Wednesday, May 7, 2008

நடுக்கம் வந்த பின் நலம் விசாரிக்கவும் நாதி இல்லை (பஜகோவிந்தம் 5)

யாவத் வித்தோ பார்ஜன சக்த:
தாவன் நிஜ பரிவாரோ ரக்த:
பஸ்சாத் ஜீவதி ஜர்ஜர தேஹே
வார்த்தாம் கோபி ந ப்ருச்சதி கேஹே

யாவத் வித்தோ பார்ஜன சக்த: - எது வரை பொருள் சம்பாதிக்கும் வலிமை இருக்கிறதோ

தாவன் நிஜ பரிவாரோ ரக்த: - அது வரை தான் உறவும் நட்பும் நம்மிடம் அன்பும் பற்றும் கொண்டு இருக்கும்

பஸ்சாத் ஜீவதி ஜர்ஜர தேஹே - பின்னர் வலிவிழந்த நடுங்கும் முதிர்ந்த உடலுடன் வாழும் போது

வார்த்தாம் கோபி ந ப்ருச்சதி கேஹே - நம் வீட்டில் நம்மை அண்டி வாழ்ந்தவர் கூட நாம் எப்படி இருக்கிறோம் என்று கவலைப்பட மாட்டார்கள்.

கோவிந்தனை வணங்குங்கள்.

கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.

7 comments:

குமரன் (Kumaran) said...

இந்த இடுகை 'பஜ கோவிந்தம்' பதிவில் 3 நவம்பர் 2005 அன்று இடப்பட்டது. அப்போது வந்த பின்னூட்டங்கள்:

4 comments:

சிவா said...
குமரன்,
இப்படி எல்லாம் அந்த காலத்திலேயே யோசித்திருக்கிறார்களா?. இந்த பாடல்கள் எந்த காலத்தில் எழுதப்பட்டவை?. தெரியுமா?

November 03, 2005 11:02 AM
--

வெளிகண்ட நாதர் said...
கோவிந்தா... கோவிந்தா!

November 03, 2005 11:03 AM
--

குமரன் (Kumaran) said...
சிவா, ஆதி சங்கரர் பாடியவை இப்பாடல்கள். சங்கர மடங்களின் வரலாற்றின் படி ஆதி சங்கரர் வாழ்ந்த காலம் கி.மு. 509 - 477; ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி அவர் வாழ்ந்த காலம் கி.பி. 788 - 820. மேலும் ஆதி சங்கரரைப் பற்றி அறிய http://en.wikipedia.org/wiki/Adi_Sankara

November 03, 2005 2:49 PM
--

குமரன் (Kumaran) said...
வருகைக்கு நன்றி வெளிகண்ட நாதர்....உங்கள் பாலக்கரை பாலன் பதிவுகள் நன்றாய் இருக்கின்றன. அவ்வப்போது வந்து கோவிந்தா சொல்லிவிட்டுச் செல்லுங்கள்.

November 03, 2005 8:17 PM

Kannabiran, Ravi Shankar (KRS) said...

குமரன்
பொதுவான ஒரு கேள்வி!

சக்த: ரக்த:
தேஹே கேஹே
இப்படி rhymingஆக முடிப்பது ஆங்கில மேலை இலக்கியத்தில் உண்டு.
நம் நாட்டில் பெரும்பாலும் எதுகை மோனை அல்லவா? தெலுங்கில் கூட கீர்த்தனைகள் எகனை மொகனை தான்!

சங்கரர் பாடல்கள் மட்டும் தான் இப்படி ஈற்றுச் சீர் rhyming-ஆ?
இல்லை வடமொழியில் இது போல் நிறைய உண்டா?

Kannabiran, Ravi Shankar (KRS) said...

அப்பாடா...
கேஆரெஸ் எப்பமே மொக்கைப் பின்னூட்டமே போடமாட்டங்கிறார். பதிவு சம்மந்தமாத் தான் பின்னூட்டறார்-ன்னு ஒரே கொறைப்பட்டுக்கறாங்க!
மேல் இட்ட பின்னூட்டத்தால் அந்தக் குறை போயிரிச்சி!

குமரன் (Kumaran) said...

எதுகை மோனை - தமிழ் இலக்கணத்தில் வரும் அணிகள் என்று மட்டும் தான் தெரியும் இரவிசங்கர். மற்ற மொழிகளில் எப்படி என்று தெரியாது. தெலுங்கு கீர்த்தனங்களிலும் வருமா? நாயகி சுவாமிகளின் கீர்த்தனைகளிலும் எதுகை மோனை பார்த்திருக்கிறேன் - ஆனால் அது தமிழில் தாக்கம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன்.

வடமொழியில் எதுகை மோனை பார்த்ததில்லை; ஆனால் ஓசை நயம் கொண்ட பாடல்களைப் பார்த்திருக்கிறேன். சங்கரர் பாடல்களில் மிகுதியாக. மற்றவர்களின் பாடல்களிலும் கண்டதுண்டு.

குமரன் (Kumaran) said...

அது மொக்கைப் பின்னூட்டமா? அப்படி உங்களால் போடவும் முடியுமா? அப்படியே நீங்கள் போட்டாலும் நான் விடை சொல்வேனா? ஏனையா இந்த வீணாசையெல்லாம்? :-)))

கிருத்திகா ஸ்ரீதர் said...

ஒரு சம்சாரியின் சூழ்நிலையை எத்தனை நிதர்சனமாக ஒரு சன்யாசி விளக்கியுள்ளார். தினமும் கேட்கும் பாடும் ஸ்லோகமாக இருந்தாலும் கூட இது போன்று அர்த்தம் புரியும் போது மெய்சிலிர்த்துத்தான் போகிறது. நன்றி...

குமரன் (Kumaran) said...

மகிழ்ச்சி கிருத்திகா. நன்றி.