Friday, September 12, 2008
கோவிந்தா தாமோதரா மாதவா! கரையேற்றுவாய் எங்களை!
ஆகா. அழகான பாடல் கேட்கிறதே அங்கே. யார் பாடுவது?
ஓ. கடைத்தெருவில் இந்த இடைச்சிறுவர்கள் பாடிக் கொண்டு செல்கிறார்கள். என்ன விந்தை? பால், தயிர், வெண்ணெய் என்று கூவி விற்காமல் இந்தச் சிறுவர்கள் வேறு ஏதோ பாடிக் கொண்டு செல்கிறார்களே. நாமும் கூர்ந்து கேட்போம்.
ச்ரி க்ருஷ்ண விஷ்ணோ மது கைடபாரே
பக்தானுகம்பின் பகவன் முராரே
த்ரயஸ்வ மாம் கேஸவ லோகநாத
கோவிந்த தாமோதர மாதவேதி
அருமை அருமை. என்ன ஒரு சந்தம். இவர்கள் ஆடிக் கொண்டும் பாடிக் கொண்டும் வரும் போது இந்த அழகான பொருள் நிறைந்த பாடலைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம் போலிருக்கிறதே. இந்த இனிய பாடலைக் கேட்பதற்காகவே கடைத்தெருவிற்கு அடிக்கடி வர வேண்டும்.
இந்த நான்கு வரிகளில் எத்தனை எத்தனை கதைகள் சொல்லிவிட்டார்கள். க்ருஹ்ணோதி இதி க்ருஷ்ண என்பார்கள் பெரியவர்கள். கவருபவன் எவனோ அவனே கிருஷ்ணன். க்ருஷியதி இதி க்ருஷ்ண என்றும் சொல்வார்கள். பண்படுத்துபவன் என்பதால் இவன் கிருஷ்ணன். அவன் எங்கும் நிறைந்தவன். விஷ்ணு. மது கைடபர்கள் என்னும் அசுரர்களின் எதிரி. பக்தர்களுக்கு அருளுபவன். வலிமை, புகழ், செல்வம், அறிவு, அழகு, பற்றின்மை என்ற ஆறு குணங்கள் கொண்டவனே ஆதி பகவன். முரன் என்னும் அசுரனின் எதிரி. அழகான சுருண்ட முடியைக் கொண்டவன் கேசவன். உலகங்களுக்கெல்லாம் தலைவன் லோகநாதன். அவனை இந்தச் சிறுவர்கள் கடைத்தேற்ற அழைக்கிறார்கள். த்ரயஸ்ய மாம் என்று நாம் ஒவ்வொருவரும் பாட வேண்டுமே. பாடுவோமே. கண்ணா கோவிந்தா தாமோதரா மாதவா எம்மைக் கரையேற்று. எம்மைக் கரையேற்று.
Labels:
Vishnu,
கோவிந்த தாமோதர ஸ்தோத்ரம்,
திருமால்
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
நல்ல பாடல் குமரன்!
கள்ளமில்லா கோபியர் கொஞ்சும் கோபாலனின்
குழல் கானமதில் குழைந்துக் குழைந்து, குழைந்தையாகோதோ நெஞ்சம்.
இந்த ஸ்தோத்திரத்தின் அடுத்த பாடல்களும் ஒவ்வொன்றாகச் சொல்லி வர எண்ணியிருக்கிறேன் ஜீவா. ஒவ்வொன்றும் மிக அருமையாக இருக்கின்றது.
நன்றி.
தொடருங்கள் குமரன்!
காத்திருக்கிறேன்
கண்ணன் நாமம் சொல்லச்சொல்ல, கேட்ககேட்க இனிமை!
எங்கும் தங்கும் கோவிந்தன் நம் இதயத்திலும் தங்கட்டும். நன்றி குமரா.
நன்றி கவிநயா அக்கா.
நன்றி எஸ்.கே.
where can i hear this song
லலிதா. தேடிப் பார்க்க வேண்டும். ஒலி வடிவில் இருக்கிறதா தெரியவில்லை. கிடைக்காவிட்டால் யாராவது பாடிக் கொடுத்தால் இங்கே சுட்டி கொடுத்துவிடுகிறேன். நண்பர்கள் யாராவது பாடிக் கொடுக்கிறீர்களா?
Post a Comment