Wednesday, July 16, 2008
பெற்ற பிள்ளையிடம் கூட பணம் படைத்தவனுக்கு பயம்
அர்த்தம் அனர்த்தம் பாவய நித்யம்
நாஸ்தி தத் சுக லேச: சத்யம்
புத்ராதபி தன பாஜாம் பீதி:
சர்வத்ரைசா விஹிதா ரீதி:
அர்த்தம் அனர்த்தம் பாவய நித்யம் - பொருள் பொருளற்றதாய் எப்போதும் சிந்தனை செய்வீர்கள்.
நாஸ்தி தத் சுக லேச: சத்யம் - உண்மையைச் சொன்னால் அதில் சிறிதளவும் சுகம் இல்லை.
புத்ராதபி தன பாஜாம் பீதி: - பெற்ற பிள்ளையிடம் கூட பணம் படைத்தவனுக்கு பயம் உண்டு.
சர்வத்ரைசா விஹிதா ரீதி: - எங்கும் இதே நியதியாக இருக்கிறது.
கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.
Labels:
Bhaja Govindham,
Vishnu,
திருமால்,
பஜகோவிந்தம்
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
இந்த இடுகை 'பஜகோவிந்தம்' பதிவில் 21 ஜூலை 2006 அன்று இடப்பட்டது. அப்போது வந்த பின்னூட்டங்கள்:
9 comments:
வல்லிசிம்ஹன் said...
குமரன் நன்றி.
பணம் படைத்த புத்திரனும்
பெற்றோர்களைப் பார்த்து பயம் கொள்ளும் கலி காலம் இது.
அர்த்தம் அனர்த்தம் இந்த இடத்தில் செல்வம் என்று கொள்ளவேண்டுமா?
July 21, 2006 9:50 PM
--
SK said...
நீங்கள் தொடர்ச்சியாக எழுதி வருகிறீர்கள் இந்த அருமையான உரைகளை!
ஆனால், நேரத்துக்கும், நிகழ்வுக்கும் பொருத்தமாய் அமைவது அந்த கோவிந்தன் செயலன்றி வேறென்ன!
"உண்மையைச் சொன்னால் அதில் சிறிதளவு கூடச் சுகம் இல்லை!"
அதனால்தான் பொய்பிரச்சாரங்கள் தலை விரித்து ஆடுகின்றனவோ!
கோவிந்தன் அறியாததா என்ன?!
July 21, 2006 10:06 PM
--
சிவமுருகன் said...
நாலு வரி சொன்னாலும் நறுக்குன்னு சொல்லு என்பார்கள் அது பஜ கோவிந்தத்திற்க்கு நச் என்று பொருந்துகிறது.
July 22, 2006 5:41 AM
--
குமரன் (Kumaran) said...
உண்மை தான் வல்லி அம்மா. பணம் படைத்தவர் யாராய் இருந்தாலும் நெருங்கிய சொந்தங்களிடமும் பயம் கொள்ளவேண்டியதாகத் தான் இருக்கிறது. பணத்திற்காக கணவனைக் கொல்லும் மனைவி, பணத்திற்காக மனைவியைக் கொல்லும் கணவன் என்றெல்லாம் கூட படிக்கிறோமே.
அர்த்தம் என்றால் செல்வம், பொருள் என்று பொருள் (meaning). அனர்த்தம் என்றால் துன்பத்தை விளைவிக்கக்கூடியது; பொருளற்றது (அ + அர்த்தம்) என்று பொருள்.
July 23, 2006 12:52 AM
--
குமரன் (Kumaran) said...
எஸ்.கே. நீங்கள் சொல்வது எனக்குப் புரியவில்லை. ஆனால் ஒவ்வொரு நூலும் அவரவர் மனநிலைக்கு ஏற்ப பொருள் தருவது தானே இயற்கை. கோவிந்த மனம் படி நடக்கும். நடக்கட்டும்.
உங்கள் கருத்தினைப் பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி.
July 23, 2006 12:54 AM
--
குமரன் (Kumaran) said...
நீங்கள் சொல்வது உண்மை தான் சிவமுருகன். :-)
July 23, 2006 12:55 AM
--
Merkondar said...
//பொருள் பொருளற்றதாய் எப்போதும் சிந்தனை செய்வீர்கள்.//
விளக்குங்கள்
எங்கள் பக்கம் இன்னமும் பிளாக் தடை நீங்க வில்லை
July 23, 2006 1:08 AM
--
குமரன் (Kumaran) said...
என்னார் ஐயா. செல்வம் என்பது எப்போதும் நிலைத்து நிற்பதில்லை. எல்லாத் துன்பங்களுக்கும் அதுவே காரணம். அதனால் அதனைப் பொருளற்றதாய், பொருட்படுத்தத் தகுதியில்லாததாய் நினைக்கவேண்டும் என்கிறார் சங்கரர். அதற்கு ஒரு எடுத்துக்காட்டாய் பொருள் படைத்தவர் பெற்ற மகன் எங்கே பொருளைப் பறித்துக் கொள்வதற்காகத் தன்னைக் கொன்றுவிடுவானோ என்று பெற்ற மகனிடமே பயம் கொள்ள வேண்டியிருப்பதைச் சொல்கிறார்.
July 23, 2006 1:16 AM
--
குமரன் (Kumaran) said...
பிளாக் தடை நீங்கவில்லை என்றால் எப்படி இந்தப் பதிவுகளைப் பார்க்கிறீர்கள்? அன்னியலோகத்தின் உதவியோடா இல்லை பி.கே.யின் உதவியோடா?
பிளாக் தடை இருக்கும் போதே ஆர்வத்துடன் வந்துப் படிப்பதற்கு மிக்க நன்றி என்னார் ஐயா.
July 23, 2006 1:17 AM
//ஒவ்வொரு நூலும் அவரவர் மனநிலைக்கு ஏற்ப பொருள் தருவது தானே இயற்கை.//
உண்மைதான் குமரா. நல்லா சொன்னீங்க.
நன்றி கவிநயா அக்கா.
Post a Comment