Wednesday, July 9, 2008
பாடப்பட வேண்டியவை கீதையும் இறைவனின் ஆயிரம் நாமங்களும்
கேயம் கீதா நாம சஹஸ்ரம்
த்யேயம் ஸ்ரீபதி ரூபமஜஸ்ரம்
நேயம் ஸஜ்ஜன சங்கே சித்தம்
தேயம் தீன ஜனாய ச வித்தம்
கேயம் கீதா நாம சஹஸ்ரம் - பாடப்பட வேண்டியவை கீதையும் இறைவனின் ஆயிரம் நாமங்களும்
த்யேயம் ஸ்ரீபதி ரூபம் அஜஸ்ரம் - இடைவீடின்றி த்யானிக்கப்பட வேண்டியது திருமகள் மணாளனின் திருவுருவம்
நேயம் ஸஜ்ஜன சங்கே சித்தம் - மனத்தை அன்புடன் நிலைநிறுத்த வேண்டியது நன்மக்களின் கூட்டுறவில்
தேயம் தீன ஜனாய ச வித்தம் - செல்வம் வழங்கப்பட வேண்டியது ஏழ்மையில் இருப்பவர்களுக்கு
கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள்.
Labels:
Bhaja Govindham,
Vishnu,
திருமால்,
பஜகோவிந்தம்
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
இந்த இடுகை 'பஜ கோவிந்தம்' பதிவில் 15 ஜூலை 2006 அன்று இடப்பட்டது. அப்போது வந்த பின்னூட்டங்கள்:
8 comments:
தி. ரா. ச.(T.R.C.) said...
இறைவனின் ஆயிரம் நாமங்கள் என்பதை மேலும் குறிப்பாக விஷ்னு சகஸ்ரநாமம் என்றுகொள்ளலாமா
July 16, 2006 9:06 AM
--
குமரன் (Kumaran) said...
ஆமாம் தி.ரா.ச. அப்படித் தான் பொருள் கொள்ள வேண்டும். மரபிலும் (சம்ப்ரதாயத்திலும்) அப்படித் தான் பொருள் சொல்லப்பட்டிருக்கிறது. ஆதிசங்கரரும் விஷ்ணு சஹஸ்ரநாமத்திற்குத் தானே விளக்கவுரை (பாஷ்யம்) எழுதியிருக்கிறார்.
July 16, 2006 5:39 PM
--
தி. ரா. ச.(T.R.C.) said...
காஞ்சிபுரத்தில் நடந்த நிகழ்ச்சி ஒரு 25 வருடங்களுக்கு முன்பு.
மகா பெரியவர் கேட்கிறார்: எங்கெ கோயிலுக்கு போயிட்டு வரயையா?
அவன்: ஆமாம் (புத்திசாலித்தனமாக பதில் சொல்வதாக)காமாஷியம்மன் கோவிலுக்கு
பெரியவர்: சஹஸ்ரநாமாம் சொல்லு.
அவன்; விஸ்வம் விஷ்னு.........
பெரியவர்: நிறுத்து நான் ஸகஸ்ரநாமம்தானேச்சொல்லச்சொன்னேன் ஏன் விஷ்ணு சஹஸ்நாமம் சொல்கிறாய்....
அவன்: பதில் தெரியாமல் முழித்தான்
பெரியவர்;எப்படி ஸ்கஸ்ரநாமம் என்றால் விஷ்ணு என்று சரியாச்சொன்னையோ அது மாதிரிதான் காஞ்சியிலே கோவில் என்றால் காமாஷிதான்.
அந்த "அவன் " தி ரா ச.என்ன ஒரு காருண்யம் எளியவன் நிலைக்கு இறங்கி வந்து புரியவைத்தது
July 18, 2006 11:40 PM
--
johan -paris said...
அன்பு குமரா!
பாடப்படவேண்டியது-இறைநாமம்
தியானிக்கப்படவேண்டியது-இறையுருவம்
மனத்தை அன்புடன் நிலைநிறுத்த வேண்டியது நன்மக்களின் கூட்டுறவில்
செல்வம் வழங்கப்பட வேண்டியது ஏழ்மையில் இருப்பவர்களுக்கு
இப்படியும் கொள்ளலாம். தானே!
யோகன் பாரிஸ்
July 20, 2006 8:21 AM
--
சிவமுருகன் said...
அண்ணா,
அருமையான ஸ்லோகம், இது இத்தொகுப்பின் இரண்டாவது எளிய ஸ்லோகம்.
July 20, 2006 11:05 PM
--
குமரன் (Kumaran) said...
காஞ்சிபுரத்தில் நடந்த நிகழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி தி.ரா.ச. மதுரையில் அம்மன் கோவில் என்றாலே அது மீனாட்சி அம்மன் கோவில் தான். அது போல காஞ்சியில் கோவில் என்றால் அது காமகோடி பீடமாகத் தான் இருக்கவேண்டும். அருமையாகப் புரியவைத்திருக்கிறார் ஆசாரியார். எத்தனையோ சஹஸ்ரநாமங்கள் இருந்தாலும் 'சஹஸ்ரநாமம்' என்று குறிப்பிடப்படுவது 'விஷ்ணு சஹஸ்ரநாமம்' தானே. ச்ரிபாஷ்யம் என்றால் பகவத் இராமானுஜரின் பிரம்மசூத்திர பாஷ்யத்தைக் குறிப்பது போல்.
நீங்கள் சொன்ன இந்த நிகழ்ச்சியைப் படித்த பிறகு ஆதிசங்கரரின் வாழ்வில் நடந்த நிகழ்ச்சியும் நினைவிற்கு வருகிறது தி.ரா.ச. லலிதா சஹஸ்ரநாமத்திற்கு விரிவுரை எழுத ஆசாரியர் எண்ணும் போது அம்பிகையே வந்து விஷ்ணு சஹஸ்ரநாமத்திற்குப் விரிவுரை எழுதச் சொன்ன சுவையான நிகழ்ச்சியைக் கொஞ்சம் சொல்லுங்கள் தி.ரா.ச.
July 21, 2006 6:19 AM
--
குமரன் (Kumaran) said...
கட்டாயம் அப்படியே பொருள் கொள்ளலாம் யோகன் ஐயா. இது பஜகோவிந்தம் என்பதால் கோவிந்த நாமங்களையும் கீதையையும் திருமகள் மணாளன் உருவத்தையும் சொல்கிறார் சங்கரர். ஆனால் அவர் சொல்ல வந்தது நல்ல நூல்களையும் இறை உருவங்களையும் இறை நாமங்களையும் தான்.
July 21, 2006 6:21 AM
--
குமரன் (Kumaran) said...
ஆமாம் சிவமுருகன். இது எளிதான சுலோகம் தான். எளிதில் மனத்தில் நிறுத்தக் கூடிய சுலோகம்.
July 21, 2006 6:27 AM
//ஆதிசங்கரரின் வாழ்வில் நடந்த நிகழ்ச்சியும் நினைவிற்கு வருகிறது தி.ரா.ச. லலிதா சஹஸ்ரநாமத்திற்கு விரிவுரை எழுத ஆசாரியர் எண்ணும் போது அம்பிகையே வந்து விஷ்ணு சஹஸ்ரநாமத்திற்குப் விரிவுரை எழுதச் சொன்ன சுவையான நிகழ்ச்சியைக் கொஞ்சம் சொல்லுங்கள் தி.ரா.ச.//
அவர் சொல்லக் காணுமே? நீங்க சொல்லுங்களேன்..
அக்கா. அதான் சுருக்கமாகச் சொல்லிவிட்டேனே. இன்னும் கொஞ்சமே கொஞ்சம் விரித்துச் சொல்கிறேன். :-)
ஆதிசங்கரர் லலிதா சஹஸ்ரநாமத்திற்கு விரிவுரை எழுத எண்ணி ஒரு சீடரிடம் லலிதா சஹஸ்ரநாம ஓலைச் சுவடிகளைக் கொண்டு வரச் சொல்கிறார். பல முறை சொல்லியும் ஒவ்வொரு முறையும் அந்த சீடர் விஷ்ணு சஹஸ்ரநாம ஓலைச் சுவடிகளையே கொண்டு வந்து கொடுக்கிறார். ஏன் இப்படி என்று கேட்க உள்ளறையில் அழகான ஒரு சிறு பெண் நின்று கொண்டு இந்தச் சுவடியை எடுத்துத் தருகிறாள் என்று சீடர் சொல்ல உள்ளே சென்று பார்த்து அது அன்னை என்று உணர்ந்து அம்பாளின் கட்டளையின் படியே விஷ்ணு சஹஸ்ரநாமத்திற்கு ஆசார்யர் விரிவுரை எழுதினார் என்று சொல்லுவார்கள்.
இப்பதான் கொஞ்சம் நல்லா புரியுது. மனசு வச்சதுக்கு நன்றி குமரா :)
மனசு என்ன வைக்கிறது அக்கா. அது அங்கே தான் இருக்கு. நேரம் தான்.
நிறைய எழுத மனமும் ஆசையும் இருந்தாலும் நேரம் கிடைக்க மாட்டேன் என்கிறது. அது தான் குறை. :-(
//நிறைய எழுத மனமும் ஆசையும் இருந்தாலும் நேரம் கிடைக்க மாட்டேன் என்கிறது.//
கிடைக்கும் கிடைக்கும்! நடக்கும் நடக்கும்! கவலைப்படாதீங்க :)
Post a Comment