Friday, March 4, 2011

ஷடானனம் குங்கும ரக்த வர்ணம்


கஜானனம் பூத கணாதி சேவிதம் என்று தொடங்கும் விநாயகர் சுலோகம் நிறைய பேருக்குத் தெரிந்திருக்கும். ஷடானனம் என்று தொடங்கும் முருகன் சுலோகம் ஒன்றை இன்று தான் இணையத்தில் படித்தேன். இதுவும் எளிமையாக இருக்கவே 'சின்ன சின்ன சுலோகங்கள்' வகையில் இங்கே எழுதுகிறேன்.

ஷடானனம் குங்கும ரக்த வர்ணம்
மஹாமதிம் திவ்ய மயூர வாஹனம்
ருத்ரஸ்ய ஸுனும் ஸுரஸைன்ய நாதம்
குஹாம் சதாஹம் சரணம் ப்ரபத்யே

ஷடானனம் - ஆறுமுகங்களை உடையவன்

குங்கும ரக்த வர்ணம் - குங்குமத்தைப் போல் மிகச் சிவந்த நிறம் கொண்டவன்; சேயோன்; சேந்தன்

மஹாமதிம் - பேரறிஞன்

திவ்ய மயூர வாஹனம் - தெய்வீகமான மயிலை வாகனமாகக் கொண்டவன்

ருத்ரஸ்ய ஸுனும் - உருத்திரனின் திருமகன்

ஸுரஸைன்ய நாதம் - தேவர் படைகளின் தலைவன்

குஹாம் - குகையில் வாழ்பவன்

சதா அஹம் சரணம் ப்ரபத்யே - (அவனை) எப்போதும் நான் கதியென அடைகிறேன்!

குருகுஹனைத் தியானிக்க ஒரு அருமையான சுலோகம்! எளிமையானதும் கூட!

5 comments:

ராம்ஜி_யாஹூ said...

பகிர்விற்கு நன்றிகள்

Kavinaya said...

அழகான ஸ்லோகம். நன்றி குமரா.

Unknown said...

I have copied this sloka in my notebook(not in my blog). Very nice. Can u pls convey me where this slokacomes? I mean Subramaniya bhujangam or some where.....
Thankyou

குமரன் (Kumaran) said...

நன்றி ராம்ஜீ, கவிக்கா & நாரதர் ஐயா.

நாரதர் ஐயா, நேற்று கூகிளாண்டவர் தந்த பக்கத்தில் இந்த சுலோகம் கண்டேன். எந்த ஸ்தோத்ரத்தின் பகுதி என்று தெரியவில்லை.

Ramanarayanan murali said...

Yogam

Meaning full Song easy to chanty - the essence of Shanmugam - Shadasharan (SARAVANABAVA)