Saturday, July 17, 2010

சரஸ்வதி நமஸ்துப்யம்...


சிறு குழந்தைகளுக்கு முதலில் சொல்லிக் கொடுக்கும் சுலோகங்களில் சுக்லாம்பரதரம் சுலோகத்திற்கு அடுத்த சுலோகம் இது தான் என்று நினைக்கிறேன். அந்த வயதில் படிப்பு தானே மிக முக்கியம். அதனால் கலைவாணியை வேண்டும் இந்த சுலோகத்தைச் சொல்லிக் கொடுக்கிறார்கள்.

சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி
வித்யாரம்பம் கரிஷ்யாமி சித்திர்பவது மே சதா

ரொம்ப எளிமையான சுலோகம். ஒவ்வொரு சொல்லாகப் படித்துக் கொண்டு வந்தாலே பொருள் புரிந்துவிடும்.

சரஸ்வதி - தேவி சரஸ்வதி!

நம: துப்யம் = நமஸ்துப்யம் - உனக்கு நமஸ்காரங்கள்.

வரதே - வரம் தருபவளே!

காமரூபிணி - வேண்டியவற்றைத் தருபவளே!

வித்யா ஆரம்பம் = வித்யாரம்பம் - கல்வித் தொடக்கத்தை

கரிஷ்யாமி - செய்கிறேன்

சித்தி: பவது மே சதா - அனைத்தும் அடியேனுக்குச் சித்தி ஆகட்டும்!

வேண்டுபவற்றை எல்லாம் தரும் வரமான கல்வியைத் தொடங்கும் போது அது நன்கு சித்தியாக அன்னை சரஸ்வதியை வேண்டுவது தானே முறை!

3 comments:

Anonymous said...

வணக்கம்! வாழ்க வளமுடன்! உங்கள் சேவை தொடரட்டும்! அம்பாள் ஸ்தோத்திரம் தாருங்களேன். லலிதா ஸஹஸ்கரநாமம், தமிழிழ் கிடைக்குமா?

நன்றி!

அருண்முருகன்

குமரன் (Kumaran) said...

நன்றி அருண்முருகன். அம்பாளின் திருப்பெயர்களுக்கு விளக்கங்களை நண்பர் சந்திரமௌலி தனது மதுரையம்பதி பதிவில் எழுதிக் கொண்டிருக்கிறார். பதிவு முகவரி: http://maduraiyampathi.blogspot.com/

Anonymous said...

வணக்கம்! தங்கள் உதவிக்கு நன்றியை தெரிவிக்கிறேன். வாழ்க வழமுடன்!
ஆங்கிலத்தில் லலிதா ஸஹஸ்கரநானமம் தேவைப்படுபவர்கள் script & MP4 available in the following link: http://www.hindudevotionalblog.com/2008/09/lalita-sahasranamam-stotram-sahasra.html

அருண்முருகன்