Thursday, July 24, 2008

ஊமை பேசுவதும் முடவர் மலையைக் கடப்பதும்...


எவ்வளவு தான் தன்னம்பிக்கை இருந்தாலும் சில நேரங்களில் சில செயல்களைச் செய்ய முனையும் போது ஒரு மெல்லிய நடுக்கம் ஏற்படுவது இயல்பாக இருக்கிறது. மற்றவர்களுக்கு எப்படியோ தெரியாது; அடியேனுக்கு அந்த நிலை பலமுறை ஏற்பட்டுள்ளது. இறை நம்பிக்கையே தன்னம்பிக்கை என்ற கருத்தில் உறுதியாக இருக்க எனக்கு சில துதிப்பாடல்கள் துணையாக அமைகின்றது. அப்படி மெல்லிய நடுக்கம் ஏற்படும் போதெல்லாம் உதவும் துதிகளில் ஒன்று இந்த சுலோகம்.

ஊமையைப் பேச வைத்து பெரும்கவியாக்கிய கதைகளைப் படித்திருக்கிறோம். குள்ள முனிவன் அடக்க இயலாத விந்திய மலையைக் கடந்ததைப் பற்றி படித்திருக்கிறோம். அப்படி செயற்கரிய செயல்களை எல்லாம் அவர்கள் யாருடைய கருணையால் செய்தார்களோ அந்த இறைசக்தியே எனக்கும் துணை புரிகிறது; கருணை புரிகிறது என்ற எண்ணம் அளவில்லாத தன்னம்பிக்கையைத் தருகிறது.

மூகம் கரோதி வாசாலம் பங்கும் லங்கயதே கிரிம்
யத் க்ருபா தம் அஹம் வந்தே பரமானந்த மாதவம்


மூகம் கரோதி வாசாலம் - ஊமை பெரும் பேச்சாற்றல் மிக்கவர் ஆவதும்

பங்கும் லங்கயதே கிரிம் - முடவர் பெரும் மலையை கடப்பதும்

யத் க்ருபா தம் அஹம் வந்தே - யார் கருணையால் நடக்கிறதோ அவரை நான் வணங்குகிறேன்


பரமானந்த மாதவம் - அவர் பரமானந்தரும் மாதவரும் ஆனவர்

பேசமுடியாதவர் யார் கருணையால் பெரும் பேச்சாற்றல் மிக்கவர் ஆகிறாரோ முடவர் யார் கருணையால் பெரும் மலையைக் கடக்கிறாரோ அந்த பரமானந்த மாதவனை அடியேனும் வணங்குகிறேன்.

4 comments:

Kavinaya said...

//இறை நம்பிக்கையே தன்னம்பிக்கை //

ஆம் குமரா. சுலோகமும் சுலபமாக இருக்கிறது. நன்றி.

குமரன் (Kumaran) said...

நன்றி அக்கா.

ramesh sadasivam said...

தங்கள் தளங்கள் எல்லாமே நன்றாக உள்ளது. முழுதும் படிக்கவில்லை. ஆங்காங்கே சிலவற்றை படித்தேன். நன்றாக இருக்கிறது. என் தளங்களில் iamhanuman.blogspot.com உங்களுக்கு பிடிக்கும் என நினைக்கிறேன். நேரம் இருக்கும் போது வருகை தரவும்.

குமரன் (Kumaran) said...

தங்கள் வருகைக்கு நன்றி திரு ரமேஷ் சதாசிவம். தங்கள் பதிவிற்கு வருகிறேன். நன்றி.