Saturday, October 4, 2008
க்ருஷ்ணாவின் கூக்குரல் கேட்டதா?
கொடியவர்கள் நிறைந்த இடத்தில் சில நல்லவர்களும் இருக்கிறார்கள். அது தான் உலக இயற்கை போலும். ஆனால் அந்த நல்லவர்கள் கொடியவர்களுக்கிடையே வாய் மூடி மௌனமாக இருக்கும் போது அவதிப்படுபவர்களுக்கு யார் தான் கதி? திக்கற்றவர்களுக்குத் தெய்வமே துணை.
அக்ரே குரூனாம் அத பாண்டவானாம்
துச்சாசனேஹ்வாத வஸ்த்ர கேச
க்ருஷ்ணா தத் அக்ரோசத் அனன்ய நாத
கோவிந்த தாமோதர மாதவேதி
கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் முன்னிலையில் துச்சாதனன் தன் உடையையும் தலை முடியையும் இழுத்து அவமானப்படுத்தும் போது மிக்க சினம் கொண்ட க்ருஷ்ணையான திரௌபதி வேறு கதி ஒன்றும் இன்றி கூவி அழைத்தாள் 'கோவிந்தா தாமோதரா மாதவா' என்று.
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
(இவ்ளோ குட்டி இடுகையா)
கோவிந்த தாமோதர மாதவனே துணை.
govindha dhamodhara sthothram ealuthiyathu yaaru??
ungal porulurai nanraha irukkirathu.
thanks a lot
லலிதா.
இந்த ஸ்தோத்ரம் லீலாசுகர் எனப்படும் பில்வமங்களரால் இயற்றப்பட்டது.
தங்கள் பாராட்டிற்கு நன்றி.
நேற்று காலையில் கிருஷ்ணா தொடரின் இந்த காட்சி இந்தியா இமேஜ் என்ற ஒரு அலைவரிசையில் காட்டினர் ரொம்ப. இப்போ அதை இங்கே படிக்கிறேன்.
மகிழ்ச்சி சிவமுருகன். நன்றி.
Post a Comment