடுத்திருக்கிறேன். இந்தப் பாடலை சூலமங்கலம் சகோதரிகள் பாடியுள்ளதை இங்கே கேட்கலாம். எஸ்.பி.பி பாடியது இங்கே கேட்கலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
இந்த இடுகை 'லிங்காஷ்டகம்' பதிவில் 29 அக்டோபர் 2006 அன்று இடப்பட்டது. அப்போது வந்த பின்னூட்டங்கள்:
9 comments:
நாமக்கல் சிபி said...
வேண்டுகோளை உடன் நிறைவேற்றியமைக்கு மிக்க நன்றி குமரன்.
8:45 PM, October 29, 2006
---
மதுமிதா said...
நன்றி குமரன்
எஸ் பி பி பாடுவதை இங்கே இப்போதே கேட்பது போலுள்ளது.
இப்பாடலைக் கேட்டு பைத்தியமான நாட்களை நினைவு கூறச்செய்து விட்டீர்கள். செவிகளில் இன்னும் பாடலின் ரீங்காரம் லயம் தவறாமல்.
முழுவதும் வாசித்துவிட்டு மறுபடி எழுதுகிறேன்.
9:57 AM, October 30, 2006
---
Sivabalan said...
குமரன் சார்,
நல்ல பாடல். SPB குரலில் கேட்டு உள்ளேன்.
நன்றி
2:27 PM, October 30, 2006
--
குமரன் (Kumaran) said...
நன்றி மதுமிதா அக்கா.
2:49 PM, October 30, 2006
---
குமரன் (Kumaran) said...
நன்றி சிவபாலன்.
8:55 AM, October 31, 2006
---
சந்தோஷ் aka Santhosh said...
நல்ல பதிவுகள் குமரன்,
பாடல்களுக்கு நல்ல முறையில் விளக்கம் கொடுத்து இருக்கிங்க.
4:12 PM, November 05, 2006
---
குமரன் (Kumaran) said...
நன்றி சந்தோஷ்.
4:57 PM, November 05, 2006
---
Thambi said...
குமரன் சார் நமஸ்காரம்,
அடியேன் தம்பி(அம்பியின்), முருகன் பதிவு அற்புதம் முருகன் அடிமைகள் அவரை ஜெயந்திணாதன் என்று கொண்டாடுவர்.ஆச்சாரியாள் சுப்ப்ரமணியபுஜங்கம் பாடியதும் அதே தலத்தில்தான்.
முருகனடிமை,
கணேசன்
9:24 PM, November 15, 2007
--
குமரன் (Kumaran) said...
வாங்க கணேசன். வருகைக்கு நன்றி. அம்பி இந்தப் பக்கம் வந்ததில்லை. அம்பியின் இடுகைகள் பலவற்றைப் படித்திருக்கிறேன்.
ஆமாம். இரவிசங்கரும் செந்தில்பதியைச் ஜெயந்திபுரம் என்று சொல்வார்கள் என்று முருகனருள் பதிவில் சொல்லியிருக்கிறார். ஆசாரியாள் எழுதிய சுப்ரமணிய புஜங்கத்தைப் பலமுறை கேட்டிருக்கிறேன்.
7:18 PM, November 17, 2007
"சிவனுடன் தோழமை பாராட்டி என்றும் ஆனந்தமாக இருக்கலாம்."
உண்மைதான். இந்தப்படத்தை ஒட்டியே அப்படி ஓர் அனுபவம் எனக்கு வாய்த்திருக்கிறது. நாங்கள் தஞ்சை கோவிலுக்கு சென்ற போது நல்ல கூட்டம் வரிசையாக ஆட்களை நகரச்செய்து கொண்டிருந்தனர் சில கணங்கள் மட்டுமே நின்று தரிசிக்கக்கூடிய நிலமை.. எனக்கோ அவரைக்கண்டதும் ஒரு மிகப்பெரும் விகசிப்பு அவரோடு பேச அதிகம் உள்ளது போல் ஒரு நினைப்பு, நான் அவரிடமே "உன்னோடு பேச உன்னை இன்னும் சிறிது நேரம் கண்டபடி இருக்க எனக்கு ஆசை ஆனால் முடியாது போலிருக்கே" என்று முறையிட்டேன்.. என் முறை வந்தது என்னையும் நகர்த்தினர், ஆனால் என்ன தோன்றியதோ.. அங்குள்ள சிவாச்சாரியர் என்னை மட்டும் நிறுத்தி அர்ச்சனைக்கு விபரம் கேட்டு அதுமுடியும் வரை நிறுத்தி பின் தீபராதனையும், அர்ச்சனை பிராசதமும் தந்து அனுப்பினார். என் கணவர் எனக்கு முன் சென்று விட்டதால் கையில் காசு கூட வைத்துக்கொள்ளவில்லை அதிசயமாய் அவரும் ஏதும் எதிர்பார்க்கமால் எனக்கு தரிசனம் செய்வித்து அனுப்பினார் அந்த பெருவுடையாரே வந்து செய்தது போல் தோன்றியது.. ஒலியற்ற சொற்களையும் உணர்ந்து கொள்பவன் தானே அவன்....
நல்ல இறையனுபவம் கிருத்திகா. பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள்.
very nice
Post a Comment