Friday, May 30, 2008
பாலனாய் விளையாட்டு; இளமையில் காதல்; முதுமையில் கவலை; என்ன தான் செய்வது? (பஜ கோவிந்தம் 7)
பாலஸ்தாவத் க்ரீடா சக்த:
தருணஸ்தாவத் தருணீ சக்த:
வ்ருத்தஸ்தாவத் சிந்தா சக்த:
பரே ப்ரஹ்மணி கோபி ந சக்த:
பாலஸ்தாவத் க்ரீடா சக்த: - சிறு வயதிலோ விளையாட்டுச் செயல்களிலேயே ஒவ்வொருவரும் மூழ்கிப் போகின்றனர்.
தருணஸ்தாவத் தருணீ சக்த: - பருவ வயதிலோ இனக்கவர்ச்சியிலேயே மனமெல்லாம் இருக்கிறது.
வ்ருத்தஸ்தாவத் சிந்தா சக்த: - முதுமைக்காலத்திலோ எத்தனையோ கவலைகள்.
பரே ப்ரஹ்மணி கோபி ந சக்த: - ஐயோ! பரம்பொருளைப் பற்றி எண்ண ஒருவருக்கும் தமது வாழ்க்கையில் நேரமே இல்லையே?
கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.
Labels:
Bhaja Govindham,
Vishnu,
திருமால்,
பஜகோவிந்தம்
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
இந்த இடுகை 'பஜ கோவிந்தம்' பதிவில் 24 நவம்பர் 2005 அன்று இடப்பட்டது. அப்போது வந்த பின்னூட்டங்கள்:
வெளிகண்ட நாதர் said...
இளமை ஊஞ்சலாடி
முதுமை தள்ளாடி
உயிர் நீப்பர் இந்த குடி
அய்யனை நினைத்தவர்
அடைவர் மோட்சம்
நினையாதோர்
அடைவர் நரகம்.
கோவிந்தா! கோவிந்தா!
கோவிந்தா! கோவிந்தா!
November 24, 2005 11:37 PM
---
குமரன் (Kumaran) said...
கோவிந்தா கோவிந்தா கோவிந்தா...
உதயகுமார் அண்ணா...தவறாம வந்து கோவிந்த நாமம் சொல்லி என்னையும் சொல்லவைக்கிறீங்க. ரொம்ப நன்றிங்கண்ணா.
November 25, 2005 4:09 PM
மிகவும் நிதர்சனமான வரிகள்...:-)
பாலனாய் ஆடலாம் கோபலானோடு!
இளமையில் காதலாம் கண்ணன் அவனோடு!
முதுமையில் ஓய்வெலாம் அவனின் துணையோடு!
உண்மை மௌலி.
நல்லா சொன்னீங்க கவிநயா அக்கா. நன்றி. :-)
Post a Comment